Pages

Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Monday, 28 October 2013

சென்ற 2 மாதங்களில் பார்த்த உலக படங்கள்

சென்ற 2 மாதங்களில் பார்த்த உலக படங்கள்:

பதிவெழுதி 3 மாதங்கள் ஆகிவிட்டது.நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.சில பதிவுகள் எழுத ஆரம்பித்து டிராப்டில் இருக்கிறது.சென்ற இரண்டரை மாதங்களில் நான் பார்த்து முடித்த படங்களை பற்றி இந்த பதிவு .இதில் சில படங்கள் வருடக்கணக்கில் என்னிடம் பார்க்காமல் இருந்தவை .சரி விஷயத்திற்கு வருவோம்.


5150 Elm's Way:(பிரெஞ்சு ): இந்த படத்தை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம்.செஸ் விளையாட்டில் சாம்பியன் ஆன ஒரு சைக்கோ அந்நியன்  படம் போல தவறு செய்பவர்களை கொன்று பிணங்களை தனி அறையில் ஒரு செஸ் போர்டு வைத்து அதில் கருப்பு செஸ் காய்களுக்கு பதில் இந்த பிணங்களை சேர்த்து வருகிறான்.அவனிடம் சிக்கி கொண்ட ஒரு இளைஞன்.தப்பு எதுவும் செய்யாதவன் அதனால் அவனை கொள்ள அந்த சைகோவிற்கு மனமில்லை.என்னோடு செஸ் விளையாடி ஜெயித்தால் விடுதலை என்று சொல்கிறான்.தினமும் விளையாடியும் பல நாட்கள் ஆகியும் அவனை ஜெயிக்க முடியவில்லை.இறுதியில் இருவரும் காய்களுக்கு பதில் பிணங்களை நகர்த்தி விளையாடி வருகிறார்கள்.முடிவு என்ன? IMDB போன்ற தளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் .எனக்கு பிடித்து இருந்தது.

MOTHER (கொரியா ) :  ஒரு வயதான பெண்.மன நலம் சரி இல்லாத ஒரே மகன்.ஒரு கொலை வழக்கில் சிக்கும் மகனை காப்பாற்ற எத்தனை தூரம் போவாள்? ஒரு வரி கதை என்றாலும் கொரியா படங்கள் அதை எடுக்கும் விதம்.அசத்தல் .கொரியா பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.


STOKER : OLD BOY எடுத்த இயக்குனரின் ஆங்கில படம் என்பதால் பார்த்தேன்.நல்ல விமர்சனங்கள் என்றாலும் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனாலும் இயக்குனரின் ஸ்டைல் சில இடங்களில் தெரிகிறது.ஜஸ்ட் ஓகே படம்.

SHUTTER ISLAND: என்னது இப்பதான் இந்த படத்தை பாக்கறியா என்று கேட்கிறீர்களா? என்ன செய்வது படம் 2 வருடங்களுக்கு மேல் என்னிடம் உள்ளது .படம் வந்த சமயம் எவனோ புண்ணியவான் படத்தின் முடிவை முக்கய விஷயங்களை எழுதிவிட்டான்.நானும் படித்து தொலைத்துவிட்டேன்.ஒரு நாள் திடீர் என்று முடிவு தெரியும் இருந்தாலும் பார்க்கலாம் என்று பார்த்தேன்.முடிவு தெரியாமல் பார்த்திருந்தால் எனக்கு இன்னும் பிடித்திருக்கும் .இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் புரியவில்லை தான்.

ZODIAC: 1960களின் இறுதியில் ஊரில் கொலைகள் நடக்கிறது.கொலையாளி யார் என்று போலீஸ் தேட ஒரு கார்டூனிஸ்ட் தனியே அந்த கொலைகாரனை கண்டு பிடிக்க முயற்சிக்கிறான்.நல்ல படம் தான்.என்ன 1.45 மணி நேரத்தில் எடுத்திருக்க வேண்டிய படத்தை 2.20 நேரம் எடுத்து பல தடவை கொட்டாவி வர வைத்துவிட்டார்கள்.ரொம்ப ஸ்லோ.

NOW YOU SEE ME: நிறைய பேர் பார்த்துவிட்டு இருப்பீர்கள்.படம் சூப்பர் தான் என்ன கிளைமாக்ஸ் நான் முதலிலே யூகித்துவிட்டேன்.

CURSE OF CHUCKY: CHILD'S PLAY படம் பார்திருக்ரீர்களா? பார்க்கவிட்டால் முதல் பாகத்தை பாருங்கள்.செம படம் .இந்த படம் அதன் 6ஆம் பாகமோ என்னவோ.15 வருடம் கழித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.மொக்கை படம்.

THE GIRL NEXT DOOR:  ஒரு மாணவன் தன்  பக்கத்துக்கு வீட்டிற்க்கு புதிதாய் வந்துள்ள பெண்ணை விரும்புகிறான்.அவளும் விரும்ப அவள் ஒரு முன்னாள் நீல பட நடிகை  என்று தெரித்தால்? ஹீரோயின் அழகா இருந்தது.மற்றபடி அடல்ட் காமெடி என்று சொன்னார்கள் .ஒரு சிரிப்பும் இல்லை.

THE MAN FROM NOWHERE:  மீண்டும் ஒரு செம கொரியா படம்.நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்..இந்த படமும் என்னிடம் ரொம்ப நாளாய் இருந்தது.

அதோடு I SPIT ON YOUR GRAVE,IN THEIR SKIN,SATURDAY MORNING MYSTERY,TOOLBOX MUDERS போன்ற படங்களும் பார்த்தேன்.சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் இல்லை. அதனால் இதோடு முடித்து கொள்வோம்.

Tuesday, 6 August 2013

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம்

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம் 




எனது 100 வது பதிவு. இது.பதிவு எழுத தொடங்கும்போது 100 பதிவு போடுவேன் என்று நினைத்ததில்லை.ஒரு ஆசையில் ரொம்ப நாளாய் படித்து கொண்டே இருக்கிறோமே நாமே எழுதுவோம் என்று தொடங்கியது.என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் ,அவ்வபோது படிப்பவர்களுக்கும் நன்றி.


சமீப காலங்களில்  இப்படி ஒரு பேய் படம் பார்த்ததில்லை .
ஆஹா ,மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த படம் பார்த்துவிட்டு வந்தால் பகலிலேயே பயமாக இருக்கிறது.
THE EXORCIST, THE AMITYVILLE HORROR போன்ற படங்களை பார்த்தது போல் இருந்தது.
IMDB RATING -8.0
ROTTEN TOMATOES- 97% FRESH
படம் வந்த 2 வாரங்களிலேயே $ 136,000,000 வசூல்.
மேலும் 
நம்ம ஊரில் 

TIMES OF INDIA-- 3.5/5
THE HINDU-- VERY GOOD SCARY FILM 
CNN IBN -3.5 

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் ,ஆஹா அற்புதம் என்று பேச்சு.HORROR பட ரசிகனாய் இருந்துவிட்டு இந்த படத்தை ;பற்றி இப்படி கேள்விப்பட்டு அஹா செம வேட்டை நமக்கு என்று நினைத்தேன் ,இதுவரை ஆங்கில HORROR படத்தை திரை அரங்கில் போய்  பார்த்தது கிடையாது.பெரும்பாலும் இந்தியாவில் ரிலீஸ் இருக்காது.இந்த படம் இப்போது இங்கே வந்துள்ளது.போகலாமா என்று எண்ணம் தோன்றியது.

டவுன்லோட் செய்ய நல்ல பிரிண்ட் சப் டைட்டில் எல்லாம் வர சில வாரங்களாவது பிடிக்கும்.அதற்குள் பார்த்தாக வேண்டுமே.சரி என்று என் நண்பன் செல்வாவிற்கு போன் செய்து இந்த படத்தை பற்றி சொன்னேன்.அவனும்  ட்ரைலர் பார்த்து ஆர்வமாகி இன்று போகலாமா பார் என்றான்.சரி என்று நெட்டில் எந்த தியேட்டர் என்று தேடினேன்.கீழ்பாக்கம் சங்கம் அரங்கம் என்று முடிவு செய்து நேற்று 5-AUG  இரவு 7 மணி காட்சி  போனோம்.அரங்கம் முக்கால்வாசி நிரம்பியது.

சரி படம் எப்படி ? அதானே .அதை பற்றி எழுத ஒன்றும் இல்லாததால் தானே இவ்வளோ போன கதை எல்லாம் எழுதி கொண்டிருக்கிறேன்.அட என்ன சொல்றே என்று கேட்கிறீர்களா ?  நீங்கள் இது வரை ஒரு பேய் படத்தில் ஒரு தனி வீடு,அங்கே வரும் ஒரு குடும்பம் ,அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள பேய் .அங்கே நடக்கும் சம்பவங்கள் என்று ஏதாவது படம் பார்திருகிறீர்களா ? அட அதான் எல்லா பேய் படத்திலும் இருக்கிறதே என்று கேட்கிறீர்களா ? இந்த படமும் அதே கதை தான்.


கமல் நடித்த தசாவதாரம் படத்தில் தொடக்கத்தில் வந்த நம்பி கதை அருமையாய் இருக்கும் .அதை தனி படமாகவே எடுத்திருக்கலாம் என்று சில .விமர்சனத்தில் படித்தேன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை வருகிறது .ஒரு பொம்மை அதில் பேய் .அந்த பொம்மை தூக்கி போட்டாலும் திரும்ப வருவது என்று கொஞ்சம் அதுவே நன்றாக இருந்தது.அதையே முழு படமாகே எடுத்து இருக்கலாம் போல.அதன் பிறகு வேறு ஒரு குடும்பம் என்று போர் அடிக்க தொடங்குகிறது.இறுதி 15 நிமிடங்கள் கொஞ்சமா ஓகே.என்ன கதை 1971 இல் நடப்பது போல் இருப்பதால் கொஞ்சம் ரசனையாக படம் இருக்கு.திரை அரங்கில் என்னவோ மக்கள் கை தட்டி ஆரவாரத்தோடு தான் பார்கிறார்கள்.எங்களுக்கு தான் அவ்வளாக ஒன்று தெரியவில்லை.

மொத்தத்தில் நீங்கள் தீவிர பேய் பட ரசிகர்,பேய் படங்கள் நிறைய பார்த்திருக்கேன் என்றால் இந்த படம் உங்களுக்கு சப்பையாய் போய் விடும்.இது வரை ஒரு சில பேய் படங்களே பார்த்திருப்பேன் என்பவர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்( எந்த பேய் படத்தையும் ).உங்களுக்கு பிடிக்கலாம்.

நம்பி ஏமார்ந்தோம்.

Saturday, 27 July 2013

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

பார்த்த 30 படங்களில் சூப்பர் என்று சொல்லகூடிய லிஸ்ட் இது :

இதில் 3 படங்களுக்கு சக பதிவர்களின் லிங்க் கொடுத்து உள்ளேன்.அதை விட சிறப்பாக எழுதிவிட முடியாது என்பதால் அவர்களின் பதிவே இங்கே முறை.



The Hidden Face (2011):

உங்களுக்கு பிடித்தமானவர்கள் உதாரணமாய் உங்கள் கணவனோ ,மனைவியோ அல்லது காதலரோ காதலியோ (மணம்  ஆகாமல் ஒன்றாய் இருப்பது இந்தியாவில் சாத்தியமோ) நீங்கள் இல்லாத போது அவர் என்ன செய்வார் என்பதை பார்க்க நினைத்தால் ? அதுவும் மிக அருகில் இருந்து (கேமரா வைத்து எல்லாம் இல்லை)

தன்னை விட்டு பிரிந்து ஓடிவிட்ட காதலி அவன் பார்பதற்காக ஒரு வீடியோவில் பேசி, தான் போவதாகவும் வேறு ஒருவனை விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் வெறுப்பு அடையும் அவன் குடிக்க போன இடத்தில வேறு ஒருவளை சந்தித்து, அவளுடன் நட்பாகி அவளை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவளோடு உறவு கொள்கிறான்.

முன் கதை : இசை நடத்துனரான அந்த நாயகன் தன் குழுவில் உள்ள ஒரு பெண்ணோடு உறவு உள்ளதாக நினைக்கிறாள் காதலி.அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு வயதான பெண்ணிடம்(வேறு ஊரில் வசிப்பவர் ) தன் எண்ணத்தை சொல்கிறாள்.அந்த வீடு ஒரு வித்யாசமான வீடு .வீட்டிற்கு  நடுவில் ஒரு சிறு இருட்டு அறை .ஆனால் வெளியில்  இருந்து பார்த்தல்  வெறும் பீரோ,கண்ணாடி ,சுவர் என்றே தெரியும்.அதன் உள்ளே செல்லும் வழியும் தெரியும்படி இருக்காது. ஒரு பக்க முகம் பார்க்கும் கண்ணாடியும் பின் பக்கம் சாதாரண கண்ணாடியும் உள்ளதால் வீடு முழுதும் என்ன நடக்கிறது என்று அந்த அறையில் இருந்தே பார்க்கலாம். இந்த விஷயம் அந்த உரிமையாளர் பெண் சொல்லித்தான் காதலிக்கு தெரிய வருகிறது.மேலும் உண்மையை கண்டுபிடிக்க அந்த அறையில் தங்கிவிட்டால் போதும் என்கிறாள்.சரி என்று ஒரு காமெராவில் தான் அவனை விட்டு போவாத சொல்லி மறைகிறாள்.மறைந்த இடத்தில உள்ளே வந்து பூட்டிய இடத்தில சாவி தொலைகிறது.என்ன கத்தினாலும் கேட்காது.அப்படி ஒரு அறை  இருப்பதே காதலனுக்கு தெரியாது.அவள் எப்படி வெளியே வருகிறாள்? 

ஸ்பானிஷ் மொழி படம் .2011 வந்தது.ஹிந்தியில் வெளி வந்த murder 3 இந்த படத்தின் அதிகார பூர்வமான ரீமேக் .

வித்யாசமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.

Coldfish: ஒரு மனிதனை கொன்றால் அப்படி ஒருவன் இருந்ததற்கே அடையாளம் இல்லாமல் அழிப்பது எப்படி என்பதை ஆற அமர துண்டு துண்டாக வெட்டி ரத்தம் எல்லாம் எடுத்து எலும்பை தனியாக எடுத்து எரித்து அதை நதியில் கொட்டி ,வெட்டிய அறையை சுத்தம் செய்வது வரை முழுவதும் விலாவரியாக காட்டுகிறார்கள்.கதை எல்லாம் பெரிதாக இல்லை.

ஒரு கணவன் மனைவி.சிறய மீன் கடை நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு பெண்.அந்த பெண்ணை இன்னொரு பெரிய மீன் கடையில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.அந்த கடையின் உரிமையாளரும் அவன் மனைவியும் சைக்கோ கொலைகாரர்கள்.அவர்களிடம் சிக்கும் அந்த சிறைய கடையின் கணவன்.அவனை அடிமையாக்கி கொலைகளுக்கு உதவ வைக்கிறார்கள்.அவன் என்ன செய்தான் என்பதே படம். ஜப்பானிய படங்கள் பார்பவர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட் .ரசனையான படம்.

Bedevilled (2010) : வங்கி ஒன்றில் பணி புரியும் ஹெவோன் விடுமுறைக்காக தான் வளர்ந்த தீவிற்கு போகிறாள் .தற்போது அங்கு இருப்பது மொத்தமே ஒரு 10 பேர் தான்.சிறு வயதில் தன் தோழியான போக்னம் வீட்டில் தங்குகிறாள்.அவளுக்கு 10-12 வயதில் ஒரு பெண்.அவள் கணவன் முரடன்.அவன் தம்பி ஒரு பெண்பித்தன்.தன அண்ணன் மனைவியையே அவ்வபோது உறவு கொள்கிறான்.வந்திருக்கும் தோழி மீது ஒரு கண்.மற்றவர்கள் கடுமையான மக்கள் .ஈவு இரக்கம் இல்லாதவர்கள்.ஒரு நாள் ஒரு சண்டையில் அவள் சிறு பெண் இறக்கிறாள்.அதனால் வெறி வந்த போக்னம் அந்த தீவின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கொடூரமாக கொள்கிறாள்.அவள் வீட்டிற்கு வந்திருக்கும் தோழி? இந்த ஆசிய கொரியா படங்கள் கதை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் மேகிங்கில் அசத்தி விடுகிறார்கள்.


Memories of Murder (2003): நான் பார்த்த இந்த சூப்பர் லிஸ்டில் இந்த படத்திற்கு தான் நம்பர்  1 .அவ்வளோ சூப்பர் படம்.நம் யுத்தம் செய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

ஜாக்கி சேகர் எழுதிய இந்த படத்தின் விமர்சனம் 


City Of God (2002) : இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் பதிவர் ஹாலிவுட் ராஜ் .அவர் எழுதிய விமர்சனம் லிங்க் 
 

Mulholland Drive (2001): 

இந்த படத்தை பற்றி இதற்க்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.என்று சொல்லும் அளவிற்கு கீதபிரியன் எழுதி  இருக்கிறார்.அவ்வளோ விஷயம் இருக்கு இந்த படத்தில் .படத்தில் .

இந்த படத்தின் டிவிடியில் இயக்குனர் ஒரு பத்து கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கும் கீதபிரியன் தனி பதிவில் விளக்கம் எழுதி இருக்கிறார்.படத்தை பார்த்து உள்ளவர்களுக்கு இந்த லிங்க் ஒரு ஆச்சர்யம்.அந்த லிங்க் 

அடுத்த பதிவில் 45 படங்களில் சுமார் படங்கள் 

இதன் முந்தய பகுதிகள் 

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:பகுதி 1   : 

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

Monday, 15 July 2013

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

பார்த்தது 30 படங்கள் என்றாலும் அதில் தேறியது என்னவோ 6 படங்கள் தான் சூப்பர் ரகம் .மேலும் 7 அல்லது 8 படங்கள் ஓகே ரகம்  ,மற்றவை மொக்கை தான் .


இவற்றில் 

சூப்பர் என்று சொல்ல கூடிய படங்கள் : 

1.Memories of murder (2003)
2.Cold fish (2010)
3.Mullholland drive (2001)
4.City of god (2002)
5.The hidden face (2011)
6.Bedevilled (2010)

ஜஸ்ட் ஓகே .ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல கூடிய படங்கள்.

1.Stir of echos (1999)
2.The vanishing (1988)
3.100 feet (2008)
4.Chained (2012)
5.Mindhunters (2004)
6.Restraint (2008)
7.Texas 3d (2013) 
8.Halloween (2007)

மொக்கையாய் நேரத்தை வீண் அடித்த படங்கள் :

1.The shrine (2010)
2.The tallman (2012)
3.The Barrens (2012)
4.Absentia (2012)
5.American Mary (2012)
6.Fragile (2005)
7.Insomnia (2002)---- CHRISTPER NOLAN படமாம்.
8.House (2008)
9.Intruders (2011)
10.Lakeview terrace (2008)
11.Mama (2013) 
12.The crazies (2010)
13.The Ferryman (2007)
14.The pact (2012)
15.The collection (2012)
16.The Echo (2008)
17.The gravedancers (2006)
18.The Killing floor (2006)
19.The Mothman propecies (2002)
20.Unknown (2011)
21.Grave Encounters (2011) 

இவை தவிர 88 Minutes, shame (2011), contagion (2011) இந்த படங்களை பார்க்க தொடங்கி பார்க்க முடியாத அளவிற்கு மொக்கையாய் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.

மேற் சொன்ன 3 லிஸ்ட்களில் சூப்பர் படங்களை பற்றி தனித்தனி  பதிவுகளும் ,ஜஸ்ட் ஓகே படங்களை ஒரே பதிவில் எழுத திட்டமிட்டுளேன். பார்க்கலாம். 


45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-1

இந்த பதிவின் முதல் பகுதி லிங்க் 



Saturday, 29 June 2013

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:

45 நாள் ---30 ஆங்கில படங்கள்: 

என் பதிவுகள் படித்திருப்பவர்களுக்கு எனக்கு எப்படி பட்ட ஆங்கில படங்கள் பிடிக்கும் என்று ஓரளவு தெரிந்திருக்கலாம்.எனக்கு பரபரப்பான ,த்ரில்லான படங்கள் பிடிக்கும் .கவிதையாய் ஆமை வேகத்தில் நகரும் படங்கள் பிடிக்காது.அதே சமயம் "THE BUTTERFLY EFFECT" மற்றும்   "TRIANGLE" போன்ற குழப்பி அடிக்கும் படங்கள் பிடிக்கும் என்று சொல்வதா இல்லை பிடிக்காது என்று சொல்வதா என்று ஒரே குழப்பம்.நான் குழம்பி உங்களை குழப்புகிறேனோ ? போதும் அறிமுக பத்தி .



மே 1 முதல் ஜூன் 15 வரை 45 நாட்கள் .எனக்கு வீட்டில் நான் மட்டும்.மனைவி குழந்தை இருவரும் மனைவியின்  வீட்டிற்கு போய் இருந்தார்கள்.எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.வீட்டில் நான் அம்மா வீட்டிற்கு  போய் 1 மாதம் இருக்க போகிறேன் என்றதும் எனக்கு செம ஜாலி .காரணம் இதுவரை பார்க்காமல் இருக்கும் உலக ,ஆங்கில படங்கள் பார்க்கலாமே.எனக்கு செம வேட்டை.அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் போல் நண்பர்களுக்கு போன் போட்டு பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா  என்று சொல்லி கொண்டிருந்தேன்.

என் டார்கெட் 45 நாளில் 45 படம் என்பது ஆனால் பார்த்தது 30 படங்கள் மட்டுமே.காரணம் IPL.

என் அலுவலக பணி காலை 8 முதல் 2 வரை அல்லது மதியம் 2 முதல் 8 வரை.இருந்தாலும் நான் வீட்டில் இருந்தே LOG-IN செய்து வேலை செய்ய முடியும் என்பதால் பணி  நேரம் என்பது அவ்வுளவு STRICT கிடையாது.இந்த 45 நாட்களில் தினசரி இரவு 8 வரை என் அலுவலக பணிகள். 8-11.00 அல்லது 11.30 IPL. அதன் பின் 11.30 முதல் 1 மணி அல்லது படம் முடியும் வரை என தினசரி ஒரு படம் என்று ஒரு வெறியோடு படம் பார்த்தேன்.காலையில் எழ முடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து வேலையை பார்த்தாலும் அன்று இரவும் அதே அட்டவனைதான்.

இடையில் வார இறுதியில் நன்றாக இருப்பதாய்  கேள்விப்பட்ட சில தமிழ் படங்கள் (சூது கவ்வும் உட்பட சில படங்கள்) பார்த்தேன்.ஏப்ரலில் கடைசியாக பதிவு போட்ட நான் அதோடு ஜூன் நடுவில் தான் .அந்த அளவிக்கு பிஸி .நடுவில் சில சுப ,துக்க நிகழ்வுகள் என்று சொந்த ஊர் (பக்கத்தில் தான் காஞ்சிபுரம்) செல்லும் வேலை வேறு .

நடுவில் சில படங்களுக்கு எழுத ஆரம்பித்து டிராப்டில் உறங்குகிறது.அப்படி சேர்த்து சேர்த்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன்.30 படம் பார்த்தாலும் அதில் தேறியது  என்னவோ 5 அல்லது 6 தான். மேலும் ஒரு 6 அல்லது 7 படங்கள் ஓகே ராகம் .மற்றதெல்லாம். நேரம் தான் வேஸ்ட்.இருந்தாலும் சமீப காலங்களில் இத்தனை தொடர்ச்சியாக படங்கள் பார்த்தது கிடையாது.பாருங்கள் என் வீட்டிற்கு மனைவி திரும்பி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .ஒரு ஆங்கில படம் ஏன் ஒரு அரை மணி நேரம் கூட காண முடியவில்லை. 

அதனால் திருமணம் ஆகாத சக பதிவர்களே,இதை படிக்கும் உலக பட ரசிகர்களே திருமணம் ஆகும் முன்பே முடிந்தவரை படங்கள் பாருங்கள்.அதன் பின் நினைத்தாலும் நினைத்த நேரத்தில் முடியாது.



இது 30 படம் பார்த்த முன் கதை.பார்த்த 30 படங்கள் பற்றி அடுத்த பதிவில்.

Sunday, 24 March 2013

ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால்


ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால் 


கொஞ்சம் வித்தியாசமான கதை .MYSTERY-THRILLER படம் .

வழக்கமான ஆங்கில திகில் படம் போலவே தொடங்கும் படம். காட்டிற்கு நடுவில் தனியான ஒரு சிறிய வீடு.அங்கே வரும் ஒரு பெண்.இப்படி தொடங்கியவுடன் சரி வழக்கமான இந்த கதையில் ஒரு 1000 படம் வந்திருக்குமே என்று யோசிக்க தோன்றும் .ஆனால் படம் தொடங்கி ஒரு 25-30 நிமிடம் கழித்து நாம் சந்திக்கும் ஆச்சர்யங்கள்.படத்திற்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கின்றது.

ஏதோ ஒரு காட்டிற்கு நடுவில் ஒரு பெண் தனியாக நடக்க முடியாமல் நடந்து வருகிறாள்.அங்கே தனியாக ஒரு சிறிய வீடு.உள்ளே போகிறாள்.அந்த நேரத்தில் அங்கே ஒருவன் வருகிறான்.முதலில் அவனை கண்டு அஞ்சும் அவள் பின் தான் அங்கே வந்த காரணத்தை சொல்கிறாள்.தன் கணவனோடு காரில் போகும்போது கார் ரிப்பேர் ஆனதால் உதவி தேடி சென்ற கணவன் நீட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவனை தேடி வந்ததாக சொல்கிறாள்.அவனும் அதுபோலவே தனது காரும் ரிப்பேர் ஆனதால் அங்கே வந்து 3 நாட்கள் ஆனதாகவும் சொல்கிறான்.அடுத்த நாள் இன்னொரு பெண் அதேபோல் அங்கே வருகிறாள் .

இதன் பின் படம் முழுதும் ஆச்சர்யங்கள்.

3 பேரும் அங்கிருத்து வெளியே சென்று காட்டு வழியே உதவி தேடி செல்கிறார்கள் .பல மணி நேரத்திற்கு பின் அவர்கள் வந்து சேரும் இடம் ...........அவர்கள் சந்தித்துக்கொண்ட அதே வீடு.

தாங்கள் அந்த வழி வந்த காரணத்தை பேசி கொள்ளும் போது அவர்கள் இப்போது இருக்கும்  ஊரை பற்றி பேச்சு வர. 3 பேருமே அந்த இடத்தை வேறு ஒரு ஊராக  நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் ஒரு கட்டு பணம் .அந்த பணம் அச்சிட்ட வருடம் 1984. ஆனால் மற்றொரு பெண் எந்த நாட்டில் எதிர்கால வருடத்தை போட்டு பணம் அச்சடிக்கிறார்கள் என்று கேட்டு அசரடிக்கிறாள்.காரணம் அவளை பொறுத்தவரை அது 1962. அவன் அங்கே வர அவனை விசாரித்தால் அவன் இருப்பதாய் நினைப்பது வருடம் 2011.

அவர்கள் எதோ நட்டு  கழண்ட கேஸ் என்று நினைத்தால் நம் நினைப்புக்கு ஒரு அடி.பின் என்னதான் அங்கே ? நான்கவதாய் வருபவன் யார் ? இதற்க்கு மேல் கதை பற்றி சொல்ல போவதில்லை .


அவர்களுக்குள் என்ன சம்பந்தம்? கொஞ்சம் கூட யோசித்தே பார்க்க முடியாத கதை .யூகிக்க முடிந்தவர்கள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்.ஆனால் படம் பார்த்த பின் ரொம்பவும் கவனித்து பார்த்தால் வசனங்களை  உற்று கவனித்து வந்தால் ஒரு வேலை 1%  யூகிக்கலாம்  .உஹூம் நிச்சயாமாக 99 %சொல்ல முடியாது.இதுவாக இருக்குமோ ,அல்லது அப்படி இருக்குமோ என்று எப்படி யோசித்தாலும் உங்களால் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.

என்னதாண்டா நடக்குது என்று ஆவல் தாங்க முடியவில்லை சில இடங்களில்.எல்லோருக்கும் தெரிந்த Clint Eastwood மகன் SCOTT EASTWOOD தான் ஹீரோ.அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார்.

வழக்கமான படங்கள் பார்த்து சலித்த ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்.படம் 1.30 மணி நேரம் தான் .முதல் 30 நிமிடம் கொஞ்சம் பொறுமையாய் போகும்.அதற்க்கு மேல் கதைக்குள் வந்துவிடுவோம்.2011 வெளிவந்த படம்.

இதுவரை நான் எந்த படத்தின் டவுன்லோட் லிங்கும் கொடுத்தது கிடையாது.இது கொஞ்சம் கிடைக்க அரிதான படம்.அதாவது SUBTITLE உடன். இந்த படத்தின் லிங்க் தருகிறேன்.


IMDB RATING -6.3

Monday, 25 February 2013

இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ?


இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ? 

என்னிடம் பார்க்க வேண்டிய ஆங்கில படங்கள் நாளுக்கு நாள் அதிகம் சேர்ந்து கொண்டே போகிறது.பார்த்து முடியவில்லை .என்ன காரணம் என்று தெரியவில்லை .என் நண்பன் செல்வன்.இவனுக்கு நான் தான் ஆங்கில படங்கள் அறிமுகம் செய்து வைத்தேன்.ஆனால் சமயங்களில் என்னைவிட அதிகம் ஆங்கில படங்கள் பார்த்துவிட்டு எனக்கு அதைப்பற்றி சொல்லி அறிமுகம் செய்கிறான்.

எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.

என் நண்பன் இதில் கில்லாடி .அவன் மனைவி, ஏன் அம்மா ,தங்கை என்று எல்லரையும் ஆங்கில படங்கள் பார்க்க பழகி வைத்துள்ளான். கொடுத்து வைத்தவன் .நான் என்னதான் அவதார் போன்ற படங்களை என் வீட்டில் பார்க்க வைத்தாலும் ஆங்கில படம் பார்க்கும் பழக்கம் என் மனைவிக்கு வரவில்லை.

என்னிடம் இருக்கும் ஆங்கில படங்களை மொத்தம் பார்த்து ரசிக்கத்தான் ஆசை .ஆனாலும் மேல்சொன்ன பிரச்சனையால் அதில் இப்போது சில படங்களை தேர்வு செய்து பட்டியல் இடுகிறேன்.இப்போது எனக்கு கிடைத்திருக்கும் நாட்கள் 3 அல்லது 4 நாட்கள் ,இதில் மொக்கை படங்கள் பார்த்து வேஸ்ட் செய்ய மனமில்லை அதனால் என்ன செய்யலாம் என்று யோசிதேன்.சரி இருக்கும் படங்களை பதிவில் பட்டியலிட்டு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தான் விளைவு இந்த பதிவு.

இந்த படங்களை பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தால் எனக்கு பேருதவியாக இருக்கும்.

Badlands (1973)



Columbus Circle (2012)



Mindhunters (2004)


Outpost: Black Sun (2012)


Sleuth (2007)


What Lies Beneath (2000)


The Return (2003) 
Vozvrashchenie (original title)

The Girl with the Dragon Tattoo (2011)


The Skin I Live In (2011) 
La piel que habito (original title)

Don't Say a Word (2001)


என்னிடம் பார்க்காமல் இருக்கும் படங்களுள் இந்த படங்களை தேர்வு செய்து உள்ளேன்.இந்த படங்களில்
 நீங்கள் பார்த்த படங்கள் இருந்தால் எனக்கு அறிமுகம் செய்யுங்கள் .

Friday, 8 February 2013

7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் :


7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் 



ஆங்கில ,உலக படங்களை பார்ப்பது என்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம் .என் குறிக்கோள் தினமும் ஒரு ஆங்கில படம்.ஆனாலும் என் எண்ணம் அத்தி பூத்தாற்போல் ஆண்டுக்கு மொத்தமாய் சில வாரங்களே அமையும்.அப்படி அமைந்த நாட்கள் எனக்கு டிவைன் .இரவு ஒரு படம் முடிந்ததும் அப்படியே அந்த படத்தை பற்றி யோசித்தவாறே தூக்கம் ,இது என் வீட்டில் யாரும் இல்லாமல் நான் மட்டுமே இருக்கும் போது அமையும் சந்தர்ப்பம்.அந்த சந்தர்ப்பத்துக்கு ஏங்கியவாறே  காத்திருப்பேன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் ஜனவரி கடைசி வாரம் எனக்கு கிடைத்தது.அப்படி தினமும் ஒரு படமாக 7 படங்கள் பார்த்து தள்ளினேன்.
அந்த படங்களை ஒவ்வொன்றாக தனி பதிவில் சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் லாயக்கு அற்றதால் மொத்தமாக ஒரே பதிவில் .

இந்த படங்களை பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த பதிவு.இந்த படத்தை பற்றி கேள்விபட்டால் பார்க்க அல்லது பார்க்க தவிர்க்க ஒரு ஐடியா இந்த பதிவு.

1.SLEEP TIGHT (2011) :
                         ஸ்பானிஷ் மொழி படம்.வாழ்கையில் எந்த குறிக்கோளும் ஆதரவும் இல்லாமல் வெறுமையுடன் தற்கொலை முடிவில் இருக்கும் ஒருவனுக்கு ஒரு ஐடியா . அடுத்தவரின் வாழ்கையை மகிழ்ச்சி அற்றதாக செய்வதே நம் வாழ்கையில் மகிழ்ச்சியை தரும் என்ற உயர்ந்த பண்பு அவனுக்கு புரிகிறது.ஒரு அப்பார்ட்மெண்டில் காப்பாளனாக இருக்கும் அவன் அங்கே தனியே வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் தினமும் அவள் வருவதற்கு முன் சென்று அவளின் கட்டிலிற்கு அடியில் படுத்துகொள்கிறான் .அவள் வந்து உறங்கியதும் மெல்ல எழுந்து அவளுக்கு மயக்க மருந்து செலுத்தி அவளுடன்  இரவை கழிக்கிறான்.இதை பல வாரங்களாக செய்து வருகிறான்.இப்படி ஒரு நாள் கட்டிலுக்கு அடியில் படுத்து அவளுக்காக காத்திருக்கும்போது அவள் தன காதலனோடு படுக்கைக்கு வருகிறாள்.அடியில் இவன் .மேலே அவர்கள்.அடுத்து நடப்பது தான் உச்சம். ஒரு முறை பார்க்கலாம் .

2.HOUSE AT THE END OF THE STREET (2012) :
                                                    அடர்ந்த காட்டிற்கு மத்தியில் சில வீடுகள் .ஒவ்வொரு வீடும் கொஞ்சம் தள்ளி தள்ளி.ஒரு வீட்டில் ஒரு சிறு பெண் தன்  தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்கிறாள்.காணமல் போகிறாள் .அந்த வீடு பூட்டப்பட்டு இருக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாய் தன தாயோடு குடிவருகிறாள் ஒரு பெண்.பக்கத்து வீட்டு கதையை தெரிந்து கொள்கிறாள் .ஒரு இரவில் அந்த பூட்டப்பட்ட வீட்டில் லைட் எரிவதை பார்க்கிறாள். பேய்,பூதம் எல்லாம் இல்லை. ஒரு மைல்ட் த்ரில்லர்.


3.KILL LIST (2011) : 
                      ரொம்பவும் வெறுப்பான படம்.ஏதாவது திருப்பம் வரும் அதன் பின் பரபரப்பு வரும் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன் படம் முடிந்து விட்டது.படத்தின் பெயரை கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுங்கள் அவ்வளவுதான்.பார்த்து முடித்த அடுத்த நொடி படத்தை  டெலிட் செய்தேன்.(இந்த பதிவு எழுதும் போது இந்த படத்தையே ஞாபகம் இல்லாமல் இன்னும் ஒரு படம் பார்த்தோமே என்று 2 நாள் அப்பபோ யோசித்துக்கொண்டே இருந்தேன்.)

4.THE SKEPTIC (2009) :
                        ஒரு வக்கீல் .நடு இரவில் அவருக்கு ஒரு போன்.யாருமற்ற அவரது அத்தை இறந்துவிட்டார் என்று.அவனுக்கு அந்த அத்தையோடு எந்த தொடர்பும் இல்லை.ஆனாலும் அந்த அத்தை யாரும் இல்லாதவர் என்பதால் அவர் வசித்த வீடு இனி இவருக்கு தான்.அந்த பழமையான வீட்டிற்கு வருகிறான்.அந்த வீட்டில் அவன் அத்தை எதோ ஒரு ரகசியத்தை இவனுக்கு சொல்ல வைத்துவிட்டு சென்றிருக்கிறார் என்று அறிந்து அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான்.  கதை கொஞ்சம் ஆர்வத்தை கிளப்பினாலும் பெரிதாய் எதுவும் இல்லை.

5.DRAG ME TO HELL (2009) : இந்த படம் ரொம்ப நாளாக என்னிடம் இருந்தது.ஆனாலும் பார்க்க எண்ணம் இல்லாமல் சரி பார்த்துவிட்டால் டெலிட் செய்யலாம் என்பதாலும் என் நண்பன் செல்வா இந்த படத்தை பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று சொன்னதாலும் (அவனை இப்படி ஆங்கில படங்கள் கொடுத்து பார்க்கவைத்து கெடுப்பது நான் தான்) பார்த்தேன்.பலர் இந்த படம் பற்றி தெரிந்திருக்கலாம். ஜஸ்ட் ஓகே.

6.DEAD FALL (2012) : படம் ரொம்ப பரபரப்பாக தொடங்குகிறது.ஒரு கடும் பனிக்காலம்.ஊர் முழுதும் பனி சூழ்ந்துள்ளது.ஒரு வங்கி கொள்ளையை முடித்துவிட்டு தப்பி செல்லும் மூவர் .இரு ஆண் ஒரு பெண்.ஒரு விபத்தில் ஒருவன் இறந்துவிட மற்ற இருவரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிந்து செல்கிறார்கள்.இன்னொரு பக்கம் தண்டனை முடிந்து ஜெயிலைவிட்டு வெளியே வரும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் உடனே இன்னொரு கொலை செய்துவிடுகிறான்.வீட்டில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கும் வயதான பெற்றோர்.அந்த பெண்ணும் இவனும் சந்தித்து காதலிக்கிறார்கள்.எல்லோரும் சென்று சேரும் இடம் அந்த பெற்றோர் இருக்கும் வீடு.தனியாய் போன அவனும் அங்கே வருகிறான். ஆரம்பத்தில் இருந்த கிரிப் படத்தில் போகப்போக இல்லை.படத்தின் அந்த பனி சூழ்ந்த காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

7.ATM (2012) :
            ஒன்றாக பணிபுரியும் 3 பேர்.(2 ஆண்கள் 1 பெண்) ஒரு பார்ட்டி முடிந்து இரவு 2 மணி அளவில் காரில் போய் கொண்டிருக்கிறார்கள்.அப்போது ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில தனியே அமைந்துள்ள ATM இல் பணம் எடுக்க ஒருவன் இறங்கி செல்கிறான்.அவன் திரும்ப நேரம் ஆவதால் மற்ற இருவரும் அங்கே போகிறார்கள்.பணம் எடுத்து வெளியே செல்ல கதவை நெருங்கும்போது கண்ணாடிக்கு வெளியே  ஒருவன் முகத்தை மறைத்தபடி உடை அணிந்து நிற்கிறான்.அவர்கள் அவன் ஒரு வேலை கொள்ளைக்காரனோ என்று அஞ்சி ஒரு நிமிடம் உள்ளேயே நிற்கிறார்கள்.வெளியே நிற்பவன் திடீரென்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவன் ஒருவனை அடித்துகொள்கிறான்.அதை பார்த்து பயந்து வெளியே வராமல் உள்ளேயே இருக்கிறார்கள் .அவனும் அவர்களுக்காக காத்திருக்கிறான்.பார்த்த படங்களிலேயே ஓரளவு கொஞ்சமே கொஞ்சம் திருப்தி தந்து இந்த படம் தான் என்று சொல்லலாம்.ஒரு சுமாரான த்ரில் படம் பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம் .
                         

Thursday, 27 December 2012

SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம்


SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம் 



தொடக்க காட்சியிலேயே ஒரு மரத்தின் நீண்ட கிளையில் வரிசையாய் நான்கு பேர் முகம் மறைத்து தூக்கில் தொங்க தயாராக இருக்கிறார்கள்.மெதுவாக கயிறு இறுக்கப்பட்டு  கால்களை உதைத்து துடித்து  இறக்கிறார்கள்.இப்படி தொடங்கும் படம் இது.இந்த ஆண்டு வெளி வந்த ஹாரர் படங்களுள் முதன்மையான படம்.

நாயகன்  ஒசவல்ட் ஒரு எழுத்தாளன் .ஒரு வெற்றிகரமான புத்தகத்தால் உலகிற்கு அறியப்பட்டவன்.அதன்பின் எழுதியவை எல்லாம் தோல்வி அடைய,இழந்த பேரை மீண்டும் மீட்க விரும்புகிறான்.அவன் மனைவியோ அவனை வேறு வேலைகளுக்கு செல்ல கேட்டுகொள்கிறாள் .அவன் பிடிவாதமாக எழுத்திலேயே இருக்கிறான்.இந்த நிலையில் காவல் துறையால் இன்னும் முழுதும்  முடிக்கமுடியாத  கொலைகள் நடந்த அந்த வீட்டிற்கு குடி வருகிறான்.அவன் வீட்டின் வெளியில் உள்ள மரத்தில் தான் தொடக்க காட்சியில் வந்த தூக்கு நடந்த இடம்.ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் தனிமையான வீடு அது.

அவனுக்கு ஒரு மகன் ,ஒரு மகள்.அவனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லை.அவனும் இந்த புதிய கதை எழுதி முடித்ததும் மீண்டும் பழைய வீட்டிற்க்கே போய்  விடலாம் என்று சொல்கிறான்.அன்று இரவு சாமான்களை அடுக்க வீட்டின் மேலுள்ள தளத்திற்கு செல்கின்ற அவன் அங்கே ஒரு அட்டை பெட்டி .அதில் சில பிலிம் ரோல்கள் ,ஒரு ப்ரொஜெக்டர் போன்றவை இருக்கின்றன .இரவு எல்லோரும் உறங்கிய பின் அவன் அவனது அறையில் அந்த பிலிம் ரோல்களை ஓட விடுகிறான்.அவை SNUFF FILM வகையாறக்கள் .

அந்த படங்களில் நான்கு குடும்பங்கள் தனித்தனியே பல முறைகளில் கொல்லபடுவதை பார்த்து உறைகிறான்.கடைசியாக அவன் பார்க்கும் கொலை அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் நான்கு பேர் தூக்கில் தொங்குவது .இவற்றை பார்த்ததும் இதில் உள்ளவற்றை ஆராய்ந்து அதை கதையாக எழுதி மீண்டும் வெற்றி பெற நினைக்கிறான்.மீண்டும் மீண்டும் அவற்றை ஓட விடுகிறான்.யார் இந்த படங்களை எடுத்தது? அந்த படத்தில் இருக்கும் சிறுமி என்ன ஆனால்? என்று பல கேள்விகள் அவனுள் எழுகின்றது.

எல்லா கொலைகளிலும் ஒரு பயங்கரமான உருவம் எங்கோ ஒரு இடத்தில இருப்பதை கண்டு பிடிக்கிறான்.அந்த முகத்தை பிரிண்ட் எடுத்து கொள்கிறான்.போலீசை அழைக்கும் ஒஸ்வல்ட் அவரிடம் தான் கண்டுபிடித்ததை சொல்கிறான்.1960 களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் பல்வேறு காலங்களில் இது போல் கொலைகள் நடந்துள்ளதாக சொல்கிறார் போலீஸ்.மேலும் எல்லா கொலைகளிலும் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் காணமல் போகிறது என்றும் சொல்கிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு இரவு ,அவர் அறையில் இருந்து சத்தம் .பார்த்தால் என்ன? சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம்.

அந்த இரவே அந்த படங்களை கொளுத்தி விட்டு அவசரமாக குடும்பத்தோடு வீட்டில் இருந்து காலி செய்து வேறு  இடம் சென்று விடுகிறான் .புதிய வீட்டில் இருக்கும் ஒஸ்வல்ட் அந்த போலீஸ் அதிகாரி மூலம் சில உண்மைகள் அறிகிறான்.அது என்ன? இறந்த 4 குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ? வீடு மாறியுள்ளதால் இப்பொது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்து என்ன? புதிய வீட்டிலும் அவனுக்கு ஒரு அட்டை பெட்டியில் சில பிலிம் ரோல்கள் .அதில் தொடர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது .அவற்றை ஓடவிட்டு பார்க்கிறான். என்ன பார்க்கிறான்? 

படத்தின் சஸ்பென்ஸ் உடைய வேண்டாம் என்று நிறைய எழுதவில்லை.சில காட்சிகளில் முதுகு தண்டு சில்லிடவைக்கும் பயம் வருவது நிச்சயம்.ஒரு இரவில் படம் பாருங்கள் .அப்புறம் சொல்லுங்கள் .கொஞ்சமும் ஆபாசமோ ,கொடூரமான கொலைகளோ படத்தில் இல்லை.அதனால் பெண்களும் பார்க்கலாம்.

IMDB RATING --6.8

ROTTEN TOMATTOES--  63% FRESH

2012 அக்டோபரில் வந்த படம் 1.40 நிமிடம் ஓடும் .

Wednesday, 26 December 2012

COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம்


COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம் :



உலகில் சிறை வாழ்கையை சொல்லும் படங்கள் தனி ரகம் .நான் பார்த்தவற்றில் THE SHAWSHANK REDEMPTION,PAPILLON,ESCAPE FROM ALCATRAZ,FELON போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை.THE GREEN MILE படமும் நல்ல படம் என்று கேள்விபட்டுள்ளேன்.நான் நம்பி ஏமாந்த படம் THE GREAT ESCAPE.இந்த படம் COOL HAND LUKE முதலில் நாவலாக வந்து பின் திரை படமாக்க பட்டது.PAUL NEWMAN கதையின் நாயகன்.


கடும் விதிமுறைகளுடன் இருக்கும் ஒரு சிறையில் புதிதாக வரும் கைதி அந்த விதிகளுக்கு அடங்க மறுத்து,எல்லோரும் அஞ்சும் தண்டனைகளை ஏளனம் செய்தபடி அவற்றை ஏற்கிறான்.இதனால் மற்ற கைதிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து விடுகிறான்.இரண்டு மூன்று முறை தப்பிக்க முயற்சித்து மாட்டிகொள்கிறான்.அடுத்த முறை தப்பித்து மாட்டினால் சுட்டு விடுவோம் என்று எச்சரித்தும் தப்பிக்கிறான்.மாட்டி கொள்கிறானா? 


ப்ளோரிடாவில் தனிமை பாலைவனத்தில் ஒரு சிறை.கடும் விதிமுறைகள்.மீறுவோர் தனிமை அறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கபடுவர்.சிறு குற்றம் புரிந்து உள்ளே வரும் நாயகன் லூக் .அங்கே உள்ள கைதிகள் அந்த சிறையை அடுத்த உள்ள ஒரு இடத்தில பாதை அமைக்கும் பணிக்கு கூட்டி செல்ல படுகிறார்கள்  .அங்கு வெய்யிலின் கொடுமை தாங்கமால் பலர் சுருண்டு  விழுகிறார்கள்.அந்த சிறையில் ஏற்கனவே ஒருவன் அவர்களுள் தலை போல இருப்பவன்.அவன் முதலில் லூக்குடன் மோதி பின் நண்பன் ஆகிறான்.

அந்த சிறையின் எந்த விதிக்கும் அடங்க மறுக்கும் லூக் அதற்கான தண்டனைகள் பெறுகிறான்.அந்த தண்டனைகளுக்கு மற்றவர்கள் அஞ்சும் நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் லூக் மற்ற கைதிகளின் அன்பை பெறுகிறான்.ஒரு முறை 50 முட்டைகளை 1 மணி நேரத்தில் சாப்பிட  பந்தயம் கட்டி வென்று அவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கைதிகள் என்னும் அளவுக்கு ஆகிவிடுகிறான்.அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறான்.


அவன் தப்பித்ததை எண்ணி மகிழும் கைதிகள் அவன் சிக்கி கொண்டதை பார்த்து வருந்துகிறார்கள்.மீண்டும் தப்பிக்கிறான்.இந்த முறை சில நாட்கள்.மீண்டும் சிக்குகிறான்.அடுத்த முறை தப்பித்து மீண்டும் சிக்கினால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் சிறை அதிகாரிகள்.அவர்கள் தரும் தண்டனைகள் தாங்க முடியாமல்  அவர்களிடம் அடிமை போல் நடக்க ஆரம்பிக்கிறான்.அப்படியே மீண்டும் எஸ்கேப் .இப்போ சிக்கினான இல்லையா ?

1967 இல் வந்த கலர் படம்.ஒரு வினாடி கூட போர் அடிக்காமல் செல்கிறது.ஒரு படத்திற்கு அந்த படத்தின் கதை நிகழும் களம் அழுத்தமாக பதிவு செய்தால் தான் நம் மனதை விட்டு போகாது .இதில் அந்த இடங்களும் தனிமையான பாலைவனமும்,சிறையும் அசத்தல் .ஹீரோ அசால்டாக நடித்துள்ளார்.அவர் புன்னகை இன்னமும் என் கண்முன் உள்ளது.இசை பற்றியும் சொல்ல வேண்டும் .அதிரும் இசை எல்லாம் இல்லை .அவன் தப்பித்து ஓடும்போது கூட வெறும் இரண்டு மூன்று கருவிகளுடன் அருமையாய் இசை அமைத்துள்ளனர்.

படம் 2.06 மணி நேரம் ஓடுகிறது .

IMDB RATING-- 8.2

ROTTEN TOMATTOES --100% FRESH

படம் சூப்பர்.  FEEL THE EXPERIENCE OF PRISON LIFE...

Tuesday, 30 October 2012

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம்

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம் 

ஒரு படம் உங்களை எவ்வளவு தூரம் படத்தினுள் இழுக்கும்? சரி சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.PRISON ESCAPE FILMS என்று ஒரு சின்ன GENRE கூட உண்டு.எல்லோருக்கும் தெரிந்த படம்  THE SHAWSHANK REDEMPTION .அதை விட அருமையான PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE (நான் பார்த்தவரையில் ) போன்ற படங்களும் ஒன்று.நான் இப்போது சொல்ல போகும் படம் எல்லாவற்றிற்கும் தலை .இது ஒரு பிரெஞ்சு மொழி படம்.1960 வந்த கருப்பு வெள்ளை படம்.அப்படி என்ன படத்தில்? .படத்தில் நடித்த ஒரு நடிகர் நிஜ கைதியாய் இருந்தவர்.அவர் சிறையில் இருந்து தப்பிய உண்மை அனுபவங்களே படம். 

அந்த நிஜ பாத்திரம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு 1947 இல் தான் சந்தித்த நிகழ்வுகளே படம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.பிரான்ஸ் நாட்டில் 1947 இல் "ல சாண்டே" என்ற மிக பெரிய சிறையில் ஒரு கைதி கஸ்பர்ட் .மனைவியை கொள்ள முயற்சி செய்த புகாரில் சிறையில் இருக்கிறான்.ஒரு சின்ன தப்புக்காக வேறு ஒரு செல்லுக்கு மாற்ற படுகிறான்.அவன் சென்ற அறையில் ஏற்கனவே 4 பேர் இருக்கின்றனர்.அவர்களிடம் அன்பாக பழகும் கஸ்பரட் தான் சிறை வந்த காரணத்தை சொல்கிறான்.

சில நாட்களுக்கு பின் அந்த நால்வரும் தாங்கள் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இருப்பதாக அவனிடம் சொல்கிறார்கள்.ஆர்வம் அடையும் அவன் தானும் வருவதாக சொல்கிறான்.அந்த சிறையில் அறைகளில்  தினமும் அதிகாலையில் ஒரு போலீஸ் வந்து சோதனை இட்டு செல்லும்.அதன் பின் நாள் தோறும் அவ்வபோது ,மீண்டும் இரவு உறங்கும் போது அவர்கள் அறை  கதவை தட்டி கதவு ஓட்டை வழியே பார்க்கும்போது கைதிகக் கை அசைக்க வேண்டும்.இது தான் அங்கே விதி.

முதலில் ஒரு சிறிய  கண்ணாடி அவர்களிடம் கிடைக்கிறது .அதை ஒரு பிரஷ்ஷில்  கட்டி அதை கதவு ஓட்டை வழி வைத்து யாரவது வருகிறார்களா என்று பார்க்க பயன்படுத்தி கொள்கிறார்கள்.பின் சிறையில்  அட்டை பெட்டி செய்யும் வேலை அவர்களின் அறையிலேயே செய்து வருகிறார்கள்.அதற்காக பெரிய அளவில் அட்டைகளை ஒரு மூலையில் அடுக்கி வைக்கிறார்கள்.அவ்வபோது அந்த அட்டைகளை நகர்த்தி கட்டிலின் காலில் இருந்து எடுத்த இரும்பால் தரையை இடித்து குழி தோண்டுகிறார்கள்.

அவர்கள் தோண்டும் மணலை என்ன செய்தார்கள்? உள்ளே வழி அவ்வளோ எளிதாக உள்ளதா? அங்கே வழியில் போலீஸ் இல்லையா? இவர்கள் தோண்டும்போது போலீஸ் இவர்கள் அறைக்கு வரவில்லையா? இரவு போலீஸ்  கதவு தட்டினால் இவர்கள்  கை அசைக்க வேண்டுமே அதற்க்கு ? இப்படி எண்ணற்ற கேள்விகள் வருகிறதா? அப்போது நிச்சயம் படம் பாருங்கள்.நான் மேலே கொஞ்சம் காட்சிகளை சொன்னதே படம் பார்க்கும் ஆவலை தூண்டத்தான்.
கொஞ்சமும் போர் அடிக்காத ஆனால் அழுத்தமான படம் .கிளைமாக்ஸ் எனக்கு கொஞ்சம் திருப்தியில்லை ,இருந்தாலும் எற்றுக்கொளும்படி இருக்கும் .

படத்தை பற்றி சில விஷயங்கள்- படத்தின் இயக்குனர் படத்தை எடுத்து முடித்த 2 வாரங்களில்  மரணம் அடைந்து விட்டார்.பெரும்பாலும் தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.மொத்த  படமும் 10 வாரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.படத்தில் இசையே கிடையாது.இதுவரை நீங்கள் இதுபோல் எத்தனை படம் பார்த்திருந்தாலும் இது இன்னும் fresh ஆக இருக்கும்.தவற விட கூடாத படம்.2 மணி நேரம் ஓடும் படம்.

IMDB RATING- 8.4

HIGHLY RECOMMENDED 



Tuesday, 14 August 2012

RED WHITE & BLUE : 18+ஆங்கில பட விமர்சனம்


RED WHITE & BLUE : 18+ பட விமர்சனம் 


இந்த படம் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம்.காரணம் படம் அப்படி.DISTURBING FILMS என்று சொல்ல கூடிய ,படம் பார்த்த பிறகு மனம் வலிக்கும் வகையை சார்ந்த படம்.சரி இருந்தாலும் நல்ல படம்.பார்க்க வேண்டிய படம் என்பதால் இதை படிக்கும் யாரவது படம் பார்க்க வேண்டும் என்று ஆசை.படம் கண்டிப்பாக 18+ .அதோடு டவுன்லோட் இட்டு டி.வியில் பார்க்காமல் ,கணினியிலோ அல்லது தனிமையிலோ பார்த்தல் நலம்.காரணம் படத்தில் அவ்வளோ மேட்டர்.

கதைக்கு போவதற்கு முன்.யாரோ ஒரு பெண் ,அழகாக இருக்கிறாள்.யார் கூப்பிட்டாலும் படுக்கைக்கு வருகிறாள்.ஆனால் விலை மகள் அல்ல.அப்படி ஒரு பெண்ணை பற்றி தெரிந்தால் எவ்வளவு பேர் அவளிடம் போய் இருப்பார்கள்.அதே அவளுக்கு HIV+ இருந்தால் அவளிடம் போனவர்களின் கதி.படத்தின் கதை இப்படி தான் தொடங்குகிறது.எரிகா யாரும் இல்லாதவள்.தினமும் யாருடனாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள துடிப்பவள்.அதற்காகவே வெளி இடங்களில் சுற்றி கொண்டிருப்பவள்.அதுவும் வருபவர்கள் ஆணுறை அணிய கூடாது என்று சொல்வாள். இசை குழுவை சேர்ந்த மூன்று பேரோடுஒரே நேரத்தில் உறவு கொள்வதை தொடங்குகிறது.அதற்க்கு பின் தினமும் அதே போல்.ஆனால் ஒருவனோடு ஒரு முறை மட்டுமே.தினம் தினம் புது ஆட்கள்.

இவள் வசிக்கும் விடுதிக்கு புதிதாக  வருகிறான் நேட்.இவள் இப்படி எப்போதும் யாருடனாவது இருப்பதை பார்க்கிறான்.இவளிடம் பேச்சு கொடுக்கிறான்.அவள் தன் அம்மாவின் புதிய கணவனால் நான்கு வயதில் பாலியல் பலாத்காரம் செய்ய பட்டதை சொல்கிறாள்.இவனையும் அப்படி நினைத்து பேசுகிறாள்.ஆனால் அவன் அவளுக்கு தன்னை பற்றி சொல்கிறான்.அவன் பணி  புரியும் இடத்திலேயே அவளும் வேலைக்கு சேர்கிறாள்.அங்கேயும் பலரோடு படுக்கிறாள்.சில நாட்களில் நேட் ,எரிகா நண்பர்கள் ஆகிறார்கள்.


முதலில் இவளை உறவு கொண்ட இசை குழுவை சேர்ந்த ஒருவனுக்கு HIV + இருப்பது தெரிகிறது.அவன் பேர் பிராங்கி.அதிர்ந்து போன அவன் கேன்சர் பாதிக்க பட்ட தன் தாயோடு வாழ்பவன்.மற்ற இருவரும் HIV TEST எடுக்க அவர்களுக்கு நோய் இல்லை.தங்கள் உறவு கொண்ட எரிகா தான் காரணம் என்பது தெரிந்து அவளை தேடுகிறார்கள்.அவளும் அவர்களிடம் சிக்குகிறாள்.அவளை தேடி நேட் வருகிறான். அதற்க்கு பின் நடப்பவை மனம் வலிக்க செய்யும் விஷயங்கள்.படம் முடியும் போது ஒரு வித வெறுமை ஏற்படுகிறது.படத்தில் யாருமே முழுதும் கெட்டவர்கள் இல்லை.வசனங்கள் மிக குறைவு .இசை எங்கோ சில இடங்களில் தான்.

2010 இல் வந்த இந்த படம் 1:40 நிமிடம் ஓடுகிறது.

Friday, 20 July 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3 

ஹரர் படங்களின் முன்னோட்டத்தோடு 70s, 80s வந்த ஹரர் படங்கள் பற்றி சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம்.இனி 90 களில் அந்த படங்கள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.எண்பதுகளில்  வந்து வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொன்னூறுகளில் வரிசையாக வர தொடங்கின.மேலும் பல புதிய தளங்களிலும் மக்களை பயமுறுத்த படங்கள் வந்தன.

எண்பதுகளின் வந்த படங்களின் தொடர்ச்சியாக வந்த படங்களில் A NIGHTMARE AT ELM SREET ,CHILD'S PLAY,FRIADAY THE 13TH போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன்  வெளிவந்து சில பாகங்கள் வெற்றியும் பெற்றன .ஆனாலும் போக போக அந்த தொடர்ச்சியான படங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து வந்தது.அதற்க்கு காரணம் படத்தில் விஷயமில்லாமல் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்ட படங்கள். முதல் பாகங்களில் பெயர் பெற்றாகி விட்டது.இனி இந்த பெயருடன் இத்தனையாவது  பாகம் என்று போட்டுவிட்டால் அந்த பட ரசிகர்கள் வந்து படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள் என்று படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளுடன் வந்து ரசிக்கபடாமல் போய் விட்டன.

இந்தநிலையில் தான் SILENCE OF THE LAMBS என்ற படம் சத்தமில்லாமல் வந்து பரப்பாக ஓடியது.91 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் ஒரு SERIAL KILLER ஐ பற்றியது.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு சிறையில் உள்ள  நர மாமிசம் உண்ணும் ஒரு டாக்டர் உதவுகிறார்.இந்த படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.அதற்க்கு பின் குறிப்பிட வேண்டிய படம் என்றால் SCREAM .இந்த படம் SLASHER என்ற வகையை சார்ந்தது(படம் முழுவதும் கொலையாளி ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கொலைகள் செய்வது).படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் இளைஞர்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய அதே SLASHER வகையை கொண்டு மேலும் இரு படங்கள் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றது.அவை I KNOW WHAT YOU DID LAST SUMMER, URBAN LEGEND.இதில் I KNOW WTHAT YOU DID LAST SUMMER படம் நான்கு மாணவர்கள்.(இரு ஆண்,இரு பெண்) குடித்துவிட்டு பெரும் மகிழ்ச்சியுடன் காரில் வரும் போது மலை பாதையில் ஒருவனை இடித்து விடுகிறார்கள்.அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உடலை அப்புறபடுதும்போது அவன் விழித்துக்கொள்ள அவனை ஏரியில் முழ்கவிடுகிரார்கள்.பின் நால்வரும் இதை யாருக்கும் சொல்ல கூடாது என்றோ சத்தியம் செய்து பிரிகிறார்கள்.அடுத்த ஆண்டு அதே நாள் அவர்களில் ஒருவளுக்கு "I KNOW WTHAT YOU DID LAST SUMMER "என்று ஒரு கடிதம் வருகிறது. பின் அவள் கொள்ளபடுகிறாள்.மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்  என்பதே படம்.விமர்சர்களால் மோசமான படம் என்று விமர்சிக்கபட்டாலும் படம் நல்ல வசூல் பெற்று மேலும் இதே தீம் கொண்டு "I STILL KNOW WHAT YOU DID LAST SUMMER " மற்றும்" I ALWAYS KNOW WHAT YOU DID LAST SUMMER" என்று இரு படங்கள் வந்தன.

URBAN LEGEND படம் நம்ம ஊரில் விசில் என்று அப்படியே எடுத்திருப்பார்கள்.இதுவும் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டு வசூல் பெற்ற படம்.JACOBS LADDER படம் வித்தியாசமான களத்துடன் இறங்கியது.வியட்நாம் போரில் போரிட்ட ஒரு வீரன் ஓய்வு பெற்று வாழும்போது சில பயமுறுத்தும் உருவங்கள் மற்றும் மன ரீதியான மாற்றங்களை உணர்கிறான்.போரில் வீரர்கள் மேலும் வெறி கொண்டு தாக்க மறைமுகமாக மருந்துகள் செலுத்த பட்டதை படம் சொல்கிறது.

FROM DUSK TILL DAWN,NIGHT WATCH,WISHMASTER,RING(JAPANESE),AUDITION( ரொம்பவும் கொடூரம்  நிறைந்த படம்), போன்ற படங்கள்  தொன்னூறுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின் வந்த ஹர்ரர் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதன் முதல் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html

இரண்டாம் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html

Tuesday, 10 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 2 


ஹரரர் படங்களை பற்றிய முன்னோட்டத்தோடு 1970 களில் ஹரரர் படங்களை பற்றி பார்த்தோம்.இனி எண்பதுகளில் அப்படங்களின் வளர்ச்சி பற்றி பாப்போம். STEPHEN KING பற்றி சொன்னேன் இல்லையா? அவர் யோசிக்க முடியாத பல விஷயங்களில் திகில் கதைகளை எழுதி புகழ் பெற்றார்.  MISERY,THE DARK HALF,THE SHAWSHANK REDEMPTION,THINNER,THE GREEN MILE,SECRET WINDOW,1408,THE MIST போன்ற படங்கள் அவரது கதைகள் தான்.திகில் படங்களில் அவர் பங்களிப்பை தவிர்க்க முடியாது.1980 இல் வந்த THE SHINING படம் அவரது கதை தான்.ஹர்ரர் படங்களின் மாஸ்டர் பீஸ் என்று இன்றைக்கும் சொல்ல படும் படம் அது.ஒரு எழுத்தாளர் விடுமுறை சீசன் இல்லாத ஒரு நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு பாதுகப்பாளராக பொறுப்பேற்கிறார் .அங்கே தனிமையில் அவர் குடும்பம் சந்திக்கும் அனுபவங்களே படம்.இறுதி காட்சியில்  காட்டப்படும் HEDGE வடிவ தோட்டம் பிரம்மிக்க வைக்கும் (கீழே படத்தில் உள்ளது).


FRIDAY THE 13TH படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் .ஆற்றங்கரை ஓரம் உள்ள தனிமையான வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க வருகிறவர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஒருவனால் கொள்ளபடுகிறார்கள்.ஒவ்வொரு படத்திலும் இறுதியில் கொள்ளப்படும் அல்லது கொன்றுவிட்டதாக கருதப்படும் ஜேசன் அடுத்த படத்தில் உயிரோடு வந்து அதே வேலையை  செய்கிறான்.முதல் பகுதி படம் விமர்சகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டாலும் மக்களுக்கு அந்த திக் திக் வினாடிகள் பிடித்து விட்டது ,வசூலும்  அமோகம்.தொடர்ந்து இன்றுவரை அதை திருப்பி திருப்பி எடுத்து வருகிறார்கள்.என்ன மக்களுக்கு தான் ஆர்வம் போய் விட்டது.படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணம்.ஒரு திகில் படத்திற்கு ஏற்ற வியலின்  விளையாடி இருக்கும்.

NIGHTMARE ON ELM STREET படமும் அதே போல் அதிக பாகங்கள் வந்துள்ளது.கனவில் வந்து கொலை தொந்தரவு கொடுக்கும் ஒருவனின் கதைதான்.இதன் முதல் பாகத்தில் தான் நடிகர் ஜானி டெப் படங்களில் நடிக்க துவங்கி நடித்த முதல் முக்கிய பாத்திரம் ஆகும்.இவற்றை தவிர என்று பார்த்தால் இந்தியர்களுக்கு மிகவும் தெரிந்த EVIL DEAD.குறைந்த செலவில் எங்காவது ஒரு காட்டில் ஒரு ஐந்தாறு நடிகர்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் திகில் படங்களுக்கு முன்னோடி இந்த படம்.இது இந்தியர்கள் முதலில் அதிகம் பார்த்த திகில் படமாக இருக்கலாம்.VCR வந்த புதிதில் அதை வைத்திருந்த அனைவரும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்.

CHILD'S PLAY வை மறந்து விட்டேனே.மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் போலீஸ் துரத்தலில் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் தன் உயிரை ஒரு பொம்மையில் செலுத்தி கொள்கிறான்.அந்த பொம்மை செய்யும் கொலைகளே படம்.கதை குழந்தை தனமாக இருந்தாலும் அருமையாய் எடுத்திருப்பார்கள்.இதுவும் ஐந்து பாகங்கள் வரை வந்துள்ளது.

எண்பதுகளில் வந்த மற்ற திகில் படங்களில் குறிப்பிட்டு  சொல்லலாம் என்றால் THE BOOGEYMAN,MY BLODDY VALENTINE,CREEPSHOW,POLTERGEIST,THE THING,FRIGHT NIGHT,THE HITCHER,HELL RAISER,PREDATOR போன்ற படங்களை சொல்லலாம்.

அடுத்த பகுதியில் 90 களில் வந்த ஹர்ரர் படங்களை பற்றி பாப்போம்.
இதன் முதல் பகுதி லிங்க்  http://scenecreator.blogspot.com/2012/07/horror-1.html 


Sunday, 8 July 2012

இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?


இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?

IMDB போன்ற தளங்களில் நல்ல ரேடிங் பெரும் எல்லா படங்களும் நமக்கு பிடித்து போவதில்லை.இந்த படத்திற்கு போய் எப்படி இவ்வளவு புள்ளிகள் கிடைத்தது என்று நமக்குள் சில படங்களை பார்க்கும் வேலையில் தோன்றும்.அதே போல் ரைடிங் குறைவாக இருக்கும் படங்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவதில்லை.நான் இங்கு IMDB யில் டாப் ரேடிங்  பெற்று எனக்கு பிடிக்காமல் போன, முழுதும் பிடித்த ,சுமாரான, பார்க்க உள்ள படங்களை சொல்கிறேன்.இவற்றில் உங்களுக்கு பிடித்து எனக்கும் பிடித்ததும் இருக்கும் ,உங்களுக்கு பிடித்து எனக்கு பிடிக்காமல் போனவையும் இருக்கும்.இறுதில் குறிப்பிட்டுள்ள பார்க்க உள்ள படங்களை பற்றி பார்த்தவர்கள் எனக்கு  சொன்னால் சில படங்களில் இருந்து தப்பிக்கலாம்.

IMDB TOP இல் எனக்கு பிடித்தவை :
KILL BILL
THE DEPARTED
MOMENTO
NO COUNTRY FOR OLD MEN
FARGO
PSYCHO
THE SHAWSHANK REDEMPTION
THE SHINING
OLD BOY

IMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :
USUAL SUSPECTS
SEVEN
SILENCE OF THE LAMBS
RESEVOIR DOGS
DISTRICT 9
BOURNE SERIES
THE SECRET IN THEIR EYES

IMDB TOP இல் சுமாரான படங்கள்:
PRESTIGE
FIGHT CLUB
GREAT ESCAPE
AMORES PERROS 
DOGDAY AFTRENOON

IMDB TOP இல் பார்க்க உள்ள படங்கள்:
PULP FICTION
INCEPTION
SIN CITY
GOOD FELLAS
SHUTTER ISLAND
BLACK SWAN
SCAR FACE
MYSTIC RIVER
BUTTERFLY EFFECT
WAGES OF FEAR
HIGH AND LOW

நண்பர்களே,இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லையா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.பார்க்க உள்ள படங்களில் நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி சொல்லவும்.மொக்கை படமாக இருந்தால் தப்பிப்பேன்.இந்த லிஸ்டில் இல்லாத நல்ல படமாக இருந்தாலும் சொல்லுங்கள்.