Pages

Sunday 2 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி ?


நீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி ? 

இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரும் என்று எங்க வாய்த்த பட பாடல்கள் என்றால் அது "நீதானே என் பொன்வசந்தம் " படத்தின் பாடல்கள் தான்.காரணம் சொல்ல தேவை இல்லை. தன் படங்களுக்கு சிறந்த இசை பெற்று விடும் ,இசை அறிவு உள்ள இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் முதல் முறையாக இளையராஜாவுடன் இணைவது.அதுவும் அவர்கள் பட இசை தொடர்பாக டி.வியில் உரையாடியதை பார்த்தவுடன் இன்னும் ஆவல் அதிகம் ஆனது.சரியாக சொன்னால் ஆகஸ்ட் 15 அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது .செப் -1 பாடல் வெளியீடு என்று சொல்ல பட்டது.அன்று முதல் தினமும் அதை பற்றி எண்ணுவதுண்டு.

கடந்த மூன்று நாட்களாக சென்னை நகரம்  முழுதும் பட இசை தொடர்பாக போஸ்டர்கள்.அதை பார்த்தே மனம் துள்ளியது.ஒரு மணி நேர பயணத்தில் கண்ட போஸ்டர்களிலேயே மனம் லயித்து இருந்தேன்.வேறு சிந்தனைகளே இல்லை.இப்படி இருக்குமோ ,இல்லை இது போல்  இருக்குமோ? செப் 1 இசை வெளியீடு என்றால் எப்போது இணையத்தில் கிடைக்கும்.? அன்றேவா ? மறுநாளா? பல கேள்விகள்.

இன்று செப்டம்பர் -1 காலை கணிப்பொறியை இயக்கியவுடன் பாடல்கள் பதிவேற்றி உள்ளதை கண்டு என் காத்திருப்பு முடிந்தது.பதிவிறங்கும் நிமிடங்களுக்காக காத்திருந்தேன்.முடிந்தது.மொத்தம் எட்டு பாடல்கள்.ஒவ்வொன்றாக கேட்டேன்.இந்த பதிவை எழுதும் வரை மூன்று முறை கேட்டேன்.
1.காற்றை கொஞ்சம் : நான நான நனனா என்ற ஹம்மிங் உடன் தொடங்கும் போதே ராஜா தெரிகிறார்.கார்த்திக் சிறப்பாக பாடி உள்ளார்.80 களில் ராஜாவின் பாடல்களை நினைவு படுத்தும் பாடல்.
2.முதல் முறை : ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும் நீதானே என் பொன் வசந்தம் என்று வந்த பின் பிடித்து அடுத்த முறை கேட்க்கும் போது பிடித்து விட்டது.
3.சாய்ந்து சாய்ந்து : யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள பாடல்.இன்றைக்கெல்லாம் கேட்கலாம்.பாடலின் நடுவில் வரும் வியலின் துள்ள வைக்கிறது.
4.என்னோடு வா வா : மறுபடியும் கார்த்திக் .துள்ளலான பாடல்.orchestration அருமை.

மேலே சொன்ன நாளும் பிடித்து போனவை.

பெண்கள் என்றால் பொய் - பாடல் காதல் சோக பாடல் போல் உள்ளது.படம் வந்து படத்தோடு பார்த்தால் பிடிக்கலாம்.
சற்று முன் : கொஞ்சம் ஈர்ப்பு குறைவான  பாடல்.
வானம் மெல்ல : எனக்கு இளையராஜா குரல் சலித்து விட்டதால் பிடிக்க வில்லை.இருந்தாலும் மோசமில்லை.ராஜா பாடியதால் எனக்கு பிடிக்க வில்லை. வேறு யாரவது பாடி இருந்தால் நன்றாக இருக்கும்.

திருஷ்டி பாடல் என்றால்- பிடிக்கலே மாமு. இதை எப்படி கவுதம் ஓகே செய்தார் என்று புரியவில்லை.

மொத்தத்தில் ஒரு 75% திருப்தி அடைந்து விட்டதாகவே நினைக்கிறன்.அதுவும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களின் டெம்ப்ளட் பாடல்கள் கேட்டு காது வலி வந்த நேரத்தில் . கவுதம் " நீதானே என் பொன் வசந்தம் " பட பாடல்கள் ராஜா genre .என்று சொன்னார்.பொய் இல்லை.அடுத்த சில வாரங்களுக்கு இது தான் எனக்கு .

9 comments:

  1. இன்னும் பாட்டு கேட்கல தல...இன்னைக்கு டவுன்லோட் பண்ணி கேட்க வேண்டியது தான்..

    ReplyDelete
  2. இளையராஜா ஏமாற்ற மாட்டார் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்... நல்லதொரு அலசலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. மணிமேகா2 September 2012 at 15:54

    மொக்கை ராசா.... ஏமாற்றி விட்டார். இதுவரை எந்தப் பாடலும் மனதில் ஒட்டவில்லை.

    ReplyDelete
  4. நல்ல பாடல்கள்

    ReplyDelete
  5. என்னோடு வா வா பாடலை தவிர மற்றதெல்லாம் வேஸ்ட்.
    இதற்க்கு ஒரு இளையராஜா தேவை இல்லை என்பதே எனது கருத்து.
    நெசமாலுமே இளையராஜா போட்ட இசையா அல்லது மகன்கள் போட்டதா?
    ஆண்டவனுக்கே வெளிச்சம்.
    ஏ..................மாற்றிவிட்டார்.

    ReplyDelete
  6. அடப்போங்காப்பா ஓவராத்தான் பில்டப்பு குடுத்து கடைசியில கழுத்த அறுத்துட்டாங்க... நான் கூட பழைய இளையராஜா பாட்டு போல இருக்கும்னு நெனச்சேன்..ம்ஹும் என்னோடு வா வா அப்படீங்கிற பாட்டு நல்லா இருக்கு.. இளையராஜா எதோ வித்தியாசாமா பண்றதா நெனச்சு சொதப்பிட்டாரோன்னு தோணுது..பேசாம ஹாரிஸ்சே பாட்டு போட்டுருக்கலாம்..இளையராஜா இனிமேவாவது பாடறத நிறுத்திக்கறது தமிழ்நாட்டுக்கே நல்லது. அப்புடியே ஒங்க புள்ள யுவனையும் கொஞ்சம் நிறுத்தச்சொலுங்க இசைஞானி அவர்களே.. கேட்க பயங்கரமா இருக்கு.

    ReplyDelete
  7. சாய்ந்து சாய்ந்து பாடல் .. மட்டும் நன்றாக உள்ளது .. இளயராஜா ஏமாற்றி விட்டார்

    ReplyDelete
  8. கவ்தாம் .. நீங்கள் ஹாரிஸ் உடன் மட்டும் உங்கள் கலை சேவை தொடருங்கள் .

    ReplyDelete