Pages

Sunday 15 July 2012

ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு நடிகர்கள் நடித்த படங்கள் ஏராளமாய் சொல்லலாம்.சில படங்கள் வெறும் கதை மட்டும் பிடிக்காமல் மறுத்திருப்பார்கள்.இந்த பதிவு ஓரளவு அந்த படங்களை பற்றி சொல்லும் .ஒருவர் நடிக்க மறுத்து விலக பல காரணங்கள் இருக்கலாம்.இறுதியில் அந்த நடிகர் நடிக்காமல் விட்ட படம் வெற்றி அடைந்ததா என்பதே முக்கியம்.ஒரு சின்ன உதாரணம்.பாக்கியராஜ் மகன் சாந்தனு இதுவரை ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை.சூப்பர் ஹிட்டான களவானி படம் அவர் நடிக்க மறுத்த படம்.கிராமத்து படம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய படம்.

எம் ஜி ஆர் நடிக்க மறுத்த படங்கள்:
கர்ணன்: சிவாஜிக்கு முன் கர்ணனாக நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். ஆச்சர்யமாக உள்ளது இல்லையா? அண்ணா இதிகாச படங்களில் நடிக்க வேண்டாம் என்று எம்.ஜி,ஆரை கேட்டு கொண்டதால் அவர் விலக ,பிறகே சிவாஜி நடித்தார்.ஆனாலும் அது அந்த காலத்தில் தோல்வி அடைந்து இன்று வெற்றி பெற்றது வேறு கதை.
சிவந்த மண் : இந்த படம் வேறு பேரில் எம்.ஜி.ஆரை வைத்து துவங்கப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்று பெயர் மாற்றம் கண்டது.
இது போல் சில படங்கள் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த பாத்திரம் ஒத்துவராது தம்பி சிவாஜி கணேசனே இதற்க்கு சரியான தேர்வு என்று கை காட்டிய படங்களும் உண்டு.

சிவாஜி நடிக்க மறுத்த பழைய படங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வை ஷண்முகி(ஜெமினி கணேசன்),நட்புக்காக (விஜயகுமார்) போன்ற படங்கள் அவர் மறுத்தவை.
ரஜினி நடிக்க மறுத்த படங்கள் :  முதல்வன்,மக்கள் ஆட்சி,ஜக்குபாய்
கமல் : ஜென்டில்மேன் ,எந்திரன்,பச்சை கிளி முத்துச்சரம்,
எந்திரன் கமல் நடிப்பில் எடுக்க பட்ட புகை படங்கள் :

விஜய்: முதல்வன், உன்னை நினைத்து ,சண்ட கோழி,தூள்,வேட்டை
அஜித்: இவர் மறுத்த படங்கள் எல்லாம் சூரியாவை வளர்த்து விட்ட படங்கள் . நேருக்கு நேர்,நந்தா,கஜினி,நான் கடவுள்,நியூ .
சூர்யா : நண்பன் விஜயிடம் இருந்து இவரிடம் வந்து மீண்டும் விஜய்க்கே சென்றது,வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் பிரியாணி சூர்யா நடிக்க இருந்து இப்போது கார்த்தி நடிக்கிறார்.முகமூடி படமும் இவர் நடிக்க வேண்டியது.அவன் இவன் படத்தை சூர்யா கார்த்தி இருவரை வைத்து எடுக்க தான் பாலா முதலில் திட்டமிட்டார்.
சிம்பு : பாய்ஸ்,கோ,நண்பன் .
விமல் நடிக்க மறுத்த வேடத்தில் தான் எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந் நடித்தார்.
சத்யராஜ் - சிவாஜி படத்தில் சுமன் வேடத்தில் நடிக்கவும்,தசாவதாரம்,விருமாண்டி போன்ற படங்களில் நெப்போலியன் ஏற்ற வேடத்தில் சத்யராஜ் மறுத்துள்ளார்.

சில படங்களில் இப்போதும் சில நடிகர்களை பார்க்கும் போது  இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று நாம் நினைப்போம்.ஆனால் முதலில் அனுகப்பட்டவரே  நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை.இதனால் இந்த படங்கள் வெற்றி தோல்வி மாறி இருக்குமா? 


13 comments:

  1. Super post nanbaa.. Nadikarkalayum alagaaka varisai paduthi eluthi irukireergal.. Nice nice nice..

    ReplyDelete
  2. மற்ற நடிகர்கள் பற்றித் தெரியவில்லை. ஆனால் எந்திரன், ரஜினி இல்லாமல் வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாக குட்டு வாங்கி வசூலில் படுத்திருக்கும். படம் ஓடியது ரஜினி என்ற ஒரு மனிதனால் மட்டுமே. :)

    Nice post ...

    ReplyDelete
    Replies
    1. summa..rajinikku sompu uruttatheenga boss!!!!! athu odinathukku rajiniyum oru kaaranam matrapadi shankar,camearaman and cg team avankkalum athukku oru kaaranam....

      Delete
    2. கமல் நடித்திருந்தால் வேறு மாதிரி எடுத்திருப்பார் ஷங்கர்.இருந்தாலும் சொல்ல முடியாது .

      Delete
  3. கண்டிப்பா இன்னும் நிறையவே எதிர்ப்பார்த்தேன்...ஒரு நடிகர் மிஸ் பண்ணி இன்னொரு நடிகர் நடிப்பது அதன் அனுபவங்கள் உண்மையில் சுவாரஸ்யம்தான்..பல நடிகர்கள் இதன் வழியே பேரும் எடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை..இதில் கர்ணன் படத்தில் எம்ஜிஆர் என்பது ஏற்கனவே தெரியும்..அவர் நடித்திருக்கலாம்..சிறப்பாகவே அமைந்திருக்கும்..என்னதான் இருந்தாலும் சிவாஜி படத்தில் பின்னிருப்பார்..(சமீபத்தில்தான் படம் பார்த்தேன்)..
    பதிவு சூப்பர்..இன்னும் எழுதுங்கள்..நன்றி. .

    ReplyDelete
  4. //முதலில் அனுகப்பட்டவரே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை//
    உண்மை தான், என்னால யோசிச்சு பார்க்கவே முடியல..
    சிவாஜி சுமன் சத்யராஜ் ஓகே....
    விருமாண்டி நல்லமநயாக்கர் கேரக்டர்ல சத்யராஜ்...கற்பனை பண்ண கஷ்டமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. நெப்போலியன் விருமாண்டியில் அருமையாய் நடித்திருப்பார்.அதிலும் வெட்டு பட்டு இறக்கும் காட்சியில் முகம் கால்கள் இழுத்துக்கொண்டு துடித்து இறப்பர்.சத்யராஜிடம் இதெல்லாம் கஷ்டம் தான்.--

      Delete
  5. அறியாத பல தகவல்கள்... ஆச்சரியமூட்டுகிறது... குறிப்பிட்ட சில படத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பதுண்டு...

    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
    Follower ஆகி விட்டேன்.

    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 1)

    ReplyDelete
  6. அருமையாய் சொன்னிர்கள் நண்பா...காக்க காக்க கூட அஜித் வந்து பின் சூர்யாவுக்கு சென்றது தான்...நியூ அஜித் நடித்து இருந்தால் கேவலமாய் போய் இருக்கும்...

    ReplyDelete
  7. எந்திரன் கமல் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும்...

    ReplyDelete
  8. நியாபகத்திற்கு வருவதை சொல்கிறேன்.

    1) நந்தா படத்தில் சிவாஜி மறுத்த வேடத்தை தான் ராஜ்கிரண் செய்தார் (தகவல்: பாலா, ஒரு பேட்டியில்)
    2) இந்தியன் கதை முதலில் ரஜினிக்கே எழுதப்பட்டதாம் (தகவல்: ஷங்கர் ஒரு பேட்டியில். அவர் சொன்ன உதாரணம், மாறுவேடத்தில் வரும் போலீஸ் அதிகாரியை வர்மத்தால் தாக்கிவிட்டு, சேனாபதி தலை கேதிவிடும் காட்சி)

    எனக்குத் தெரிந்து பல நல்ல வேடங்களை தன் இறுதிக்காலங்களில் தவறவிட்டார் சிவாஜி. அவற்றை நடித்திருந்தால் இன்னொரு தலைமுறையுலும் அவருக்கு ரசிகர்கள் இருந்திருப்பார்கள்.

    // விஜய்: முதல்வன், சண்ட கோழி,தூள் // ஜஸ்ட் மிஸ். நல்ல படங்கள் எதிலையும் தளபதீ நடிக்கல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .நானும் கேள்வி பட்டேன்.நந்தா சிவாஜி நடிக்க கேட்க்க பட்டது என்று.ஆனால் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்.நண்பரே.நன்றி.

      Delete