Pages

Saturday, 20 April 2013

404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


பேய் படத்தில் இவ்வளவு விஞ்ஞான மருத்துவ விஷயங்களா? இது உண்மையில் பேய் படம் தானா ? அப்படி நினைத்து தான் பார்க்க தொடங்கினேன்.ஆனால் அதிகம் பயமுறுத்தாமல் பல ட்விஸ்ட் மூலம் நம்மை ஆச்சர்யபடுத்திவிடுகிரார்கள்.ஆனால் HORROR படம் இல்லை. PSYCHOLOGICAL THRILLER வகை படம். 
2011 இல் வந்த இந்த படத்தில் தெரிந்த முகங்கள்  யாரும் இல்லை. 

ஒரு மருத்துவ கல்லூரி .அங்கே முதலாம் ஆண்டு படிக்க வருகிறான் நாயகன் அபிமன்யு சுருக்கமாய் அபி.அங்கே சீனியர் மாணவர்கள் பலமாக ராக்கிங் நடக்கிறது.இவனும் சிக்குகிறான்.அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கிறான்.அங்கே விடுதியின் 404 ஆம் எண் அறை யாருக்கும் தராமல் பூட்டபட்டு இருப்பதை பார்கிறான்.அந்த அறையில் 3 வருடங்களுக்கு முன் படித்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் ஆவி அந்த அறையில் இருப்பதாய்  சொல்ல படுகிறது.அதை மறுத்து அந்த அறையை தனக்கு தருமாறு கேட்கிறான்.

ஆனால் தர மறுக்க படுகிறது.கல்லூரியில் ஆசிரியிராகவும் பெரிய எழுத்தாளராகவும்,பெரிய மேதையாக இருப்பவர் அனிருத் .அவரும் அந்த கல்லூரியில் பணிபுரிகிறார்.அந்த 404 அறையை அபி கேட்பதை தெரிந்து அதை அவனுக்கு தருமாறு பரிந்துரைக்கிறார்.அவனுக்கு அந்த அறை  கிடைக்கிறது.அடுத்த சில நாட்களில் மீண்டும் ராகிங் .அவன் அந்த அறையில் இருப்பதாய் தெரிந்த சீனியர் ஒருவன் அபியிடம் அவன் அறையில் இறந்தவனை பற்றி முழு விபரமும் அபி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை பார்க்கும்போது கேட்பேன் என்றும் சொல்கிறான்.


அபி சீரியசாக இறந்தவனை பற்றி தெரிந்து கொள்கிறான்.அப்போது தொடங்குகிறது பிரச்சனை .அந்த அறையில் இவன் கண்களுக்கு இறந்தவன் தெரிய தொடங்குகிறான்.இவனிடம் அவ்வபோது பேசுகிறான்.இவனுக்கு உதவ வருகிறார் அந்த ஆசிரியர் அனிருத் .உண்மையில் அவன் பார்ப்பது இறந்தவன் தானா? என்று பல பல அதிர்சிகளை நமக்கு தருகிறார்கள்.மனித மனம் பற்றி டாக்டர் அனிருத் சொல்லும் விஷயங்கள் அருமை.நம் மாதவன் நடித்த எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் DR.அணிருதாக நடித்துள்ளார்.அதிலும் கடைசி 5 நிமிடம் .CLASS

எனக்கு தெரிந்து இந்த படம் எந்த ஆங்கில உலக படத்தின் காப்பியும் இல்லை. ஒரு துணிச்சாலான ,புத்திசாலிதனமான படம்.கொஞ்சம் வித்யாசமான சில திடுக்கிடும் ட்விஸ்ட்கள் கொண்ட படம் பார்க்க விருப்பம் என்றால் நிச்சயம் பார்க்கலாம். இந்திய அளவில் ஒரு சிறந்த ,ORIGINAL ஆன கதையோடு கொண்ட ஒரு முயற்சி என்ற முறையில் இந்த படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

Monday, 15 April 2013

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா 

திரை படங்களில் கதை :
ஓர் திரை படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம்? அதானே உயிர்.ஒரு படம் உயிர் பெறுவது எப்படி.முதலில் கதையை எழுதி அதற்க்கு ஏற்றாற்போல் திரைக்கதை வடிவம் தந்து அதை முழுவடிவம் செய்து முடிப்பதே முதல் படியாக இருந்து வந்தது.இன்று வரும் படங்களில் கதை இருக்கிறதா?  கதை சரி இல்லை என்று தூக்கி எறியப்பட்ட படங்களை விடுவோம் .இன்று வெற்றி பெரும்  படங்களிலாவது கதை இருக்கிறதா?உதாரணதிற்கு 2012 மற்றும் 2013இல் இன்றுவரை வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டால்.2012 இல் ஹிட் துப்பாக்கி .சரி அதிலாவது ஆங்காங்கே குண்டு வைத்து நாட்டையே அதிர்சிக்குள்ளகும் தீவிரவாத குழுவுக்கு ஒரு ராணுவ வீரன் அந்த தீவிரவாதிகளுக்கே அதிர்ச்சி கொடுத்தால் ? என்ற ஒரு கரு இருந்தது.மற்ற படங்களான ஒரு கல் ஒரு கண்ணாடி ,கலகலப்பு போன்ற படங்களில் எதோ ஒரு வரி கதை அதை சுற்றி சில நகைச்சுவை காட்சிகள் அவ்வளவே படம்.அதில் சமீப வரவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் சேர்ந்துள்ளது.படமும் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில் இது மேலும் இதுபோல் கதை இல்லாத படங்கள் அதிகம் வருவதற்கான அபாய நிலையை அதிகம் ஆக்குமோ?

SPECIAL 26: 
HEIST வகை படங்கள் அதாவது கொள்ளையை மையமாக கொண்டு வரும் படங்கள் எனக்கு பிடிக்கும்.ஆங்கிலத்தில் நிறைய வருவதுண்டு.தமிழில் கலவையான "நாணயம் ",மங்காத்தா போல வெகு சில இருந்தாலும் இந்த SPECIAL 26 இந்திய அளவில் சமீப காலங்களில் வந்த சிறப்பான படம்.ரொம்ப நேர்த்தியாக இருந்தது.பிடித்த விஷயம் 1987இல் நடக்கும் கதை அதில் இந்த கால வேகமான எடிட்டிங் முறை இல்லாமல் இயல்பான எடிட்டிங் முறையில் படம் சீரான வேகத்தில் இருந்தது.போன வருடமே படம் வந்தாலும் இப்போது தான் பார்த்தேன்.காரணம் சப் டைட்டில் உடன் நல்ல பிரிண்ட் .

IPL COMEDY:
எந்த வித அதிர்சிகளும் இல்லாமல் ஏறகுறைய அதே 5அணிகள் தான் நன்றாக விளையாடி வருகிறார்கள் .சென்னை,மும்பை,பெங்களூர்,டெல்லி,கொல்கத்தா போன்றவற்றில் 4 அணி தான்  அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் இருக்ககூடும்.மற்ற ராஜஸ்தான்,பஞ்சாப்,பூனே,ஹைதராபாத் போன்றவை கடைசி இடங்களுக்கு வராமல் இருக்கத்தான் போட்டி .சன் நியூசில் தினமும் மாலை  6.30 பாஸ்கி ,நாணி போன்றவர்கள் IPL ஆட்டங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.சிலர் பார்த்திருக்கலாம். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சன் டிவியின் புத்தி காட்டி விடுகிறார்கள் .கோப்பையை வெல்ல கூடிய அணி அவர்களது சன் ஹைதராபாத் அணியாம் .இதை அவர்களை அவ்வபோது சொல்ல வைத்துவிடுகிறார்கள்.வெள்ளி கிழமை என்று நினைக்கிறன் யாரோ ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் வந்திருந்தார் அவரிடம் ஹைதராபாத் பற்றி கேட்க்க அவர் அது தேறாத அணி என்றதும் பாஸ்கி அவசரமாக பேச்சை மாற்றி தாவி விட்டார்.பார்க்க காமெடியாக இருந்தது.

வெறுப்பு ராஜா :
குமுதத்தில் இளையராஜா கேள்வி-பதில் சில மாதங்களாக வருகிறது..இதுவரை இளையராஜா பற்றி இருந்த எண்ணங்களை மாறிவிடுமோ என்று தோன்றுகிறது.ரஜினி,கமல்,பாரதிராஜா,எஸ்.பி.பி .ஜானகி ,பாலச்சந்தர் என யாரையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு பதில்களில் விளாசுகிறார்.எப்போது அந்த பகுதி நிறுத்துவார்களோ என்று காத்திருக்கிறேன்.

அஞ்சலியும் பதிவர்களும்:
நடிகை அஞ்சலி போனவாரம் முழுதும் பத்திரிக்கை ,செய்தி சேனல்களுக்கு ஒரு விஷயாமாக சிக்கினார்.பதிவர்களும் தங்கள் பங்கிற்கு அவ்வபோது செய்திகள் போட்டுக்கொண்டே இருந்தனர் சிலர் புலனாய்வு இதழ்கள் போல தலைப்பிட்டு பதிவுகள் தந்தனர். நேற்று பதிவர் இன்றைய வானம் எழுதிய பதிவு யோசிக்க வைத்தது.அது இங்கே 
-- http://indrayavanam.blogspot.in/2013/04/blog-post_8182.html

Tuesday, 2 April 2013

ஜகல்பந்தி ----விகடன் ஏப்ரல் பூல்,KD பில்லா எப்படி ,IPL 6


ஜகல்பந்தி ----விகடன் ஏப்ரல் பூல்,KD பில்லா எப்படி ,IPL 6

முன்பே அதாவது பதிவு எழுத தொடங்கிய போதே கேபிள்இன் கொத்து பரோட்டா ,வீடு திரும்பலின் வானவில் போல் பல விஷயங்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து அதே போல் ஜகல்பந்தி என்று பேர் எல்லாம் வைத்து ஜரூராக 2 வாரம் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறன்.அதோடு தொடர்ச்சியாக எழுத முடியவில்லை.இப்போது ஆசை .எத்தனை நாளோ தெரியவில்லை.


ஊடகங்களின் அலும்பு : சென்ற வார விகடனில் எப்போதும் வரும் இன்பாக்ஸ் பகுதியில் பல விஷயங்களை பற்றி சொல்லி இருந்தார்கள்.ஓவொன்றும் கொஞ்சம்   ஆச்சர்யம் தரும் விஷயங்கள் தான் .1.டிர்டி பிக்சர் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க மறுத்து வந்த நயன்தாராவை அஜித் அறிவுரை சொல்லி அந்த படத்தில் நடித்தால் நல்ல பேர் பெறுவாய் என்று சொல்லி அவரை நடிக சம்மதிக்க வைத்தாராம்.2.விஜயகாந்த் மகன் அறிமுகம் ஆகும் படத்தை சிங்கம் இயக்குனர் ஹரி இயக்குகிறார் .இப்படி சில செய்திகள்.இப்படி போட்டு பின் சிறிய எழுத்துகளில் 83ம்  பக்கம் பார்க்க என்று சொல்லி அந்த செய்திகள் எல்லாம் ஏப்ரல் பூல் ஆக்க போடப்பட்ட என்று இருந்தது.இது இப்படி இருக்க மறுநாள் முதலே பல சினிமா இணைய தளங்களிலும் ஏன் இப்போது டி.விக்களில் வழக்கமாகிவிட்ட சினிமா செய்திகளில் எல்லாம் கூட அந்த ஏப்ரல் பூல் செய்திகள் உண்மை என்று முழுதும் படிக்காமல் அப்படியே ஒப்பித்து விட்டார்கள்.உங்களில் பலரும் அந்த செய்திகள் பற்றி கேள்விபட்டிருக்கலாம். 

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் பற்றி எனக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருந்தது.காரணம் அந்த இயக்குனர் பாண்டிராஜின் பசங்க எனக்கு ஓகே என்ற அளவில் தான் பிடிக்கும் .வம்சம் பார்க்கவில்லை.மெரினா பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் கேடி பில்லா படம் வெளிவந்தது.கேபிள் ,சி.பி செந்தில் ,இன்ன பிற பதிவர்கள் படம் மொக்கை என்று சொல்லி விட்டனர்.ஆனாலும் வீடு திரும்பல் மோகன் சார் ,இன்னும் சிலர் சூப்பர் காமெடி என்று சொல்லிவிட்டதால் ஒரே குழப்பம் .எனக்கு ஓகே ஓகே பிடிக்கவில்லை .கலகலப்பு பிடித்தது.லட்டு பிடித்தது.ஒருவேளை நல்ல காமெடி படமோ ,நாம் பார்க்காமல் இருக்கிறோமோ என்று குழப்பம்.

என்ன எதற்கென்று தெரியவில்லை சிலரை பார்த்தாலே பிடிக்காது.எனக்கு அப்படி பாய்ஸ் சித்தார்த்(நிச்சயம் சமந்தா விஷயம் இல்லை) .காரணமும் தெரியவில்லை .என் நண்பன் ஒருவனுக்கு மோகன்லால் என்றாலே பிடிக்காது.சிலரை ஏன் எதற்கு என்று தெரியாமலே பிடிக்கும்.

போகிற போக்கை பார்த்தல் இருக்கும் ஒன்றிரண்டு ஓட்டையும் இல்லாமல் செய்துவிடுவார்கள் தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் போல.மாணவர்களை அடிப்பதும் ,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதிய தலைமுறை டி.வியில் லைவில் மைக்கை பிடுங்கி எரிந்து சிபிஐ வரும் என்று எச்சரித்து சென்றதெல்லாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

ஐ.பி.எல் 6 தொடங்கிவிட்டது. 1 1/2 மாதத்திற்கு ஒரே ரகளை தான்.சன் டிவி ஒரு டீமை வாங்கிவிட்டார்கள்.பார்த்து கொண்டே இருங்கள் சன் டிவிக்காக தமிழ் நாட்டு ரசிகர்கள் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக மாறி விட்டார்கள் என்று சன் செய்திகளில் வந்தாலும் வரும்.