Pages

Tuesday 3 July 2012

STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்


STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம் 

இது உண்மை சம்பவம் என்று தொடங்குகிறது.நள்ளிரவு நேரம் ,சாலை வெறிச்சோடி  கிடக்கிறது,வேகமாக வரும் கார் ,பாதையை கடக்கும் ஒருவனை இடித்து தள்ளி செல்கிறது.அடிபட்டவன் சாகாமல் பிழைத்துக்கொண்டு தன்னை இடித்தவனை கொள்ள முயற்சிப்பதாக நிறைய படங்கள் ( i know wnat you did last summer, hit and run உட்பட நிறைய) பார்த்திருக்கிறோம்.அதில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது? பார்க்கலாம்.


கதை ஒரு வெள்ளி கிழமை பிற்பகல் தொடங்குகிறது.நடு வயதில் இருக்கும் வேலையை இழந்த நம் ஹீரோ டாம்,அறை வாடகை குடுக்க முடியாமல் அங்கிருந்து துரத்த படுகிறான்.வேலை வாய்ப்பு அலுவலகமும் அலை கழிக்க தங்க இடம் இன்றி ,ஒரு பூங்காவில் தஞ்சமடைகிறான்.இரவு இரண்டு மணி அளவில் போலீஸ் துரத்தி விடுகிறது.பூங்காவை விட்டு வெளியே வந்த டாம் மெல்ல சாலையில் நடந்து செல்கிறான்.
ஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்க்கும் பிராண்டி தன் பதவி உயர்வுக்கு காத்திருக்கிறாள்.அதே வெள்ளி கிழமை இரவு தன் காதலனோடு ஒரு பாரில் நள்ளிரவு வரை குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு கூடவே போதை மாத்திரையும் சாப்பிட்டு தள்ளாடியபடி தன் காரை எடுக்கிறாள்.நேரம் அதே இரண்டு மணி.தன் காதலனுடன் செல்போன் பேசியபடி வரும் பிராண்டி சாலையை கடக்கும் நம் டாமை மோதிவிடுகிறாள்.காலில் மோதப்பட்ட டாம் ,முன் புறம் கண்ணாடி உடைந்து ,அவன் உடல் கார் மீதே கிடக்க ,மோதிய பயத்தில் போதை தெளிந்த பிராண்டி அப்படியே அவன் உடலோடு தன் வீட்டு ஷெட்டில் நிறுத்துகிறாள்.மெதுவாக கண்முழிக்கும் டாம் உதவிக்கு அழைக்க இவள் பயந்து ஓடிவிடுகிறாள்.சிறிது நேரத்தில் காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று பிராண்டி வீட்டிற்க்கு வரும் காதலனிடம் தான் ஒருவனை மோதிவிட்டதாக சொல்லும் பிராண்டி அவன் உடல் தன் கார் பான்நெட் மீது உள்ளதை சொல்லவில்லை.தன் சந்தோஷத்திற்கு இது இடைஞ்சல் என்று நினைக்கும் காதலன்,தான் இது போல் நிறைய விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் ,யாரும் பார்க்காததால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அவளுக்கு மீண்டும் ஒரு போதை மாத்திரை தந்து இருவரும் உல்லாசமாய் இருக்கிறார்கள்.மறுநாள் காலை தன் பணிக்கு செல்லும் பிராண்டி தன் செல்போன் காரில் இருப்பதை உணர்ந்து விரைகிறாள்.அதற்குள் போனை எடுக்கும் டாம் உதவிக்கு முயற்சிக்க battery தீர்ந்து விடுகிறது.அங்கே வரும் ப்ரண்டியிடம் டாம் தன்னால் அவளுக்கு பிரச்சனை இருக்காது என்றும் ,சரியாக பார்க்காமல் ரோட்டை கடந்தது தன் தவறு என்று போலீசில் சொல்லிவிடுவதாகவும் சொல்லி  கெஞ்சுகிறான்.உயிருக்கு போராடி உதவி கேட்க்கும் டாமிடம் போலீஸ் ,கேஸ் ,கோர்ட் இதெல்லாம் பயந்து தான் உதவ முடியாது என்றும் அவனை விரைவில் இறந்து விடசொல்கிறாள்.மேலும் தன் காதலன் உதவியுடன் டாமை கொன்று உடலை இரவில் அப்புறபடுத்த முயலுகிறாள்.இறுதியில் என்ன ஆனது என்பதை ரொம்பவும் ஜோராக காட்டியிருக்கிறார்கள் .நடிப்பும் குறை சொல்ல முடியாத ஒன்று.ஆரம்பம் முதலே அருமை.வள வள காட்சிகள் இல்லை.மொத படமே 85 நிமிடங்கள் தான்.


*texas நகரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவமான  இதில் அந்த பெண் 50 வருடம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.
* 2007 வந்த இந்த படத்தை விடுவார்களா நம்ம ஆட்கள் .இந்த படத்தை இரண்டு வருடத்தில் Accident on hill road என்ற பேரில் ஹிந்தியில் சுட்டுவிட்டார்கள்.
* Rotten tomatoes- 72% fresh 
*IMDB-6.6 
* வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இருப்பதால் கவனம் .
* த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.




3 comments:

  1. படத்தை பத்தி இப்ப தான் கேள்விபடுறேன்...
    ரொம்ப நல்ல plot....எனக்கு பிடித்திருக்கு....கண்டிப்பா பார்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப த்ரில்ஆன படம். பாருங்கள்.நன்றி ராஜ்

      Delete
  2. Please change ur mobile template boss:) very slow...... Movie added to my download list thanks for sharing

    ReplyDelete