Pages

Monday, 25 February 2013

இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ?


இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ? 

என்னிடம் பார்க்க வேண்டிய ஆங்கில படங்கள் நாளுக்கு நாள் அதிகம் சேர்ந்து கொண்டே போகிறது.பார்த்து முடியவில்லை .என்ன காரணம் என்று தெரியவில்லை .என் நண்பன் செல்வன்.இவனுக்கு நான் தான் ஆங்கில படங்கள் அறிமுகம் செய்து வைத்தேன்.ஆனால் சமயங்களில் என்னைவிட அதிகம் ஆங்கில படங்கள் பார்த்துவிட்டு எனக்கு அதைப்பற்றி சொல்லி அறிமுகம் செய்கிறான்.

எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.

என் நண்பன் இதில் கில்லாடி .அவன் மனைவி, ஏன் அம்மா ,தங்கை என்று எல்லரையும் ஆங்கில படங்கள் பார்க்க பழகி வைத்துள்ளான். கொடுத்து வைத்தவன் .நான் என்னதான் அவதார் போன்ற படங்களை என் வீட்டில் பார்க்க வைத்தாலும் ஆங்கில படம் பார்க்கும் பழக்கம் என் மனைவிக்கு வரவில்லை.

என்னிடம் இருக்கும் ஆங்கில படங்களை மொத்தம் பார்த்து ரசிக்கத்தான் ஆசை .ஆனாலும் மேல்சொன்ன பிரச்சனையால் அதில் இப்போது சில படங்களை தேர்வு செய்து பட்டியல் இடுகிறேன்.இப்போது எனக்கு கிடைத்திருக்கும் நாட்கள் 3 அல்லது 4 நாட்கள் ,இதில் மொக்கை படங்கள் பார்த்து வேஸ்ட் செய்ய மனமில்லை அதனால் என்ன செய்யலாம் என்று யோசிதேன்.சரி இருக்கும் படங்களை பதிவில் பட்டியலிட்டு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தான் விளைவு இந்த பதிவு.

இந்த படங்களை பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தால் எனக்கு பேருதவியாக இருக்கும்.

Badlands (1973)Columbus Circle (2012)Mindhunters (2004)


Outpost: Black Sun (2012)


Sleuth (2007)


What Lies Beneath (2000)


The Return (2003) 
Vozvrashchenie (original title)

The Girl with the Dragon Tattoo (2011)


The Skin I Live In (2011) 
La piel que habito (original title)

Don't Say a Word (2001)


என்னிடம் பார்க்காமல் இருக்கும் படங்களுள் இந்த படங்களை தேர்வு செய்து உள்ளேன்.இந்த படங்களில்
 நீங்கள் பார்த்த படங்கள் இருந்தால் எனக்கு அறிமுகம் செய்யுங்கள் .

Monday, 18 February 2013

புளுகு மூட்டை ஆகிவரும் குமுதம் :


புளுகு மூட்டை ஆகிவரும் குமுதம் : குமுதம் புத்தகம் தன் தரம் இழந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது பலருக்கு தெரிந்த உண்மைதான்.ஆனாலும் இன்றும் விற்பனையில் முதல் இடத்தில உள்ளது .காரணம்  அதன் தரம் கிடையாது.கவர்ச்சி படங்கள் ,பொய்யான கிசுகிசுக்கள் ,இரட்டை அர்த்த ஆபாச கமெண்ட்கள் நடுவில் ரொம்ப நல்லவர்கள் போல கோவில்கள் ,சாய்பாபா என்று பூசி மொழுகி ஒப்பேத்தி விடுவார்கள் .முதலில் அவர்களின் அட்டைபடம் .பெரும்பாலும் அதாவது ஆண்டுக்கு 48 இதழ்கள் வருகிறது என்றால் 45 இதழ்களுக்கு கதாநாயகிகளின் கவர்ச்சி படம் தான் அட்டையில் .அதைவிட்டால் ரஜினி படம்.

இந்த பதிவை எழுதியதன் நோக்கம் சமீப காலங்களில் குமுதத்தின் தரம் அடி மட்டத்தில் சென்றுவிட்டது.அதன் சான்றாக சமீபத்தைய குமுதத்தில் வந்த செய்திகளும் அந்த செய்திகளின் நிஜங்களும் பற்றி அலசவே இந்த பதிவு.

மாற்றான் பட குழு மீது குமுதத்திற்கு  என்ன கோபமோ தெரியவில்லை .ஆரம்பம் முதலே மாற்றானும் சாருலதாவும் (ப்ரியாமணி நடித்த படம் ) ஒரே கதை அதுவும் "ALONE" என்ற படத்தின் காப்பி என்று பல வாரங்களாக கூவிக்கொண்டே இருந்தார்கள் .அதாவது ஒரு வாரம் இந்த செய்தி கவர் ஸ்டோரி என்றால் ,அடுத்த வாரம் சினிமா செய்திகள் பற்றிய இடத்தில்  என்று விடாமல் அடித்து கொண்டே இருந்தார்கள்.இதற்க்கு மாற்றான் பட இயக்குனர் கே,வி.ஆனந்த் மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் .அதையும் வெளியிட்டு அடுத்த வாரமே மீண்டும் அதே பழைய மேட்டரே சொல்லி கடைசியில் இப்படி தான் சொல்வார்கள் படம் வந்தால் கதை தெரிந்து விட போகிறது என்று கொஞ்சமும் ஞாயம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்.சரி படம் வெளிவந்தது .மாற்றானும் சாருலதாவும் வெவ்வேறு கதை என்று தெரிந்ததே அதன் பின் மறுப்பு ஏதாவது எழுதி வருத்தபட்டார்களா? அல்லது பட விமர்சனத்திலாவது ஒரு வரி அப்படி இல்லை என்று எழுதினார்களா?

அடுத்து விஸ்வரூபம் விவகாரம் உச்சத்தில் இருந்த போது அதாவது படம் தமிழ் நாட்டில் தடை செய்ய பட்டிருந்த நேரம் வெளிவந்த குமுதம் அட்டையில் "ஹாலிவூடில் செட்டில் ஆகும் கமல் என்று செய்தி .முழுதும் படித்தால் ஆங்கில படம் எடுக்க கமல் அமெரிக்க செல்கிறார்.2 ஆண்டுகளுக்கு அங்கேதான் இருக்க போகிறார் என்று செய்தி.2 ஆண்டுகள் தங்குவதற்கும் செட்டில் ஆவதற்கும் என்ன சம்பந்தம் ?


சில நாட்களுக்கு முன் குஷ்பூவையும் கலைஞரையும் இணைத்து செய்தி (குமுதம் ரிப்போர்டர் ) .அதாவது பெரியார் தனது 70 வயதிற்கு மேல் மணியம்மை அவர்களை மணம் செய்ததை போல் கலைஞர் -குஷ்பூ இருவரையும் இணைத்து செய்தி. இது என்ன ? ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் குஷ்பூ திருமணம் ஆனவர் .2 பெண்களுக்கு தாய் .கணவன் குடும்பம் என்று இருப்பவர் .கலைஞர் தள்ளாத வயதில் இருப்பவர் .நிற்கவே 2 பேர் உதவி தேவை அவருக்கு .கொஞ்சமும் விவஸ்தை இல்லாத விஷயம் .சரி அப்படி இல்லை என்று தெரிந்தால் மறுப்பு செய்தி வருதா ? அதான் விஷயம் .போன மானம் போனதுதான்.அவர்கள் கலைஞரை வம்பிற்கு இழுக்க காரணமும் இப்பொது தெரிய வந்துள்ளது .அதாவது குமுதம் சில வருடங்களுக்கு முன் ஜவஹர் பழனியப்பன் ,வரதராஜன் என்று 2 பிரிவாக பிரிந்து இப்போது வரதராஜன் கைகளில் உள்ளது .முன்பு பிரிந்திருந்த போது கலைஞர் எதிர் முகாமிற்கு ஆதரவு தந்ததால் ஆட்சி மாறியது முதல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அதன் உச்சம் தான் இந்த குஷ்பூ விஷயம்.கலைஞரையும் அசிங்க படுத்த வேண்டும் அதே நேரம் என்ன போட்டால் மக்கள் விழுந்து அடித்துக்கொண்டு வாங்குவார்கள்.பெண் விஷயம் என்றால் ஒரு பரபரப்பு கிளம்பும்.அதுவும் கலைஞர் இந்த வயதிலா என்று வாங்குவார்கள்.அதுவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் குஷ்பூ வேறு.அவர்கள் எண்ணம்  100% வெற்றி.


ரஜினி தன்  2வது மகள் திருமணத்தின் போது ரசிகர்ளுக்கு பிரியாணி விருந்து வைக்கபோகிறார் என்று குமுதமே ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு அதன் பின் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.3 வாரங்களுக்கு முன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு செய்தி வாசிப்பதை விட்டு பள்ளி ஆரம்பிக்க போகிறார் என்று புளுகு.அவர் தனது இணையத்தில் அது பொய் என்று மறுத்து உள்ளார்.ஏன் இந்த புளுகு வேலைகள்? சமர் படம் என்ன பிரச்சனையோ  இவர்களோடோ தெரியவில்லை .சமர் 2 பக்கம் விமர்சனம் போட்டு ஒரு பக்கம் மட்டும் எழுதி அடுத்த பக்கம் இந்த படம் பற்றி எழுதுவதற்கு பதில் வேறு ஏதாவது பயனுள்ளதாக  எழுத பயன் படுத்தலாம் என்று காலியாக விட்டு வைத்திருந்து அசிங்க படுத்தினார்கள்.சமரை விட மோசமான பல படங்களை இவர்கள் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள்.


ஒரு விஷயம் எழுதுகிறார்கள்.அந்த விஷயம் பற்றி தொடர்ந்து எழுதுவதோ முன்பு சொன்னது பற்றி தெளிவு ஆக்குவதோ கிடையாது.அந்த வாரம் ஏதாவது ஒரு பரபரப்பாக  விஷயம் எழுதி விற்பனை செய்துவிட வேண்டும் அவ்வளவுதான்.அதன் பின் என்ன நடந்தால் எவனுக்கு என்ன? யார் பேர் நாறினால் யாருக்கென்ன? இதற்க்கு இவர்களின் போட்டி பத்திரிக்கை என்று சொல்லபடும் விகடன் எவ்வளவோ மேல். இலங்கை விஷயம் ,கூடங்குளம் , என்று அவர்களுக்கு என்று ஒரு கருத்து உண்டு .அதன் படி தொடர்ச்சியாக செய்திகளை சொல்கிறார்கள்.இங்கே விகடனை உயர்த்தி குமுதத்தை தாழ்த்துவது  என் 
எண்ணம் கிடையாது.ஒப்பிட்டால் விகடன் மேல்.அவ்வளவுதான்.

எனக்கு ஞாபகம் இருந்த விஷயங்களை மட்டுமே எழுதி இருக்கிறேன்.இன்னும் யோசித்தால் நிறைய குப்பைகள்  வரும்.

Friday, 8 February 2013

7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் :


7 ஆங்கில படங்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆங்கில ,உலக படங்களை பார்ப்பது என்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம் .என் குறிக்கோள் தினமும் ஒரு ஆங்கில படம்.ஆனாலும் என் எண்ணம் அத்தி பூத்தாற்போல் ஆண்டுக்கு மொத்தமாய் சில வாரங்களே அமையும்.அப்படி அமைந்த நாட்கள் எனக்கு டிவைன் .இரவு ஒரு படம் முடிந்ததும் அப்படியே அந்த படத்தை பற்றி யோசித்தவாறே தூக்கம் ,இது என் வீட்டில் யாரும் இல்லாமல் நான் மட்டுமே இருக்கும் போது அமையும் சந்தர்ப்பம்.அந்த சந்தர்ப்பத்துக்கு ஏங்கியவாறே  காத்திருப்பேன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் ஜனவரி கடைசி வாரம் எனக்கு கிடைத்தது.அப்படி தினமும் ஒரு படமாக 7 படங்கள் பார்த்து தள்ளினேன்.
அந்த படங்களை ஒவ்வொன்றாக தனி பதிவில் சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் லாயக்கு அற்றதால் மொத்தமாக ஒரே பதிவில் .

இந்த படங்களை பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த பதிவு.இந்த படத்தை பற்றி கேள்விபட்டால் பார்க்க அல்லது பார்க்க தவிர்க்க ஒரு ஐடியா இந்த பதிவு.

1.SLEEP TIGHT (2011) :
                         ஸ்பானிஷ் மொழி படம்.வாழ்கையில் எந்த குறிக்கோளும் ஆதரவும் இல்லாமல் வெறுமையுடன் தற்கொலை முடிவில் இருக்கும் ஒருவனுக்கு ஒரு ஐடியா . அடுத்தவரின் வாழ்கையை மகிழ்ச்சி அற்றதாக செய்வதே நம் வாழ்கையில் மகிழ்ச்சியை தரும் என்ற உயர்ந்த பண்பு அவனுக்கு புரிகிறது.ஒரு அப்பார்ட்மெண்டில் காப்பாளனாக இருக்கும் அவன் அங்கே தனியே வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் தினமும் அவள் வருவதற்கு முன் சென்று அவளின் கட்டிலிற்கு அடியில் படுத்துகொள்கிறான் .அவள் வந்து உறங்கியதும் மெல்ல எழுந்து அவளுக்கு மயக்க மருந்து செலுத்தி அவளுடன்  இரவை கழிக்கிறான்.இதை பல வாரங்களாக செய்து வருகிறான்.இப்படி ஒரு நாள் கட்டிலுக்கு அடியில் படுத்து அவளுக்காக காத்திருக்கும்போது அவள் தன காதலனோடு படுக்கைக்கு வருகிறாள்.அடியில் இவன் .மேலே அவர்கள்.அடுத்து நடப்பது தான் உச்சம். ஒரு முறை பார்க்கலாம் .

2.HOUSE AT THE END OF THE STREET (2012) :
                                                    அடர்ந்த காட்டிற்கு மத்தியில் சில வீடுகள் .ஒவ்வொரு வீடும் கொஞ்சம் தள்ளி தள்ளி.ஒரு வீட்டில் ஒரு சிறு பெண் தன்  தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்கிறாள்.காணமல் போகிறாள் .அந்த வீடு பூட்டப்பட்டு இருக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாய் தன தாயோடு குடிவருகிறாள் ஒரு பெண்.பக்கத்து வீட்டு கதையை தெரிந்து கொள்கிறாள் .ஒரு இரவில் அந்த பூட்டப்பட்ட வீட்டில் லைட் எரிவதை பார்க்கிறாள். பேய்,பூதம் எல்லாம் இல்லை. ஒரு மைல்ட் த்ரில்லர்.


3.KILL LIST (2011) : 
                      ரொம்பவும் வெறுப்பான படம்.ஏதாவது திருப்பம் வரும் அதன் பின் பரபரப்பு வரும் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன் படம் முடிந்து விட்டது.படத்தின் பெயரை கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுங்கள் அவ்வளவுதான்.பார்த்து முடித்த அடுத்த நொடி படத்தை  டெலிட் செய்தேன்.(இந்த பதிவு எழுதும் போது இந்த படத்தையே ஞாபகம் இல்லாமல் இன்னும் ஒரு படம் பார்த்தோமே என்று 2 நாள் அப்பபோ யோசித்துக்கொண்டே இருந்தேன்.)

4.THE SKEPTIC (2009) :
                        ஒரு வக்கீல் .நடு இரவில் அவருக்கு ஒரு போன்.யாருமற்ற அவரது அத்தை இறந்துவிட்டார் என்று.அவனுக்கு அந்த அத்தையோடு எந்த தொடர்பும் இல்லை.ஆனாலும் அந்த அத்தை யாரும் இல்லாதவர் என்பதால் அவர் வசித்த வீடு இனி இவருக்கு தான்.அந்த பழமையான வீட்டிற்கு வருகிறான்.அந்த வீட்டில் அவன் அத்தை எதோ ஒரு ரகசியத்தை இவனுக்கு சொல்ல வைத்துவிட்டு சென்றிருக்கிறார் என்று அறிந்து அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான்.  கதை கொஞ்சம் ஆர்வத்தை கிளப்பினாலும் பெரிதாய் எதுவும் இல்லை.

5.DRAG ME TO HELL (2009) : இந்த படம் ரொம்ப நாளாக என்னிடம் இருந்தது.ஆனாலும் பார்க்க எண்ணம் இல்லாமல் சரி பார்த்துவிட்டால் டெலிட் செய்யலாம் என்பதாலும் என் நண்பன் செல்வா இந்த படத்தை பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று சொன்னதாலும் (அவனை இப்படி ஆங்கில படங்கள் கொடுத்து பார்க்கவைத்து கெடுப்பது நான் தான்) பார்த்தேன்.பலர் இந்த படம் பற்றி தெரிந்திருக்கலாம். ஜஸ்ட் ஓகே.

6.DEAD FALL (2012) : படம் ரொம்ப பரபரப்பாக தொடங்குகிறது.ஒரு கடும் பனிக்காலம்.ஊர் முழுதும் பனி சூழ்ந்துள்ளது.ஒரு வங்கி கொள்ளையை முடித்துவிட்டு தப்பி செல்லும் மூவர் .இரு ஆண் ஒரு பெண்.ஒரு விபத்தில் ஒருவன் இறந்துவிட மற்ற இருவரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிந்து செல்கிறார்கள்.இன்னொரு பக்கம் தண்டனை முடிந்து ஜெயிலைவிட்டு வெளியே வரும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் உடனே இன்னொரு கொலை செய்துவிடுகிறான்.வீட்டில் அவனை எதிர்பார்த்து காத்திருக்கும் வயதான பெற்றோர்.அந்த பெண்ணும் இவனும் சந்தித்து காதலிக்கிறார்கள்.எல்லோரும் சென்று சேரும் இடம் அந்த பெற்றோர் இருக்கும் வீடு.தனியாய் போன அவனும் அங்கே வருகிறான். ஆரம்பத்தில் இருந்த கிரிப் படத்தில் போகப்போக இல்லை.படத்தின் அந்த பனி சூழ்ந்த காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

7.ATM (2012) :
            ஒன்றாக பணிபுரியும் 3 பேர்.(2 ஆண்கள் 1 பெண்) ஒரு பார்ட்டி முடிந்து இரவு 2 மணி அளவில் காரில் போய் கொண்டிருக்கிறார்கள்.அப்போது ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில தனியே அமைந்துள்ள ATM இல் பணம் எடுக்க ஒருவன் இறங்கி செல்கிறான்.அவன் திரும்ப நேரம் ஆவதால் மற்ற இருவரும் அங்கே போகிறார்கள்.பணம் எடுத்து வெளியே செல்ல கதவை நெருங்கும்போது கண்ணாடிக்கு வெளியே  ஒருவன் முகத்தை மறைத்தபடி உடை அணிந்து நிற்கிறான்.அவர்கள் அவன் ஒரு வேலை கொள்ளைக்காரனோ என்று அஞ்சி ஒரு நிமிடம் உள்ளேயே நிற்கிறார்கள்.வெளியே நிற்பவன் திடீரென்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவன் ஒருவனை அடித்துகொள்கிறான்.அதை பார்த்து பயந்து வெளியே வராமல் உள்ளேயே இருக்கிறார்கள் .அவனும் அவர்களுக்காக காத்திருக்கிறான்.பார்த்த படங்களிலேயே ஓரளவு கொஞ்சமே கொஞ்சம் திருப்தி தந்து இந்த படம் தான் என்று சொல்லலாம்.ஒரு சுமாரான த்ரில் படம் பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம் .
                         

Sunday, 3 February 2013

கடலில் கரைந்த பெருங்காயம் மணிரத்னம்


கடலில் கரைந்த பெருங்காயம் மணிரத்னம் 


வெள்ளிகிழமை இரவு முதல் கடல் படத்தின் விமர்சனங்கள் வர தொடங்கி விட்டன .

பலர் பல்வேறு கோணங்களில் படத்தை கிழித்து தொங்க விட்டாலும்,அவர் ரசிகர்கள் (பதிவுலகில்)படம் சரியில்லை என்று ஒரே பேச்சில் முடித்துவிட்டு அடுத்த வேலையை பார்த்துகொண்டு கடல் விமர்சனங்களில் மணி எடுத்த பழைய படங்களை காட்டி பின்னோட்டம் போட்டுகொண்டிருக்கிறார்கள்.என் கேள்வி எல்லாம் இதே வேறு ஒருவர் எடுத்திருந்தால் என்ன கிழி கிழித்திருப்பார்கள்.

 பல கடல் விமர்சன  பதிவுகளில் இறுதியாக சொல்லபடும்  ரசனையான ONE LINER அசத்தியது .அவை 

“மணி சார்... நீங்க டொக்கு ஆயிட்டீங்க...!”--- பிரபாகரனின் தத்துபித்துவங்கள்  
http://www.philosophyprabhakaran.com/2013/02/blog-post.html

தயவு செய்து வாலண்டிரி ரிடயர்மென்ட் வாங்கிடுங்க மணி ---என் எண்ணங்களில் அலைவரிசை 
http://alaivarisai-mss.blogspot.in/2013/02/blog-post.html

மு...டி...ய...லே...! ---CHILLEDBEERS
http://chilledbeers.blogspot.in/2013/02/blog-post_1.html

கடல் ஆர்ப்பரிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு "கடல்" எரியாகி இருக்கிறது.---கும்மாச்சி 
http://www.kummacchionline.com/2013/02/kadalmovie.html

திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.----வலைமனை 

http://www.valaimanai.in/2013/02/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FjFoJL+%28Valai+Manai%29

மணிரத்னத்தின் சாதனை அவரின் அட்டர் ப்ளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு ---அட்ராசக்க 
http://www.adrasaka.com/2013/02/blog-post.html

கடல் - ரோஜா, பம்பாய் ரகமல்ல . . ராவணன் ரகம் .. ----வீடு திரும்பல் 
http://veeduthirumbal.blogspot.com/2013/02/first-on-net.html

இந்த படம் தொடர்பான என் பதிவு -
கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன்

Saturday, 2 February 2013

கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன்


கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன் நேற்று முதல் கடல் படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கி உள்ளன.பல விமர்சனங்கள் படத்தை கழுவி கழுவி ஊத்தி இருக்கிறார்கள் .இன்னும் சிலர் மணிரத்னத்தின் ரசிகர்கள் போலும் .படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றும் யாருக்கும் வலிக்காமல் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள்.

மணிரத்னம் எப்பவோ FIELD OUT ஆனவர் .அவர் படம் கடைசியாக ஹிட் ஆனது எது என்று ஞாபகம் இருக்கா ?

இதற்க்கு முன் வந்ததில் ராவணன் ,குரு ,ஆயுத எழுத்து ,கன்னத்தில் முத்தமிட்டால்  ஆகியவை தோல்வி .நடுவில் அலைபாயுதே தப்பித்து .அதற்கும் முன் உயிரே ,இருவர் படங்கள் காலி. ,நடுவில் பாம்பே ஹிட் ,அதற்கும் முன் திருடா திருடா என்று குப்பை .

ஆக ரோஜா -- கடல் 11 படங்கள் .அதில் ரோஜா ,பாம்பே ,அலைபாயுதே இந்த 3 மட்டும் தான் ஹிட்.

என்னதான் எனக்கு அவரின் மேகிங் பிடிக்கும் .இளமையாக படம் எடுப்பார் என்று அவர் ரசிகர்கள் தன்னை தானே ஏமாற்றி கொண்டாலும் அவருக்கு இது அந்திம காலம்.அவர் பாலச்சந்தர் ,பாரதிராஜா ,பாக்யராஜ் போல பழம் பெருமை பேசி காலம் ஓட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது .எனக்கு அவரை பிடித்தது .தளபதிக்கு முன் அவர் படங்கள் நாயகன்,மௌன ராகம் ,அக்னி நட்சத்திரம்,இதயத்தை திருடாதே இந்த 5 படங்கள்.classic.

அதன் பின் அவர் படங்கள் க்ளீஷேக்களின்  கோர்வைகளாகதான் நான் பார்த்தேன் .அதிலும் கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் அந்த  குழந்தைகள் பேசுவதை சமீபத்தில் டிவியில் மீண்டும் பார்க்க நேர்ந்தது .முடியல .(சிலருக்கு இப்போதும் பிடிக்கலாம் )

விஷயம் இதுதான் .நேற்று முதல் வந்த சில கடல் விமர்சனங்களில்  மணிரத்னத்தை குறை கூறாமல் அவரை விமர்சன தாக்குதலில் இருந்து தப்பிக்க சிலர் பதுக்குகிறார்கள் .அவர்கள்  பழி போட கிடைத்த ஆள் .ஜெயமோகன் .படத்தின் கதை -வசனம் எழுதியவர் .என்னமோ ஜெயமோகன்  எழுதியதை அப்படியே மணி வாங்கி வந்து படம் ஆக்கியதை போல் பழி போடுகிறார்கள் .மணிரத்னம் ஒன்றும் அப்படியே ஏற்றுக்கொள்பவர் இல்லை.பல கட்ட  விவாதங்கள் -உரையாடல்கள் நடந்த பின் தான் முடிவு செய்திருப்பார் .அவர் அவ்வளோ மொக்கையை ஓகே சொல்பவரா? அப்படி சொல்பவர் என்றால் இந்த புகழுக்கு தகுதி உடையவரா?

இன்று ஒரு சில பதிவர்கள் அன்புள்ள மணிரத்னத்திற்கு என்று கடிதம் அவருக்கு வலிக்காமல் கடிதம் எழுதி இறக்கிறார்கள் .ஒரு பதிவர் 2011 ஆம் ஆண்டு ஒரு நடிகருக்கு தன் பதிவில் கடிதம் எழுதி இருப்பார் .அதில் தெரியும் கடுமை 100இல் 10 சதம் கூட இந்த கடல் பட தொடர்பான அவர் கடிதத்தில் இல்லை.அதிலும் இலக்கியவாதிகளோடு சேராதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.அதை படித்ததும் கொள்ளேன சிரிப்புதான் .ஒரு வேலை அவர்களும் கிண்டல் தான் செய்கிறார்களோ ?இந்த படத்தில் ஜெயமோகனோடு  சேர்ந்துள்ளார் சரி ராவணன் ,குரு ,ஆயுத எழுத்து எல்லாம் யாரோடு சேர்ந்தார்? ஏன் மோசமாக இருந்தது? நடிகர்கள் மீது காட்டும் கடுமையை ஏன் இவர் மீது காட்டவில்லை? பழி ஏன் ஜெயமோகன் மீது போடுகிறீர்கள் ?

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரைலர் என்று தன் முகப்புதகத்தில் பரிந்துரை செய்தவர்களை தேடி கொண்டிருக்கிறேன் அவர்களின் மணிரத்தின சார்பு பேச்சு கேட்க்க .