Pages

Saturday 29 December 2012

FLOP 10 தமிழ் படங்கள் 2012

FLOP 10 தமிழ் படங்கள் 2012



2012 முடிய போகிறது .எல்லோரும் இந்த ஆண்டின் TOP 10 படங்களை பேசிவருகிறார்கள்.நாம் ஒரு மாறுதலுக்காக FLOP 10 படங்களை பார்க்கலாம்.சொல்லி வைத்தாற்போல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படம் எப்படா வரும் என்று ஏங்கவைத்து அந்த படம் பார்த்த பின் ஏன்டா இந்த படத்தையா இப்படி எதிர்பார்த்தோம் ? ச்சே என்று ஆனது ஒரு வாடிக்கையானது .


இந்த படங்களை FLOP 10 சுமாருக்கும் கீழே ---- மிகவும் மோசம் .
                                                                    10---1

இப்படி எடுத்து கொள்ளவும்.

10.மாற்றான் : படத்தில் விஷயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது .அதை நீட்டி முழக்கி ,நீளமான சண்டைகள்,இறுதியில் வெளிநாடு ,பின் வடநாடு என்று சுற்றி வந்து ஒரு அயர்ச்சி வந்துவிட்டது.கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இந்த கதைக்கு ரெட்டை விஷயம் தேவையா என்று தோன்றியது.மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு படம் பார்க்கும்படி தான் இருந்தது.

9.அரவான்: படம் கொஞ்சம் ராவாக இருந்தது.அங்காடி தெருவுக்கு பின் வசந்த பாலன் இப்படி சறுக்குவார்  என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.படத்தை எதிர்பார்த்தேன்.எதோ குறைந்தது.பசுபதி நல்ல நடிகர் ,ஆனால் அவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் தேறவே இல்லை.எங்கே மீண்டும் வில்லனாக ஆகி விடுவாரோ என்று பயம் வருகிறது.

8.முகமூடி : எனக்கு மிஷ்கின் விஷயங்கள் பிடிக்கும் .ஆனால் படத்தில் விஷயம் இல்லை.இவர்களே படத்தை பற்றி ஓவராக பேசி கெடுத்து விட்டனர்.படத்தில் குறிப்பிடும்படி சம்பவங்களோ காட்சிகளோ இல்லை. ஒரே ஆறுதல் நல்ல இசை .குறிப்பாக பின்னணி இசை.

7.வேட்டை: மாதவன் ,ஆர்யா ,யுவன்,லிங்குசாமி .கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும் என்று நினைத்தேன்.அதே அண்ணன் தம்பி.வீரன்,கோழை .அக்கா  தங்கை ,ஒரு வில்லன்,அண்ணன் அடிபட்டு விட தம்பி அண்ணனுக்கு தைரியம் வரவைத்து வில்லனை காலி செய்கிறான் .எப்பா சாமி .இதை போய் ஹிந்தியில் வேறு ரீமேக் ஆகபோகுதாம்.

6.மெரினா: பசங்க படம் நல்ல படம்.அதே போல் சிறுவர்களை வைத்து படம் என்றதும் எதோ ஒரு இன்னொரு விஷயம் சொல்லப்போறாரு அப்படின்னு நினைத்தால் சும்மா பசங்க விளையாடுவதும் ,பீச்சில் சுண்டல் விற்பதும் என்று படுத்தி எடுத்து விட்டார்.ஒரே ஆறுதல் சிவகார்த்திகேயன்..அனால் படம் செலவு பண்ணுனதை விட 5 மடங்கு சம்பாதிதுவிட்டது என்று கேள்வி.

5. 3. ரஜினி மகள் டைரக்டர் ,ஒரு நல்ல கம்மேர்சியல் படமாக இருக்கும் என்று நினைத்தேன்.கொலைவெறி வேறு கிளப்பிவிட்டது.படம் பார்த்தவர்களுக்கு கொலைவெறி வந்தது தான் மிச்சம்.இதிலும் ஆறுதல் சிவகார்த்திகேயன் .

4.நீதானே என் பொன்வசந்தம்: கௌதம் எப்பவும் எடுக்கும் லவ் படம்.படு மெதுவாக போனது .இளையராஜா பாட்டு இல்லாவிட்டால்,நினைக்கவே முடியல.ஜீவா பாவம்.பெரிய இயக்குனர் படங்களில் அவர் நடிக்கும் படங்களும் ஊத்தி கொள்கின்றன.

3.தாண்டவம்: எனக்கு தெரிந்த முதல் குறை ஏற்கனவே மெதுவாக போகும் படத்தில் ஏன் எல்லோரும் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்? பாடல்கள் கேட்க்கும்படி இருந்தாலும் படம் உட்கார முடியல.இதை விட 20 வருஷத்திற்கு முன் இதே கண்தெரியாத ஹீரோ பழிவாங்கும் படமான இரவு சூரியன் நன்றாக இருக்கும். விக்ரம் மார்க்கெட்டை அடுத்த ஷங்கர் படமாவது தூக்குமா ?

2.பில்லா 2:  அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா)



1.சகுனி : நல்ல வளர்ந்து வர்ற ஹீரோ கார்த்தி.கதையில் ஒன்னும் இல்லாமல்,ஒரு லாஜிக் இல்லாமல் இவர் சொல்வதை எல்லா அரசியல்வாதிகளும்,சாமியாரும் அப்படியே நம்புகிறார்.ட்ரைலர் பார்த்து செம படமா இருக்குமோ ? அரசியலை ஒரு வாங்கு வாங்குமோ என்று எதிர்பார்தேன்.சந்தனமும் ஆரம்ப ரஜினி-கமல் மேட்டர் தவிர சிரிப்பும் ஒன்றும் இல்லை.இந்த ஆண்டு நான் பார்த்த மிக மோசமான படம் இதுதான்.எனக்கு என்னவோ அலெக்ஸ் பாண்டியனும் சந்தேகமாக தான் இருக்கு .


சரி எனக்கு எதிர்பாராமல் 100% திருப்தி தந்த படங்கள் என்றால் தடையற தாக்க ,பிட்சா இரண்டும் தான்.எதிர்பார்த்து திருப்தி தந்தது துப்பாக்கி .

ஒரு படம் ஹிட் ஆகி எனக்கு பிடிக்காதது ஒரு கல் ஒரு கண்ணாடி .இன்னும் கொஞ்சம் ஓடி இருக்கலாம் என்று நினைத்தது நண்பன் ,சாட்டை

நன்றாக சிரிக்க வைத்த படம் கலகலப்பு.

இது போய் ஹிட்டா என்று நினைத்தது சுந்தரபாண்டியன் .



Thursday 27 December 2012

SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம்


SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம் 



தொடக்க காட்சியிலேயே ஒரு மரத்தின் நீண்ட கிளையில் வரிசையாய் நான்கு பேர் முகம் மறைத்து தூக்கில் தொங்க தயாராக இருக்கிறார்கள்.மெதுவாக கயிறு இறுக்கப்பட்டு  கால்களை உதைத்து துடித்து  இறக்கிறார்கள்.இப்படி தொடங்கும் படம் இது.இந்த ஆண்டு வெளி வந்த ஹாரர் படங்களுள் முதன்மையான படம்.

நாயகன்  ஒசவல்ட் ஒரு எழுத்தாளன் .ஒரு வெற்றிகரமான புத்தகத்தால் உலகிற்கு அறியப்பட்டவன்.அதன்பின் எழுதியவை எல்லாம் தோல்வி அடைய,இழந்த பேரை மீண்டும் மீட்க விரும்புகிறான்.அவன் மனைவியோ அவனை வேறு வேலைகளுக்கு செல்ல கேட்டுகொள்கிறாள் .அவன் பிடிவாதமாக எழுத்திலேயே இருக்கிறான்.இந்த நிலையில் காவல் துறையால் இன்னும் முழுதும்  முடிக்கமுடியாத  கொலைகள் நடந்த அந்த வீட்டிற்கு குடி வருகிறான்.அவன் வீட்டின் வெளியில் உள்ள மரத்தில் தான் தொடக்க காட்சியில் வந்த தூக்கு நடந்த இடம்.ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் தனிமையான வீடு அது.

அவனுக்கு ஒரு மகன் ,ஒரு மகள்.அவனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லை.அவனும் இந்த புதிய கதை எழுதி முடித்ததும் மீண்டும் பழைய வீட்டிற்க்கே போய்  விடலாம் என்று சொல்கிறான்.அன்று இரவு சாமான்களை அடுக்க வீட்டின் மேலுள்ள தளத்திற்கு செல்கின்ற அவன் அங்கே ஒரு அட்டை பெட்டி .அதில் சில பிலிம் ரோல்கள் ,ஒரு ப்ரொஜெக்டர் போன்றவை இருக்கின்றன .இரவு எல்லோரும் உறங்கிய பின் அவன் அவனது அறையில் அந்த பிலிம் ரோல்களை ஓட விடுகிறான்.அவை SNUFF FILM வகையாறக்கள் .

அந்த படங்களில் நான்கு குடும்பங்கள் தனித்தனியே பல முறைகளில் கொல்லபடுவதை பார்த்து உறைகிறான்.கடைசியாக அவன் பார்க்கும் கொலை அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் நான்கு பேர் தூக்கில் தொங்குவது .இவற்றை பார்த்ததும் இதில் உள்ளவற்றை ஆராய்ந்து அதை கதையாக எழுதி மீண்டும் வெற்றி பெற நினைக்கிறான்.மீண்டும் மீண்டும் அவற்றை ஓட விடுகிறான்.யார் இந்த படங்களை எடுத்தது? அந்த படத்தில் இருக்கும் சிறுமி என்ன ஆனால்? என்று பல கேள்விகள் அவனுள் எழுகின்றது.

எல்லா கொலைகளிலும் ஒரு பயங்கரமான உருவம் எங்கோ ஒரு இடத்தில இருப்பதை கண்டு பிடிக்கிறான்.அந்த முகத்தை பிரிண்ட் எடுத்து கொள்கிறான்.போலீசை அழைக்கும் ஒஸ்வல்ட் அவரிடம் தான் கண்டுபிடித்ததை சொல்கிறான்.1960 களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் பல்வேறு காலங்களில் இது போல் கொலைகள் நடந்துள்ளதாக சொல்கிறார் போலீஸ்.மேலும் எல்லா கொலைகளிலும் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் காணமல் போகிறது என்றும் சொல்கிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு இரவு ,அவர் அறையில் இருந்து சத்தம் .பார்த்தால் என்ன? சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம்.

அந்த இரவே அந்த படங்களை கொளுத்தி விட்டு அவசரமாக குடும்பத்தோடு வீட்டில் இருந்து காலி செய்து வேறு  இடம் சென்று விடுகிறான் .புதிய வீட்டில் இருக்கும் ஒஸ்வல்ட் அந்த போலீஸ் அதிகாரி மூலம் சில உண்மைகள் அறிகிறான்.அது என்ன? இறந்த 4 குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ? வீடு மாறியுள்ளதால் இப்பொது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்து என்ன? புதிய வீட்டிலும் அவனுக்கு ஒரு அட்டை பெட்டியில் சில பிலிம் ரோல்கள் .அதில் தொடர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது .அவற்றை ஓடவிட்டு பார்க்கிறான். என்ன பார்க்கிறான்? 

படத்தின் சஸ்பென்ஸ் உடைய வேண்டாம் என்று நிறைய எழுதவில்லை.சில காட்சிகளில் முதுகு தண்டு சில்லிடவைக்கும் பயம் வருவது நிச்சயம்.ஒரு இரவில் படம் பாருங்கள் .அப்புறம் சொல்லுங்கள் .கொஞ்சமும் ஆபாசமோ ,கொடூரமான கொலைகளோ படத்தில் இல்லை.அதனால் பெண்களும் பார்க்கலாம்.

IMDB RATING --6.8

ROTTEN TOMATTOES--  63% FRESH

2012 அக்டோபரில் வந்த படம் 1.40 நிமிடம் ஓடும் .

Wednesday 26 December 2012

COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம்


COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம் :



உலகில் சிறை வாழ்கையை சொல்லும் படங்கள் தனி ரகம் .நான் பார்த்தவற்றில் THE SHAWSHANK REDEMPTION,PAPILLON,ESCAPE FROM ALCATRAZ,FELON போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை.THE GREEN MILE படமும் நல்ல படம் என்று கேள்விபட்டுள்ளேன்.நான் நம்பி ஏமாந்த படம் THE GREAT ESCAPE.இந்த படம் COOL HAND LUKE முதலில் நாவலாக வந்து பின் திரை படமாக்க பட்டது.PAUL NEWMAN கதையின் நாயகன்.


கடும் விதிமுறைகளுடன் இருக்கும் ஒரு சிறையில் புதிதாக வரும் கைதி அந்த விதிகளுக்கு அடங்க மறுத்து,எல்லோரும் அஞ்சும் தண்டனைகளை ஏளனம் செய்தபடி அவற்றை ஏற்கிறான்.இதனால் மற்ற கைதிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து விடுகிறான்.இரண்டு மூன்று முறை தப்பிக்க முயற்சித்து மாட்டிகொள்கிறான்.அடுத்த முறை தப்பித்து மாட்டினால் சுட்டு விடுவோம் என்று எச்சரித்தும் தப்பிக்கிறான்.மாட்டி கொள்கிறானா? 


ப்ளோரிடாவில் தனிமை பாலைவனத்தில் ஒரு சிறை.கடும் விதிமுறைகள்.மீறுவோர் தனிமை அறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கபடுவர்.சிறு குற்றம் புரிந்து உள்ளே வரும் நாயகன் லூக் .அங்கே உள்ள கைதிகள் அந்த சிறையை அடுத்த உள்ள ஒரு இடத்தில பாதை அமைக்கும் பணிக்கு கூட்டி செல்ல படுகிறார்கள்  .அங்கு வெய்யிலின் கொடுமை தாங்கமால் பலர் சுருண்டு  விழுகிறார்கள்.அந்த சிறையில் ஏற்கனவே ஒருவன் அவர்களுள் தலை போல இருப்பவன்.அவன் முதலில் லூக்குடன் மோதி பின் நண்பன் ஆகிறான்.

அந்த சிறையின் எந்த விதிக்கும் அடங்க மறுக்கும் லூக் அதற்கான தண்டனைகள் பெறுகிறான்.அந்த தண்டனைகளுக்கு மற்றவர்கள் அஞ்சும் நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் லூக் மற்ற கைதிகளின் அன்பை பெறுகிறான்.ஒரு முறை 50 முட்டைகளை 1 மணி நேரத்தில் சாப்பிட  பந்தயம் கட்டி வென்று அவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கைதிகள் என்னும் அளவுக்கு ஆகிவிடுகிறான்.அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறான்.


அவன் தப்பித்ததை எண்ணி மகிழும் கைதிகள் அவன் சிக்கி கொண்டதை பார்த்து வருந்துகிறார்கள்.மீண்டும் தப்பிக்கிறான்.இந்த முறை சில நாட்கள்.மீண்டும் சிக்குகிறான்.அடுத்த முறை தப்பித்து மீண்டும் சிக்கினால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் சிறை அதிகாரிகள்.அவர்கள் தரும் தண்டனைகள் தாங்க முடியாமல்  அவர்களிடம் அடிமை போல் நடக்க ஆரம்பிக்கிறான்.அப்படியே மீண்டும் எஸ்கேப் .இப்போ சிக்கினான இல்லையா ?

1967 இல் வந்த கலர் படம்.ஒரு வினாடி கூட போர் அடிக்காமல் செல்கிறது.ஒரு படத்திற்கு அந்த படத்தின் கதை நிகழும் களம் அழுத்தமாக பதிவு செய்தால் தான் நம் மனதை விட்டு போகாது .இதில் அந்த இடங்களும் தனிமையான பாலைவனமும்,சிறையும் அசத்தல் .ஹீரோ அசால்டாக நடித்துள்ளார்.அவர் புன்னகை இன்னமும் என் கண்முன் உள்ளது.இசை பற்றியும் சொல்ல வேண்டும் .அதிரும் இசை எல்லாம் இல்லை .அவன் தப்பித்து ஓடும்போது கூட வெறும் இரண்டு மூன்று கருவிகளுடன் அருமையாய் இசை அமைத்துள்ளனர்.

படம் 2.06 மணி நேரம் ஓடுகிறது .

IMDB RATING-- 8.2

ROTTEN TOMATTOES --100% FRESH

படம் சூப்பர்.  FEEL THE EXPERIENCE OF PRISON LIFE...

Monday 17 December 2012

கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?

கௌதம் மேனன்  இதுவரை என்ன கிழித்துவிட்டார்? 





கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை  சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.

கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.

இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.

1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு  6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம் 
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு  நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு 

ரீமேக் கழித்தால் 8 படம் .

1.மின்னலே :  முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை 

2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.

3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு  அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.

4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.

இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை 

5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.

6.விண்ணை தாண்டி வருவாயா :  இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .

7.நடுநிசி  நாய்கள் :  எப்பா படமா அது .உவ்வே .

எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .

Sunday 16 December 2012

1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு


1981 இல்  ரஜினி -கமல் இடையே நடந்த  கை கலப்பு :


தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால் கட்டி அனைத்து கொள்வதும் பின் அவருக்கே குழி பறிக்கும் வேலைகளும் கருப்பு வெள்ளை காலங்கள் முதலே தெரிந்தது தான்.எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவரும் நேரில் தம்பி-அண்ணே என்று பாசத்தால் கட்டி அனைத்தாலும் சிவாஜிக்கு முன்பிருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து அப்போதுதான் எம்.ஜி ஆரின் வளர்பிறை நேரம் .ஆனாலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை.ஒரு படம் ஓடினால் பின் சில சரிவுகள்.அதன் பின் வந்த சிவாஜி பராசக்தி மூலம் மின்னல் போல நுழைந்து தடதடவென மேலே வந்து விட்டார்.ஆமாம் எம்.ஜி ஆரை முந்தி முதல் இடத்தில இருந்தது அவர் நிலை. தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.பந்துலு போன்ற சில தயாரிப்பாளர்கள்.எம்.ஜி ஆர் தனது முறை வந்ததும் சிவாஜியை வைத்து படம் எடுத்த அனைவரையும் தன்னை நோக்கி வரவைத்தார்.மேலும் தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் சிவாஜியை நாடாமல் பார்த்துகொண்டார்.ஒரு நேரம் எம்.ஜி ஆர் குரூப் நடிகர்கள் ,சிவாஜி குரூப் நடிகர்கள் என்று இரு பிரிவாக நடிகர்கள் இருந்தார்கள்.எம்.ஜி ஆர் க்ரூபில் அசோகன் ,வி.எஸ்.ராகவன்,தேங்காய் ஸ்ரீனிவாசன்  இன்னும் சிலர் .சிவாஜியிடம் மேஜர் சுந்தர்ராஜன்,பாலாஜி போன்றோர் .இவர்களை ஒரு க்ரூப் நடிகர் பெரும்பாலும் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க மாட்டார்.இருந்தாலும் நேரடியாக எம்.ஜி.ஆர் -சிவாஜி நட்பு பாராட்டி கொள்வார்கள் ..


காலம் கடந்து அடுத்த செட் நடிகர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.கமல்-ரஜினி  என்று தொடங்கியது.இருவரும் சேர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.நட்பு பலப்படுகிறது .பின் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிகிறார்கள்.இருவருமே அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்து முன்னணிக்கு வருகிறார்கள்.இருந்தாலும் பழைய பழக்கத்தில் நட்புடனே இருக்கிறார்கள்.இனி விஷயத்திற்கு வருவோம்.இது என் கற்பனையோ அல்லது வேறு எதுவோ இல்லை.நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே விவரிக்க்றேன்.அப்போது குமுதம் வார புத்தகம் இருவரையும் நேரடியாக பேர் சொல்லாமல் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருந்தது.பின் கமல் ஒரு பேட்டியில் நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு அதன் பின் நடந்தவற்றை விவரித்துள்ளார்.அந்த சம்பவங்களை அப்படியே 

தயாரிப்பாளர் கே.பாலாஜி .பில்லா,தீ ,விடுதலை போன்ற ரஜினி படங்களும் சவால்,சட்டம்,வாழ்வே மாயம் போன்ற கமல் படங்களும் தயாரித்தவர்.

வருஷம் ---1981. மே மாதம். பாலாஜி ரஜினின் திருமணத்தையொட்டி ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.ரஜினி ,கமல்,பாலாஜி,ஜெய்சங்கர் ,விஜயகுமார் ,ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரை புரண்டு ஓடியது .கமல் ஏக துஜே கேலியே மூலம் உச்சத்தில் இருந்தார்.ரஜின்க்கும் நல்ல  மார்க்கெட். புகழ் மயக்கம் எல்லோருக்கும் இயல்பே.மகிழ்ச்சி உற்சாகத்தில்  தனி நபர் தாக்குதல் விமர்சனங்கள் தலை தூக்கின .

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளர் பார்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக்கொண்டதை  பற்றி எல்லா பத்திரிக்கைகளும் செய்தி வந்தது.

"ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)

பிறகு நடந்தவை கமல் வார்த்தைகளில் :

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலகி இருவரையும் சமாதனம் செய்தார் .அதற்காகவே ஜெய் சாரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும்.இந்த சம்பவம் நடந்த மறு நாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன்.என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்துகொண்டிருந்தார் .வந்த வேகத்தை பார்த்தல் தகராறு செய்யத்தான் வருகிறார் போலிருக்கு ,சரி வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்து கொண்டிரும்போதே அருகில் வந்து ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார்."சாரி ..நேத்து நடந்தை மறந்திடுங்க என்றார்.எனக்கு வெட்கமாகி விட்டது.அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்க்க போனபோது பகை உணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன்.பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்.அதை கேள்வி பட்டதும் நாம் முந்தி கொள்ளாமல் போனோமே என்று என்னையே நொந்து கொண்டேன் ..