Pages

Friday, 8 February 2013

7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் :


7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆங்கில ,உலக படங்களை பார்ப்பது என்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம் .என் குறிக்கோள் தினமும் ஒரு ஆங்கில படம்.ஆனாலும் என் எண்ணம் அத்தி பூத்தாற்போல் ஆண்டுக்கு மொத்தமாய் சில வாரங்களே அமையும்.அப்படி அமைந்த நாட்கள் எனக்கு டிவைன் .இரவு ஒரு படம் முடிந்ததும் அப்படியே அந்த படத்தை பற்றி யோசித்தவாறே தூக்கம் ,இது என் வீட்டில் யாரும் இல்லாமல் நான் மட்டுமே இருக்கும் போது அமையும் சந்தர்ப்பம்.அந்த சந்தர்ப்பத்துக்கு ஏங்கியவாறே  காத்திருப்பேன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் ஜனவரி கடைசி வாரம் எனக்கு கிடைத்தது.அப்படி தினமும் ஒரு படமாக 7 படங்கள் பார்த்து தள்ளினேன்.
அந்த படங்களை ஒவ்வொன்றாக தனி பதிவில் சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் லாயக்கு அற்றதால் மொத்தமாக ஒரே பதிவில் .

இந்த படங்களை பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த பதிவு.இந்த படத்தை பற்றி கேள்விபட்டால் பார்க்க அல்லது பார்க்க தவிர்க்க ஒரு ஐடியா இந்த பதிவு.

1.SLEEP TIGHT (2011) :
                         ஸ்பானிஷ் மொழி படம்.வாழ்கையில் எந்த குறிக்கோளும் ஆதரவும் இல்லாமல் வெறுமையுடன் தற்கொலை முடிவில் இருக்கும் ஒருவனுக்கு ஒரு ஐடியா . அடுத்தவரின் வாழ்கையை மகிழ்ச்சி அற்றதாக செய்வதே நம் வாழ்கையில் மகிழ்ச்சியை தரும் என்ற உயர்ந்த பண்பு அவனுக்கு புரிகிறது.ஒரு அப்பார்ட்மெண்டில் காப்பாளனாக இருக்கும் அவன் அங்கே தனியே வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் தினமும் அவள் வருவதற்கு முன் சென்று அவளின் கட்டிலிற்கு அடியில் படுத்துகொள்கிறான் .அவள் வந்து உறங்கியதும் மெல்ல எழுந்து அவளுக்கு மயக்க மருந்து செலுத்தி அவளுடன்  இரவை கழிக்கிறான்.இதை பல வாரங்களாக செய்து வருகிறான்.இப்படி ஒரு நாள் கட்டிலுக்கு அடியில் படுத்து அவளுக்காக காத்திருக்கும்போது அவள் தன காதலனோடு படுக்கைக்கு வருகிறாள்.அடியில் இவன் .மேலே அவர்கள்.அடுத்து நடப்பது தான் உச்சம். ஒரு முறை பார்க்கலாம் .

2.HOUSE AT THE END OF THE STREET (2012) :
                                                    அடர்ந்த காட்டிற்கு மத்தியில் சில வீடுகள் .ஒவ்வொரு வீடும் கொஞ்சம் தள்ளி தள்ளி.ஒரு வீட்டில் ஒரு சிறு பெண் தன்  தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்கிறாள்.காணமல் போகிறாள் .அந்த வீடு பூட்டப்பட்டு இருக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாய் தன தாயோடு குடிவருகிறாள் ஒரு பெண்.பக்கத்து வீட்டு கதையை தெரிந்து கொள்கிறாள் .ஒரு இரவில் அந்த பூட்டப்பட்ட வீட்டில் லைட் எரிவதை பார்க்கிறாள். பேய்,பூதம் எல்லாம் இல்லை. ஒரு மைல்ட் த்ரில்லர்.


3.KILL LIST (2011) : 
                      ரொம்பவும் வெறுப்பான படம்.ஏதாவது திருப்பம் வரும் அதன் பின் பரபரப்பு வரும் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன் படம் முடிந்து விட்டது.படத்தின் பெயரை கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுங்கள் அவ்வளவுதான்.பார்த்து முடித்த அடுத்த நொடி படத்தை  டெலிட் செய்தேன்.(இந்த பதிவு எழுதும் போது இந்த படத்தையே ஞாபகம் இல்லாமல் இன்னும் ஒரு படம் பார்த்தோமே என்று 2 நாள் அப்பபோ யோசித்துக்கொண்டே இருந்தேன்.)

4.THE SKEPTIC (2009) :
                        ஒரு வக்கீல் .நடு இரவில் அவருக்கு ஒரு போன்.யாருமற்ற அவரது அத்தை இறந்துவிட்டார் என்று.அவனுக்கு அந்த அத்தையோடு எந்த தொடர்பும் இல்லை.ஆனாலும் அந்த அத்தை யாரும் இல்லாதவர் என்பதால் அவர் வசித்த வீடு இனி இவருக்கு தான்.அந்த பழமையான வீட்டிற்கு வருகிறான்.அந்த வீட்டில் அவன் அத்தை எதோ ஒரு ரகசியத்தை இவனுக்கு சொல்ல வைத்துவிட்டு சென்றிருக்கிறார் என்று அறிந்து அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான்.  கதை கொஞ்சம் ஆர்வத்தை கிளப்பினாலும் பெரிதாய் எதுவும் இல்லை.

5.DRAG ME TO HELL (2009) : இந்த படம் ரொம்ப நாளாக என்னிடம் இருந்தது.ஆனாலும் பார்க்க எண்ணம் இல்லாமல் சரி பார்த்துவிட்டால் டெலிட் செய்யலாம் என்பதாலும் என் நண்பன் செல்வா இந்த படத்தை பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று சொன்னதாலும் (அவனை இப்படி ஆங்கில படங்கள் கொடுத்து பார்க்கவைத்து கெடுப்பது நான் தான்) பார்த்தேன்.பலர் இந்த படம் பற்றி தெரிந்திருக்கலாம். ஜஸ்ட் ஓகே.

6.DEAD FALL (2012) : படம் ரொம்ப பரபரப்பாக தொடங்குகிறது.ஒரு கடும் பனிக்காலம்.ஊர் முழுதும் பனி சூழ்ந்துள்ளது.ஒரு வங்கி கொள்ளையை முடித்துவிட்டு தப்பி செல்லும் மூவர் .இரு ஆண் ஒரு பெண்.ஒரு விபத்தில் ஒருவன் இறந்துவிட மற்ற இருவரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிந்து செல்கிறார்கள்.இன்னொரு பக்கம் தண்டனை முடிந்து ஜெயிலைவிட்டு வெளியே வரும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் உடனே இன்னொரு கொலை செய்துவிடுகிறான்.வீட்டில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கும் வயதான பெற்றோர்.அந்த பெண்ணும் இவனும் சந்தித்து காதலிக்கிறார்கள்.எல்லோரும் சென்று சேரும் இடம் அந்த பெற்றோர் இருக்கும் வீடு.தனியாய் போன அவனும் அங்கே வருகிறான். ஆரம்பத்தில் இருந்த கிரிப் படத்தில் போகப்போக இல்லை.படத்தின் அந்த பனி சூழ்ந்த காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

7.ATM (2012) :
            ஒன்றாக பணிபுரியும் 3 பேர்.(2 ஆண்கள் 1 பெண்) ஒரு பார்ட்டி முடிந்து இரவு 2 மணி அளவில் காரில் போய் கொண்டிருக்கிறார்கள்.அப்போது ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில தனியே அமைந்துள்ள ATM இல் பணம் எடுக்க ஒருவன் இறங்கி செல்கிறான்.அவன் திரும்ப நேரம் ஆவதால் மற்ற இருவரும் அங்கே போகிறார்கள்.பணம் எடுத்து வெளியே செல்ல கதவை நெருங்கும்போது கண்ணாடிக்கு வெளியே  ஒருவன் முகத்தை மறைத்தபடி உடை அணிந்து நிற்கிறான்.அவர்கள் அவன் ஒரு வேலை கொள்ளைக்காரனோ என்று அஞ்சி ஒரு நிமிடம் உள்ளேயே நிற்கிறார்கள்.வெளியே நிற்பவன் திடீரென்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவன் ஒருவனை அடித்துகொள்கிறான்.அதை பார்த்து பயந்து வெளியே வராமல் உள்ளேயே இருக்கிறார்கள் .அவனும் அவர்களுக்காக காத்திருக்கிறான்.பார்த்த படங்களிலேயே ஓரளவு கொஞ்சமே கொஞ்சம் திருப்தி தந்து இந்த படம் தான் என்று சொல்லலாம்.ஒரு சுமாரான த்ரில் படம் பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம் .
                         

2 comments:

  1. thanks brother. I have few movie in my collections. Let me see all one by one.

    ReplyDelete