Pages

Monday, 18 February 2013

புளுகு மூட்டை ஆகிவரும் குமுதம் :


புளுகு மூட்டை ஆகிவரும் குமுதம் : குமுதம் புத்தகம் தன் தரம் இழந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது பலருக்கு தெரிந்த உண்மைதான்.ஆனாலும் இன்றும் விற்பனையில் முதல் இடத்தில உள்ளது .காரணம்  அதன் தரம் கிடையாது.கவர்ச்சி படங்கள் ,பொய்யான கிசுகிசுக்கள் ,இரட்டை அர்த்த ஆபாச கமெண்ட்கள் நடுவில் ரொம்ப நல்லவர்கள் போல கோவில்கள் ,சாய்பாபா என்று பூசி மொழுகி ஒப்பேத்தி விடுவார்கள் .முதலில் அவர்களின் அட்டைபடம் .பெரும்பாலும் அதாவது ஆண்டுக்கு 48 இதழ்கள் வருகிறது என்றால் 45 இதழ்களுக்கு கதாநாயகிகளின் கவர்ச்சி படம் தான் அட்டையில் .அதைவிட்டால் ரஜினி படம்.

இந்த பதிவை எழுதியதன் நோக்கம் சமீப காலங்களில் குமுதத்தின் தரம் அடி மட்டத்தில் சென்றுவிட்டது.அதன் சான்றாக சமீபத்தைய குமுதத்தில் வந்த செய்திகளும் அந்த செய்திகளின் நிஜங்களும் பற்றி அலசவே இந்த பதிவு.

மாற்றான் பட குழு மீது குமுதத்திற்கு  என்ன கோபமோ தெரியவில்லை .ஆரம்பம் முதலே மாற்றானும் சாருலதாவும் (ப்ரியாமணி நடித்த படம் ) ஒரே கதை அதுவும் "ALONE" என்ற படத்தின் காப்பி என்று பல வாரங்களாக கூவிக்கொண்டே இருந்தார்கள் .அதாவது ஒரு வாரம் இந்த செய்தி கவர் ஸ்டோரி என்றால் ,அடுத்த வாரம் சினிமா செய்திகள் பற்றிய இடத்தில்  என்று விடாமல் அடித்து கொண்டே இருந்தார்கள்.இதற்க்கு மாற்றான் பட இயக்குனர் கே,வி.ஆனந்த் மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் .அதையும் வெளியிட்டு அடுத்த வாரமே மீண்டும் அதே பழைய மேட்டரே சொல்லி கடைசியில் இப்படி தான் சொல்வார்கள் படம் வந்தால் கதை தெரிந்து விட போகிறது என்று கொஞ்சமும் ஞாயம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்.சரி படம் வெளிவந்தது .மாற்றானும் சாருலதாவும் வெவ்வேறு கதை என்று தெரிந்ததே அதன் பின் மறுப்பு ஏதாவது எழுதி வருத்தபட்டார்களா? அல்லது பட விமர்சனத்திலாவது ஒரு வரி அப்படி இல்லை என்று எழுதினார்களா?

அடுத்து விஸ்வரூபம் விவகாரம் உச்சத்தில் இருந்த போது அதாவது படம் தமிழ் நாட்டில் தடை செய்ய பட்டிருந்த நேரம் வெளிவந்த குமுதம் அட்டையில் "ஹாலிவூடில் செட்டில் ஆகும் கமல் என்று செய்தி .முழுதும் படித்தால் ஆங்கில படம் எடுக்க கமல் அமெரிக்க செல்கிறார்.2 ஆண்டுகளுக்கு அங்கேதான் இருக்க போகிறார் என்று செய்தி.2 ஆண்டுகள் தங்குவதற்கும் செட்டில் ஆவதற்கும் என்ன சம்பந்தம் ?


சில நாட்களுக்கு முன் குஷ்பூவையும் கலைஞரையும் இணைத்து செய்தி (குமுதம் ரிப்போர்டர் ) .அதாவது பெரியார் தனது 70 வயதிற்கு மேல் மணியம்மை அவர்களை மணம் செய்ததை போல் கலைஞர் -குஷ்பூ இருவரையும் இணைத்து செய்தி. இது என்ன ? ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் குஷ்பூ திருமணம் ஆனவர் .2 பெண்களுக்கு தாய் .கணவன் குடும்பம் என்று இருப்பவர் .கலைஞர் தள்ளாத வயதில் இருப்பவர் .நிற்கவே 2 பேர் உதவி தேவை அவருக்கு .கொஞ்சமும் விவஸ்தை இல்லாத விஷயம் .சரி அப்படி இல்லை என்று தெரிந்தால் மறுப்பு செய்தி வருதா ? அதான் விஷயம் .போன மானம் போனதுதான்.அவர்கள் கலைஞரை வம்பிற்கு இழுக்க காரணமும் இப்பொது தெரிய வந்துள்ளது .அதாவது குமுதம் சில வருடங்களுக்கு முன் ஜவஹர் பழனியப்பன் ,வரதராஜன் என்று 2 பிரிவாக பிரிந்து இப்போது வரதராஜன் கைகளில் உள்ளது .முன்பு பிரிந்திருந்த போது கலைஞர் எதிர் முகாமிற்கு ஆதரவு தந்ததால் ஆட்சி மாறியது முதல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அதன் உச்சம் தான் இந்த குஷ்பூ விஷயம்.கலைஞரையும் அசிங்க படுத்த வேண்டும் அதே நேரம் என்ன போட்டால் மக்கள் விழுந்து அடித்துக்கொண்டு வாங்குவார்கள்.பெண் விஷயம் என்றால் ஒரு பரபரப்பு கிளம்பும்.அதுவும் கலைஞர் இந்த வயதிலா என்று வாங்குவார்கள்.அதுவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் குஷ்பூ வேறு.அவர்கள் எண்ணம்  100% வெற்றி.


ரஜினி தன்  2வது மகள் திருமணத்தின் போது ரசிகர்ளுக்கு பிரியாணி விருந்து வைக்கபோகிறார் என்று குமுதமே ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு அதன் பின் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.3 வாரங்களுக்கு முன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு செய்தி வாசிப்பதை விட்டு பள்ளி ஆரம்பிக்க போகிறார் என்று புளுகு.அவர் தனது இணையத்தில் அது பொய் என்று மறுத்து உள்ளார்.ஏன் இந்த புளுகு வேலைகள்? சமர் படம் என்ன பிரச்சனையோ  இவர்களோடோ தெரியவில்லை .சமர் 2 பக்கம் விமர்சனம் போட்டு ஒரு பக்கம் மட்டும் எழுதி அடுத்த பக்கம் இந்த படம் பற்றி எழுதுவதற்கு பதில் வேறு ஏதாவது பயனுள்ளதாக  எழுத பயன் படுத்தலாம் என்று காலியாக விட்டு வைத்திருந்து அசிங்க படுத்தினார்கள்.சமரை விட மோசமான பல படங்களை இவர்கள் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள்.


ஒரு விஷயம் எழுதுகிறார்கள்.அந்த விஷயம் பற்றி தொடர்ந்து எழுதுவதோ முன்பு சொன்னது பற்றி தெளிவு ஆக்குவதோ கிடையாது.அந்த வாரம் ஏதாவது ஒரு பரபரப்பாக  விஷயம் எழுதி விற்பனை செய்துவிட வேண்டும் அவ்வளவுதான்.அதன் பின் என்ன நடந்தால் எவனுக்கு என்ன? யார் பேர் நாறினால் யாருக்கென்ன? இதற்க்கு இவர்களின் போட்டி பத்திரிக்கை என்று சொல்லபடும் விகடன் எவ்வளவோ மேல். இலங்கை விஷயம் ,கூடங்குளம் , என்று அவர்களுக்கு என்று ஒரு கருத்து உண்டு .அதன் படி தொடர்ச்சியாக செய்திகளை சொல்கிறார்கள்.இங்கே விகடனை உயர்த்தி குமுதத்தை தாழ்த்துவது  என் 
எண்ணம் கிடையாது.ஒப்பிட்டால் விகடன் மேல்.அவ்வளவுதான்.

எனக்கு ஞாபகம் இருந்த விஷயங்களை மட்டுமே எழுதி இருக்கிறேன்.இன்னும் யோசித்தால் நிறைய குப்பைகள்  வரும்.

11 comments:

 1. தாங்கள் தந்துள்ள தகவல்கள் மிகச் சரியானவை.

  பாராட்டுகள்.

  ReplyDelete
 2. விஜய்,
  நான் ஹைதராபாத்ல இருக்கும் போது,அங்க ஒரு கடையில "குமுதம்", "விகடன்" ரெண்டுமே கிடைக்கும். குமுதத்தை யாரும் சீண்ட கூட மாட்டாங்க. இதன்னை வருசத்துல ஒரு வாட்டி கூட நான் குமுதம் வாங்குனது இல்ல, அது தான் அந்த புக்க்கு நான் குடுக்கிற மரியாதை.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் குமுதம் தவிர்க்க வேண்டிய புத்தகம் தான் ராஜ்.ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க.--

   Delete
 3. குமுதம் பற்றிய விளக்கம் சிறு உதாரணங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இப்பொதுதான் எழுதினேன் அவர்களைப் பற்றி குப்பையைத் தோண்டியிருக்கிறேன். குமுதம் எந்தளவுக்கும் தரம் தாழ்ந்து எழுதுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டாம்.

  குமுதம் திருந்தாது

  ReplyDelete
  Replies
  1. இப்போது தான் உங்கள் பதிவுகளை படித்துவிட்டு வந்தேன். பின்னோட்டம் போட்டுளேன் .நன்றி

   Delete
 4. மொக்கை பதிவுகள்

  ReplyDelete
 5. குமுதம் எப்ப ஒரு ஹிட் படத்துக்கும் , ஒரு பலாப் படத்துக்கும் ஒரே RATING கொடுதாங்கலோ அப்பவே அவனுங்க ஓரு டுபாகூர் தெரிஞ்சி போச்சி..... அட ,சாய்பாபாவுக்கு முன்னால மேட்டர் சாமியார் நித்தியானந்தா பத்தி ஆஹா ஓஹ்ஹோ எழுதுன வங்க தான இந்த குமுதம்

  ReplyDelete
 6. நான் குமுதம் படிப்பதை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிறது.குமுதத்தில் படிப்பதற்கு ஒன்றும் இல்லை.முழுதும் குப்பை.இதைப் படித்து ஏன் நேரத்தை வீண் செய்ய வேண்டும் என்று குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.அந்தக் குப்பையை படிக்கவில்லையே என்ற வருத்தம் துளிக் கூட இல்லை.

  ReplyDelete