Pages

Thursday, 26 April 2012

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 3


என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 3 
என் முதல் பதிவு பிப்ரவரியில் ,ஏப்ரல்இல் 10 வது பதிவு.அதற்குள் 2155 ஹிட்ஸ் கொடுத்த ப்ளாக் ரசிகர்களுக்கு நன்றி.இது அதிகமா என்று தெரியவில்லை.என்னை பொறுத்தவரை நான் எழுதியதை இதனை பேர் படித்திருகிறார்கள்  என்பதை எண்ணி மகிழ்ச்சி.

COLD PREY:

ஐந்து நண்பர்கள் விடுமுறைக்காக பனிமலைக்கு செல்லும்போது,அங்கே ஒருவருக்கு கால் உடைந்து விடுகிறது.பனிமலைக்கு நடுவே தனியாக ஒரு கட்டடம் தனியாக தெரிகிறது.உள்ளே சென்றபின் தான் தெரிகிறது அது 1970 களில் ஒரு தங்கும் விடுதியாக இருந்திறகிறது.விடுதியின் மேலாளரின் மகன் காணாமல் போனதால் அந்த விடுதி மூடப்பட்டதாக தெரிந்துகொள்கிறார்கள்.எல்லோரும் களைப்பாக இருபதனால் ஓய்வு எடுக்க அறைகளுக்கு  செல்கிறார்கள். அனால் அவர்களை தவிர மேலும் ஒருவர் அந்த விடுதியில் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.இனி என்ன? அதேதான்.ஒவோருவாராக கொல்லபடுகிறார்கள்.விஷயம் அதுவல்ல இந்த படத்தை சிறப்பு அம்சமே அந்த பனிமலை விடுதியும் அந்த அமைதியான மர்மமும்தான்.THRILLER பட ரசிகர்கள் தவரவிடகூடாத படம்.
IMDB RATING :6 .3 

THEM :
இந்த படத்தில் கதை என்றால் ஒன்றும் இல்லைதான்.அனால் HORROR THRILLER  படத்திற்கேற்ற மூட் 100 சதவிகிதம் உள்ளது என்று அடித்து சொல்லலாம்.ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ என்று பதற வைக்கும் படம்.இப்படி ஒன்று நமக்கு நடந்தால் ? முடிவு ஒன்று உங்களுக்கு சப்பென்று இருக்கும் அல்லது யோசிக்க வைக்கும்.
IMDB RATING : 6 .6 
JOY RIDE (PART 1 ):
    ஒரு காதல் ஜோடியும் காதலனின் அண்ணனும் காரில் நெடுந்தூர பயணம் செய்கிறார்கள்.அங்கெல்லாம் காரில் WIRELESS ரேடியோ வைத்திருப்பார்கள்.வழி தெரியாவிட்டாலோ,விபத்து ஏற்பட்டாலோ,வண்டி ரிப்பேர் ஆனாலோ நீங்கள் ரேடியோ மூலம் உதவிக்கு அழைக்கலாம்.அப்படி காரில் போகும் போது அண்ணன் ரேடியோ எடுத்து கண்டபடி பெண்குரலில் யாரிடமோ பேசிவிடுகிறான்.உடன் பேசியவன் சைக்கோ .இவர்களை தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான்.நான் சென்ற பதிவில் எழுதிய DUEL படம் பிடித்தால்  இதுவும் நிச்சயம் பிடிக்கும்.
IMDB RATING : 6 .5 


REINDEER GAMES :
       சிறையில் இரு நண்பர்கள்,ஒருவன் பலே திருடன்.மற்றொருவன் சாதாரண திருடன்.பலே திருடன்  பார்க்காமலே கடிதம் மூலம் ஒரு பெண்ணை காதலிக்கிறான்.அதை பற்றி மற்றவனிடம் முழுவதும் சொல்லி இருக்கிறான்.வெளியே போகும் முன் பலே திருடன் சிறை கலவரத்தில் கொள்ளபடுகிறான்.அவன் நண்பன் வெளியே போகிறான்.கொல்லப்பட்டவனின் காதலி இவன்தான் தன் காதலன் என்று நினைத்து இவனை கட்டி பிடித்துவிடுகிறாள்.இவனுக்கும் அவளை பிடித்துவிட இவனும் ஒன்றும் சொல்லாமல் தான்தான் அவன் என்று சொல்லி நடிக்கிறான்.காதலியின் அண்ணன் ஒரு திருடன் ,அவன் தன் தங்கையின் காதலன் ஒரு பலே திருடன் என்று தெரிந்து தன் குழுவோடு வந்து ஒரு கொள்ளைக்கு திட்டம் போடுகிறான்.அதை செயல் படுத்தினால் தான் இருவரையும் வாழவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்.இனி என்னே? கொள்ளை அடிக்க  தெரியாத நாயகன்.எப்படி சமாளிக்கிறான் என்பதே மீதி.நல்ல படம் .முடிவு நீங்கள் யோசிக்க முடியாத ஒன்று. பாருங்கள்.
 IMDB RATING : 5 .6 


தொடரும் 

Tuesday, 24 April 2012

90களில் தமிழ் சினிமா :

                                                 90களில் தமிழ் சினிமா :
தமிழ் சினிமா 90 களில், எதில் இருந்து தொடங்குவது? படங்களில் இருந்தா? அல்லது கதாநாயகர்களில் இருந்தா? சரி அதை விட்டுவிடுவோம். 80 களின் இறுதி அக்னி நட்சத்திரம் ,அபூர்வ சகோதரர்கள்,குரு சிஷ்யன் ,கரகாட்டக்காரன்,மாப்பிள்ளை,புதிய பாதை,ராஜாதி ராஜா ,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16  என்று   ரஜினி கமல் படங்களும் சில எதிர்பாராத படங்களும் வெற்றி அடைந்தன.மிகவும் எதிர்பார்க்க பட்ட தர்மத்தின் தலைவன்,கொடி பறக்குது,சத்யா,உன்னால் முடியும் தம்பி,சிவா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன.


சரி 90 க்கு வருவோம்.
இந்த 90 களுக்கு வரும்போது,மணிரத்னம் ஒரு ஹிட் இயக்குனராகவும் பாலச்சந்தர் போராடிக்கொண்டும் இருந்தனர்.பாலச்சந்தருக்கு ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு கஷ்டப்பட்டு ஒரு ஹிட் கொடுத்தால் பின்னர் சில தோல்விகள் தொடர்ந்து வந்தது.பாரதிராஜா ஏற்கனவே 80 கள் இறுதியில் என் உயிர் தோழன்,கொடி பறக்குது, மூலம் ஏகத்துக்கு சறுக்கி இருந்தார்.இப்போது மீண்டும் புது நெல்லு புது நாத்து மூலம் தோல்வி.ராம நாராயணன்,மணிவண்ணன்,விசு,கங்கை அமரன் போன்றவர்கள் சரமாரியாக படங்கள் எடுத்து தள்ளினார்கள் .ராமராஜன்,பாண்டியராஜன்,சத்யராஜ், போன்றவர்கள் மினிமம் கேரண்டி ஹீரோவாக வளம் வந்து கொண்டிருத்த நேரம். P .வாசு,R .K .செல்வமணி ,கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்களின் தொடக்க காலம்.சொல்லவே வேண்டியது இல்லை ரஜினி ,கமல் , இளையராஜா போன்றவர்களின் உச்ச நேரம்.

1990 -1995 :
 90 இன் தொடக்கத்தில் ரஜினியா கமலா என்றால் ஜெயித்தது கமலே.ரஜினிக்கு அதிசயபிறவி,பணக்காரன் போன்று பிளாப்,சுமாரான படங்களே.அனால் கமலோ மைக்கல்,மதன,காமராஜன் ஹிட் மூலம் நின்றார்.

அடுத்த ஆண்டும் அதாவது 1991 உம் ரஜினி,கமல் இருவருக்கும்  சுமாரே.தளபதி,தர்மதுரை ,நாட்டுக்கு ஒரு நல்லவன் இதில் தளபதி மட்டும் தப்பித்தது.கமலுக்கு குணா தளபதியோடு மோதி வீழ்ந்தது.இந்த ஆண்டின் ஆச்சர்யம் சின்ன தம்பி மற்றும் கேப்டன் பிரபாகரன் ஹிட் ஆனது.சின்ன தம்பி தான் ஆண்டின் அதிக வசூல் ( 7 கோடி) செய்த படம்.
92 இல்  ரஜினி  மன்னன் என்ற சுமாரான  ஹிட்டோடு தொடங்கினார்.அண்ணாமலை மூலம் சிக்ஸர் அடித்துவிட்டார் .பாண்டியன் சொதப்பியது.கமலுக்கு சிங்காரவேலன் சறுக்கினாலும் தேவர் மகன் கம்பீரமாக எழுந்து நின்றது.மற்ற ஹிட் படங்கள் என்றால் செம்பருத்தி ,சின்ன கௌண்டர்,சூரியன்,வானமே எல்லை. குறிப்பிட தக்க படம் ரோஜா.அறிமுகம் நம்ம ரகுமான்.அதோடு நம்ம இளைய தளபதி விஜய் இந்த ஆண்டுதான் அறிமுகம் ஆனார்.


1993 இல் நம்ம அஜித் அறிமுகம் ஆகிறார்.இந்த ஆண்டு ரஜினி ,கமல் இருவருக்கும் சிறப்பாக இல்லை.எஜமான்,உழைப்பாளி இரண்டும் ஓகே என்ற அளவில் தான் ஓடின.இந்த ஆண்டும் சூப்பர் ஹிட் படமாக ஸ்டார் யாரும் இல்லாத கிழக்கு சீமையிலே,gentleman ஓடியது.கமல் கலைஞன் என்று பேர் எடுத்தார்.வால்ட்டர் வெற்றிவேல் நன்றாக ஓடியது.93  சருக்கிவிட்டதால் 94 இல்  ரஜினி வீராவோடு நிறுத்திவிட்டார்.கமல் மகாநதி என்ற காவியத்தை எடுத்தார்.ஓடவில்லை.விட்டேனா பார் என்று நம்மவர் எடுத்தார்.மகளிர் மட்டும் தயாரித்தார்.ஊஹும்.செல்ப் எடுக்கவில்லை.அமைதிப்படை ,நாட்டாமை,காதலன்,ஜெயஹிந்த் ஆகியவை ஹிட்.

1995 முக்கியமான ஆண்டு.
ரஜினி பாட்ஷா மூலம் உச்சத்தை அடைந்த ஆண்டு.அப்பவே ஐம்பது கோடி வரை வசூல் .இந்த ஹிட் மூலம் அதை தக்க வைக்க சென்ற ஆண்டு ஹிட் ஆன நாட்டாமையின் டைரக்டர்     யும் காதலன் இசை அமைபாளறையும் தன்னோடு இணைத்து  முத்து எடுத்தார்.பாட்ஷா அளவுக்கு இல்லை என்றாலும் ஹிட் தான்.கமல் பாவம் குருதிபுனல் என்ற வித்யாசமான படம் எடுத்தார்.ஓடிவிடுமா என்ன.பம்பாய் மூலம் இந்தியா எங்கும் மணிரத்னம் பேசப்பட்டார்.அஜித் ஆசை என்ற ஹிட் கணக்கை தொடங்கியதும் இந்த ஆண்டு தான்.


1990 முதல் 1995 வரை  ஏற்றம் என்று பார்த்தால் ரஜினி ,எ.ஆர்.ரகுமான்,ஷங்கர்,மணிரத்னம்,ரவிக்குமார் ஆகியோர் குறிபிடத்தக்க ஏற்றம் கண்டனர்.இறக்கம் என்றால் கமல்,இளையராஜா,ஆகியோர் இறக்கம் கண்டனர். ராமராஜன்,டி.ராஜேந்தர் ஆகியோர் பீல்ட் அவுட் ஆனர .சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிடாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.

பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய விஜயகாந்த் தொடர்ந்து அறிமுக பிலிம் இன்ஸ்டிடுட்  மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து சரியான படங்களை தேர்வு செய்ய தவறி விட்டார்.அவர் மட்டும் புதிவர்களுக்கு வாய்ப்பு தராமல் ரஜினி போல் ஹிட் கூட்டணி அமைத்ருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கும்.

இந்த ஆண்டுகளில் பொதுவான ஒருவர் கவுண்டமணி. நாயகிகளில் குஷ்பூ உச்சம் பெற்றனர்.

சரி பதிவு ரொம்பவும் பெரிதாக போய்கொண்டே இருக்கிறது.
1996 -2000  வரை அடுத்த பதிவில் சந்திபோம்.


தொடரும்Friday, 20 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி --இந்த கண்ணாடி உடைய இன்னும் சில கற்கள் தேவை

ஒரு கல் ஒரு கண்ணாடி ---சினிமா விமர்சனம் ஹீரோ சந்தானம் ஒரு கல்யாண கார் ஓட்டுபவர் .அவரது நண்பர் பட தயாரிப்பாளர் உதயநிதி சென்னை சத்யம் திரை அரங்கில் டிக்கெட் கிழிப்பவர்.அவர் ஹன்சிகாவை காதலிக்கிறார்.அவர் இவரை காதலிக்கவில்லை .அவருக்கு நம் ஹீரோ சந்தானம் எப்படி உதவுகிறார் என்பதே படமா என்றால் ஆம்.ச்சே ச்சே இல்லை. தெரியலேங்க.நீங்க படம் பார்த்தால் இப்படி தான் சொல்வீங்க.


என்னடா படத்தில் உதயநிதி தான் ஹீரோ என்று கேள்விபட்டோமே என்று நினைக்கவேண்டாம். பாஸ் (எ)பாஸ்கரன் போலவே இதிலும் ஹீரோ டம்மிதான்.அதனால்  தான் ஹீரோ சந்தானம் என்று சொன்னேன்.

இந்த படத்தை கதையாகவும் நீங்கள் படம் பார்காதவர்களிடம் சொல்ல முடியாது.சீன் ஆகவும் சொல்ல முடியாது.ஏனென்றால் இரண்டுமே இல்லை.காட்சியாகவும் நீங்கள் ஞாபகம் வைத்து சொல்ல முடியாது.ஏனென்றால் வந்த காட்சியே திரும்ப வருவது போல் உள்ளது.

ஆனால் நம் ஜனங்கள் இந்த படத்தை மிகுந்த உற்சாகத்தோடு ரசிக்கிறார்கள்.இதிலிருந்து ஜனங்கள் ரொம்ப காஞ்சிபோய் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.நல்ல அழகான கதாநாயகி  இல்லாமல் 
 அமலபால் எல்லாம் ரசிக்கபடுவது போல் ஏப்ரல் இல் நல்ல படம் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கிறார்கள் .காசு இருந்தால்  யார் வேணுமின்னாலும் நடிக்க வரலாம் என்ற உதயநிதி கோட்பாடுபடி அதே போல் கொஞ்சம் பணமும் 20 ஹிட் படமும் கொடுத்தால் யார் வேணுமுன்னாலும் அரசியலுக்கு வரலாம் என்பதை உதயநிதி குடும்பம் ஏற்றுகொள்ளுமா?

இசை பற்றி ஒன்னும் சொல்ல இல்லை.என்னனா ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பாடல்களே இதிலும் repeat .அமலாபால் உதாரணம் தான் இதற்கும்.வேற இல்லை என்றால் எதை வேண்டுமானாலும் நம் ஆட்கள் ரசிக்கிறார்கள்.

காமெடி என்று பார்த்தால் முதல் பாதியில் ஒரு 4 நல்ல காமெடி.இரண்டாம் பாதயில் ஒரு 5 நல்ல காமெடி. மற்றவை எல்லாம் வெறும் புன்னகைக்க வைக்கும் காமெடி.

ஒரு கல் ஒரு கண்ணாடி --இந்த கண்ணாடி உடைய இன்னும் சில கற்கள் தேவை 
பதிவை ரசித்தவர்கள் கமெண்ட் போடவும்.
உங்கள் ஓட்டை குத்தவும்.

Monday, 16 April 2012

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 2 :

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 2 :

ஒன்று மட்டும் புரிகிறது.தமிழ் பட விமர்சனம் எழுதும் பொது ஹிட்ஸ் அதிகமாகிறது.ஆனால் ஆங்கில படங்கள் பற்றி பதிவு போட்டால் ,ஹிட்ஸ் குறைவுதான்.

CALVAIRE(THE ORDEAL):
   இது ஒரு பிரெஞ்சு படம். நாயகன் ஒரு பாடகன்.அகந்தயுடையவன்.கிறிஸ்துமசுக்கு சில தினங்கள் இருக்கும் பொது ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும்போது ,வண்டி கோளாறு ஆகிறது.அங்கே தனது நாயை தேடி வரும் ஒருவர் இவரை பார்த்து  இவரை ஒரு பாடகர் என்று தெரிந்து,தான் வண்டியை சரி செய்து தருவதாக சொல்லி இவரை தன் வீட்டில் தங்க வைக்கிறார்.தினமும் எதாவது சொல்லி வண்டியை ரிப்பேர் செய்யாமல் வைக்கிறார்.சில தினங்களில் பாடகரை சிறை வைக்கிறார். இறுதியில் தான் தெரிகிறது இவரும் ஒரு பாடகர் அங்கீகாரம் அற்றவர் என்பது. நல்ல தரமான படம்.அனால் மெதுவாக செல்லும்.

DUEL (1971):

STEVEN ஸ்பீல்பெர்க் இன் முதல் முழு நீள திரை படம்.இந்த படம் முதலில் டிவி க்காக எடுக்கப்பட்டு பின் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பாலைவன ரோட்டில் தனியாக பயணம் செய்யும் நாயகன் ஒரு டேங்கர் லாரியை முந்தி செல்ல முயலும் போது அவன் வழி விடாமல் தொடர்ந்து தன்னை இடித்து தள்ள முயலும் அந்த லாரி இடம் இருந்து தப்பிக்கும் பரபரப்பான படம். நாயகன் நடுவில் அந்த லாரியிடம் இருந்து தப்பித்து ஒரு ரெஸ்டாரண்டில் இருக்கும்போது அவனது பயம் கலந்த பார்வை நமக்கும் நிச்சயம் பிடித்துகொள்ளும். கிளாசிக் படம்.

THE SCORE( 2001):
                             உங்களுக்கு ITALIAN JOB,OCEANS ELEVEN  போன்ற கொள்ளையை மையாமாக கொண்ட படங்கள் பிடிக்குமா? இந்த படம் நீங்கள்  தவற விடகூடாத படம்.Robert De Niro,Marlon Brando,Edward Norton போன்ற பெரிய தலைகள் நடித்த படம்.மர்லன் பிராண்டோவின் (நம்மூர் சிவாஜி போன்றவர்) கடைசி படம். கிளைமாக்ஸ் ஒரு ஆச்சர்யம்.


THE UNINVITED GUEST( 2004):

          நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு. தனியாக நீங்கள். ஒருவர் அழைப்புமணி அடித்து உங்களிடம் நான் ஒரு போன் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு  உங்கள் வீட்டு தொலைபேசியில் பேசுகிறார். சரி பேசட்டும் என்று நீங்கள் உள்ளே செல்கிறீர்கள்.சில நிமிடங்களில் பேச்சு சப்தம் கேட்கவில்லை.வெளியே வந்து பார்த்தல் வந்த ஆளை காணவில்லை.சுட்டுமுட்ட்ரும் பார்த்து விட்டு ஆள் போய் விட்டார் என்று நினைத்து வீட்டை தாளிட்டு கொண்டு வருகிறீர்கள்.சில நிமிடங்களில் மாடியில் இருந்து சப்தம்.

இதுவரை சொன்னதை வைத்து நீங்கள் ஒரு கதை நினைத்தால் அது இல்லை.இரவில் பார்த்தல் நலம். 
 
 Tuesday, 3 April 2012

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் - பாகம் 1 :

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் - பாகம் 1 :


ஆங்கில படம் பார்காதவர்களை பார்க்க தூண்டுவதே இந்த பதிவின் நோக்கம்.


ஆங்கில படங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு ஒரு வேலை இந்த படங்கள் வெறும் thriller வகை படங்களாக படலாம்.என் நோக்கம் என்னை போல் இந்த வகை படங்களை பார்க்க தொடங்கி பின் எல்லா வகையான படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே.
நான் ஆங்கில படங்களை பார்த்தது சிறு வயது முதல் அவ்வப்போது நிகழ்ந்தாலும்,அவை பெரும்பாலும் பிரபலமான அடிதடி ,titanic ,terminator ,godzilla ,ஜுரசிச்க் பார்க் வகையறா படங்களே.பின் அவ்வபோது நண்பர்கள் சொன்னாலும் பெரிதும் ஆர்வம் இல்லாமல் பார்த்த படங்கள் உண்டு.
பின்னர் சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் நண்பன் ஒருவன் " final destination " படத்தை பற்றியும் அதன் மைய கருத்தையும் சொல்லி பார்க்க சொன்னான்.உங்களளில் பலருக்கு அந்த படத்தை பற்றி தெரிந்திருக்கும்.அந்த படம் தான் ஆங்கில மற்றும் வெளி நாட்டு படங்களை பார்க்க தூண்டியது.பின் அவனிடமே அது போல் பரபரப்பான படங்களை கேட்டு,வாங்கி பார்க்க தொடங்கினேன்.அதன் தொடர்ச்சியாக wrong turn பார்த்தவுடன் ஆங்கில படங்களை முக்கியமாக thriller suspense வகை படங்களை பார்க்க தொடங்கினேன்.அதனால் நான் வெறும் இந்த வகை படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று நினைத்துவிட வேண்டாம். intresting ஆக உள்ள எல்லா வகை படத்தையும் பார்ப்பேன்.மெதுவாக செல்லும் கவிதையான படங்களை பார்க்க பொறுமையில்லை ஆனால் அந்த வகை படங்களும் சில பிடித்ததுண்டு.
இங்கே நான் பட்டியலிட்டுள்ள படங்கள் எல்லாமே நீங்கள் பார்க்க துவங்கினால்  இங்கே அங்கே நகர விடாது.முக்கியமாக போர் அடிக்கிறது.


11 : 14 :
திரைக்கதை உத்திக்கு இந்த படம் மிக சிறந்த உதாரணம்.இந்த உத்தியில் பல படங்கள் வந்தாலும் இந்த படம் போல் இல்லை.கிளைமாக்ஸ் ஒரு இன்ப அதிர்ச்சி.நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
breakdown :
ஆங்கிலத்தில் ரோட் thirller  வகை படங்கள் பல உண்டு.ஆனால் இந்த படம் மற்ற எல்லா படங்களையும் சாப்பிட்டுவிடும்.பரபரப்பான படம்.ஒரு நொடிகூட போர் அடிக்கத படம்.என் நண்பன் ஒருவனிடம் இந்த படம் பார்க்க சொல்லி,அவனும் பார்த்து பின் அவன் தமிழில் இந்த படத்தை எடுத்தால் யார் யாரை போடலாம் என்று சொல்லும் அளவுக்கு நல்ல படம்.


Burning Bright :
கதை சிம்பிள். ஆப்ரிக்க சபாரி போல் ஒன்றை நிறுவ நினைக்கும் ஒருவன் தன் மகளையும் மன நலம் சரியில்லாத தன் மகனையும் கொள்ள இந்த சந்தர்பத்தை  பயன் படுத்தி, பசியுள்ள புலி ஒன்றை தன் காட்டு வீட்டினுள் தன் பிள்ளைகளோடு வைத்து பூட்டி விடுகிறான்.இனி என்ன? யார் பிழைத்தது.
Escape from alcartaz :
சிறையிலிருந்து தப்பிப்பதை பற்றி பல படங்கள் வந்தாலும் இந்த படம் மிக பிரபலமான படம்.alcatraz என்னும் இடம் கொடூரமான மற்றும் ஏற்கனவே தப்பித்துள்ள கைதிகளை அடைத்துவைக்கும் மிகுந்த பாதுகாப்புள்ள சிறை.இதிலிருந்து எப்படி ஹீரோ தப்பிக்கிறார் என்பதை inch-by -inch  ஆக சொல்லும் படம். இதுவும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.    


ஆங்கில படங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு ஒரு வெளி இந்த படங்கள் வெறும் thriller வகை படங்களாக படலாம்.என் நோக்கம் என்னை போல் இந்த வகை படங்களை பார்க்க தொடங்கி பின் எல்லா வகையான படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே.


தொடரும்:
Monday, 2 April 2012

மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்

மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3    பட விமர்சனம்)


(நான்)எதிர் பார்த்தது  போலவே , 3  படம் படு மொக்கை. முதலில் ஏன்  த்ரீ  என்ற டைட்டில் என்று  புரிய வில்லை. முதலில் பள்ளி காதல்,பின்னர் திருமணம் ,பின் ஒரு நோயோடு என்று மூன்று முக்கிய நிகழ்வுகளுக்காக த்ரீ என்று தலைப்பு வைத்திருப்பார்களோ? கதை என்று பார்த்தால்  சின்ன  கதைதான். தனுஷ்,ஸ்ருதி இருவரும்  காதலித்து பெற்றவர்களை எதிர்த்து  திருமணம் செய்துகொள்கிறார்கள்.பின் பெற்றவர்கள்  சேர்கிறார்கள்.தனுஷுக்கு  bipolar disorder என்ற  நோய் வந்தவுடன்  ஸ்ருதிக்கு தெரியாமல் ட்ரீட்மென்ட் எடுக்கிறார். பின் பயத்தில்  தற்கொலை செய்துகொள்கிறார்.
தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.முதல் பாதி போல் இவரின் ஆரம்ப கால படங்களிலும்,நோய் வந்தவுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்தவைதான்.ஸ்ருதி ஓகே.படத்தி ஓரளவேனும் முதல் பாதியில் உட்கார வைப்பவர் சிவ கார்த்திகேயன் தான்.பின் பாதியில் அவரும் இல்லை.
பிரபு,பானுப்ரியா,ரோகினி போன்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை தான் படத்தின் opening இக்கு முக்கிய காரணம்.பாடல்கள் ஓகே.படத்தில் பார்க்கும் போது கொலைவெறி பாடலை விட மற்றவை நன்றாக உள்ளன.கொலைவெறி பாடலை இதை விட கேவலமாக எடுக்க முடியாது. இந்த பாடல் ஹிட் ஆகியிருக்கா விட்டால்,இந்த படத்தை ஒருவர் சீண்டி இருக்க மாட்டார்.
எழுதி இயக்கியவர், ஐஸ்வர்யா தனுஷ். முடிந்த வரை,முதல் பட டைரக்டர்,போல் இல்லாமல் இயக்கியுள்ளார். படம் மிக மிக மெதுவாக செல்கிறது.காரணம் ,இந்த கதையை இப்படித்தான் எடுக்க முடியும்.
தனுஷுக்கு இன்னொரு தோல்வி படம்.
3.5 / 10 


விஜய்