Pages

Wednesday, 30 May 2012

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2


தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 


90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரஜினி படங்களுக்கு வர தொடங்கியிருந்தனர்.அதற்கேற்றாற்போல் படங்களை தேர்வு செய்தார்.அதிக வன்முறையோ,ஆபாசமோ ,முத்த காட்சிகளோ இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படங்கள் இருந்தது.

90 இன் தொடக்கம் அவருக்கு சரியில்லை என்றே சொல்ல வேண்டும்.பணக்காரன் சுமார்.தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த படத்தை அதிசியபிறவி என்று எடுத்தார்கள்.எம லோகம் ,மறு பிறப்பு என்பதை எல்லாம் நம் மக்கள் ஏற்கவில்லை.அதனால் படு தோல்வி.ஆனால் டி.வியில் இன்று பார்க்கும் போது அத்தனை மோசமில்லை படம்.படு சோகமாக ரஜினியை காட்டிய தர்மதுரை ஓடவில்லை.மிகுந்த பொருள் செலவில் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்த நாட்டுக்கு ஒரு நல்லவன் மண்ணை கவ்வியது.அப்போது தான் தளபதி ஆரம்பம்.ஏற்கனவே தனது ஹிட் படங்கள் மூலம் முக்கிய இயக்குனர் ஆகி  இருந்த மணிரத்னம், இளையராஜா,மம்மூட்டி என படையோடு வந்தது.கதை என்னவோ மகாபாரத கர்ணன்  கதைதான்.91 தீபாவளிக்கு வந்த இந்த படம் உடன் வந்த கமலின் குணாவை முந்தியது.அடுத்து மன்னன் படத்திற்கு முதல் முறையாக ரஜினி ஒரு கோடி சம்பளம் பெற்றார்.அப்போது சிரஞ்சீவி ஒருவர் தான் இந்தியாவிலேயே அந்த அளவு சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்.கவிதலயாவோடு மீண்டும் அண்ணாமலையில் இணைந்தார்.முற்றிலும் புதிய கூட்டணி.பாலச்சந்தர் உடன் அப்போது இளையராஜாவுக்கு முட்டல்.அதனால் தேவா வந்து சேர்ந்தார்.ரஜினிக்கான எல்லா விஷயங்களும் இருந்தது.படமும் வெள்ளி விழா கண்டது.இன்றைக்கும் ரஜினி ரசிகர்களின் டாப் லிஸ்டில் இந்த படம் உள்ளது.தனது ஹிட் டைரக்டர் முத்து ராமனுக்காக எடுத்த கன்னட ரீமேக் "பாண்டியன்" வேலைக்கு ஆகவில்லை.உடன் வந்த தேவர் மகன் பட்டையை கிளப்பியது.90 களின் தொடக்கத்தில் ஒரு trend வந்தது.அதாவது எல்லா ஹீரோக்களும் கிராமத்து பெரிய மனிதராக ,ஊரே மதிக்கின்ற நல்லவாராக நடித்தார்கள்.ரஜினியும் எஜமான் ஆனார்.படம் வசூலில் திணறியது.வழக்கம் போல் எ.வி.எம். பல விதமான விளம்பரங்கள் மூலம் படத்தை ஓட்ட முயற்சித்தனர்.ஒன்னும் ஆகவில்லை.ரொம்ப காலம் படன் எடுக்காமல் இருந்த விஜயா வாகினி "உழைப்பாளி" எடுத்தனர்.ஓரளவு ஓடியது.அதிக பஞ்ச் வசனம் கொண்ட படம் இது.சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிடாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.வீராவுக்கு அடுத்து என்ன ? அதேதான். பாட்ஷா. "hum" என்று ஒரு ஹிந்தி படம் அதில் ரஜினியும் நடித்திருப்பார்.எந்த வேடத்தில் பாட்ஷாவில் ரஜினியின் தம்பி நடித்த வேடத்தில்..அந்த படத்தை முழுக்க ரீமேக் என்றில்லாமல் வேறு சில படங்களில் இருந்த காட்சிகள் ,உதாரணமாக ரஜினி தங்கைக்காக காலேஜ் சீட் கேட்க்கும் காட்சி வேறு படத்தில் இருந்து எடுத்தது. ,இப்படி ஒரு கதம்பமாக பாட்ஷா ஆனது.பட ரிசல்ட் உலகம் அறிந்தது.இனி படத்தில் ரஜினி என்றில்லாமல் ரஜினிக்காக படம் உருவாக்குதல் ஆனது."முத்து " ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசையை பயன்படுதுகொண்டது.முழுக்க "வரேன்" "வருவேன்" இப்படி இருந்தது வசனங்கள்.அருணாசலமும் அப்படியே. படையப்பா கதைக்கு வருவோம்.இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் அவர்கள் அதுவரை வாங்கி வந்த சம்பளைதைவிட அதிகமாக தரப்பட்டது.சும்மா வந்து போகும் மன்சூர் அலி கான் ஒரு லட்சம் பெற்றார்.சிவாஜிக்கு முந்நூறு படங்களில் இல்லாத அளவு 60 லட்சம் தரப்பட்டது.இந்த படம் எடுத்து முடித்த பின் பார்த்தால் கிட்ட தட்ட நாலு மணி நேரம் ஓடியது.என்ன செய்வது என்று கையை பிசைந்த ரவிக்குமார் ரஜினியிடம் சொல்ல ,அவர் கமலை கூப்பிட்டு விஷயத்தை சொல்ல ரஜினியும் ரவிகுமாரும் இரண்டு இடைவேளை விட்டால் என்ன என்று கேட்டனர் . கமல் மறுத்து ரவிகுமாரிடம் எடிட்டிங் பற்றி சில விஷயங்கள் சொல்லி அவரை முடிந்தவரை எடிட் செய்ய சொல்லி இருக்கிறார்.அப்படியும் மூணு மணி நேரத்தை தாண்டியது படம்.சிவாஜி நடித்த பல காட்சிகள் வெட்ட பட்டன.அப்படியும் படம் ஹிட்.

பாபா படம் பற்றி சொல்ல தேவை இல்லை.சிவாஜி போன பிறகு சிரமத்தில் இருந்த சிவாஜி குடும்பத்திற்கு "சந்திரமுகி" நடித்து கொடுத்தார்.மலையாளத்தில் "மணி சித்ரா தாழ் ". அதில் மோகன்லால் .நம்ம சந்திரமுகியில் ரஜினி காவி உடையில் வடிவேலு தலையை பிடித்து கொண்டு அப்போது தான் சபரி மலையில் இருந்து வந்ததாக சொல்வாரே,அப்போது தான் மலையாளத்தில் ஹீரோவே வருவார்.இப்படி பல மாறுதல்கள்.நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் உடன் மோதல்.ஷங்கருடன் இந்தியன் பட காலத்திலேயே பழக்கம் என்றாலும்,முதல்வனில் நடிக்க வேண்டி வந்து ,அப்போதைய ஆட்சியர்களை பகைத்துகொள்ள தயங்கி  மறுத்துவிட்டார்.ஒரு வழியாக "சிவாஜி"யில் இணைந்தனர்.அதுவரை ரஜினிகேன்று இருந்த சில தயக்கங்களை அந்த படத்தில் உடைத்தார் ஷங்கர்.படம் உலக ஹிட்.பத்து வருடங்களுக்கு மேலாக ஷங்கர் உருவாக்கி வைத்திருந்து ,கமல் ,ப்ரீத்தி ஜிந்தா நடிக்க தொடங்கி இருந்த படம் "ரோபோ ".அதை ரஜினிக்காக உயிர்பித்தார் ஷங்கர்.சிவாஜி என்ற ரஜினியின் படத்தை எடுத்தார்  ஷங்கர்.எந்திரன் என்ற ஷங்கர் படத்தில் ரஜினி நடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி ரசிகர்கள் இரண்டு வகை .ஒன்று அந்த காலம் முதல் உள்ளவர்கள்.அடுத்தது சிறுசுகள்.அவர்கள் பாட்ஷா பார்த்துவிட்டு தலைவர் என்று சொல்லுகிறவர்கள்.மொத்தமாக ஒரு இருபது ,முப்பது ரஜினி படம் பார்த்திருப்பார்கள் அவ்வளவுதான்.காரணம் அவர்கள் வளரும்போதே ரஜினி உயர்ந்த நட்சத்திரம்.எனவே மனத்தில் ஒரு பிம்பம்.ரஜினிக்கு இனி தன்னை நிரூபிக்க ஒன்றும் இல்லை.இனி நாலு அல்லது ஐந்து படத்தில் நடித்தால் அதுவே அதிகம்.அவற்றை அவர் சரியாக தேர்ந்தெடுக்கலாம்.அவர் சொன்னது போல் ,அவருக்கு வேகம் தான் பலம்.உடலில் வேகம் உள்ளவரை நடிக்க போவதாகவும்,அது குறைந்தால் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று சென்ற வருடம் ஒரு விழாவில் சொன்னார்.அந்த வேகம் குறைய கூடாது என்பதே ரசிகர்கள் ஆசை.

நான் சொல்ல வந்ததை ஓரளவு சொல்லி விட்டதாகவே நினைக்கிறன்.நினைவு தெரிந்தது முதல் நானும் ரஜினி ரசிகனாகவே இருந்தேன்.அவர் நூறு தமிழ் படம் நடித்திருந்தால் அதில் எப்படியும் தொண்ணூறு படம் பார்த்து இருப்பேன்.நிச்சயம் உங்களுக்கு சில புதிய ,தெரிந்திராத விஷயங்கள் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறன். 

இதன் முதல் பகுதி :http://scenecreator.blogspot.in/2012/05/blog-post_22.html

படித்தவர்கள் கமெண்ட் போடலாமே.13 comments:

 1. //படித்தவர்கள் கமெண்ட் போடலாமே.//
  போடாமல் போவேனா..
  அருமையா எழுதி இருக்கீங்க.ரெண்டு பதிவிலும் சொல்ல வந்ததை அழகாக எளிமையாக சொல்லிருக்கீங்க.இப்படியே தொடருங்கள்.வருகிறேன்.ரொம்ப நன்றி.

  Carnage (2011)- திரைப்பார்வை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமரன்.

   Delete
  2. mental rajiniyin mugathiraiyai kizhithadarku nanri!

   Delete
 2. //அவர்கள் பாட்ஷா பார்த்துவிட்டு தலைவர் என்று சொல்லுகிறவர்கள்.மொத்தமாக ஒரு இருபது ,முப்பது ரஜினி படம் பார்த்திருப்பார்கள் அவ்வளவுதான்//
  உண்மை தான்..நான் கூட அப்படி தான்...
  அருமையான பதிவு..நன்றி

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து பதிவை படிப்தற்கு நன்றி ராஜ்.

   Delete
 3. அப்போ நானும் சின்னஞ் சிறுசு கூட்டம் தான். ரஜினியை அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு காலத்திலிருந்து எந்திரன் பார்த்திருக்கிறேன். நிறையப் படங்கள் பார்த்ததில்லை. பார்த்தவற்றில் அனேகமானவை ஹிட்டானவையே.

  //எந்திரன் என்ற ஷங்கர் படத்தில் ரஜினி நடித்தார் என்றே சொல்ல வேண்டும்.//
  முற்றிலும் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ரஜினி அளவுக்கு ஹிட் கொடுத்தவர்கள் யாருமில்லை.

   Delete
 4. //பாலச்சந்தர் உடன் அப்போது இளையராஜாவுக்கு முட்டல்.அதனால் தேவா வந்து சேர்ந்தார்.//

  இது எனக்கு புதிய விசியம் நண்பா, தேவா முளைத்தது, கொடி கட்டி பறந்தது (பாஷா முதல் குஷி, முகவரி வரை) இளையராஜா விட்டு கொடுத்தால் தானோ?

  ReplyDelete
 5. எதையும் ரசிகனுக்காக நடித்துவிட்டு தமிழ் மொழிக்காக ஒன்று கூட இல்லையே

  ReplyDelete
 6. mental rajiniyin mugathiraiyai kizhithadarku nanri.

  ReplyDelete
 7. அருமையா எழுதி இருக்கீங்க.ரெண்டு பதிவிலும் சொல்ல வந்ததை அழகாக எளிமையாக சொல்லிருக்கீங்க.இப்படியே தொடருங்கள்.வருகிறேன்.ரொம்ப நன்றி.

  ReplyDelete