Pages

Wednesday, 26 September 2012

CANNIBAL HOLOCAUST - 18+ படம் :


CANNIBAL HOLOCAUST - 18+ படம்  : 

நீங்கள் HOSTEL ,WRONG TURN போன்ற படங்களை பார்த்ததுண்டா? அது போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படம் அந்த படங்களை விட நான்கு மடங்கு கோரம் நிறைந்ததாக இருக்கும் .பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.உலகின்  மிக கோரமான படத்தை நீங்கள் பார்க்க போவதில்லை அவ்வளவுதான்.என்ன ரொம்ப பில்ட் அப் தரேனா? 

உலகின் மிக மோசமான ,கொடூரமான காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லலாம்.MOST CONTROVERSIAL FILM EVER MADE என்று சொல்லப்பட்டு வரும் படம்.படம் பல நாடுகளில் தடை செய்ய பட்டுள்ளது .இன்றும் தடை உள்ளது.படம் வெளியான நேரத்தில் இந்த பட இயக்குனர் RUGGERO DEODATO மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யபட்டார்.அவர் மீது சொல்ல பட்ட குற்றம் "SNUFF FILM" எடுத்துள்ளார் .மேலும் படத்தில் உண்மையிலேயே நான்கு நடிகர்கள் கொல்லபடுகிறார்கள் என்பதே.கோர்ட்டில் இயக்குனர் மறுத்தாலும் அந்த நால்வரையும் அவரால் கோர்ட்டில் தோன்ற வைக்க முடியவில்லை.காரணம் அவர்கள் முன்பே தயாரிப்பு மற்றும் இயக்குனரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு வெளியே தலை காட்ட கூடாது ,அதாவது வேறு படங்களிலோ ,பட விளம்பர நிகழ்ச்சிகளிலோ,மீடியா முன்  தோன்ற கூடாது என்பது.காரணம் நிஜ FOUND FOOTAGE பிலிம் என்று விளம்பர படுத்த பட்டதால். இதனால் மேலும் சிக்கலாகி போனது.ஒப்பந்தத்தை ரத்து  செய்து அவர்களை தொலை காட்சியில் காட்டிய  பின் தான் அவரால் வெளியே வர முடிந்தது.இருந்தாலும் படத்தை வெளியிட தடை விதித்து விட்டார்கள்.

மேலும் படத்தில் கொள்ளப்படும் மிருகங்கள் நிஜமாக கொள்ளபடுகின்றன என்பதை இயக்குனர் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆமை உயிரோடு கொல்லப்பட்டு கிழிக்கப்பட்டு உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கபடுவதை சாவகாசமாக காட்டுவார்கள்.ஒரு காட்டு குரங்கை பிடித்து தலையின் மேல் பாகத்தை மட்டும் வெட்டி அதை தலை கீழாக அழுத்தி ரத்தத்தை பிடித்து குடிப்பார்கள்.ஒரு பன்றியை நிஜமாகவே சுடுவார்கள்.இப்படி பல கண்றாவிகள்.

சரி மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.இவ்வளவு கொடூரங்கள் இருக்கும் படத்தின் கதை தான் என்ன? நான்கு ஆண்கள் ,ஒரு பெண் கொண்ட ஒரு பட குழு டாகுமெண்டரி எடுக்க அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரில் ஒரு குழுவை பற்றி ஆராய்ச்சி செய்ய காட்டின் உள்ளே போகிறார்கள்.போனவர்கள் திரும்ப வராததால் அவர்களை தேடி ஒரு ப்ரோபெசர் புறப்படுகிறார்.அங்கே அந்த பழங்குடியினரை சந்திக்கிறார்.தான் தேடி வந்த பட குழு இந்த பழங்குடியினருக்கு பெரும் கொடுமை செய்திருப்பதை அறிந்து கொள்கிறார்.மெல்ல அவர்களோடு பழகி அந்த பட குழு கொள்ள பட்டு விட்டதை தெரிந்து கொள்கிறார்.அவர்கள் ஷூட்செய்த வீடியோவை அவர்களிடம் இருந்து பெற்று திரும்புகிறார்.தன் அதிகாரிகளுக்கு அந்த பட குழு செய்த கொடுமைகளை அந்த வீடியோ மூலம் தெரிய படுத்துகிகிறார்.

படம் பார்பவர்கள் சகிக்க முடிய வில்லை என்றால் அந்த வீடியோ கிடைக்கும் காட்சியுடன் படத்தை நிறுத்தி விடுங்கள்.மேற்கொண்டு பார்க்க வேண்டாம்.அதற்க்கு மேல் வருபவை எல்லாம் கொடுமையின் உச்சம்.படத்தின் தரம் நிஜ டாகுமெண்டரி போன்ற உணர்வை தரும்.நாகரீகம் அடைந்தாலும் நாமும் காட்டு மிரண்டிகளே என்பதே படம் சொல்வது.படத்தில் நிறைய 18+ காட்சிகள் உண்டு.அதை நாம் அப்படி நினைத்து கொண்டு பார்க்க முடியாது.படத்தை பற்றி எனக்கு சொன்ன மலர்வண்ணன் ,கிரி இருவருக்கும் நன்றிகள்.

9 comments:

 1. இந்தப் படம், Cannibal Ferox எல்லாமே இந்தக் கேடகரி தான். கருமம் ... கருமம். ரெண்டு நாளைக்கு விரதம் இருக்க விரும்புறவங்க பார்க்கலாம்.

  அப்படியே A Serbian Filmனு ஒரு படம் இருக்கு. பார்த்துட்டு சொல்லுங்களேன். :)

  ReplyDelete
  Replies
  1. serbian film ஏற்கனவே பார்த்துவிட்டேன் நண்பரே.

   Delete
 2. I watched this Movie.. Very Violent!! Ayyo..

  ReplyDelete
 3. ஆமாம் ... நானும் பார்த்திருக்கிறேன் ...இதே போன்று வேறு மூன்று பாகங்களும் வந்திருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அந்த படங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்கோ படித்தேன்.தெரியவில்லை.இருந்தாலும் இனி இது போன்ற படங்கள் பார்க்க கூடாது என்று நினைக்கிறன்.நன்றி முத்து விநாயக்.

   Delete
 4. எங்கள் அந்தனி ஹொப்கிங்சு கலைநயத்துடன் வன்முறை செய்யும் ஹனிபல் படங்களைப் பார்த்தாலே எனக்கு காட்சட்டை ஈரமாகிவிடும் இதில் இந்தப படங்களையும் பார்க்க முடியுமா?? என்னவோ போங்க பாஸ் ;)

  ஹாலிவூட் பார்வை

  ReplyDelete
 5. இந்த படத்தில் வரும் அந்த கொடூர காட்சிகள் எல்லாம் உண்மையில் நடப்பவை போல தான் இருக்கும். இந்த மாதிரி கொடூர திரைபடங்களை நிறைய பார்த்து இருந்தாலும், எனக்கு பிடித்தது A Serbian Film தான்.

  ReplyDelete
 6. நன்றி நவிழலில் எம்பேர போட்டுக் கொடுத்துட்டீங்களே...
  கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட்டை கழட்டாம சுத்தணும் போல..

  ReplyDelete