Pages

Tuesday 20 August 2013

தமிழ் இயக்குனர்களிடம் இன்னமும் எதிர்பார்க்கலாமா ?

டாப் தமிழ் இயக்குனர்களிடம் இன்னமும் எதிர்பார்க்கலாமா ?

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குனரின் பங்கு முதன்மையானது.அப்படி பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் பலர் தற்போது சறுக்கி வருகிறார்கள்.சரி இந்த இயக்குனர் படமா என்று எதிர்பார்த்து படம் வந்த பின் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த விஷயம் நடிகர்களின் படங்களுக்கும் சேர்த்துதான்.இப்போது இயக்குனர்களின் மீது மட்டும் அலசி சமீப ,தற்போதைய படங்களின் வெற்றி தோல்வி போன்றவற்றை பார்க்கலாம்.

இந்த பதிவை  ஒரு சராசரி ரசிகனாய் எனது பார்வையில் எழுதியுள்ளேன்.

மணிரத்னம்,ஷங்கர்,பாலா ,கவுதம் மேனன்,மிஷ்கின்,செல்வராகவன்,பாலாஜி சக்திவேல்,பிரபு சாலமன்,அமீர்,வசந்தபாலன்,வெற்றி மாறன்,விஜய்  போன்ற கிளாஸ் பட இயக்குனர்களையும் லிங்குசாமி,ஹரி,முருகதாஸ்,வெங்கட் பிரபு,எம்.ராஜேஷ்,கே.எஸ்.ரவிக்குமார்,சமுத்ரகனி,போன்ற வர்த்தக பட இயக்குனர்களையும் எடுத்து கொள்வோம் .

கிளாஸ் இயக்குனர்கள்:



மணிரத்னம்: கடைசியாய் எப்ப ஹிட் கொடுத்தார் என்று யாருக்காவது ஞாபகம் இருக்கா? இருக்காதே.அதான் அவர் பலம்.என்ன எடுத்தாளும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கு எனக்கு அது போதாதா என்று நினைக்கிறார் போலும் .அலைபாயுதே கடைசி ஹிட்,கன்னத்தில் முத்தமிட்டால்,ஆயுத எழுத்து,குரு,ராவணன் ,கடல் என்று அவர் பாட்டுக்கு மொக்கையாய் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.இனியும் மக்கள் ரசிக்கும் படி ஒரு ஹிட் படம் கொடுப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.உங்களுக்கு ?

ஷங்கர் : இப்போது எடுத்து கொண்டிருக்கும் ஐ படம் அவருக்கு ஒரு பரீட்சை.பல புதிய சின்ன பட இயக்குனர்கள் கவன பெற்றுள்ள நிலையில் இன்னமும் அவர் முன்னிறுத்தும் பிரம்மாண்டம் மக்களை கவருமா ? பாப்போம்.

பாலா: என்ன சொல்வது என்று தெரியவில்லை.ஆனால் நம்பிக்கை உள்ளது பாலா மேல்.

கவுதம் மேனன் : OVER RATED இயக்குனர் என்றால் இவர்தான்.மணிரத்னம் கதை தான் இவருக்கும்.நீதானே என் பொன்வசந்தம்,நடு நிசி நாய் ,என்று 2 படு தோல்விகள்.காக்க காக்க,வேட்டையாடு,பச்சைக்கிளி 3 படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதன் பின் எடுத்த வாரணம் 1000,விண்ணைத்தாண்டி வருவாயா எனக்கு பிடிக்கவில்லை.மீண்டும் ஆக்க்ஷன் படம் எடுத்தால் ஒரு வேலை ஜெயிக்கலாம்.ஆமை வேகத்தில்  நகரும் காதல் படங்களா?ஆளை விடுடா சாமீ 

மிஷ்கின்: கிராப் இறங்கிக்கொண்டே வந்துள்ளது இவருக்கு. அஞ்சாதே,யுத்தம் செய்,முகமூடி ஒவ்வொரு படத்தைவிட முந்தய படம் நன்றாக இருந்திருக்கும் .நந்தலாலா பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சரியான நேரத்தில் வந்திருந்தால்  ஒருவேளை ஓடி இருக்கலாம்.சொந்தமாக ஓநாயும்  ஆட்டு குட்டியும் எடுத்து வருகிறார்.நான் இன்னமும் நம்பிக்கை இழக்க வில்லை மிஷ்கின் மேல்.

செல்வராகவன் :அவர் மனபோக்கை பார்த்தால் இன்னும் 2 அல்லது 3 படம் எடுத்து அதோடு சினிமாவுக்கே குட்பை சொல்லிவிடுவார் போல.அந்த அளவிற்கு மனம் நொந்து உள்ளார்.பெரிய அளவில் யோசிக்கிறார்.அதற்க்கு பெரிய நடிகர்கள் வேணும் அப்போதான் வியாபாரம் ஆகும்.ஆனால் பெரிய நடிகர்களோடு போக இவருக்கு மனமில்லை.ஆர்யா ,கார்த்தி போன்றவர்களை வைத்துகொண்டு 60,70 கோடி பட்ஜெட் படம் எடுத்தால் எப்படி?அவர் யோசிக்கவேண்டும்.

பாலாஜி சக்திவேல்: இவருக்கும் கிராப் இறங்குமுகம்.காதலுக்கு பிறகு எடுத்த கல்லூரி ,வழக்கு எண் போன்ற படங்கள் எல்லோரையும் கவரவில்லை.ஆனாலும் காத்திருக்கலாம் இவர் படங்களுக்காக.

பிரபு சாலமன் : எனக்கு என்னமோ அவர் மீது வெளிச்சம் வரும் முன் அவர் எடுத்த கொக்கி,லாடம் போன்ற (டார்க் வகை படங்கள் )படங்களே நன்றாக இருந்தது  போல் உள்ளது.காதல் படங்களில்(மைனா,கும்கி) இவரும்  இறங்கி விட்டார்.பார்க்கலாம்.

அமீர்: ONE FILM WONDER போல என்று யோசிக்க வைத்து வருகிறார்.ஒரு வேலை இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் பெப்சி ,இயக்குனர்கள் சங்கம் என்று போய் விட்டதால்  இருக்குமோ.எனக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.

வசந்த பாலன்: கண்டிப்பாக இவருக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு.ஒரு அடையாளம் உண்டு.வெயில்,அங்காடி தெரு என்று அசத்தி  இருந்தார்.அரவான் சறுக்கினாலும் இப்போது எடுத்துவரும் காவிய தலைவனுக்காக காத்திருக்கிறேன்.

வெற்றி மாறன்: எனக்கு ஆடுகளத்தை விட பொல்லாதவன் தான் பிடிக்கும்.அருமையாய் கதை சொல்ல தெரிந்த இயக்குனர்.என்ன 3 வருஷம் ஆகியும் இன்னும் அடுத்த படம் ஆரம்பிக்காமல் இருக்கிறார்.நம்பிக்கைக்குரிய இயக்குனர்.

விஜய்: ஆமை வேக திரைக்கதை என்றால் இவர் படங்கள் தான்.மதராசபட்டினம் ,தாண்டவம் இரண்டும் என் பொறுமையை சோதித்த படங்கள்.விஜய் எப்படி இவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.

COMMERICAL பட இயக்குனர்கள் பற்றி அடுத்த பதிவில் 

இது என் ரசனை அளவில் .

Tuesday 6 August 2013

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம்

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம் 




எனது 100 வது பதிவு. இது.பதிவு எழுத தொடங்கும்போது 100 பதிவு போடுவேன் என்று நினைத்ததில்லை.ஒரு ஆசையில் ரொம்ப நாளாய் படித்து கொண்டே இருக்கிறோமே நாமே எழுதுவோம் என்று தொடங்கியது.என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் ,அவ்வபோது படிப்பவர்களுக்கும் நன்றி.


சமீப காலங்களில்  இப்படி ஒரு பேய் படம் பார்த்ததில்லை .
ஆஹா ,மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த படம் பார்த்துவிட்டு வந்தால் பகலிலேயே பயமாக இருக்கிறது.
THE EXORCIST, THE AMITYVILLE HORROR போன்ற படங்களை பார்த்தது போல் இருந்தது.
IMDB RATING -8.0
ROTTEN TOMATOES- 97% FRESH
படம் வந்த 2 வாரங்களிலேயே $ 136,000,000 வசூல்.
மேலும் 
நம்ம ஊரில் 

TIMES OF INDIA-- 3.5/5
THE HINDU-- VERY GOOD SCARY FILM 
CNN IBN -3.5 

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் ,ஆஹா அற்புதம் என்று பேச்சு.HORROR பட ரசிகனாய் இருந்துவிட்டு இந்த படத்தை ;பற்றி இப்படி கேள்விப்பட்டு அஹா செம வேட்டை நமக்கு என்று நினைத்தேன் ,இதுவரை ஆங்கில HORROR படத்தை திரை அரங்கில் போய்  பார்த்தது கிடையாது.பெரும்பாலும் இந்தியாவில் ரிலீஸ் இருக்காது.இந்த படம் இப்போது இங்கே வந்துள்ளது.போகலாமா என்று எண்ணம் தோன்றியது.

டவுன்லோட் செய்ய நல்ல பிரிண்ட் சப் டைட்டில் எல்லாம் வர சில வாரங்களாவது பிடிக்கும்.அதற்குள் பார்த்தாக வேண்டுமே.சரி என்று என் நண்பன் செல்வாவிற்கு போன் செய்து இந்த படத்தை பற்றி சொன்னேன்.அவனும்  ட்ரைலர் பார்த்து ஆர்வமாகி இன்று போகலாமா பார் என்றான்.சரி என்று நெட்டில் எந்த தியேட்டர் என்று தேடினேன்.கீழ்பாக்கம் சங்கம் அரங்கம் என்று முடிவு செய்து நேற்று 5-AUG  இரவு 7 மணி காட்சி  போனோம்.அரங்கம் முக்கால்வாசி நிரம்பியது.

சரி படம் எப்படி ? அதானே .அதை பற்றி எழுத ஒன்றும் இல்லாததால் தானே இவ்வளோ போன கதை எல்லாம் எழுதி கொண்டிருக்கிறேன்.அட என்ன சொல்றே என்று கேட்கிறீர்களா ?  நீங்கள் இது வரை ஒரு பேய் படத்தில் ஒரு தனி வீடு,அங்கே வரும் ஒரு குடும்பம் ,அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள பேய் .அங்கே நடக்கும் சம்பவங்கள் என்று ஏதாவது படம் பார்திருகிறீர்களா ? அட அதான் எல்லா பேய் படத்திலும் இருக்கிறதே என்று கேட்கிறீர்களா ? இந்த படமும் அதே கதை தான்.


கமல் நடித்த தசாவதாரம் படத்தில் தொடக்கத்தில் வந்த நம்பி கதை அருமையாய் இருக்கும் .அதை தனி படமாகவே எடுத்திருக்கலாம் என்று சில .விமர்சனத்தில் படித்தேன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை வருகிறது .ஒரு பொம்மை அதில் பேய் .அந்த பொம்மை தூக்கி போட்டாலும் திரும்ப வருவது என்று கொஞ்சம் அதுவே நன்றாக இருந்தது.அதையே முழு படமாகே எடுத்து இருக்கலாம் போல.அதன் பிறகு வேறு ஒரு குடும்பம் என்று போர் அடிக்க தொடங்குகிறது.இறுதி 15 நிமிடங்கள் கொஞ்சமா ஓகே.என்ன கதை 1971 இல் நடப்பது போல் இருப்பதால் கொஞ்சம் ரசனையாக படம் இருக்கு.திரை அரங்கில் என்னவோ மக்கள் கை தட்டி ஆரவாரத்தோடு தான் பார்கிறார்கள்.எங்களுக்கு தான் அவ்வளாக ஒன்று தெரியவில்லை.

மொத்தத்தில் நீங்கள் தீவிர பேய் பட ரசிகர்,பேய் படங்கள் நிறைய பார்த்திருக்கேன் என்றால் இந்த படம் உங்களுக்கு சப்பையாய் போய் விடும்.இது வரை ஒரு சில பேய் படங்களே பார்த்திருப்பேன் என்பவர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்( எந்த பேய் படத்தையும் ).உங்களுக்கு பிடிக்கலாம்.

நம்பி ஏமார்ந்தோம்.