Pages

Tuesday 22 May 2012

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்

தமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்




அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என்று படங்கள் வர துவங்கிய காலம்.நடிகர்களை சாராமல் படங்கள் இயக்கி வந்த பாலச்சந்தர் தனது அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறு வேடத்தில் ரஜினியை அறிமுகம் செய்துவைத்தார்.ஆனால் அந்த படத்தில் அவர் தனது தனித்தன்மையான ஸ்டைல் எதையும் செய்திருக்க மாட்டார்.பின் தொடந்து பாலச்சந்தர் படங்களில் (அவர்கள்,மூன்று முடிச்சு) வந்தார்.மெதுவாக தன் சிகரெட்டை தூக்கிபோட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை காட்டினார்.16 வயதினிலே.ஒரு பக்கம் கமலும்,ஸ்ரீதேவியும் வெளுத்து வாங்கி இருந்தாலும் ரஜினியும் "இது எப்படி இருக்கு " என்று கலக்கினார்.அடக்கமான நடிப்பில் முள்ளும் மலரும் வந்தது.பில்லா வந்து ஒரு தூக்கு தூக்கியது.இந்த நேரத்தில் நடிகை லதா (எம்ஜிஆரோடு பல படங்களில்  நடித்தவர்) மீது ரஜினிக்கு ஒரு ஈர்ப்பு .இது எம்ஜியார் காதுகளுக்கு சென்று அவர் தனது ஆட்களை வெய்து  ரஜினியை நன்றாக கவனித்ததாகவும் ,அதனாலேயே அவர் மனநலம் பாதிக்க பட்டு கொஞ்ச நாள் இருந்ததாகவும் ,பின் லதா என்ற பேர் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று தேடியதும் அந்த கால அரசால் புரசல்கள்.இனி ரஜினின் சினிமா வரலாற்றை (1980-1990),(1990-2000),(2000-?) என்று பிரித்து அலசலாம்.


 (1980-1990) :
   இந்த கால கட்டத்திற்கு முன் ரஜினி அதிகமாக பாலச்சந்தர் படங்களிலும்,கமலுடனும் அதிகமாக நடித்தார்.பின் இருவரும் சேர்ந்து இனி நடிபதில்லை என்று முடிவெடுத்து தனி தனியாக சென்றனர்.ரஜினி தனது பயணத்தை முரட்டு காளை என்ற மசாலா படத்தில் துவங்கினார்.படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.இதில் ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் ரஜினி ,தனக்கு படத்திலும், பட விளம்பரங்களிலும் எப்படி முக்கியத்துவம் தரபடுகிறதோ அதே போல் ஜெய்சங்கருக்கும் தரவேண்டும் என்று சொல்லிவிட்டார்.இதில் ரஜினின் பெருந்தன்மையை காணலாம்.அடுத்த ஆண்டு அதாவது 1981 ரஜினி திருமணம் நடந்தது.இப்போது தன திருமணதிற்கு பத்திரிக்கை காரர்கள் அனுமதி இல்லை என்று சொன்னார்.மீறி வந்தால்  என்ன என்று ஒருவர் கேட்க வந்தால் உதைப்பேன் என்று இவரு சொல்ல ,பத்திரக்கை காரர்கள் கண்டனத்துக்கு ஆளானார்.இநத கால கட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்தார்.பெரும்பாலும் ஹிந்தி ரீமேக் படங்கள்.அங்கே அமிதாப் நடிப்பார்.அடுத்த வருடம் இவர் இங்கே.அப்போதெல்லாம்  இதுபோல் டிவி ,இன்டர்நெட் , கிடையாது. அதனால்,அவை ஜனங்களுக்கு ரீமேக் என்று தெரியாது.வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு படங்களில் நடித்தார். நிச்சயம் 2 ,3 .ஹிட்.இப்படி போனது.நடுவில் நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரர் வந்தது.தோல்வி அடைந்தது.உடனே அதே கம்பெனிக்கு (கவிதாலய) வேலைக்காரன் நடித்து ஹிட்டாகினார் .திரிசூல் என்று 3 ஹீரோக்கள் நடித்து ஹிந்தியில் வந்த படத்தை ரஜினிக்காக மிஸ்டர் பாரத் ஆக்கினார்கள்.மற்ற இருவர் சத்யராஜ்,எஸ்.வீ.சேகர்.மிகுந்த பொருட்செலவில் (அப்பவே ஒரு கோடி) தயாரான விடுதலை தோல்வியானது.இத்தனைக்கும் ஹிந்தி "குர்பானி" யின் ரீமேக்.அடுத்து ஹிந்தியில் வந்த "மரத்" படத்தை சொந்தமாக தயாரித்து கையை சுட்டுகொண்டார்.அடுத்து ஏவிஎமின் "மனிதன்" ஓட்டமாய் ஓடியது.கிளைமாக்ஸ் சட்டையில் குண்டுகளை மாட்டிகொண்டு துப்பாக்யோடு ரஜினி இருக்கும் ஸ்டில் பிரசித்தம்.பின் ஓய்வாக 18 நாளில் நடித்த குரு சிஷ்யன் ஹிட்.அடுத்து சில பிளாப்கள்(தர்மத்தின் தலைவன்,கொடி பறக்குது).இளையராஜா தயாரித்த "ராஜாதி ராஜா" காப்பற்றியது.சிவா மீண்டும்  சறுக்கியது. ராஜா சின்ன ரோஜா என்ற குழந்தைகள் படம் அரங்குகள் நிறைய வைத்தது.நடிகர் சிரஞ்சீவி தயாரித்த "மாப்பிள்ளை" ஹிட்டோ ஹிட்.



இப்படி பெரும்பாலும் தனக்கென செட்டகும் ஹிந்தி,தெலுங்குரீமேக்  படங்களில் நடித்தே ரஜினி  1980-1990 வருடங்களை கடந்தார்.அறிமுகம் செய்தது என்னவோ பாலச்சந்தர் தான்.ஆனால் ஸ்டார் ஆனதற்கு மூல காரணம் மூவர்.அவர்கள் இளையராஜா,எஸ்.பீ.முத்துராமன்,பஞ்சு அருணாசலம்.சந்தேகம் இல்லாமல் உச்ச நட்சத்திரம் அவர்தான்.இது ரஜினி பற்றிய ஒரு அலசல் தான்.எனக்கு தெரிந்ததை ,நேர்மையோடும் சார்பற்றும் எழுதியுள்ளேன்.ரஜினி ரசிகர்கள் தவறாக கருதக்கூடாது.




அடுத்த பதிவில் ரஜினி சினிமா வரலாறு 1990-2000

படித்தவர்கள் கமெண்ட் போடலாமே.
-

6 comments:

  1. நல்ல அலசல்..சில விஷயங்களை நம்ப முடியவில்லை..ரஜினி ரஜினிதான்..மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது உண்மை தானோ ? அதற்காகதான் ரஜினி லதா மாத்ரியான முகசாயல் , பேர் கொண்ட பெண்ண மணந்தாரா?

    ReplyDelete
  3. விஜய் , ஜெயம் ரவி , இப்போது தனுஷ் மற்றும் பலர் தான் தமிழில் ரீமேக் ராஜாகல் என்று நிணைதேன் ஆனால், அவர்கள் தலைவர் ரஜினியை பின்பற்றும் ரசிகர்கள் என்று நிருபித்து விட்டார்கள். இந்த information கூகுளில் சர்ச் பண்ணும் பொது.. எனக்கு இந்த லிங்க் வந்தது

    http://muralikkannan.blogspot.in/2008/10/blog-post_18.html

    ReplyDelete
  4. romba use fullana news boss thanks

    ReplyDelete
  5. ஹிந்தியில அமிதாப் நடித்த அத்தனை படங்களும் பார்த்திருக்கிறேன் இத்தனை நாளும் தமிழில் ரஜினி நடித்த அத்தனை படங்களும் ரீமேக் என்று தெறியாது அதுமட்டும்மல்லாது தமிழில் ரஜினி நடித்த பிறகுதான் ஹிந்தி ரீமேக்கில் அமிதாப் நடித்தார் என்று எண்ணினேன்

    ReplyDelete