Pages

Sunday, 24 March 2013

ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால்


ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால் 


கொஞ்சம் வித்தியாசமான கதை .MYSTERY-THRILLER படம் .

வழக்கமான ஆங்கில திகில் படம் போலவே தொடங்கும் படம். காட்டிற்கு நடுவில் தனியான ஒரு சிறிய வீடு.அங்கே வரும் ஒரு பெண்.இப்படி தொடங்கியவுடன் சரி வழக்கமான இந்த கதையில் ஒரு 1000 படம் வந்திருக்குமே என்று யோசிக்க தோன்றும் .ஆனால் படம் தொடங்கி ஒரு 25-30 நிமிடம் கழித்து நாம் சந்திக்கும் ஆச்சர்யங்கள்.படத்திற்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கின்றது.

ஏதோ ஒரு காட்டிற்கு நடுவில் ஒரு பெண் தனியாக நடக்க முடியாமல் நடந்து வருகிறாள்.அங்கே தனியாக ஒரு சிறிய வீடு.உள்ளே போகிறாள்.அந்த நேரத்தில் அங்கே ஒருவன் வருகிறான்.முதலில் அவனை கண்டு அஞ்சும் அவள் பின் தான் அங்கே வந்த காரணத்தை சொல்கிறாள்.தன் கணவனோடு காரில் போகும்போது கார் ரிப்பேர் ஆனதால் உதவி தேடி சென்ற கணவன் நீட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவனை தேடி வந்ததாக சொல்கிறாள்.அவனும் அதுபோலவே தனது காரும் ரிப்பேர் ஆனதால் அங்கே வந்து 3 நாட்கள் ஆனதாகவும் சொல்கிறான்.அடுத்த நாள் இன்னொரு பெண் அதேபோல் அங்கே வருகிறாள் .

இதன் பின் படம் முழுதும் ஆச்சர்யங்கள்.

3 பேரும் அங்கிருத்து வெளியே சென்று காட்டு வழியே உதவி தேடி செல்கிறார்கள் .பல மணி நேரத்திற்கு பின் அவர்கள் வந்து சேரும் இடம் ...........அவர்கள் சந்தித்துக்கொண்ட அதே வீடு.

தாங்கள் அந்த வழி வந்த காரணத்தை பேசி கொள்ளும் போது அவர்கள் இப்போது இருக்கும்  ஊரை பற்றி பேச்சு வர. 3 பேருமே அந்த இடத்தை வேறு ஒரு ஊராக  நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் ஒரு கட்டு பணம் .அந்த பணம் அச்சிட்ட வருடம் 1984. ஆனால் மற்றொரு பெண் எந்த நாட்டில் எதிர்கால வருடத்தை போட்டு பணம் அச்சடிக்கிறார்கள் என்று கேட்டு அசரடிக்கிறாள்.காரணம் அவளை பொறுத்தவரை அது 1962. அவன் அங்கே வர அவனை விசாரித்தால் அவன் இருப்பதாய் நினைப்பது வருடம் 2011.

அவர்கள் எதோ நட்டு  கழண்ட கேஸ் என்று நினைத்தால் நம் நினைப்புக்கு ஒரு அடி.பின் என்னதான் அங்கே ? நான்கவதாய் வருபவன் யார் ? இதற்க்கு மேல் கதை பற்றி சொல்ல போவதில்லை .


அவர்களுக்குள் என்ன சம்பந்தம்? கொஞ்சம் கூட யோசித்தே பார்க்க முடியாத கதை .யூகிக்க முடிந்தவர்கள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்.ஆனால் படம் பார்த்த பின் ரொம்பவும் கவனித்து பார்த்தால் வசனங்களை  உற்று கவனித்து வந்தால் ஒரு வேலை 1%  யூகிக்கலாம்  .உஹூம் நிச்சயாமாக 99 %சொல்ல முடியாது.இதுவாக இருக்குமோ ,அல்லது அப்படி இருக்குமோ என்று எப்படி யோசித்தாலும் உங்களால் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.

என்னதாண்டா நடக்குது என்று ஆவல் தாங்க முடியவில்லை சில இடங்களில்.எல்லோருக்கும் தெரிந்த Clint Eastwood மகன் SCOTT EASTWOOD தான் ஹீரோ.அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார்.

வழக்கமான படங்கள் பார்த்து சலித்த ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்.படம் 1.30 மணி நேரம் தான் .முதல் 30 நிமிடம் கொஞ்சம் பொறுமையாய் போகும்.அதற்க்கு மேல் கதைக்குள் வந்துவிடுவோம்.2011 வெளிவந்த படம்.

இதுவரை நான் எந்த படத்தின் டவுன்லோட் லிங்கும் கொடுத்தது கிடையாது.இது கொஞ்சம் கிடைக்க அரிதான படம்.அதாவது SUBTITLE உடன். இந்த படத்தின் லிங்க் தருகிறேன்.


IMDB RATING -6.3

Friday, 15 March 2013

கிராமங்கள் அடங்கிய சென்னை


கிராமங்கள் அடங்கிய சென்னை சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் 

இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் 

இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. 

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது 

சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று 

அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி 

குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது 

இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக 

இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் 

பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக 

மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் 

வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது 

தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் 

என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ 

மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் 

பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக 

இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே 

இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி 

புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி

நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று

காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்

சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி 

என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி 

மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 

தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என 

அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. 

அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே 

பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் 

இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று

அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்

பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் 

உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என

மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் 

மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை 

நன்றி : முகநூலில் எனக்கு அளித்த நண்பன் மனோஜ்