Pages

Wednesday 30 May 2012

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2


தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 


90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரஜினி படங்களுக்கு வர தொடங்கியிருந்தனர்.அதற்கேற்றாற்போல் படங்களை தேர்வு செய்தார்.அதிக வன்முறையோ,ஆபாசமோ ,முத்த காட்சிகளோ இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படங்கள் இருந்தது.

90 இன் தொடக்கம் அவருக்கு சரியில்லை என்றே சொல்ல வேண்டும்.பணக்காரன் சுமார்.தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த படத்தை அதிசியபிறவி என்று எடுத்தார்கள்.எம லோகம் ,மறு பிறப்பு என்பதை எல்லாம் நம் மக்கள் ஏற்கவில்லை.அதனால் படு தோல்வி.ஆனால் டி.வியில் இன்று பார்க்கும் போது அத்தனை மோசமில்லை படம்.படு சோகமாக ரஜினியை காட்டிய தர்மதுரை ஓடவில்லை.மிகுந்த பொருள் செலவில் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்த நாட்டுக்கு ஒரு நல்லவன் மண்ணை கவ்வியது.



அப்போது தான் தளபதி ஆரம்பம்.ஏற்கனவே தனது ஹிட் படங்கள் மூலம் முக்கிய இயக்குனர் ஆகி  இருந்த மணிரத்னம், இளையராஜா,மம்மூட்டி என படையோடு வந்தது.கதை என்னவோ மகாபாரத கர்ணன்  கதைதான்.91 தீபாவளிக்கு வந்த இந்த படம் உடன் வந்த கமலின் குணாவை முந்தியது.அடுத்து மன்னன் படத்திற்கு முதல் முறையாக ரஜினி ஒரு கோடி சம்பளம் பெற்றார்.அப்போது சிரஞ்சீவி ஒருவர் தான் இந்தியாவிலேயே அந்த அளவு சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்.கவிதலயாவோடு மீண்டும் அண்ணாமலையில் இணைந்தார்.முற்றிலும் புதிய கூட்டணி.பாலச்சந்தர் உடன் அப்போது இளையராஜாவுக்கு முட்டல்.அதனால் தேவா வந்து சேர்ந்தார்.ரஜினிக்கான எல்லா விஷயங்களும் இருந்தது.படமும் வெள்ளி விழா கண்டது.இன்றைக்கும் ரஜினி ரசிகர்களின் டாப் லிஸ்டில் இந்த படம் உள்ளது.தனது ஹிட் டைரக்டர் முத்து ராமனுக்காக எடுத்த கன்னட ரீமேக் "பாண்டியன்" வேலைக்கு ஆகவில்லை.உடன் வந்த தேவர் மகன் பட்டையை கிளப்பியது.90 களின் தொடக்கத்தில் ஒரு trend வந்தது.அதாவது எல்லா ஹீரோக்களும் கிராமத்து பெரிய மனிதராக ,ஊரே மதிக்கின்ற நல்லவாராக நடித்தார்கள்.ரஜினியும் எஜமான் ஆனார்.படம் வசூலில் திணறியது.வழக்கம் போல் எ.வி.எம். பல விதமான விளம்பரங்கள் மூலம் படத்தை ஓட்ட முயற்சித்தனர்.ஒன்னும் ஆகவில்லை.ரொம்ப காலம் படன் எடுக்காமல் இருந்த விஜயா வாகினி "உழைப்பாளி" எடுத்தனர்.ஓரளவு ஓடியது.அதிக பஞ்ச் வசனம் கொண்ட படம் இது.சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிடாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.வீராவுக்கு அடுத்து என்ன ? அதேதான். பாட்ஷா. "hum" என்று ஒரு ஹிந்தி படம் அதில் ரஜினியும் நடித்திருப்பார்.எந்த வேடத்தில் பாட்ஷாவில் ரஜினியின் தம்பி நடித்த வேடத்தில்..அந்த படத்தை முழுக்க ரீமேக் என்றில்லாமல் வேறு சில படங்களில் இருந்த காட்சிகள் ,உதாரணமாக ரஜினி தங்கைக்காக காலேஜ் சீட் கேட்க்கும் காட்சி வேறு படத்தில் இருந்து எடுத்தது. ,இப்படி ஒரு கதம்பமாக பாட்ஷா ஆனது.பட ரிசல்ட் உலகம் அறிந்தது.



இனி படத்தில் ரஜினி என்றில்லாமல் ரஜினிக்காக படம் உருவாக்குதல் ஆனது."முத்து " ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசையை பயன்படுதுகொண்டது.முழுக்க "வரேன்" "வருவேன்" இப்படி இருந்தது வசனங்கள்.அருணாசலமும் அப்படியே. படையப்பா கதைக்கு வருவோம்.இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் அவர்கள் அதுவரை வாங்கி வந்த சம்பளைதைவிட அதிகமாக தரப்பட்டது.சும்மா வந்து போகும் மன்சூர் அலி கான் ஒரு லட்சம் பெற்றார்.சிவாஜிக்கு முந்நூறு படங்களில் இல்லாத அளவு 60 லட்சம் தரப்பட்டது.இந்த படம் எடுத்து முடித்த பின் பார்த்தால் கிட்ட தட்ட நாலு மணி நேரம் ஓடியது.என்ன செய்வது என்று கையை பிசைந்த ரவிக்குமார் ரஜினியிடம் சொல்ல ,அவர் கமலை கூப்பிட்டு விஷயத்தை சொல்ல ரஜினியும் ரவிகுமாரும் இரண்டு இடைவேளை விட்டால் என்ன என்று கேட்டனர் . கமல் மறுத்து ரவிகுமாரிடம் எடிட்டிங் பற்றி சில விஷயங்கள் சொல்லி அவரை முடிந்தவரை எடிட் செய்ய சொல்லி இருக்கிறார்.அப்படியும் மூணு மணி நேரத்தை தாண்டியது படம்.சிவாஜி நடித்த பல காட்சிகள் வெட்ட பட்டன.அப்படியும் படம் ஹிட்.

பாபா படம் பற்றி சொல்ல தேவை இல்லை.சிவாஜி போன பிறகு சிரமத்தில் இருந்த சிவாஜி குடும்பத்திற்கு "சந்திரமுகி" நடித்து கொடுத்தார்.மலையாளத்தில் "மணி சித்ரா தாழ் ". அதில் மோகன்லால் .நம்ம சந்திரமுகியில் ரஜினி காவி உடையில் வடிவேலு தலையை பிடித்து கொண்டு அப்போது தான் சபரி மலையில் இருந்து வந்ததாக சொல்வாரே,அப்போது தான் மலையாளத்தில் ஹீரோவே வருவார்.இப்படி பல மாறுதல்கள்.நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் உடன் மோதல்.ஷங்கருடன் இந்தியன் பட காலத்திலேயே பழக்கம் என்றாலும்,முதல்வனில் நடிக்க வேண்டி வந்து ,அப்போதைய ஆட்சியர்களை பகைத்துகொள்ள தயங்கி  மறுத்துவிட்டார்.ஒரு வழியாக "சிவாஜி"யில் இணைந்தனர்.அதுவரை ரஜினிகேன்று இருந்த சில தயக்கங்களை அந்த படத்தில் உடைத்தார் ஷங்கர்.படம் உலக ஹிட்.பத்து வருடங்களுக்கு மேலாக ஷங்கர் உருவாக்கி வைத்திருந்து ,கமல் ,ப்ரீத்தி ஜிந்தா நடிக்க தொடங்கி இருந்த படம் "ரோபோ ".அதை ரஜினிக்காக உயிர்பித்தார் ஷங்கர்.சிவாஜி என்ற ரஜினியின் படத்தை எடுத்தார்  ஷங்கர்.எந்திரன் என்ற ஷங்கர் படத்தில் ரஜினி நடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி ரசிகர்கள் இரண்டு வகை .ஒன்று அந்த காலம் முதல் உள்ளவர்கள்.அடுத்தது சிறுசுகள்.அவர்கள் பாட்ஷா பார்த்துவிட்டு தலைவர் என்று சொல்லுகிறவர்கள்.மொத்தமாக ஒரு இருபது ,முப்பது ரஜினி படம் பார்த்திருப்பார்கள் அவ்வளவுதான்.காரணம் அவர்கள் வளரும்போதே ரஜினி உயர்ந்த நட்சத்திரம்.எனவே மனத்தில் ஒரு பிம்பம்.ரஜினிக்கு இனி தன்னை நிரூபிக்க ஒன்றும் இல்லை.இனி நாலு அல்லது ஐந்து படத்தில் நடித்தால் அதுவே அதிகம்.அவற்றை அவர் சரியாக தேர்ந்தெடுக்கலாம்.அவர் சொன்னது போல் ,அவருக்கு வேகம் தான் பலம்.உடலில் வேகம் உள்ளவரை நடிக்க போவதாகவும்,அது குறைந்தால் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று சென்ற வருடம் ஒரு விழாவில் சொன்னார்.அந்த வேகம் குறைய கூடாது என்பதே ரசிகர்கள் ஆசை.

நான் சொல்ல வந்ததை ஓரளவு சொல்லி விட்டதாகவே நினைக்கிறன்.நினைவு தெரிந்தது முதல் நானும் ரஜினி ரசிகனாகவே இருந்தேன்.அவர் நூறு தமிழ் படம் நடித்திருந்தால் அதில் எப்படியும் தொண்ணூறு படம் பார்த்து இருப்பேன்.நிச்சயம் உங்களுக்கு சில புதிய ,தெரிந்திராத விஷயங்கள் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறன். 

இதன் முதல் பகுதி :http://scenecreator.blogspot.in/2012/05/blog-post_22.html

படித்தவர்கள் கமெண்ட் போடலாமே.



Friday 25 May 2012

ஹரரர் த்ரில்லர் பட ரசிகர்கள் தவற விடகூடாத படங்கள்:

ஹரரர் த்ரில்லர் பட ரசிகர்கள் தவற விடகூடாத படங்கள்:

உலகெங்கிலும் ஹரரர் மற்றும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு.ஹிட்ச்காக்கின் "சைகோ " தொடங்கி ஏராளமான படங்கள் வந்துள்ளன.ஆனால் நான் சொல்ல போவது நவீன இந்த கால பெரும்பாலும் எண்பதுகளுக்கு பிறகு வந்தவை.நான் எழுத காரணம் இந்த வகை பட ரசிகர்கள் நான் பட்டியலிட்டு உள்ளதை பார்க்க தவறி இருந்தால் பார்க்கலாம்.நிச்சயம் இந்த படங்கள் ஆரம்பித்தால் உங்களை அங்கே இங்கே நகர விடாது.நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான படங்கள் இவை.இவைகளில் சில படங்கள் வயது வந்தோருக்கான படங்களாகவும் ,வன்முறை மிக அதிகமாகவும் இருக்கும் .அதனால் கவனம் தேவை.

1.FINAL DESTINATION (2000):
                                         தற்செயலாக ஒரு விபத்திலிருந்து தப்புகிறீகள், ஆனால் மரணம் உங்களை விடாமல் துரத்தினால் ?இதுவரை ஐந்து பாகங்கள் வந்துள்ளன 
                  


2.WRONG TURN (2003): 
                              பயணத்தில் வழி தவறி போய் விடும் ஒரு கும்பல் ,மனிதர்களை வேட்டையாடி உண்ணும் கும்பலிடம் மாட்டுகிறார்கள்.தப்பித்தது யார்.


3.HOSTEL (2005):
                        பெண் சுகம் தேடி தெரியாத நாட்டுக்கு போகும் மூன்று வாலிபர்கள்,அங்கே அவர்களுக்கு காத்திருப்பது என்ன. மிகவும் கோரம் ,ரத்தம் நிறைந்த படம்.


4.THE HILLS HAVE THE EYES (2006):
                               இந்த படம் 70 களின் இறுதில் இதே படத்தின் வந்த படத்தின் ரீமேக் படம்.

5.TEXAS CHAINSAW MASSACRE (2003):
                               இதுவும் சென்ற படம் போல தான்.

6.SCREAM (1996):
                          இது slasher வகையை சேர்ந்தது.நான்கு பாகங்கள் வந்தள்ளது.

7.SAW (2004):
                        கிட்ட தட்ட நம்ம அந்நியன் படம் போல தான்.முதல் பாகத்திலிருந்து பார்த்தால் தான் புரியும்.

8.I KNOW WHAT YOU DID LAST SUMMER (1997):
                         ஒரு விபத்தில் இருந்துவிட்ட தாக   நினைத்து ஒருவனை உடலை கடலில் போடுகிறார்கள் நாலு நண்பர்கள்.ஆனால் அவன் இறக்காமல் வந்து பழி வாங்குகிறான். படு பரபரப்பான படம்.

9.FRIDAY THE 13TH (1980):
                         இந்த படத்திற்கு முடிவே கிடையாதா? படத்தை விட இசை சூப்பர்.

10.CHILD'S PLAY (1988):
                        போலீஸ் துரத்தலில் மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் ஒரு பொம்மைக்குள் தனது உயிரை செலுத்திகொல்கிறான்.உங்கள் வீட்டில் உள்ள எதோ ஒரு பொம்மை நீங்கள் இல்லாத போது மட்டும் உயிரோடு இருந்தால்?



11.HIGH TENSION (2003):
                      கொடூரமான காட்சிகள் உண்டு ஜாக்கிரதை.

12.INSIDE (2007):
                      எதிர் எதிரில் வரும் இரு கர்பிணி பெண்களின் கார் விபத்து குள்ளாகிறது.ஒருவள் கணவனையும் வயிற்றில் உள்ள குழந்தையும் இழக்கிறாள்.எதிரில் வந்த பெண் கணவனை மட்டும் இழக்கிறாள்.முதல் பெண் இரண்டாம் பெண்ணை பழி வாங்க கிளம்புகிறாள்.எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற சூழ் நிலையில் உள்ளவளின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க முயற்சிக்கிறாள்.உச்ச பட்ச வன்முறையும் கொடூரங்களும் நிறைந்த படம் பெண்கள் பார்க்க வேண்டாம்.

13.VACANCY (2007):
                             ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு தங்கும் விடுதி.மனைவியோடு செல்லும் நாயகன் இரவில் ரூம் எடுத்து அங்கே தங்குகிறான் .ரூமை சுற்றி பார்த்துவிட்டு டி,வி போட்டால் அதில் எதோ ஒரு கொலை காட்சி ஓடுகிறது.காட்சி ஓடும் இடம் அந்த ரூமை போலவே உள்ளதாக அவனுக்கு தெரிகிறது.ரூமை ஆராய்ந்ததில் ரூமில் கேமரா இருப்பதும் அங்கே நடப்பதை பதிவு செய்ய படுவதையும் தெரிந்து கொள்கிறான்.இனி என்ன?


14.THE HUMAN CENTIPEDE (2009):
                             மூன்று மனிதர்களை ஒருவரோடு ஒருவர் ,அதாவது ஒருவனின் ஆசனவாயில் மற்றவனின் வாயை தைத்து , ஆராய்ச்சி செய்ய ஒரு சைகோ டாக்டர் முயற்சிக்கிறார்.


15.1408 (2007):
                      ஒரு கதாசிரியர் ஆவிகள் உள்ளதாக கருதப்படும் இடத்தில தங்குகிறார்.நடப்பது என்ன. மெதுவாக உங்களை உள்ளே இழுக்கும் படம்.

இதில் சிலர் சில படங்களை பார்த்து இருப்பீர்கள்.சிலருக்கு அவை பிடிக்கலாம்.பிடிக்காமல் போகலாம்.

நீங்களும் இது போல் நீங்கள் பார்த்த வற்றில் சிறந்த ஹரரர் த்ரில்லர் படங்களை எனக்கு சொல்லுங்கள்.




Tuesday 22 May 2012

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்




அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என்று படங்கள் வர துவங்கிய காலம்.நடிகர்களை சாராமல் படங்கள் இயக்கி வந்த பாலச்சந்தர் தனது அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறு வேடத்தில் ரஜினியை அறிமுகம் செய்துவைத்தார்.ஆனால் அந்த படத்தில் அவர் தனது தனித்தன்மையான ஸ்டைல் எதையும் செய்திருக்க மாட்டார்.பின் தொடந்து பாலச்சந்தர் படங்களில் (அவர்கள்,மூன்று முடிச்சு) வந்தார்.மெதுவாக தன் சிகரெட்டை தூக்கிபோட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை காட்டினார்.16 வயதினிலே.ஒரு பக்கம் கமலும்,ஸ்ரீதேவியும் வெளுத்து வாங்கி இருந்தாலும் ரஜினியும் "இது எப்படி இருக்கு " என்று கலக்கினார்.அடக்கமான நடிப்பில் முள்ளும் மலரும் வந்தது.பில்லா வந்து ஒரு தூக்கு தூக்கியது.இந்த நேரத்தில் நடிகை லதா (எம்ஜிஆரோடு பல படங்களில்  நடித்தவர்) மீது ரஜினிக்கு ஒரு ஈர்ப்பு .இது எம்ஜியார் காதுகளுக்கு சென்று அவர் தனது ஆட்களை வெய்து  ரஜினியை நன்றாக கவனித்ததாகவும் ,அதனாலேயே அவர் மனநலம் பாதிக்க பட்டு கொஞ்ச நாள் இருந்ததாகவும் ,பின் லதா என்ற பேர் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று தேடியதும் அந்த கால அரசால் புரசல்கள்.இனி ரஜினின் சினிமா வரலாற்றை (1980-1990),(1990-2000),(2000-?) என்று பிரித்து அலசலாம்.


 (1980-1990) :
   இந்த கால கட்டத்திற்கு முன் ரஜினி அதிகமாக பாலச்சந்தர் படங்களிலும்,கமலுடனும் அதிகமாக நடித்தார்.பின் இருவரும் சேர்ந்து இனி நடிபதில்லை என்று முடிவெடுத்து தனி தனியாக சென்றனர்.ரஜினி தனது பயணத்தை முரட்டு காளை என்ற மசாலா படத்தில் துவங்கினார்.படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.இதில் ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் ரஜினி ,தனக்கு படத்திலும், பட விளம்பரங்களிலும் எப்படி முக்கியத்துவம் தரபடுகிறதோ அதே போல் ஜெய்சங்கருக்கும் தரவேண்டும் என்று சொல்லிவிட்டார்.இதில் ரஜினின் பெருந்தன்மையை காணலாம்.அடுத்த ஆண்டு அதாவது 1981 ரஜினி திருமணம் நடந்தது.இப்போது தன திருமணதிற்கு பத்திரிக்கை காரர்கள் அனுமதி இல்லை என்று சொன்னார்.மீறி வந்தால்  என்ன என்று ஒருவர் கேட்க வந்தால் உதைப்பேன் என்று இவரு சொல்ல ,பத்திரக்கை காரர்கள் கண்டனத்துக்கு ஆளானார்.இநத கால கட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்தார்.பெரும்பாலும் ஹிந்தி ரீமேக் படங்கள்.அங்கே அமிதாப் நடிப்பார்.அடுத்த வருடம் இவர் இங்கே.அப்போதெல்லாம்  இதுபோல் டிவி ,இன்டர்நெட் , கிடையாது. அதனால்,அவை ஜனங்களுக்கு ரீமேக் என்று தெரியாது.வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு படங்களில் நடித்தார். நிச்சயம் 2 ,3 .ஹிட்.இப்படி போனது.நடுவில் நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரர் வந்தது.தோல்வி அடைந்தது.உடனே அதே கம்பெனிக்கு (கவிதாலய) வேலைக்காரன் நடித்து ஹிட்டாகினார் .திரிசூல் என்று 3 ஹீரோக்கள் நடித்து ஹிந்தியில் வந்த படத்தை ரஜினிக்காக மிஸ்டர் பாரத் ஆக்கினார்கள்.மற்ற இருவர் சத்யராஜ்,எஸ்.வீ.சேகர்.மிகுந்த பொருட்செலவில் (அப்பவே ஒரு கோடி) தயாரான விடுதலை தோல்வியானது.இத்தனைக்கும் ஹிந்தி "குர்பானி" யின் ரீமேக்.அடுத்து ஹிந்தியில் வந்த "மரத்" படத்தை சொந்தமாக தயாரித்து கையை சுட்டுகொண்டார்.அடுத்து ஏவிஎமின் "மனிதன்" ஓட்டமாய் ஓடியது.கிளைமாக்ஸ் சட்டையில் குண்டுகளை மாட்டிகொண்டு துப்பாக்யோடு ரஜினி இருக்கும் ஸ்டில் பிரசித்தம்.பின் ஓய்வாக 18 நாளில் நடித்த குரு சிஷ்யன் ஹிட்.அடுத்து சில பிளாப்கள்(தர்மத்தின் தலைவன்,கொடி பறக்குது).இளையராஜா தயாரித்த "ராஜாதி ராஜா" காப்பற்றியது.சிவா மீண்டும்  சறுக்கியது. ராஜா சின்ன ரோஜா என்ற குழந்தைகள் படம் அரங்குகள் நிறைய வைத்தது.நடிகர் சிரஞ்சீவி தயாரித்த "மாப்பிள்ளை" ஹிட்டோ ஹிட்.



இப்படி பெரும்பாலும் தனக்கென செட்டகும் ஹிந்தி,தெலுங்குரீமேக்  படங்களில் நடித்தே ரஜினி  1980-1990 வருடங்களை கடந்தார்.அறிமுகம் செய்தது என்னவோ பாலச்சந்தர் தான்.ஆனால் ஸ்டார் ஆனதற்கு மூல காரணம் மூவர்.அவர்கள் இளையராஜா,எஸ்.பீ.முத்துராமன்,பஞ்சு அருணாசலம்.சந்தேகம் இல்லாமல் உச்ச நட்சத்திரம் அவர்தான்.இது ரஜினி பற்றிய ஒரு அலசல் தான்.எனக்கு தெரிந்ததை ,நேர்மையோடும் சார்பற்றும் எழுதியுள்ளேன்.ரஜினி ரசிகர்கள் தவறாக கருதக்கூடாது.




அடுத்த பதிவில் ரஜினி சினிமா வரலாறு 1990-2000

படித்தவர்கள் கமெண்ட் போடலாமே.
-

Thursday 17 May 2012

ஆனந்த விகடன் -- ஹாய் மதன் மோதல் .

ஆனந்த விகடன் -- ஹாய் மதன் மோதல் .





தமிழ் வார பத்திரிகைகளில் ஆனந்த விகடனுக்கு முக்கிய இடம் உண்டு.அதில் ஹாய் மதன் கேள்வி பதில்கள் ஒரு பகுதி.நிறைய பேர் தொடந்து படித்து வரும் ஒரு சிறந்த பகுதி. மதன் ஒரு சிறந்த DICTONARY எனலாம். எழுத்தாளர் சுஜாதாவிற்கு பிறகு எந்த துறை பற்றி வேணும் என்றாலும் எழதும் ,பேசும் திறைமை படைத்தவர். வாரா வாரம் வாசகர்களின் பல துறை  கேள்விகளுக்கு ஸ்வரசயமாகவும் ,நகைச்சுவையோடும் பதில்கள் வழங்கி வந்தார். அவை விகடன் பதிப்பகம் தனி புத்தகமாகவும் வெளிவந்துள்ளன.



சரி விஷயத்துக்கு வருவோம்.அந்த பகுதி இப்போது நிறுத்த பட்டுள்ளது.மேலும் மதன் வரையும் அரசியல் கார்டூனும் இனி வரதாம்.என்ன காரணம்.அவர்களே கூறியுள்ளார்கள்.சென்ற வாரம் ஒரு கேள்வியில் ஒருவர் மற்ற  உயிர் இனங்கள் காலில் விழும் பழக்கம் இல்லாத போது,மனிதர்கள்  மட்டும் ஏன் காலில் விழுகிறார்கள் என்று கேட்டுள்ளார்.அதற்க்கு  மதன் ஒரு பாதுகாப்புக்காக தான் ஒருவர் மற்றவர் காலில் விழ்கிறார் என்று பதில் அளித்து உள்ளார்.அதற்க்கு பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற படம் வெளியாகி உள்ளது. இது மதனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.காரணம் மதன் ஜெயா டி.வியில் மதன் திரை பார்வை என்ற நிகழ்ச்சியை வழங்குகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் அவரது பகுதில் வந்ததை அவர் விரும்ப வில்லை.அதற்காக அவர் வார வாரம் பதில் சொல்வது மட்டுமே தன் வேலை என்றும் அது சம்மந்தமான படங்கள் போடுவது விகடன் தான் என்று    சொல்லி அந்த விளக்கத்தை விகடன் வெளியிட வேண்டும் என்று சொல்லி உள்ளார்.இது விகடன் நிறுவனத்துக்கு கோபத்தை கிளப்பி மதன் சம்பத்தப்பட்ட பகுதிகளை இனி தொடரபோவதில்லை என்று அறிவித்துவிட்டனர்.

நம் விருப்பம் எல்லாம் இந்த சிறிய பிரச்சனை ஒரு நல்ல பகுதி வராமல் தடுக்க கூடாது என்பதே.இது நேரடியாக பேசி தீர்க்க கூடியது தான்.விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்போம்.இல்லா விட்டால் அநேகமாக மதனை குமுதம் அழைத்துகொள்ளும் என்பதே என் யூகம்.

படித்தவர்கள் கமெண்ட் போடவும்.


Wednesday 16 May 2012

ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

சமீபத்தில்  நான் பார்த்த ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

ரொம்ப நாட்களாக என்னிடம் இருந்த 2 ஆங்கில படங்களை பார்க்க நேரமில்லையோ ,பார்க்க ஆர்வமில்லையோ தெரியவில்லை.இத்தனய்க்கும்  அவை நான் ரசிக்கும் thriller படங்கள் தான்.ஒரு வழியாக இரண்டையும் பார்த்தாகி விட்டது.சரி அதற்க்கு என்ன.அவை இரண்டும் மக்களாலும்,விமர்சகர்களாலும் பெரிதும் ரசிக்கபட்டவை.சிலருக்கு இந்த படங்கள் ரொம்ப பிடித்திருக்கலாம்.ஏனோ எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை.

1 . THE SILENCE OF THE LAMBS (1991):




நகரில் நடக்கும் தொடர் கடத்தல்களும் ,கடத்தப்பட்ட பெண்கள் பிணங்களாக கிடைப்பதும் தொடர்ந்து,விசாரிக்கும் அதிகாரி,கேசை நாயகியிடம் கொடுக்கிறார்.ஏற்கனவே சிறையில் உள்ள HANNIBAL எனப்படும் மனித மாமிசம் சாப்பிடும் நாயகனை சந்தித்து உதவி கேட்கிறார் நாயகி.அவரும் சில குறிப்புகளை கொடுத்து உதவுகிறார்.தொடந்து நடக்கும் சம்பவங்களும் கொலைகாரன் யார்,ஏன் கொலை செய்கிறான்,அவனை பிடித்தார்களா?சிறையில் உள்ள நாயகனின் கதி என்ன ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார்கள்.இந்த படம் சிறந்த நடிகர்,நடிகை,இயக்கம் ,உட்பட ஐந்து ஆஸ்கார் விருது பெற்றதாம்.அப்படி ஒன்றும் பெரிதாக நடிக்க வில்லை. மொத்தத்தில் நான் ரொம்பவும் அதிகமாக கேள்விப்பட்டு ரொம்ப சுமார் படம்.மேலும் ஆச்சர்யம் ஊட்டும் படி imdb யில் 8.7 பெற்றுள்ளது.


2 .THE GAME (1997):




இதுவும் நான் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டு ஏமாந்த படம். நாயகன் ஒரு வங்கி முதலீட்டாளர்,பணக்காரர். .ரொம்பவும் திமிர்,ஈகோ, கொண்டவர்.அதனால் தன் மனைவியை பிரிந்து வாழ்பவர். தன் பிறந்த நாளில் தன் தம்பி பரிசளித்த வவுச்சர் எடுத்து கொண்டு அதன் முகவரிக்கு செல்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது.தொடர்ந்து ஓட்டம்,துறத்தல் ,கொலை முயற்சி என்று தொடர்கிறது.இறுதியில் என்ன நடக்கிறது யார் காரணம் என்று பார்த்தால்,பெரிய ஏமாற்றம்,அல்லது இன்ப அதிர்ச்சி.ஆனால் திருப்தியில்லை.ஆனால் முந்திய படத்துக்கு இது பரவாயில்லை.

தமிழ் நடிகர்களை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதி வருகிறேன்,விரைவில் உங்கள் பார்வைக்கு.


Tuesday 8 May 2012

பார்த்தே தீர வேண்டிய கொரியன் படங்கள் -OLD BOY

பார்த்தே தீர வேண்டிய கொரியன்  படங்கள் :





old boy (2003):  

         கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  இளகிய மனம் கொண்டவர்கள் , இந்த படத்தை தவிர்ப்பது நலம்.இந்த படம் பார்த்து மனம் நிச்சயம் ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று மனம் வருந்தினாலும், நீங்கள் எப்பேர்பட்ட மன திடம் உள்ளவராக இருந்தாலும் நிச்சயம் ஒரு ஐந்து நிமிடமாவது உங்களை இந்த படம் பாதிக்க செய்யும்.என்ன ரொம்ப ஓவராக சொல்றேன் என்று நினைக்க வேண்டாம்.படம் பார்த்த பின் எனக்கு சொல்லவும்.

அப்படி என்ன படத்தில்?  நம் நாயகன் ஒடேசு பட தொடக்கத்தில் குடித்துவிட்டு அலும்பல் செய்து காவல் நிலையத்தில் இருக்கிறார்.அன்று  அவரது மகள் பிறந்த தினம் அவர் சென்றே தீர வேண்டும்.ஒரு வழியாக தன் நண்பன் தனக்காக முறையிட்டதால் விடுவிக்கப்பட்டு வெளியே வந்து,நண்பருக்கு நன்றி சொல்கிறார்.நண்பர் சென்ற உடன் வீடு திரும்ப முயலும் போது போதையில் தள்ளாடி ரோட்டில் மயங்கி விழுகிறார்.



இனி போதை தெளிந்து ,பார்த்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டு  இருக்கிறார்.எவ்வளோ முயற்சித்தும் திறக்க முடியவில்லை.யாரும் வரவும் இல்லை.எங்கே இருக்கிறோம் என்பதும் தெரிய வில்லை. அந்த அறையில் இருப்பது ஒரு டி.வீ. மட்டுமே. அதில் செய்தியில் தன் மனைவி கொல்லப்பட்டதாகவும் ,கொலை செய்தது தான்தான் எனவும் தன்னை போலீஸ் தேடுவதாகவும் சொல்கிறார்கள்.அதிர்ச்சி அடைந்து மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயலும் போது எதோ ஒரு மயக்க மருந்து ரூம்  முழுவதும் செலுத்த பட்டு மயங்குகிறார்.இப்படியே தப்பிக்க முயற்சி செய்து 15 ஆண்டுகள் ஆகிவிடுகிறது .ஒரு வழியாக தப்பித்து வெளியே வந்து தன்னை யார் கடத்தினார்கள்,எதற்காக கடத்தினார்கள்,எதற்காக 15 ஆண்டுகள் எதுவுமே தெரியாமல் வைத்திருந்தார்கள் என்று விடை தேடி புறப்படுகிறான்.



இதுவரை சொன்னவை படத்தின்  தொடக்கமே. இனி தான் இருக்கிறது. ஆனால் இதற்க்கு மேல் படத்தை பற்றி சொன்னால் ஆர்வம் போய் விடும்.அடுத்தடுத்த காட்சிகள் படத்தை நகர்த்தி இறுதில் நம்மை உறைய வைக்கும் முடிவு.நிச்சயம் நம் மனதை வருந்த வைக்கும்.

இனி படத்தை பற்றி சில விஷயங்கள்:

இந்த படத்தின் இயக்குனர்   Park Chan-wook .இவர் இது போன்ற vengence (பழிவாங்குதல்) படங்கள் எடுப்பதில் தேர்ந்தவர்.இவரது பிற பிரபல படங்கள் 
 sympathy for mr.vengence, sympathy for lady vengence,joint security area  போன்றவை . இந்த படம் உங்களுக்கு பிடித்தால் sympathy for mr.vengence, sympathy for lady vengence இரண்டையும்  பாருங்கள்.

இந்த படத்தில் வரும் ஒரு பெரிய  சண்டை காட்சி  ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது.அது போல் நாயகன் ஒரு காட்சியில்  உயிருடன் உண்ணும் அக்டோபுஸ் டூப் அல்ல நிஜமே.



இந்த படம் 2004 ஆம் ஆண்டு நம்ம இயக்குனர்  Quentin Tarantino நடுவராக இருந்த cannes பட விழாவில் சிறந்த படமாக  தேர்ந்தேடுக்க பட்டது.

இந்த படம் இதுவரை IMBD யில் -8.4 rating பெற்றுள்ளது.மேலும் imdb top 250 யில் 91 இடம் பெற்றுள்ளது.

Rotten tomattoes 80% fresh என பெற்றுள்ளது.

இந்த  படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய ,WILL SMITH ஆர்வமாக இருந்து STEVEN SPIELBERG இயக்க முடிவு செய்யப்பட்டு பின் பல காரணங்களால் கை விடப்பட்டது.இப்போது வேறு ஒருவர் அதை இயக்குகிறார்.

மேலும் இந்த படம் 'ZINDA' என்ற பெயரில் ஹிந்தியில் உரிமை பெறாமல் ,சஞ்சய் தத்,ஜான் அப்ரகம் நடித்து வெளிவந்தது.


டிஸ்கி:  கொரியா படம் பார்த்து பழக்கம் இல்லாதவர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்கவும்.ஏனென்றால் நானும் கொரியா படங்கள் பார்த்தது இல்லை.இதுவரை மிக சில சிறந்த படங்களே பார்த்துள்ளேன்.

             OLD BOY ----நல்ல பட ரசிகர்கள் தவற விடகூடாத  படம்.


Monday 7 May 2012

90களில் தமிழ் சினிமா :2

 சென்ற பதிவில் 90 களின் முதல் ஐந்து வருடங்களில் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்று பார்த்தோம்.இனி 1996 - 2000 வரை தமிழ் சினிமா பற்றி பார்க்கலாம்.



96 இல் ரஜினி படம் எதுவும் இல்லை.இந்த ஆண்டு கமலுக்கு செம வேட்டை.இந்தியன் ,அவ்வை ஷண்முகி என்ற இரு மெகா ஹிட்களோடு சென்ற ஆண்டு கண்ட தோல்விகளுக்கு  விடை கிடைத்தது.அதிலும் இந்தியன் தமிழகம் தாண்டி ஆந்திராவிலும்,கேரளாவிலும் ,ஏன் இந்தியில் டப் செய்யப்பட்டு பேய் ஓட்டம் ஓடியது.அப்பவே தமிழில் மட்டும் 28 கோடி வரை வசூல் செய்தது.இப்போதும் அந்த படங்களை கண்டால் அந்த கமல் இப்போ எங்கே என்று நினைக்க தோன்றும்.இந்த ஆண்டு தமிழ் சினிமா நல்ல ஆண்டு என்று சொல்லலாம்.ஹிட் வரிசை பெரியது.மேற்சொன்ன படங்கள் தவிர காதல் கோட்டை,காதல் தேசம்,கோகுலத்தில் சீதை,கோபால கோபால,பூவே உனக்காக,உள்ளதை அள்ளித்தா போன்ற மெகா ஹிட் படங்களும் மேட்டுக்குடி,வான்மதி போன்ற சுமார் ஹிட் படங்களும் வந்தது.அதுவரை தன் தந்தையின் இயக்கத்தில் மட்டுமே பாட்டு,சண்டை ,டான்ஸ் என முன்வரிசை ரசிகர்களை மட்டுமே குறிவைத்து வந்த விஜய் இந்த ஆண்டு பூவே உனக்காக மூலம் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆனார்.அஜித் ஆசை வெற்றியை இந்த ஆண்டும் காதல் கோட்டை மூலம் தொடர்ந்தார்.வெற்றி என்பதே மறந்து இருந்த கார்த்திக் உள்ளதை அள்ளித்தாவிற்கு பிறகு பிஸி ஆகிவிட்டார்.ரகுமான் கிடைக்காதவர்களின் ஒரே தேர்வாக இருந்தவர் தேவா.பிரபு தேவாவின் மிகவும் எதிர்பார்க்க பட்ட mr .romeo ,லவ் பேர்ட்ஸ் இரண்டும் மரண அடி வாங்கியது.96 முக்கியமான ஆண்டாக இருந்ததால் ரொம்ப பெரிதாக போய் விட்டது.






அடுத்த ஆண்டு 97 இல், ரஜினி வழக்கம் போல் சென்ற ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா  ஹிட் கொடுத்த சுந்தர்.சி ஐயும் தேவாவையும் வைத்துக்கொண்டு ,அப்போது மக்கள் மத்தியில் தனக்கிருந்த அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பதை படத்தில் புத்திசாலிதனமாக புகுத்தி " அருணாசலம்" என்ற படத்தை ஹிட்டகினார்.இந்த ஆண்டு கமல் படமெதுவும் இல்லை.பூவே உனக்காகவில் நல்ல பேர் எடுத்த விஜய்,இந்த ஆண்டும் அதை காதலுக்கு மரியாதையை,லவ் டுடே,நேருக்கு நேர்,போன்ற படங்களில் தொடர்ந்தார்.மாறாக அஜித் இந்த ஆண்டு தொடர்ந்து 5 தோல்வி படங்களில் (நேசம்,பகைவன்,ராசி,ரெட்டை ஜடை வயசு,உல்லாசம் ) நடித்தார்.பெரிதும் எதிர்பார்க்க பட்ட மணிரத்னத்தின் 'இருவர்' படுதோல்வி அடைந்தது.எதிர் பாராமல் ஹிட்டடித்த படங்கள் என்றால் ஆஹா,பாரதி கண்ணம்மா,பொற் காலம்,சூர்யா வம்சம்.இந்த ஆண்டு தான் நடிகர் சூர்யா மற்றும் யுவன் சங்கர் ராஜ இருவரும் அறிமுகம்.




1998க்கு வருவோம்.சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் நிறைய காமெடி படங்கள் வந்தன.காரணம் 96இல் ஹிட்டடித்த உள்ளதை அள்ளித்தா.இந்த வருடம் ரஜினி படம் இல்லை.கமல் காதலா காதலா மூலம் கிச்சு கிச்சு மூட்டினார்.என்ன சிரிப்பு தான் வரவில்லை.மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த ஜீன்ஸ் படம் வந்தது.பிரசாந்துக்கு மறுபிறவிதான்.விஜய் நினைத்தேன் வந்தாயில் பெண்களை கவர்ந்தார்.ப்ரியமுடனில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்தார்.அஜித் அடுத்த வருட ஹிட்டுக்கு காதல் மன்னன்,அவள் வருவாளா ,போன்ற சுமார் படங்களில் வந்தார்.சூப்பர் ஹிட்டேன்றால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தான்.விக்ரமனின் எளிமையான படம் .பெரிய ஹிட்.


99-படையப்பா வருடம்.அதுவரை இருந்த அத்தனை ரெகார்ட் களையும் உடைத்து ஓடியது.கமல் ஹே ராமில் பிஸி என்பதால் படம் எதுவும் வரவில்லை.விஜய்க்கு இந்த ஆண்டு சரியில்லை .தொடக்கத்தில் வந்த 'துள்ளாத மனமும் துள்ளம்' தவிர எதுவும் எடுபடவில்லை.அஜித்துக்கு முக்கியமான வருடம் .வாலி ,அமர்க்களம்,என ஹிட்டுகள் தான்.இன்று அவருக்கு வந்த மாஸ் அப்போது தொடங்கியதுதான்.சேது படம் எல்லோரையும் கலங்க வைத்து ,ஏற்கனவே ஹீரோவாகவும் ,சிறு வேடங்களிலும் நடித்து வந்த விக்ரமை உலகிற்கு தெரிய படுத்தியது.வழக்கத்திற்கு   மாறாக எ,ஆர்,ரகுமான் 7 தமிழ் படங்களுக்கு இந்த ஆண்டு இசையமைத்தார்.ரஜினிக்காக எழுதி பின் விஜய் நடிக்க மறுத்து பின் அர்ஜுன் நடித்து பெரும் ஹிட்ஆகிய  முதல்வன் இந்த ஆண்டுதான் வந்தது.


2000: முதல் ஹிட் வானத்தை போல.1995க்கு(என் ஆசை மச்சான்) பிறகு எந்த ஹிட்டும் குடுக்காத விஜயகாந்த் மெல்ல எழுந்தார்.அதை வல்லரசு மூலம் தக்கவைதார்.அந்த ஆண்டே சிம்மாசனம் படம் மார்க்கெட் இழந்தார்.மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த கமல் இயக்கிய ஹே ராம் படுதோல்வி அடைந்தது,உடனடியாக தெனாலி நடித்து தப்பித்தார்..தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு குஷி ஆக்சிஜன் கொடுத்தது,பிரியமானவளே என்ற லேடீஸ் படத்தில் நடித்தார்..ஏற்கனவே ஹிட் கொடுத்து கொண்டிருத்த அஜித் முகவரி தப்பினாலும் கண்டுகொண்டேன்,உன்னை கொடு என்னை தருவேன் மூலம் மீண்டும் வீழ்ந்தார்.கதை பெரிதாய் இல்லாவிட்டாலும் எ.ஆர்.ரகுமான் இசை துள்ளலான காட்சிகள் மூலம் அலைபாயுதே வில் மணிரத்னம் தெரிந்தார்.


ஆக,மொத்தமாக பார்க்கும் போது 1996-2000இல் ரஜினி எங்கோ போய் விட்டார்.கமல் பல விஷயங்களில் முயன்று பார்த்தாலும் 96-2000 தோல்வியே .96-2000இல் முதல்  2 வருடங்கள் விஜயும்,அடுத்த 2 வருடங்கள் அஜித்தும் முன்னிலை பெற்றனர்.நாயகிகளில் சிம்ரன்.எ.ஆர்.ரகுமான் கொடி  கட்டி பறந்தார்.சின்ன படங்களுக்கு தேவா. மொத்தத்தில் பல ஏற்ற இறக்கங்கள்  கொண்டது.


இதன் முதல் பகுதி 90களில் தமிழ் சினிமா :  படிக்க  கீழே லிங்க் 


                          http://scenecreator.blogspot.in/2012/04/90.html




Wednesday 2 May 2012

சென்ற மாதம் வெளியான தமிழ் படங்கள் பற்றி சில வார்த்தைகள்

 மார்ச் மாதத்தை ஒப்பிட்டால் ஏப்ரல் மாதத்தில் படங்கள்
 குறைவு தான். வழக்கமாக பெரிய நடிகர்கள் படங்கள 
சென்ற பல கோடை காலங்களில் வந்து பெரிய வெற்றி அடைந்துள்ளது.குறிப்பாக ரஜினி நடித்த வீரா,அருணாசலம்,.
 படையப்பா போன்ற படங்களும் விஜயின் கில்லி ,
விக்ரமின் சாமி போன்ற படங்கள் கோடையில் வந்து 
பெரும் வெற்றி பெற்றுள்ளன.அனால் இந்த வருடம்
 எந்த பெரிய படமும் இல்லை.இதற்க்கு ஐ.பி.எல். 
போன்ற காரணங்கள் இருந்தாலும் கோடை விடுமுறையை
 படங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.





ஒரு கல் ஒரு கண்ணாடி :  
     ஏப்ரலின் ஒரே ஹிட் என்றால் இது மட்டும் தான்.கதை
 பெரிதாக இல்லாவிட்டாலும் காமெடி கிளிக் ஆகி விட்டது .
வேறு படங்கள் இல்லாததாலும்,எல்லா டிவியிலும் ( ஜெயா டிவி தவிர ) 
தொடர்ச்சியான விளம்பரங்களினாலும் படம் ஹிட்.
 நிச்சயம் சந்தானத்தின் பீக் இது என்று சொல்லலாம்.
கேபிள் சங்கர் சொன்னது போல் சந்தானம் இன்று 
ஞாயிற்று கிழமை என்று சொன்னால் கூட சிரிப்பார்கள் 
போலிருகிறது.

அஸ்தமனம்:
         இந்த பட இயக்குனரின் முந்தய படம் போர்க்களம்
 மேகிங்கில் மிரட்டியிருக்கும்.அதனால் இந்த படம் 
பார்க்கலாம் என்று பார்த்தால் எல்லா தியேட்டர் களிலும்
 படம் எடுத்து விட்டனர்.

மேலும் நீண்ட காலம் தயாரிபில் இருந்த ஊஹ்லலா ,
லீலை போன்ற படங்கள் வந்துள்ளன .எதுவும் 
 சொல்லும்படி இல்லை.

இனி இந்த மாதம் காதல் பட இயக்குனரின் வழக்கு என்  18/9 
படமும்  சுந்தர் .சி. இயக்கும் மசாலா கபே படமும் வருகின்றன.பார்ப்போம்.