Pages

Wednesday, 26 September 2012

CANNIBAL HOLOCAUST - 18+ படம் :


CANNIBAL HOLOCAUST - 18+ படம்  : 

நீங்கள் HOSTEL ,WRONG TURN போன்ற படங்களை பார்த்ததுண்டா? அது போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படம் அந்த படங்களை விட நான்கு மடங்கு கோரம் நிறைந்ததாக இருக்கும் .பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.உலகின்  மிக கோரமான படத்தை நீங்கள் பார்க்க போவதில்லை அவ்வளவுதான்.என்ன ரொம்ப பில்ட் அப் தரேனா? 

உலகின் மிக மோசமான ,கொடூரமான காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லலாம்.MOST CONTROVERSIAL FILM EVER MADE என்று சொல்லப்பட்டு வரும் படம்.படம் பல நாடுகளில் தடை செய்ய பட்டுள்ளது .இன்றும் தடை உள்ளது.படம் வெளியான நேரத்தில் இந்த பட இயக்குனர் RUGGERO DEODATO மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யபட்டார்.அவர் மீது சொல்ல பட்ட குற்றம் "SNUFF FILM" எடுத்துள்ளார் .மேலும் படத்தில் உண்மையிலேயே நான்கு நடிகர்கள் கொல்லபடுகிறார்கள் என்பதே.கோர்ட்டில் இயக்குனர் மறுத்தாலும் அந்த நால்வரையும் அவரால் கோர்ட்டில் தோன்ற வைக்க முடியவில்லை.காரணம் அவர்கள் முன்பே தயாரிப்பு மற்றும் இயக்குனரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு வெளியே தலை காட்ட கூடாது ,அதாவது வேறு படங்களிலோ ,பட விளம்பர நிகழ்ச்சிகளிலோ,மீடியா முன்  தோன்ற கூடாது என்பது.காரணம் நிஜ FOUND FOOTAGE பிலிம் என்று விளம்பர படுத்த பட்டதால். இதனால் மேலும் சிக்கலாகி போனது.ஒப்பந்தத்தை ரத்து  செய்து அவர்களை தொலை காட்சியில் காட்டிய  பின் தான் அவரால் வெளியே வர முடிந்தது.இருந்தாலும் படத்தை வெளியிட தடை விதித்து விட்டார்கள்.

மேலும் படத்தில் கொள்ளப்படும் மிருகங்கள் நிஜமாக கொள்ளபடுகின்றன என்பதை இயக்குனர் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆமை உயிரோடு கொல்லப்பட்டு கிழிக்கப்பட்டு உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கபடுவதை சாவகாசமாக காட்டுவார்கள்.ஒரு காட்டு குரங்கை பிடித்து தலையின் மேல் பாகத்தை மட்டும் வெட்டி அதை தலை கீழாக அழுத்தி ரத்தத்தை பிடித்து குடிப்பார்கள்.ஒரு பன்றியை நிஜமாகவே சுடுவார்கள்.இப்படி பல கண்றாவிகள்.

சரி மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.இவ்வளவு கொடூரங்கள் இருக்கும் படத்தின் கதை தான் என்ன? நான்கு ஆண்கள் ,ஒரு பெண் கொண்ட ஒரு பட குழு டாகுமெண்டரி எடுக்க அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரில் ஒரு குழுவை பற்றி ஆராய்ச்சி செய்ய காட்டின் உள்ளே போகிறார்கள்.போனவர்கள் திரும்ப வராததால் அவர்களை தேடி ஒரு ப்ரோபெசர் புறப்படுகிறார்.அங்கே அந்த பழங்குடியினரை சந்திக்கிறார்.தான் தேடி வந்த பட குழு இந்த பழங்குடியினருக்கு பெரும் கொடுமை செய்திருப்பதை அறிந்து கொள்கிறார்.மெல்ல அவர்களோடு பழகி அந்த பட குழு கொள்ள பட்டு விட்டதை தெரிந்து கொள்கிறார்.அவர்கள் ஷூட்செய்த வீடியோவை அவர்களிடம் இருந்து பெற்று திரும்புகிறார்.தன் அதிகாரிகளுக்கு அந்த பட குழு செய்த கொடுமைகளை அந்த வீடியோ மூலம் தெரிய படுத்துகிகிறார்.

படம் பார்பவர்கள் சகிக்க முடிய வில்லை என்றால் அந்த வீடியோ கிடைக்கும் காட்சியுடன் படத்தை நிறுத்தி விடுங்கள்.மேற்கொண்டு பார்க்க வேண்டாம்.அதற்க்கு மேல் வருபவை எல்லாம் கொடுமையின் உச்சம்.படத்தின் தரம் நிஜ டாகுமெண்டரி போன்ற உணர்வை தரும்.நாகரீகம் அடைந்தாலும் நாமும் காட்டு மிரண்டிகளே என்பதே படம் சொல்வது.படத்தில் நிறைய 18+ காட்சிகள் உண்டு.அதை நாம் அப்படி நினைத்து கொண்டு பார்க்க முடியாது.படத்தை பற்றி எனக்கு சொன்ன மலர்வண்ணன் ,கிரி இருவருக்கும் நன்றிகள்.

Tuesday, 25 September 2012

T20 SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பை  SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பையில் ஒரு வழியாக லீக் போட்டிகள் முடிந்து விட்டன.எல்லா முன்னணி அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறி விட்டன.எந்த ஒரு அதிர்ச்சியும் தராமல் சிறிய அணிகளான பங்களாதேஷ் ,அயர்லேன்ட் ,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே அணிகள் போட்டியில்  இருந்து வெளியேறி விட்டன.உலக கோப்பைகளில் சிறிய அணிகள் திடீரென பெரிய அணி ஒன்றை வென்று அதிர்ச்சி தருவது அவ்வபோது நடந்து வரும் ஒன்று.இந்த உலக கோப்பையில் அது மிஸ்ஸிங் .இனி சூப்பர் எட்டுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் லீக் போட்டியில் ஆடியது பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்.

பாகிஸ்தான் : இப்போதைக்கு கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணியாக நான் நினைப்பது இந்த அணியைதான்.காரணம் எப்படியோ உலக கோப்பை போட்டிகளில் நன்றாக விளையாடி விடுகிறார்கள்.மற்ற அணிகள் ஆண்டுக்கு ஒரு மூன்று ஆல்லது நான்கு சர்வதேச T20 போட்டிகள் ஆடி உள்ளார்கள் என்றால் பாகிஸ்தான் ஆண்டுக்கு பத்திற்கு மேல் ஆடி இருப்பார்கள்.காரணம் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் நாட்டிற்கு எந்த அணியும் சுற்று பயணம் செய்வதில்லை.அதனால் அவர்கள் தங்கள் சார்பு போட்டிகளை துபையில் நடத்தி வருகிறார்கள்.எந்த அணி சுற்று பயணம் என்றாலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தாமல் வெறும் ஒரு நாள் ,T20 போட்டிகள் மட்டுமே நடத்த பட்டு அவர்கள் பெரும் அனுபவம் பெற்று விட்டார்கள்.அணியின் பலம் பேட்டிங் -30% பவுலிங் -70% என்று உள்ளது.சயித் அஜ்மல் எப்படியும் மூன்று நான்கு விக்கெட் எடுத்து விடுகிறார்.ரன்னும் அதிகம் கொடுபதில்லை.பேட்டிங் யாரவது ஓரளவு கை கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியா: வாய்ப்பு இல்லை என்று நினைகிறேன்.சூப்பர் எட்டில் தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது .பந்து வீச்சு நம்ப முடியவில்லை.ஒரு போட்டியில் நன்றாக வீசுபவரை நம்பினால் அவர் அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்.ஒரே பலம் பாட்டிங்.அப்படியே பாகிஸ்தான் அணிக்கு தலை கீழாக பாட்டிங் -70% பவுலிங் -30% பலம் உள்ளது.நாம் எவ்வளவு ரன் அடித்தாலும் அடுத்து ஆடும் அணி எளிதில் துரத்தி விடும் நிலைதான் உள்ளது.இதை எல்லாம் மீறி என்  கணிப்பு பொய்த்து இந்தியா வென்றால் மகிழ்ச்சி தான்.

ஆஸ்திரேலியா ; வாட்சன் எனும் ஒருவரை  பெரிதும் சார்ந்துள்ளது ஆஸ்திரேலியா.ஹஸ்ஸி ,வார்னர் போன்றோரை கொஞ்சம் நம்பலாம்.பந்து வீச்சுதான் சுத்தமாக எடுபடவில்லை.அங்கும் கை கொடுப்பது வாட்சன் தான்.பெரிய ஸ்பின்னர் இல்லாதது இழப்பு.

தென் ஆப்ரிக்கா : இனி தான் அவர்களுக்கு கண்டம் .எப்போதும் அவர்கள் கோட்டை விடுவது இங்கே தான்.ஜிம்பாப்வே அணியை பந்தாடிய இவர்கள் அடுத்த போட்டியில் இலங்கையுடன் மழையினால் குறைக்கபட்ட ஏழு ஓவர் ஆட்டத்தில் முதலில் ஆடி 78 ரன்கள் அடித்தனர்.சரி இலங்கை எளிதில் இதை அடித்து விடுவார்கள் என்று நினைத்தால் மிகவும் அற்புதமாக பந்து வீசி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டனர்.அவர்கள் பலம் சரியாக 50-50%  உள்ளதாக நினைகிறேன்.

இங்கிலாந்த் : இவர்களும் சூப்பர் எட்டோடு கிளம்ப வேண்டி இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.ஏமாந்த ஆப்கானிஸ்தான் அணியிடம் செம அடி அடித்த இவர்கள் இந்தியா அணியோடு மிக குறைந்த ரன்னில் சுருட்ட பட்டார்கள்.அவர்கள் பலம் வேக பந்து வீச்சு இலங்கையில் கை கொடுக்காது.இவர்கள் செய்த மெகா தவறு பீட்டர்சன் நீக்கம்.அவரை கமெண்ட்ரி சொல்ல டி.வியில் பார்க்கும் போது கோபம் வருகிறது.அற்புதமாக பேட் செய்ய கூடிய அதுவும் இந்தியா ,இலங்கை போன்ற களங்களில் ஆடி அனுபவம் பெற்ற அவரது நீக்கம் நிச்சயம் யோசிக்க வைக்கும்.சரி இங்கே நன்றாக ஆடும் இயன் பெல்லும் நீக்கம்.என்ன சொல்வது ? 

இலங்கை : இனி அவர்கள் தங்களை வெளி காட்டுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.தில்ஷன் சரியாக ஆடாதது குறை.அடுத்துவரும் போட்டிகளில் மலிங்கா எடுபடலாம்.மென்டிஸ் என்ற மர்மம் வேறு உள்ளது .எப்போதும் ஆஸ்திரேலியா ,தென் ஆப்ரிக்க போன்ற அணிகளோடு தடுமாறுவார்கள்.பாட்டிங் எடுபட்டால் முன்னேறலாம்.

நியூசிலாந்து : இவர்களும் கிளம்ப வேண்டி இருக்கலாம்.மெக்கலம் அவுட் ஆகி விட்டால் அடிக்க ஆள் இல்லை.பந்து வீச்சும் சொல்லும் படி இல்லை.ஏதாவது அதிசியம் நடந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

மேற்கு இந்தியதீவு: ஒரே பாயிண்ட் கெயில் அடித்தால் வெற்றி.இல்லாவிட்டால் கிளம்பலாம்.அது தான் நிலை.

மற்றபடி சிறிய அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்து சுவாரஸ்யத்தை கெடுக்காமல் இருந்தது ஒரு விஷயம்.பெரிய கேள்வி இந்த செப்டம்பர் ,அக்டோபர்  மாதங்களில் இந்தியா ,இலங்கை போன்ற இடங்களில் மழை வரும் என்பது தெரிந்தே ஏன் அங்கே போட்டிகளை நடத்த ஒப்பு கொண்டார்கள்? சென்ற இரண்டு T20 உலக கோப்பைகள் முறையே 2009 இல் இங்கிலாந்தில் ,2010 இல் மேற்கு இந்தியா தீவுகளில் நடந்தது.அதுவும் ஐ.பி.எல் முடிந்ததும் ஜூன் ,ஜூலை மாதங்களில் .அதே போல் இந்த முறையும் அட்டவணை தயாரிக்காமல் விட்டு விட்டு இப்போது மழை வந்து கெடுத்து விடுகிறது.இனி எத்தனை போட்டிகளில் மழையால் பாதிக்க போகிறதோ தெரியவில்லை.

Monday, 17 September 2012

சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம்


சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம் 


அது என்ன ராசியோ தெரியவில்லை இதுவரை வந்த சசிகுமார் படங்களை திரை அரங்குக்கு மட்டுமே சென்று பார்த்துள்ளேன்.அதுவும் எப்படியோ பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது.சில படங்களை நிச்சயம் தியட்டருக்கு போகலாம் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம்  அமையாது ((உதா: நான் படம்).இந்த படம் பார்க்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லாமல் இருந்தது.காரணம் டி.வியில் போட்ட ட்ரைலர்கள் சசிகுமார் முந்தய படங்களை ஞாபக படுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தேன்.இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்று கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பின் கமலா தியேட்டர்.(முன்பு வேட்டை சின்ன ஸ்க்ரீனில் பார்த்தேன்.)அரங்கம் நிறைந்து இருந்தது.குறிப்பாக அதிகம் பெண்கள் .

நிச்சயம் சசிகுமார் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்து  விட்டார் என்று சொல்லலாம்.இத்தனைக்கும் இந்த படம் அவர் நடிக்கும் நான்காவது படம்.போன படம் போராளியே நன்றாக தான் இருந்தது.ஆனால் எதோ ஒன்று குறைந்ததால் சரியாக ஓடவில்லை.அந்த குறையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம்.ஆனால் சிலர் எழுதியது போல் நாடோடிகளை இந்த படம் தூக்கி  சாப்பிட்டுவிடும் என்று சொல்ல முடியாது.

கதை என்றால் அதே சசிகுமார் பிராண்ட் காதல் ,நட்பு ,துரோகம் தான்.நம்ம டி.ஆர் எண்பதுகளில் தங்கை செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுதது போல் சசிகுமார் நட்பு செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுகிறார்.டி.ஆர் காலத்தில் சினிமாவை வாழவைத்தது பெண்கள் கூட்டம் அதனால் தங்கை  செண்டிமெண்ட்.இப்போது சினிமாவை வாழவைத்து வருவது இளைஞர்கள் ,அதனால் நட்பு செண்டிமெண்ட்.கூடவே "நட்புன்ன என்று ஆரம்பித்து சில பன்ச் டயலாக்.இறுதியில் ஒரு சின்ன திருப்பம்.அவ்வளவுதான் படம்.

சசிகுமார் நடிப்பை குறை சொல்ல முடியாது.ஹீரோயிசம் என்று சேர்த்து உள்ளதை தான் கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை.நாயகி சிரித்தால் அழகாக இருக்கிறார்.படத்தை கொண்டு செல்வது பரோட்டா சூரி தான்.மனுஷனுக்கு இந்த படம் நிச்சயம் திருப்புமுனை.செம டைமிங் .இனி முன்னணி நகைச்சுவை நடிகராக வந்து விடுவார்.அந்த அளவு அசத்தியுள்ளார்.அரங்கில் கைதட்டல் அதிகம் இவருக்குதான்.சசியும் பல காட்சிகள் இவர் பேசட்டும் என்று அடக்கி வாசித்துள்ளார்.என்ன சூரி  பேசி கொண்டே இருக்கிறார்.அடுத்து சில சின்ன படகதாநாயகர்கள் (அப்புக்குட்டி ,விஜய சேதுபதி ,இனிகோ ) முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.ஓடாத படங்களில் நாயகனாக நடிப்பதை விட ஓடும் இந்த படத்தில் நடிக்க இவர்கள் எடுத்த முடிவு பாராட்ட வேண்டியது.

படத்தின் பெரிய மைனஸ் இசை.சசி படங்களில் ஒரு பாடலாவது ஹிட் ஆகும் ,இதில் ஏமாற்றி விட்டாகள்.ஏன்  கவனிக்காமல் விட்டார்கள்.இனி டி.வியில் போட்டு பாடலை ஹிட் ஆக்கினால்தான் உண்டு.இயக்கியவர் சசிகுமாரின் உதவியாளர் பிரபாகரன்.சசி என்ன கதை சொன்னால் ஓகே சொல்வார் என்று அறிந்து அதை எப்படி கொடுத்தால் ரசிக்க வைக்கலாம் என்று அறிந்து படம் எடுத்துள்ளார்.சில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் படம் ஹிட் ஆகிவிடும்.

Friday, 14 September 2012

AMERICAN PIE REUNION (2012) -18+ ஆங்கிலம்


AMERICAN PIE REUNION (2012) -18+  ஆங்கிலம் 


1999 வந்த AMERICAN PIE படத்தை நான் 2003 இறுதில் தான் ஒரு நண்பனின் அறையில் கணினியில் பார்க்க நேர்ந்தது.அதற்க்கு முன் JURRASIC PARK,MATRIX  சில ஜாக்கிசான் படங்கள் இவை மட்டுமே ,அதாவது இந்தியாவில் அரங்குகளில் வரும் பிரபலமான படங்கள் மட்டுமே பார்த்திருந்தவன் நான்.AMERICAN PIE படம் பார்க்க தொடங்கியதும் ஒரு வெளி படுத்த முடியாத மகிழ்ச்சியோடு படம் பார்த்தேன்.என்ன இது இதை ஆற்றி எல்லாம் கூடவா படத்தில் சொல்வார்கள்.இதற்க்கு முன் இதை பற்றி எல்லாம் பேசிய படம் இல்லையே என்று ஆச்சர்யத்துடன் படம் பார்த்தேன்.அப்போது என்  நண்பன் இந்த படம் மூன்று பாகங்கள் கொண்டது என்றும் அந்த படங்களும் உள்ளது என்று சொன்னான்.அடுத்த சில நாட்களில் அவற்றையும் அவன் புண்ணியத்தில் பார்த்தேன்.

அதன் பின் நான் ஆங்கில படங்களை தொடர்ச்சியாக தேடி தேடி பார்க்க தொடங்கியது 2007 முதல் தான்.அப்போது ஒரு டி.வி.டியில் ஆறு AMERICAN PIE படங்களையும் விற்றார்கள்.அதை வாங்கி தினமும் ஒரு படமாக திகட்ட திகட்ட பார்த்து முடித்தேன்.எது எந்த படத்தில் என்ன காட்சி என்பவை கூட ஞாபகம் இல்லாதபடி பார்த்தேன்.2010 இல் ஆறாவது பகுதியாக  BOOK OF LOVE பார்த்தேன்.ஆனால் நான் பார்த்த புதிய நான்கு  படங்களிலும் பழைய நடிகர்கள் இல்லை.நாயகனின்  அப்பா மட்டும் சில படங்களில்  வந்தார்.அதோடு சமீபத்தில் பதிவர் ஹாலிவுட் ரசிகன் இந்த புதிய AMERICAN REUNION பற்றி எழுதியதால் தான் அடுத்த பகுதி வந்ததே தெரியும்.சென்ற வாரா இறுதியில் படம் பார்த்தேன்.


கதை என்றால் திசைக்கு ஒருவராய் பிரிந்து விட்ட நண்பர்கள் 13 ஆண்டுகளுக்கு பின் நால்வர் (எப்போதும் வம்பில் சிக்கும் STIFLER தவிர ) மீண்டும் சந்தித்து ஒரு வார இறுதியை கொண்டாட முடிவெடுக்கின்றனர்.விதி விட்டதா STIFLER தற்செயலாக அவர்களுடன் சேர்கிறான்.மற்றவர்கள் ஒரு வித சங்கடத்துடன் அவனை சேர்த்து கொள்கிறார்கள்.(முந்தய படங்கள் பார்த்தவர்கள் STIFLER செய்யும் அட்டகாசங்கள் அறிந்திருப்பார்கள்)இனி என்ன ? அடுத்தடுத்து அவன் செய்யும் வம்புகளில் சிக்கி ஒவ்வொருவரும் அதில் மீள்கிறார்கள்.இதற்கிடையில் ஜிம்மின் தாய் இறந்து விட்டதால் துணை இன்றி தவிக்கும் அவன் தந்தைக்கு ஒரு கம்பெனி கிடைக்க அவரையும் பார்ட்டிக்கு அழைத்து வருகிறார்கள்.அப்புறம் ஒரே கூத்துதான் .நால்வருடைய  துணைவிகளும் கோபித்து கொள்கிறார்கள் பின் சமாதானம் அடைகிறார்கள்.

முதல் மூன்று படங்களுக்கு பின் இந்த படம் தான் ஓரளவு திருப்தி தருகிறது.எல்லாருமே அருமையாய் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் அடுத்த பகுதி என்றால் என்ன எதிர் பார்த்து வருவார்கள் என்பதை நன்கு உணர்ந்து தந்திருக்கிறார்கள்.சிலர் ரொம்பவும் வயதாகி போனது போல் தெரிகிறார்கள்(நாயகி).இந்த படம் போல் நம்மூரில் படம் எடுத்தால் ? ஊஹும் .பாய்ஸ் படத்துக்கே துரத்தி துரத்தி அடித்தவர்கள்.

ஜாலியாக ஒரு வார இறுதி நாளில் ஒரு படம் பார்க்கலாம்,சிரிக்கலாம்  என்றால் ஓகே .

இந்த செக்ஸ் காமெடி வகை படங்கள் பிடிக்கும் என்றால் நான் பரிந்துரைக்கும் படங்கள்:
ROAD TRIP (2000),EURO TRIP(2004),MILF (2010),OLD SCHOOL (2003),SEX DRIVE (2008).
மேலும் DOWNLOAD செய்பவர்கள் UNRATED VERSION இருந்தால் அதை பதிவிறக்குங்கள்.

Thursday, 13 September 2012

T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை -PART 2

T20 உலக கோப்பை அணிகள் -பாகம் 2

கிரிக்கெட் மோகம் குறைந்து விட்டதா தெரியவில்லை.தமிழ் படங்கள் பற்றி எழுதினால் மட்டுமே அதிகம் பேர் படிக்கிறார்கள்.ஆங்கில படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.நான் கிரிக்கெட் பற்றி எழுதிய முதல் முழு பதிவு சென்ற t20 உலக கோப்பை அணிகள் பற்றிய பதிவு. மிக குறைந்த பேரே படித்துள்ளார்கள்.சரி படிப்பவர்களுக்காக எழுதுவோம்.
சென்ற பதிவில் பாகிஸ்தான்,இலங்கை ,தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளின் நிலை பற்றி பார்த்தோம் .இனி 

AUSTRALIA : கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் அமெரிக்கா போல் யாரையும் ஜெயிக்க விடாமல் ஆளுமை செய்து வந்தது.நம் இந்திய கிரிகெட் போர்டு கிரிக்கெட் வியாபார வியாபார விஷயங்களில் மட்டும் அமெரிக்கா போல் இருக்கிறது.நம்மை பகைத்து கொள்ள எந்த கிரிக்கெட் போர்டும் தயார் இல்லை.ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்தியம் முடிந்து விட்டது .டெஸ்ட் ,ஒரு நாள் போட்டி போன்றவற்றை போல் அவர்கள் T20 போட்டிகளை அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. முதல் T20 உலக கோப்பை முதலே ஏனோ தானோ என்று ஆடி வருகிறார்கள்.அப்போவே அவர்கள் ஜிம்பாப்வே உடன் தோல்வி அடைந்து உள்ளார்கள்.தோல்வியை வெறுக்கும் அந்த அணியின் வீரர்கள் பொதுவாக வாய் சவடால் மூலம் தன்னோடு நன்றாக விளையாடும் வீரரை சாடுவார்கள்.மேக்ரத், பாண்டிங் எல்லாம் இந்த விஷயத்தில் கில்லாடிகள்.இப்போதுள்ள ஆஸ்திரேலியா T20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி  அணியில் இருக்கவே தகுதி இல்லாதவர்.அவரை போய் எப்படி கேப்டன் ஆகினார்கள் என்று ஆஸ்திரேலியாவிலேயே குழம்பி கொண்டிருக்கிறார்கள்.எந்த விதமான போட்டியிலும் சொல்லும்படி ஆடி இருக்காத அவர் கேப்டன்.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ளார்.நான்கு ஆண்டுகளில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடி உள்ளார்.தற்போதைய T20 ரேங்கிங்கில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதனால் கோபம் அடைந்த கேப்டன் "ரேங்கிங் சிஸ்டம் சரியில்லை.அப்போ அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வென்று விடும் என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்டு உள்ளார்.பதிலுக்கு அயர்லாந்து கோச் அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வெல்லும் என்று சொல்லி இருக்கிறார்.

SHANE WATSON: நம்பிக்கை அளிக்க கூடிய வீரர் என்றால் இவரை மட்டுமே சொல்லலாம்.காரணம் ஓரளவு CONSISTENT ஆக ரன் அடிப்பார்.எந்த விதமாகவும் ஆடக்கூடியவர்.பௌலிங் செய்வார்.கேப்டன் ஆக தகுதி உள்ளவர்.நீண்ட நாளாக அணியில் உள்ளவர்.

DAVID WARNER : நம் சேவாக் போன்ற ஆட்டக்காரர்.பட்டால் பாக்கியம்.அடித்தால் ஒரே அடி .இல்லையா .அவ்வளவுதான்.ஐ.பி.எல் போட்டியில் சதம் எல்லாம் அடித்து உள்ளார்.விரைவாக ஓடி பௌண்டரி தடுப்பதில் சிறந்தவர்.எப்போ அவுட் ஆவர் என்று சொல்ல முடியாது.
DAVID HUSSEY : உலகில் அதிக T20 போட்டிகள் விளையாடி இருப்பவர்.ஆள் ரவுண்டர் .விரைவாக ரன் அடிப்பார்.இறுதி ஓவர்களில் கை கொடுப்பார்.ஸ்பின் பௌலிங் போடுவார்.

ENGLAND: என்னதான் கிரிகெட்டின் தாயகம் என்று சொன்னாலும்,அதே பழைய டெஸ்ட் போட்டிகளின் பழக்கத்தில் இருந்து வர முடியாதவர்களாக இருக்கிறார்கள்.சமீப காலங்களாக பரவாயில்லை.பீட்டர்சன் கழட்டிவிட பட்டது பெரும் சரிவு.அவர்கள் பலத்தில் ஒரு 30% கழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.சென்ற முறை சாம்பியன் .அவர்கள் வென்ற ஒரே ICC TROPHY அது மட்டும் தான்.தற்போது ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ளனர்.பாப்போம்.
KIESWETTER : கீப்பர் .தொடக்க ஆட்டக்காரர்.இதுவரை ஓரளவு கை கொடுத்து உள்ளார்.கீப்பிங்கும் பரவாயில்லை.
GRAEME SWAN : பாகிஸ்தானின் அஜ்மலுக்கு பின் தற்போதைய சிறந்த சுழற பந்து வீச்சாளர்.இலங்கையில் போட்டிகள் நடப்பதால் இவர் பந்து வீச்சு கை கொடுக்கலாம்.பந்து வீச்சில் பெரிதும் இவரை நம்பி உள்ளது இங்கிலாந்து.மட்டையும் சுழற்றுவார்.
RAVI BOPARAA: நல்ல அனுபவம் உள்ளவர்.தேவைக்கு ஏற்ப மாற்றி ஆடுவார்.ஓரளவு ஸ்பின் தாக்கு பிடிப்பார்.மித வேக பந்து வீச செய்வார்.

INDIA :  ஒரு நாள் போட்டிகளின்  சாம்பியன் .கிரிக்கெட் பார்க்கும் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சேர்த்தால் அந்த அளவுக்கு இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.யாருமே எதிர்பார்க்கதபோது 2007 இல் முதல் t20 உலக கோப்பை கைப்பற்றியது.அனால் அதன் பிறகு அடுத்த இரண்டு உலக கோப்பைகளிலும் மோசமாக ஆடினார்கள்.இத்தனைக்கும்  கிரிக்கெட் உலகிற்கே  படியளக்கும் ஐ.பி.எல் வேறு நடத்துகிறோம்.கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவேளைக்கு பின் இலங்கையில் ஜூலையில் ஆடினோம் .அடிக்கடி இலங்கை செல்வதால் அந்த அணிக்கு பிறகு ஓரளவு பிட்ச்கள் பற்றி புரிதல் இருக்கும்.தோனி நேற்று "இலங்கை பிட்ச்கள் மாறி விட்டது.நான் ஆட தொடங்கிய 2005 காலங்களில் இருந்ததுபோல் இனி ஸ்பின் அங்கே உதவாது என்றும் ,இந்திய அணி யுவராஜ்,கோலி,ரெய்னா போன்ற பகுதி நேர பந்து வீச்சாளர்களை கொண்டே இறங்கும்.அதன் மூலம் ஏழு பாட்ஸ்மென்,நான்கு பவுலர் என்று இறங்குவோம் என்று கூறி இருக்கிறார்.
SEHWAG : ஒரு ஐந்து ஓவர் நின்று அடித்து கொடுத்து விட்டால் கூட போதும்.அதிலேயே போதுமான ரன் அடித்திருப்பார்.எல்லா வகையான போட்டிகளிலும் வேகமாகவே ஆடி வருவதால் T20 மோடு மாறுதல்  பிரச்சனை  இல்லை.தோனியோடு பிரச்சனை என்றதால் மட்டுமே மீடியாவில் பெயர் அடிபட்டது.மற்றபடி  சொல்லிகொல்லும்படி சமீப காலங்களில் ஆடவில்லை .தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

GAMBIR : சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறார்.கொஞ்சம் நம்பலாம்.இறுதி போட்டி போன்ற முக்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடுவார்.என்ன இவருக்கு எப்படி போட்டு அவுட் ஆக்கலாம் என்று சில அணிகள் தெரிந்து வைத்து கீபிங் கேட்ச் ஆக வைத்து விடுகிறார்கள்.

KOHLI : சினிமாவில் சூர்யா போல் தற்போதைய  ஹிட் இவர்.தொடுவதெல்லாம் ரன்.தன் LIFETIME FORM இல் இருக்கிறார்.தற்போதைய ஒரே நம்பிக்கை.பீல்டிங்கும் நன்றாக செய்வார்.என்ன ஆர்வ மிகுதியால் தன் கைக்கு வரும் பந்தை BATSMAN உள்ளே இருக்கனா வெளியே இருக்கனா என்று கூட கவனிக்காமல் ஸ்டாம்பில் அடித்து ஓவர் த்ரோ கொடுத்து விடுவார்.கவாஸ்கர் வர்ணனையில் அடிக்கடி கடிந்து கொண்டுள்ளார்.

YUVRAJ : புற்று நோயில் இருந்து குணமாகி நியூசிலாந்து போட்டியில் 34 ரன்கள் அடித்தார்.தோனி பெரிதும் நம்பும் ஐந்தாவது பந்து வீச்சாளர்.

RAINA : T20 வீரர் என்று சொல்லலாம்.சமீபமாக சரியாக ஆடவில்லை.ஆனால் டோனி இவரை நம்புகிறார்.

ROHIT SHARMA : ஏகப்பட்ட பேர்,வர்ணனையாளர்கள் ,மீடியா போன்றவை மிகவும் சப்போர்ட் செய்யும் வீரர்.சொல்லும்போதே MUCH TALENTED என்று சொல்லித்தான் சொல்வார்கள்.இருந்தும் தரப்பட்ட எக்கச்சக்க வாய்ப்புகளை  வீணடித்து உள்ளார்.இவரை போல் இன்னும் வாய்ப்பு கிடைக்கும் வீரர் இனி இருப்பாரா என்று சொல்ல முடியாது.

TIWARY : அதிகம் வாய்ப்பு கிடைக்காத வீரர்.கிடைத்த சில போட்டிகளில் நிருபித்து உள்ளார்.பாட்டிங் வரிசையில் கடும் போட்டி இருப்பதால் யாரவது சரியாக ஆடாவிட்டால்,காயம் ஏற்பட்டால் அணியில் இடம் பெறலாம்.

PATHAN: சில தொடர்காளாக நன்றாக விளையாடி வருகிறார்.பார்க்கலாம்.
ASHWIN: ஐ.பி.எல் போட்டிகளில் பந்து வீசி அனுபவம் உள்ளதால் நெருக்கடி தரலாம்.டோனி நம்பும் வீரர்.

ZAHEER: இருக்கும் ஒரே உலக தர பந்து வீச்சாளர்.T20 யில் பெரிதாக சாதித்ததில்லை.உலக கோப்பை முடிந்ததும் T20 யில் ஓய்வு பெறுவார் என்று சொல்கிறார்கள்.

BALAJI,DINDA,HARBAJAN  போன்றோர் இருக்கிறார்கள்.
DHONI: சென்னையில் நடந்த நியூசிலாந்து  போட்டியில் இவரது ஆமைவேக பாட்டிங்கினால் தோற்றோம்.இருந்தும் கை கொடுப்பார் என்று நம்பலாம்.இங்கிலாந்த் ,ஆஸ்திரேலியா தொடர்களில் தோற்றதால் நெருக்கடியில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அதன் பிறகு இலங்கையில் ஒரு நாள் தொடர் வென்று உள்ளோம்.இதில் தோற்றாலும் அவர் பதவி தப்பிவிடும்.

இதர அணிகள்: WEST INDIES அணியில் GAYLE,POLLARD,BRAVO ஆகியோருடன் SUNIL NARAINE அந்த நாளில் நன்றாக விளையாடினால் வெற்றி பெறலாம்.IRELAND, BANGLADESH போன்றவை அதிர்ச்சி தரலாம். AFGANISTAN அணியில் ஒரு பவுலர் பயங்கரமாக பந்து வீசுவதாக சொல்கிறார்கள்.
மற்றொரு சிறப்பு அம்சம் STAR CRICKET இல் ஒளிபரப்பாவது.அதில் கிரிக்கெட் பார்த்தல் தான் பிடிக்கிறது.மற்றவை இது போல் இல்லை.அதுவும் தூர்தர்ஷனில் பார்ப்பதை விட சும்மா இருக்கலாம்.

இந்த பதிவின் முதல் பாகம் லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/09/t20.html

Wednesday, 12 September 2012

T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :


T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :

இதோ மீண்டும் ஒரு உலக கோப்பை கிரிக்கெட் .இந்த முறை T20.இலங்கையில் நடக்க இருக்கிறது .செப் -18 அதாவது வரும்  செவ்வாய் தொடங்குகிறது.இப்போது நடக்க இருப்பது நான்கவது T20 உலக கோப்பை.கிரிக்கெட் என்றாலே இன்று (பலர்) பார்க்க விரும்புவது T20 மட்டும் தான்.காரணம் 3.30 மணி நேரத்தில் மொத்த போட்டியும் முடிந்து விடும்.சாவகாசமாக ஐந்து நாள் டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் வேகமாக  ஈர்ப்பு குறைந்து வருகின்றன.மேலும் பலமான அணியோ பலம் குறைந்த அணியோ அந்த நாளில் அந்த இருபது ஓவர்களில் பேட்டிங் ,பௌலிங் ,பீல்டிங் யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் ஜெயிக்க முடியும்.அதனால் தான் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை எளிதில் இதில் வீழ்த்தி உள்ளது.நம்மிடம் சுருண்டு வரும் நியூசீலாந்து இதுவரை நம்மோடு விளையாடிய அணைத்து (நான்கு) T20 போட்டிகளில் நம்மை வீழ்த்தி  உள்ளது.வேகம் வேகம் வேகம் இதுவே T20.

இதுவரை நடந்துள்ள மூன்று உலக கோப்பைகளில் இந்தியா,பாகிஸ்தான்,இங்கிலாந்த் இவை சாம்பியன் ஆகி உள்ளன.இந்த முறை அணிகள் நிலைமை ஒரு மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது.பல வீரர்கள் இப்போது இல்லை.பல புதிய வீரர்களை கொண்டு களம் இறங்குகிறது.மொத்த அணிகளை அலசுவதை விட குறிப்பிட்ட சில அணிகளை பற்றி அதன் பலம் பலவீனம் ,கவனிக்க வேண்டிய வீரர்கள்,வெற்றி வாய்ப்பு பற்றி பார்க்கலாம்.
SOUTH AFRICA
SRI LANKA
.PAKISTAN
AUSTRALIA 
ENGLAND 
INDIA 
மற்றும் இதர அணிகள் .
மேற்சொன்ன அணிகளை பற்றி ஒவ்வொரு பதிவிலும் பார்க்கலாம்.உலக கோப்பை தொடங்க இன்னும் ஆறு  நாட்களே உள்ள நிலையில் முதல் மூன்று அணிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

SOUTH AFRICA:
               எந்த ஒரு உலக கோப்பை தொடங்கும் போதும் வெல்ல வாய்ப்புள்ள அணியாக ,அதிகம் பேர் வெல்லும் என்று சொல்லும் அணியாக இருக்கும்.அவர்களும் அதற்க்கு ஏற்றாற்போல் முதல் ரவுண்டு தோல்வியே இல்லாமல் பெரும் வெற்றிகளோடு முழு புள்ளிகளோடு  அடுத்த சுற்றுக்கு வருவார்கள்.நாக் அவுட் ரவுண்டு தான் அவர்களுக்கு ஆப்பு வைத்து விடும்.அதுவும் எளிதாக வென்று விடுவார்கள் என்று தான் முதல் பாதி ஆட்டமும் இருக்கும்.ஆனால் எதோ ஒரு சாபம் அவர்களை தடுத்து விடுகிறது.ஒரு ICC CHAMPIONS TROPHY தவிர பெரிதாக எந்த ICC கோப்பையும் வென்றதில்லை.இந்த முறை பாப்போம்.
AB DEVILLERS : கேப்டன்.இவர் களத்தில் இருக்கும் வரை எந்த இலக்கும் முடியாதல்ல.முக்கிய விக்கெட் இவர்.சென்ற ஐ பி எல் போட்டியில் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஆட்டத்தை இவர் வென்று கொடுத்ததே சான்று.
HASIM AMLA : இவர் ஒரு டெஸ்ட் வீரர் என்று சொல்லலாம்.எப்படியோ அட்ஜஸ்ட் செய்துகொண்டு பால் -ரன் சரி செய்து விளையாடி விடுகிறார்.அச்சுறுத்தும் வீரர் என்று சொல்ல முடியாது.ஒரு பக்கம் நின்று விட்டால் அவ்வளவுதான்.அவுட் ஆக்குவது கஷ்டம்.ஜாக் காலிஸ் கூட இப்படிதான்.
JP DUMINY : ஐந்து அல்லது ஆறாவது களம் இறங்கும் வீரர்.விரைவாக ரன் அடிப்பார்.கிட்ட அடித்துவிட்டு ரெண்டு ரன்கள் ஓடிவிடுவார்.பௌலிங் செய்ய கூடியவர்.என்ன எப்போதும் ரன் அடிப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் தவிர்க்க முடியாதவர்.
DALE STEYN : டெஸ்ட் வீரர் தான்.ஒரு நாள் போட்டியில் கூட பரவாயில்லை .இவர் சாதனைகள் எல்லாம் டெஸ்டில் தான்.இருந்தாலும் இவர் பௌலிங் ரன் அடிக்க சிரமம் ஏற்படுத்தும்.

SRI LANKA :

அவர்கள் நாட்டில் உலக கோப்பை நடப்பது அவர்களுக்கு பிளஸ்.சென்ற ஒரு நாள்  உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றத்தில் இருந்து ரொம்பவும் அதிர்ச்சியில் இருந்தார்கள்.அந்த வெறி இருக்கும்.சரியான நேரத்தில் FORM வந்துவிடுவார்கள் .

DILSHAN: இவரை விக்கெட் எடுத்து விட்டால் பாதி வெற்றி.இதுவே போதும் இவர் பேர் சொல்ல.DILSCOOP என்று சொல்ல படும் இவர் கண்டுபிடித்த ஷாட் பால் செய்யப்பட்ட பின் கீப்பர் தலைக்குமேல் தூக்கி அடித்து பௌண்டரி அடித்து பந்து வீசுபரை வெறுப்பேற்றி விடும்.இவர் வீசும் பந்தும் சுலபமாக அடிக்க முடியாது.களத்தில் வெறியாக ஆடும் வீரர்.
JAYAWARDENE : கேப்டன் .பொறுப்பு ஒரு ரவுண்டு அடித்து மறுபடியும் இவரிடமே வந்து சேர்ந்து உள்ளது.கேப் பார்த்து பந்தை தள்ளி நோகாமல் ரன் எடுத்து விடுவார்.சாதுர்யமான வீரர்.பௌலிங் மாற்றம் ,பீல்டிங் மாறுதல் செய்வதில் வல்லவர்.
MALINGA : சிங்கம் மாதிரி சீறி வந்து யார்கர் போடுவார்.இன்னும் கூட நிறைய வீரர்கள் திணறி  வருவதை பார்க்கலாம்.இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் இன்று உலகிலேயே சிறந்த வீரர்.அவ்வபோது சிக்ஸர்களும்  பறக்கவிட்டு பாட்டிங்கிளும்  அசத்துவார்.

PAKISTAN: 
          அது என்னவோ தெரியவில்லை உலக கோப்பை என்றவுடன் என்கிருந்தோ அவர்களுக்கு தெம்பு வந்து விடுகிறது.பற்பல சர்ச்சைகள் சூதாட்டம்,மற்ற நாடுகள் அந்த நாட்டிற்கு போகாமல் இருப்பது போன்றவை சேர்ந்து அவர்களுக்கு தங்களை நிருபிக்கும் உற்சாகம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன் .பெரும்பாலும் செமி பைனல் கட்டத்தை அடைந்து விடுவார்கள்.கடந்த சில வருடங்களாக அவ்வளவாக டெஸ்ட் ஆடாமல் ஒருநாள் ,T20 ஆடி வருவதால் அதே மோடில் இருப்பார்கள்.அது ஒரு பிளஸ்.அவர்களின் பல வீரர்கள் வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று ஆட்டம் பழகி வந்ததும் ஒரு பிளஸ்.
AFRIDI : ஒரு நாள் போட்டியையே T20 போலதான் ஆடுவார்.ஒரு மூன்று ஓவர் நின்றால் கூட ஆட்டத்தின் போக்கே மாறி விடும்.பந்து வீச்சும் ரொம்ப டைட் லைன் .அடிப்பது கஷ்டம்.எதிர் அணியின் முக்கிய் விக்கெட் எடுத்து விடுவார்.SRILANKAN PREMIER LEAGUE ,BIG BASH உள்பட பல நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று அனுபவம் உள்ளவர்.
ABDUL RAZAQ :  நீண்ட வருடங்காக அணியில் உள்ளவர்.நடுவில் ICL போய் வந்தவர்.சில ஓவர்கள் பேட்டிங் ,சில ஓவர் பௌலிங் சில சிக்ஸர் இவை நிச்சயம் .இறுதியில் இவர் கட்டங்களில் இருந்தால் எந்த இலக்கையும் துரத்தலாம்.
SAEED AJMAL : உலகின்  தற்போதைய NUMBER : 1 சுழற் பந்து வீச்சாளர்.சுழற் பந்தை நான்கு சமாளிக்கும் ஆசிய அணிகளே இவர் பந்தை சமாளிக்க கஷ்டப்படுகிறார்கள்.மற்ற அணிகளை பற்றி சொல்ல வேண்டாம்.எதிர் அணிக்கு கடும் சவால் இவர் பந்துகள்.ரன் கொடுப்பதும் ரொம்பவும் குறைவு.கடைசி ஓவர்களில் ரொம்ப கஷ்டம்.

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்த் ,இந்திய மற்றும் இதர அணிகளின் தற்போதைய நிலைமை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Monday, 10 September 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4 


சென்ற ஹாரர் பதிவுக்கும்(பாகம் 3) இதுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் இடைவெளி.இன்று எழுதிவிடலாம் என்று தொடங்கினால் ,வேறு ஒரு விஷயம் பற்றி அப்போதே எழுதி ஆக வேண்டி இருக்கும்.அதனால் இந்த இடைவெளி. 2000 ஆண்டுக்கு பின் வந்த ஹாரர் படங்கள் பற்றி பார்க்கலாம்.ஒரு பெரிய மாறுதல் கண்டது இந்த காலங்களில்.பல யோசிக்க முடியாத கோணங்களில் ,தளங்களில் படங்கள் வர தொடங்கின .சாதரணமாக ஒரு பேய் வீடு ,அங்கே செல்லும் ஒரு குழு என்ற கதை எல்லாம் மலை ஏறி இருந்தது.

முதலில் சொல்ல வேண்டியது " FINAL DESTINATION " படம்.2000 மாவது ஆண்டு முதல் பாகம் வந்தது.நான் தொடர்ந்து ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கியது இந்த படம் பார்த்த பின் தான்.விமானத்தில் பறக்க இருக்கும் ஒருவன் அந்த விமானம் விபத்துக்குள்ளாவது போல் உணர்கிறான்.அதை அப்போது சொல்லும் போது நடந்த கை கலப்பில் இவனும் இன்னும் சிலரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார்கள்.சில நிமிடங்களில் பறக்க தொடங்கும் அந்த விமானம் வெடித்து சிதறுகிறது.மரணத்தை வென்ற அந்த சிலரை மரணம் மீண்டும் எப்படி துரத்தி கொள்கிறது என்பதே படம்."YOU CAN'TCHEAT THE DEATH " என்பதே படம்.இந்த கதை விமானத்தில் ,இதே போல் ஹைவே விபத்து,தீம் பார்க் விபத்து ,ரேஸ் களம் ,பிரிட்ஜ் என்று கலங்களை மாற்றி பல ஐந்து பாகங்களாக படம் வந்துள்ளது.எனக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரொம்ப பிடிக்கும்.படத்தின் தொடக்கத்தில் வரும் சாலை விபத்து உடலை வேர்க்க செய்யும்.
அந்த விபத்தின் வீடியோ காட்சி 


WRONG TURN படமும் குறிப்பிடும்  வெற்றியை பெற்றது.நர உணவு உண்ணும் சிலரிடம் மாட்டிகொள்ளும் ஐந்து பேர்.படம் முழுதும் இப்படி அப்படி நகர விடாத படம்.இதுவும் நான்கு பாகங்கள் வந்துள்ளது.THE OTHERS படமும் சொல்லவேண்டிய படம்.1940 களில் நடக்கும் கதை.ஒரு பெரிய தனியான மாளிகை.அங்கே கணவன் இல்லாமல் தன் குழந்தைகளோடு வசிக்கும் பெண்.குழந்தைகள் அடிக்கடி சில குழந்தைகளின் குரல்களை கேட்பதாக சொல்கிறார்கள்.ஆனால் இவளுக்கு கேட்கவில்லை.இப்படி செல்லும் படம் பெரும் அதிர்ச்சியை நமக்கு தந்து முடிகிறது.பல விருதுகளை வென்ற இந்த படம் 2001 இல் வெளி வந்தது.நம் SLUMDOG MILLIONAIRE இயக்குனர் டேனி பாயல் இயக்கி 2002 இல் வந்த 28 DAYS LATER படமும் வெற்றிபடமே. இங்கிலாந்து முழுதும் ஒரு வைரஸ் பரவி நகரே நாடே அழிகிறது.காரணம் ஒருவருக்கு தொற்றினால் அவர் வெறி ஏறி மற்றவர்களை கடிக்க துரத்துவார்கள்.உயிர் பிழைத்த சிலரின் போராட்டமே படம்.அதே கருவை கொண்டு அதன் தொடர்ச்சியாக 28 WEEKS LATER படமும் வந்தது.

ZOMBIE தளத்தை கொண்டு வெளி வந்த "SHAUN OF THE DEAD (2004) மாபெரும் வெற்றியும் விமர்சகர்களால் பாராட்டும் பெற்றது.அதே போல் ZOMBIE படங்களாக கொண்டு LIVING DEAD என்ற தொடர் படங்களாக வந்தன.அதே நேரம் ஒரு பெரிய தொடர் படத்துக்கான விதை விழுந்தது.அது தான் "SAW".கிட்டத்தட்ட நம் அந்நியன் போல் ஆனால் வேறு மாதிரி.உயிரின் அருமை தெரியாதவர்களை அவர்களுக்கு மரணத்தை நெருக்கமாக காட்டி கொள்வது அல்லது அதில் பிழைத்தவர்களை தன்னோடு வைத்துகொள்வது என்று இருப்பவன் ஜான்.இந்த படம் ஏழு பகுதிகளாக வந்து கலக்கியது.அதிலும் இன்னும் சிறப்பான விஷயமாக ஒவ்வொரு ஆண்டும் அதே அக்டோபர் கடைசி வெள்ளி அடுத்த பாகம் வெளிவரும் என்பது.அப்படி தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஏழு பாகங்கள் வந்தது.இன்றளவும் ஹரரர் franchaise படங்களில் அதிக வசூல் செய்துள்ள சாதனை படம் இது.

HOSTEL (2005) படமும் கவனிக்க தக்க வெற்றியை பெற்றது.நம்மில் பலருக்கு சிலர் மேல் தீராத  கோபம் இருக்கும்.அந்த ஆள் கையில் கிடைத்தால் என்னென்ன கொடுமைகள் செய்வீர்கள் ?ஆனால் எதுவும் செய்ய முடியாது.அதே கோபத்தை தீர்த்துக்கொள்ள வேறு ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு மனிதன் உங்களிடம் மாட்டினால் ? அவனை என்ன பண்ணினாலும் நீங்கள் பயப்பட தேவை இல்லை.அப்படி மாட்டிகொண்ட மூன்று நண்பர்களை பற்றி கதை.முதல் அரை மணி நேரம் என்ன படம் இது ஒருவேளை எதாவது X RATED படமா என்று சந்தேகம் வந்துவிடும்.அந்த அளவிற்கு காட்சிகள்.அதன் பின் கிட்டத்தட்ட படம் தொடங்கி முக்கால்  மணிநேரம் கழித்தே படத்தில் பரபரப்பு வரும்.படம் மூன்று பாகங்கள் .ஆனால் முதல் பாகம் போல் மற்றவை ஈர்க்கவில்லை.PARANORMAL ACTIVITY படம் பற்றி சொல்லவேண்டும்.உங்கள் வீட்டில் தனிமையில் தூங்கு கொண்டிருகிறீர்கள்.உங்களை சுற்றி ,அந்த அறையில் என்ன நடக்கும் ? நீங்கள் அதை பற்றி எப்போதாவது நினைத்ததுண்டா? அப்போது இந்த படம் பாருங்கள்.முடிந்தால் இரவில்.படம் எனக்கு எந்த பயத்தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை.சிலர் பயந்ததாக கேள்விபட்டேன்.

GRUDGE ,RING போன்ற சீன ஹர்ரர் படங்கள் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட்டன.மேலும் எழுபதுகளில் வந்த THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE ,THE LAST HOUSE ON THE LEFT போன்ற படங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றன.EVIL DEAD பட இயக்குனர் எடுத்த DRAG ME TO HELL, STEPHEN KING எழுதிய 1408 ,VACANCY போன்ற படங்கள் இந்த வருடங்களில் குறிப்பிட தக்கவை.மூன்று ஆண்கள் ,இரு பெண்கள் வாரா இறுதியை இன்பமாக கழிக்க ஆள் அரவமற்ற பகுதியில் யாரிடமோ அல்லது எதனிடமோ மாட்டிகொள்கிறார்கள்.இதே மைய கருத்தை கொண்டு குறைவான செலவில் குப்பையாக நிறைய படங்கள் வந்தன.வித்தியாசமான களத்தில் எடுக்க பட்டவை கவனிக்க வைத்தன.
ஹர்ரர் பட  முந்திய பகுதிகள் லிங்க்
பகுதி 1 -http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html
பகுதி 2-http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html
பகுதி 3-http://scenecreator.blogspot.in/2012/07/horror-3.html

Wednesday, 5 September 2012

முகமூடி- அத்தனை மோசமில்லை.


முகமூடி- அத்தனை மோசமில்லை.

முகமூடி பற்றி வெள்ளி கிழமை மதியம் முதலே பல எதிர்மறை விமர்சனங்கள்.படத்தை கிழித்து தொங்க விட பட்டது.நானும் ஆவலாக படித்தேன்.அதனால் படத்தை பார்க்கும் ஆவல் இல்லை.இத்தனைக்கும் மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே,யுத்தம் செய் இந்த இரு படங்களையும் அரங்கிற்கு சென்று பார்த்து இருந்தேன் .சித்திரம்  பேசுதடி இன்னும் பார்க்க வில்லை.நந்தலாலா எனக்கு பிடிக்க வில்லை.படம் ரொம்ப மோசம் இந்த ஆண்டு சகுனி ,பில்லா என்று ஏமாற்றும் படங்களின் வரிசையில் இந்த படம் என்று எழுதி இருந்தார்கள்.அதிலும் ஒரு பதிவர் தன் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மொக்கையான படம் என்று எழுதி இருந்தார்.அதனால் சனி ,ஞாயிறு இரு நாட்களும் படம் பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை.

ஆனால் திங்கள் கிழமை நான் செய்ய வேண்டிய வேலை ஒன்று தள்ளி போனதால் மிகவும் சோர்வுற்ற நான்,ஏதாவது படம் பார்க்க வெளியே போகலாம் என்று தோன்ற,சரி நல்லதோ கேட்டதோ முகமூடி பாப்போம் என்று சென்றேன்.மனதில் படம் பற்றி ஒரு மோசமான எண்ணமே இருந்ததால் எதுவும் எதிர்பார்க்கவில்லை.மார்வெல் காமிக்ஸ் போல் பெயர் போடுகிறார்கள்.படத்தின் கதை (?) பற்றி எல்லோரும் சொல்லி விட்டதால் இங்கே அதை பற்றி கூற தேவை இல்லை.ஆனால் படம் பற்றி சில விஷயங்கள் தோன்றின அதை இங்கே பதிவு செய்கிறேன்.
1. மிஷ்கின் முந்தய அஞ்சாதே ,யுத்தம் செய் போன்ற படங்களின் வெற்றிக்கு காரணம் அழுத்தமான சம்பவங்கள்.அது இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங்.

2. தேவை இல்லாத காட்சிகள் அதிகம் .முக்கியமாக ஜீவாவின் தாத்தா &  கோ செய்யும் சேஷ்டைகள். அதிலும் கிளைமாக்ஸ் எப்பா.அவற்றை முற்றிலும் இல்லாமல் ஜீவா,நரேன் தொடர்பான காட்சிகள் ,சூப்பர்மென் என்ற சொல்லும்படி ஏதாவது செய்ததாகவோ,நரேன் தொடர்பான காட்சிகள் குறைவு.இவையே படத்தை இறக்கி விடுகின்றது.

3. திடீர் என்று மொத்த காவல்துறையும் முகமூடி தான் ஒரே கதி என்று சரண் அடைவது.எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடிய வில்லை.அதற்கான எந்த காட்சியும் படத்தில் இல்லை.ஒரு வேலை இருந்து பட நீளம் கருதி வெட்டி விட்டார்களா? 

4.இறுதி காட்சியில் நரேன் சூப்பர் ஹீரோக்களை பட்டியல் இடுவது ஏன்? ஒரே எரிச்சல் .அதுவும் இரண்டு மூன்று முறை அதையே  சொல்லி.

5. படத்தின் முக்கிய அதுவும் கதையோடு முகமூடி -கொள்ளை கூட்டம் தொடர்பான அழுத்தம் இல்லை.

6.இசை  மிகவும் அருமை.பின்னணி இசை அருமை. படம் முழுதும் guitar ,வியலின் தான் ஆக்கிரமித்து உள்ளது.

7. படம் 2.42 நிமிடம் ஓடுகிறது .அதில் முக்கிய காட்சிகள் என்றால் ஒரு மணி நேரம் தான். மற்ற காட்சிகள் படத்தை நகர்ததான்.இது நிறைய படங்களில் உண்டு என்றாலும்.இந்த படத்திற்கு அவசியம்.

8.மிஷ்கின் இந்த படத்தை சூப்பர் ஹீரோ படம் என்று சொல்லி இருக்க தேவை இல்லை.அதற்க்கான காட்சிகளும் இல்லை.அவர் ஒரு வித தெளிவில்லாமல் ,முடிவு இல்லாமல் எடுத்திருக்கிறார்.ஆனால் கொஞ்சம் டின்கேரிங் பார்த்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.ஆனால் அவரிடம் விஷயம் தீர்ந்து  போச்சு ,இனி அவ்வளவுதான் என்று சொல்லவதை   ஏற்க முடியாது.

தொடர்ந்து ஆங்கில படங்கள் பார்பவர்கள் அதுவும் எல்லா சூப்பர் ஹீரோ படங்கள் பார்பவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்காது.ஆனால் மிஷ்கின் எடுத்த அடுத்த  படம் என்று நினைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.ஆனால் அதிலும் சென்ற படங்களில் இருந்த நீட்நெஸ் இல்லை.மொத்தத்தில் ரொம்பவும்  மட்டமாக நினைத்து கொண்டு போனேன்.ஆனால் அந்த அளவு மோசம் இல்லை.சகுனி ,பில்லா போன்ற படங்களுக்கு பரவில்லை.இது என் கருத்து .பலர் வேறு படலாம்.

முகமூடி- அத்தனை மோசமில்லை.

Sunday, 2 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி ?


நீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி ? 

இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரும் என்று எங்க வாய்த்த பட பாடல்கள் என்றால் அது "நீதானே என் பொன்வசந்தம் " படத்தின் பாடல்கள் தான்.காரணம் சொல்ல தேவை இல்லை. தன் படங்களுக்கு சிறந்த இசை பெற்று விடும் ,இசை அறிவு உள்ள இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் முதல் முறையாக இளையராஜாவுடன் இணைவது.அதுவும் அவர்கள் பட இசை தொடர்பாக டி.வியில் உரையாடியதை பார்த்தவுடன் இன்னும் ஆவல் அதிகம் ஆனது.சரியாக சொன்னால் ஆகஸ்ட் 15 அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது .செப் -1 பாடல் வெளியீடு என்று சொல்ல பட்டது.அன்று முதல் தினமும் அதை பற்றி எண்ணுவதுண்டு.

கடந்த மூன்று நாட்களாக சென்னை நகரம்  முழுதும் பட இசை தொடர்பாக போஸ்டர்கள்.அதை பார்த்தே மனம் துள்ளியது.ஒரு மணி நேர பயணத்தில் கண்ட போஸ்டர்களிலேயே மனம் லயித்து இருந்தேன்.வேறு சிந்தனைகளே இல்லை.இப்படி இருக்குமோ ,இல்லை இது போல்  இருக்குமோ? செப் 1 இசை வெளியீடு என்றால் எப்போது இணையத்தில் கிடைக்கும்.? அன்றேவா ? மறுநாளா? பல கேள்விகள்.

இன்று செப்டம்பர் -1 காலை கணிப்பொறியை இயக்கியவுடன் பாடல்கள் பதிவேற்றி உள்ளதை கண்டு என் காத்திருப்பு முடிந்தது.பதிவிறங்கும் நிமிடங்களுக்காக காத்திருந்தேன்.முடிந்தது.மொத்தம் எட்டு பாடல்கள்.ஒவ்வொன்றாக கேட்டேன்.இந்த பதிவை எழுதும் வரை மூன்று முறை கேட்டேன்.
1.காற்றை கொஞ்சம் : நான நான நனனா என்ற ஹம்மிங் உடன் தொடங்கும் போதே ராஜா தெரிகிறார்.கார்த்திக் சிறப்பாக பாடி உள்ளார்.80 களில் ராஜாவின் பாடல்களை நினைவு படுத்தும் பாடல்.
2.முதல் முறை : ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும் நீதானே என் பொன் வசந்தம் என்று வந்த பின் பிடித்து அடுத்த முறை கேட்க்கும் போது பிடித்து விட்டது.
3.சாய்ந்து சாய்ந்து : யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள பாடல்.இன்றைக்கெல்லாம் கேட்கலாம்.பாடலின் நடுவில் வரும் வியலின் துள்ள வைக்கிறது.
4.என்னோடு வா வா : மறுபடியும் கார்த்திக் .துள்ளலான பாடல்.orchestration அருமை.

மேலே சொன்ன நாளும் பிடித்து போனவை.

பெண்கள் என்றால் பொய் - பாடல் காதல் சோக பாடல் போல் உள்ளது.படம் வந்து படத்தோடு பார்த்தால் பிடிக்கலாம்.
சற்று முன் : கொஞ்சம் ஈர்ப்பு குறைவான  பாடல்.
வானம் மெல்ல : எனக்கு இளையராஜா குரல் சலித்து விட்டதால் பிடிக்க வில்லை.இருந்தாலும் மோசமில்லை.ராஜா பாடியதால் எனக்கு பிடிக்க வில்லை. வேறு யாரவது பாடி இருந்தால் நன்றாக இருக்கும்.

திருஷ்டி பாடல் என்றால்- பிடிக்கலே மாமு. இதை எப்படி கவுதம் ஓகே செய்தார் என்று புரியவில்லை.

மொத்தத்தில் ஒரு 75% திருப்தி அடைந்து விட்டதாகவே நினைக்கிறன்.அதுவும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களின் டெம்ப்ளட் பாடல்கள் கேட்டு காது வலி வந்த நேரத்தில் . கவுதம் " நீதானே என் பொன் வசந்தம் " பட பாடல்கள் ராஜா genre .என்று சொன்னார்.பொய் இல்லை.அடுத்த சில வாரங்களுக்கு இது தான் எனக்கு .