Pages

Friday 31 August 2012

TWIST ENDING ஆங்கில படங்கள் :

TWIST ENDING ஆங்கில படங்கள் :

ஆங்கில படங்களில் இறுதி காட்சியில் ஒரு பெரும் திருப்பம்(TWISTED ENDING) வந்து நம்மை அசர அடித்துவிடும்.அப்படி பட்ட படங்கள் பல மறக்க முடியாதவை.சில படங்கள் படம் தொடங்கி கதை ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கும்.அப்படியே போய் கொண்டிருக்கும்போது கிளைமாக்ஸ் ஒரு பெரிய அதிர்ச்சியை நமக்கு தரும்.பலருக்கு தெரிந்த உதாரணமாக saw படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சியை சொல்லலாம்.ஒரு எங்கோ ஒரு கழிப்பறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்.அருகே இறந்த நிலையில் ஒரு பிணம்.அங்கே தொடங்கி பல திருப்பங்களை சந்திக்கும் படம் ,இறுதில் பிணமாக படுத்திருந்தவன் எழுந்து நடந்து செல்வது தான் திருப்பம் .இது உதாரணம் தான்.இது த்ரில்லர் படங்களில் மட்டுமல்ல சாதாரண டிராமா வகை சார்ந்த படங்களிலும் உண்டு.அப்படி அசரடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

THE OTHERS(2001): படம் மெதுவாகத்தான் போகும்.ஆனால் முடிவை கொஞ்சமும் யாரும் யூகிக்க முடியாது.படம் தந்த அதிர்ச்சி போக கொஞ்ச  நேரம் ஆனது .
ORPHAN(2009):  இதுவும் ஒரு அதிர்ச்சியான முடிவை ( உண்மையை ) சொல்லும் படம். ஒரு குடும்பத்தில் அனாதையாய் வாழ வரும் சிறுமி கொஞ்ச கொஞ்சமாக  மற்ற குழந்தைகளிடம் தன் முகத்தை காட்டுகிறாள்.அவள் யார் ? 

THE MACHINIST(2004) : ஒரு ஆண்டாக தூங்காமல் இருக்கும் ஒருவன் சந்திக்கும் சம்பவங்கள்.முடிவு ?
THE USUAL SUSPECTS(1995) : ஒரு திருட்டு கும்பலை போலீஸ் வளைக்கிறது.அதில் சிக்கிய ஒருவன் தரும் வாக்கு மூலம். இறுதி புத்திசாலி தனமானது -குழந்தை தனமானது எப்படி வேண்டும் ஆனாலும் சொல்லலாம்.இந்த கிளைமாக்ஸ் போல் தமிழில் சமீபத்தில் வந்த ஜீவா நடித்த வந்தான் வென்றான் இருக்கும்.

FIGHT CLUB(1999): படத்தின் இறுதியில் இரண்டு பேர் இல்லை.ஒருவனின் கற்பனைதான் மற்றவன் என்பது ஷாக்.
THE UNINVITED(2009): தந்தை மறுமணம் செய்து கொள்கிறான்.தன் தாய் இறந்த பின் மன நல காப்பகத்தில்  இருந்து வரும் பெண் தன் ஒரே ஆறுதாலாக நினைப்பது அவள் சகோதரியை .கடைசியில் அவள் எப்போதோ இறந்து போனவள் என்பது தான் ட்விஸ்ட்.இது ஒரு ரீமேக் படம்.TALE OF 2 SISTERS என்ற படமே மூலம்.
THE GAME(1997): படத்தின் மொத்த பரபரப்பும் ஒரு விளையாட்டான செட் அப் என்று கடைசியில் தெரியும் போது கொஞ்சம் திருப்தி இல்லை.
HIDE AND SEEK(2005): ROBERT DE NIRO நடித்த படம். படத்தின் முடிவை யூகித்து விடலாம்.அதனால் படம் மொக்கைதான்.
OLD BOY(2003): கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத முடிவு.ரொம்ப அப் செட் ஆக்கிய படம். எனக்கு பிடித்த படங்களில் முக்கியமான இடம் உண்டு.இந்த படம் பற்றி ஏற்கனவே முழு விமர்சனம் எழுதி உள்ளேன்.லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/05/old-boy.html
IDENTITY(2003) : ஒரு மழை நாள்.இரவு .ஒரு தனிமையான  ஹைவே ஹோட்டல்.அங்கே மாட்டிக்கொண்டவர்கள் பத்து  பேர்.அடுத்தடுத்து மரணம்.முடிவு ட்விஸ்ட்.

THE PRESTIGE(2006): இரு மாஜிக் நிபுணர்கள் ,ஒருவரை ஒருவர் வீழ்த்த போராடும் படம். இந்த மாதிரி ட்விஸ்ட் அடிக்கும் படங்களின் ராஜா  நோலன் இயக்கிய படம் சொல்லவே வேண்டாம்.
DONNIE DARKO(2001): ஒரு வீட்டின் மீது விமானத்தின் ஒரு பகுதி விழுகிறது.அதில் தப்பிய ஒருவன் உலகம் அழியபோவதை நம்புகிறான்.முடிவில் அவனே இறந்து போய் விட்டதை சொல்கிறார்கள்.ரொம்ப மொக்கை.
DEAD SILENCE(2007): ஏற்கனவே இறந்து போனவனை வைத்து படம் முழுதும் உயிரோடு இருப்பதாய் போல் காட்டி இருப்பார்கள்.கொஞ்சம் அதிர்ச்சிதான்.
TRIANGLE(2009): படம் உங்களை உள்ளே இழுத்து விடும்.ஒரு கப்பல் பயணத்தில் அடுத்தடுத்து கொலைகள்.எப்பா என்ன த்ரில் .அருமையான படம்.
JACOBS LADDER(1990): தொன்னூறுகளில் வந்த படம்.இப்போது பார்த்தால் முடிவு  கொஞ்சம் யூகித்துவிடும்படி உள்ளது.காரணம் நிறைய அந்த வகை படங்கள்.

இந்த மாதிரி முடிக்கும் படங்கள் நிறைய உள்ளது.அதிலும் படம் முழுதும் நாம் ஒரு மன ஓட்டத்தில் பயணிக்கிறோம்.அப்படியே போய் கொண்டே இருக்கிறோம் .அதுவரை பார்த்து வந்த ஒரு விஷயம் முற்றிலும் அது அப்படி இல்லை. என்று சொல்லும் போது தான் இது போன்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படும்.நீங்கள் பார்த்த இந்த வகை படங்களை எனக்கு சொல்லுங்கள்.

Wednesday 22 August 2012

என் ஆங்கில பட அனுபவங்கள் :


என் ஆங்கில பட அனுபவங்கள் : 


இன்று ஆங்கில படங்களை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.அதுவும் பரபரப்பான படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம்.பொதுவாக இந்தியர்கள்  என்று பார்த்தால் 2000 ஆண்டுக்கு பிறகே அதிகம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.70 களில் ஆங்கில படங்கள் என்பது இந்தியாவில் எங்கோ ஒரு சில அரங்குகளில் மட்டுமே அதுவும் அமெரிக்காவில் வந்து பல மாதங்கள் கழித்து தான் இங்கே வரும்.அதற்கென்று சில குறிப்பிட்ட அரங்குகள் உண்டு.சென்னை எடுத்து கொண்டால் ஆனந்த் ,தேவி போன்ற திரை அரங்குகளில் ஆங்கில படங்கள் வரும்.புருஸ்  லீ நடித்த 'என்டர் தி டிராகன் ',OMEN ,THE EXORCIST போன்ற படங்கள் மாத கணக்கில் சென்னையில் ஓடி இருக்கின்றன.

அதன் பின் 80 களில் VCR வந்த பின் மெதுவாக ஆங்கில படம் பார்பவர்களின் எண்ணிக்கை கூடியது.அதுவும் எல்லா படங்களும் இந்தியாவில் கிடைக்காது.குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே .EVIL DEAD,TERMINATOR போன்ற ஹிட்டான படங்கள் மட்டுமே இங்கே கிடைக்கும்.பெரிய அளவிலான திருப்பம் என்பது 95 இல்  SPEED படம்.அதுவரை ஆங்கில படமே பார்க்காதவர்கள் கூட பார்க்க வைத்தது.இத்தனைக்கும் ஆங்கிலத்திலேயே வெளியானது.இருந்தும் நன்றாக ஓடியது.இதன் காரணமாக ஆங்கில படங்களுக்கு இந்தியாவில் ஒரு மார்க்கெட் கிடைத்தது.அதன் பின் முதலில் தமிழில் டப் செய்யப்பட்டு வந்தது ஜாக்கி சான் நடித்த SHANKAI NOON என்ற படம் ஷாங்காய் தளபதி என்ற பேரில் அடி வெளுத்து கட்டியது.அதன் பின் GODZILLA ,ANACONDAA, MUMMY ,DEEP BLUE SEA போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு நல்ல ஓட்டம் .அதனால்  பின் தங்கிய கிராமத்திலுள்ள டெண்ட் கொட்டைகளிலும் ஆங்கில ஹீரோக்கள் தமிழ் பேசினார்கள்.அங்கே பெரிய அளவில் ஓடாத VAN HEALSING,2012 போன்ற படங்கள் இங்கே சக்கை போடு போட்டன.இன்றும் SPIDERMAN படங்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக ரசிகர்கள் இருப்பதாக சமீபத்தில் படித்தேன்.

சரி என் விஷயத்திற்கு வருவோம்.1988 எனக்கு 9 வயது.அப்போது என் சித்தப்பா ஒருவர் VCR இல் EVIL DEAD படம் பார்த்தார்.டி.வியில் படம் என்பதே பெரிய விஷயமான அப்போது டேக்கில் படம்.அதுவும் ஆங்கில படம். அவர் நண்பர்கள் வேறு என்னையும் என்னுடன் இருந்த சிறுவர்களையும்  இது பேய் படம் .பயந்து விடுவீர்கள் என்று எச்சரித்தார்.இருந்தும் பயத்தோடு சில காட்சிகள் பார்த்தேன்.யாரும் இல்லாத ஒரு பாலம்.அதுவும் பாய் பாலம்.அதில் கார் போகிறது .நடுவில் பாய் கிழிந்து விடுகிறது.பயமுறுத்தும் வீடு.போதும் இனி தாங்காது என்று ஓடி விட்டேன்.அதன் பின்  ஆங்கில படம் என்றால் பேய் படம் ,ஜாக்கி சான் படம் இவை  மட்டும் தான் என்று நினைத்து விட்டேன்.அந்த நேரத்தில் ஆங்கில படம் பார்பவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.நானும் அப்படிதான் ஆங்கில படம் பார்பவர்களை பிரம்மிப்போடு பார்ப்பேன்.அதற்க்கு பின் ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கி விட்டேன் என்று சொல்ல முடியாது.

தொடரும் ,

Saturday 18 August 2012

மாற்றான் -தாண்டவம் பாடல்கள் எப்படி ?

மாற்றான் -தாண்டவம் பாடல்கள்  எப்படி ? 


சூர்யா நடிக்கும் மாற்றான் ,விக்ரம் நடிக்கும் தாண்டவம் இரண்டு பட பாடல்களும் வெளி வந்துள்ளன .இரண்டையும் கேட்டேன்.இரண்டுமே ஒன்றும் இல்லை.அதிலும் மாற்றான் மிக மோசம்.சிலர் கேட்க்க கேட்க அவை  பிடிக்கும் என்று சொல்வதுண்டு.அதுவும் கேட்க்க ஆரம்பித்தவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே போட்ட பல பாடல்கள் நினைவு படுத்துகின்றது.ஒரே அலுப்பு தான்.அட ச்சே என்றாகி விட்டது.ஏன் ஹாரிசை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்று தெரியவில்லை.அது சரி ஒரு நாயகன் ஒரு நாயகி பாடும் பாடலை ஏன் நான்கு ஐந்து பேர் பாடி உள்ளார்கள்.இந்த படம் என்றில்லை .சில காலமாக உள்ளது.

தாண்டவம் பட பாடல்களும் ஒன்று கூட நிற்கவில்லை.மிகவும் சிலாகித்து சொல்லப்பட்ட ஒரு பாதி கதவு நீயடி பாடல் அஜீத் நடித்த கிரீடம் படத்தின் அக்கம் பக்கம் பாடலை அப்படியே நினைவு படுத்துகிறது.இருந்தாலும் மாற்றான் பாடல்கள் ஹிட் ஆகிவிடும் என்று தோன்றுகிறது.காரணம் நம் எப்.எம் கள் .ஏற்கனவே தினமும் ஒலிபரப்ப தொடங்கி விட்டது.தற்போதைய ஹிட் ஹீரோ சூர்யா,ஹாரிஸ் என்றால் விட்டு விடுவார்களா? நான் படத்தில் தப்பெல்லாம் தப்பேயில்லை பாடல் நன்றாக உள்ளது.நான் மிகவும் எதிர்பார்ப்பது இளையராஜா,கவுதம் கூட்டணியில் வெளிவர  உள்ள "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தான்.படம் எப்படியும் விண்ணை தாண்டி வருவாயா போல் போர் அடிக்கும் .பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Tuesday 14 August 2012

RED WHITE & BLUE : 18+ஆங்கில பட விமர்சனம்


RED WHITE & BLUE : 18+ பட விமர்சனம் 


இந்த படம் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம்.காரணம் படம் அப்படி.DISTURBING FILMS என்று சொல்ல கூடிய ,படம் பார்த்த பிறகு மனம் வலிக்கும் வகையை சார்ந்த படம்.சரி இருந்தாலும் நல்ல படம்.பார்க்க வேண்டிய படம் என்பதால் இதை படிக்கும் யாரவது படம் பார்க்க வேண்டும் என்று ஆசை.படம் கண்டிப்பாக 18+ .அதோடு டவுன்லோட் இட்டு டி.வியில் பார்க்காமல் ,கணினியிலோ அல்லது தனிமையிலோ பார்த்தல் நலம்.காரணம் படத்தில் அவ்வளோ மேட்டர்.

கதைக்கு போவதற்கு முன்.யாரோ ஒரு பெண் ,அழகாக இருக்கிறாள்.யார் கூப்பிட்டாலும் படுக்கைக்கு வருகிறாள்.ஆனால் விலை மகள் அல்ல.அப்படி ஒரு பெண்ணை பற்றி தெரிந்தால் எவ்வளவு பேர் அவளிடம் போய் இருப்பார்கள்.அதே அவளுக்கு HIV+ இருந்தால் அவளிடம் போனவர்களின் கதி.படத்தின் கதை இப்படி தான் தொடங்குகிறது.எரிகா யாரும் இல்லாதவள்.தினமும் யாருடனாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள துடிப்பவள்.அதற்காகவே வெளி இடங்களில் சுற்றி கொண்டிருப்பவள்.அதுவும் வருபவர்கள் ஆணுறை அணிய கூடாது என்று சொல்வாள். இசை குழுவை சேர்ந்த மூன்று பேரோடுஒரே நேரத்தில் உறவு கொள்வதை தொடங்குகிறது.அதற்க்கு பின் தினமும் அதே போல்.ஆனால் ஒருவனோடு ஒரு முறை மட்டுமே.தினம் தினம் புது ஆட்கள்.

இவள் வசிக்கும் விடுதிக்கு புதிதாக  வருகிறான் நேட்.இவள் இப்படி எப்போதும் யாருடனாவது இருப்பதை பார்க்கிறான்.இவளிடம் பேச்சு கொடுக்கிறான்.அவள் தன் அம்மாவின் புதிய கணவனால் நான்கு வயதில் பாலியல் பலாத்காரம் செய்ய பட்டதை சொல்கிறாள்.இவனையும் அப்படி நினைத்து பேசுகிறாள்.ஆனால் அவன் அவளுக்கு தன்னை பற்றி சொல்கிறான்.அவன் பணி  புரியும் இடத்திலேயே அவளும் வேலைக்கு சேர்கிறாள்.அங்கேயும் பலரோடு படுக்கிறாள்.சில நாட்களில் நேட் ,எரிகா நண்பர்கள் ஆகிறார்கள்.


முதலில் இவளை உறவு கொண்ட இசை குழுவை சேர்ந்த ஒருவனுக்கு HIV + இருப்பது தெரிகிறது.அவன் பேர் பிராங்கி.அதிர்ந்து போன அவன் கேன்சர் பாதிக்க பட்ட தன் தாயோடு வாழ்பவன்.மற்ற இருவரும் HIV TEST எடுக்க அவர்களுக்கு நோய் இல்லை.தங்கள் உறவு கொண்ட எரிகா தான் காரணம் என்பது தெரிந்து அவளை தேடுகிறார்கள்.அவளும் அவர்களிடம் சிக்குகிறாள்.அவளை தேடி நேட் வருகிறான். அதற்க்கு பின் நடப்பவை மனம் வலிக்க செய்யும் விஷயங்கள்.படம் முடியும் போது ஒரு வித வெறுமை ஏற்படுகிறது.படத்தில் யாருமே முழுதும் கெட்டவர்கள் இல்லை.வசனங்கள் மிக குறைவு .இசை எங்கோ சில இடங்களில் தான்.

2010 இல் வந்த இந்த படம் 1:40 நிமிடம் ஓடுகிறது.

Monday 13 August 2012

THE BUTTEFLY EFFECT - சத்தியமா படம் புரியல !


THE BUTTEFLY EFFECT - சத்தியமா படம் புரியல !


சென்ற வாரம் இரண்டு ஆங்கில படங்களை பார்த்தேன் .அவை THE BUTTERFLY EFFECT , MOTHER'S DAY.முதல் படமான BUTTERFLY EFFECT பற்றி எத்தனையோ முறை கேள்வி பட்டும் பார்க்க தோன்றவில்லை.ஓர் வழியாக டவுன்லோட் செய்து பார்த்தேன்.அடுத்த படம் சில மாதங்களாக என்னிடம் இருந்த படம் தான்.இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.இரண்டு படங்களையும் பற்றி சில விஷயங்கள்.

THE BUTTERFLY EFFECT:  நிச்சயமாக கவனத்தோடு பார்க்க வேண்டிய படம்.நிறைய பேர் பார்த்துவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.படம் எனக்கு சுத்தமாக புரியவில்லை.சரி நிறுத்தி விடலாம் என்று பார்த்தால்  சரி ஒரு வேலை கடைசியில் ஏதாவது சொல்லி  இருப்பார்கள் என்று பார்த்தேன்.எனக்கு புரியவில்லை.ஒருவேளை படத்தில் சொல்லி இருக்கிறார்களோ? எது நிஜம் ? எதோ ஒன்றை அடிக்கடி படிக்கிறான் ஹீரோ.உடனே எதோ ஒன்று நடக்கிறது.ஒரு காட்சியில் கைகள் இல்லாமல் இருக்கிறார்.ஒரு நேரம் இவன் காதலி இவன் குண்டு நண்பனை காதலிக்கிறாள்.எதுவுமே புரிய வில்லை. இதே போல் சில மாதங்களுக்கு முன் பார்த்த TIME CRIMES என்ற படமும் கொஞ்சம் புரியவில்லை.ஆனால் இந்த அளவுக்கு இல்லை.BUTEERFLY EFFECT படம் புரிந்தவர்கள் கொஞ்சம் முயற்சியுங்கள்.அல்லது படம் பற்றி எதாவது பதிவு லிங்க் இருந்தால்  கொடுங்கள்.

MOTHER'S DAY (2010)- 1980 இல் வந்த படத்தின் ரீமேக்.பெரிதாய் சொல்லும்படி இல்லை. பர பர வென போகுது படம்.டைம் பாஸ் பண்ண ஒருமுறை பார்க்கலாம்.

இப்போது DONNIE DARKO (2001) என்ற படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.நன்றாக இருந்தால் பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.மேலும் கீழே உள்ள படங்களை ஒரு நண்பரிடம் இருந்து COPY செய்து வந்துள்ளேன்.அவற்றில் பார்த்த நல்ல படமாக இருந்தால் சொல்லவும்.
ANOTHER EARTH (2011)
SHAME (2011)
DEATH AND MAIDEN (1994)
PROJECT X (2012)
SEEKING JUSTICE (2011)
SOUND OF NOISE (2010)
THE DARKEST HOUR (2011)
LOCKOUT (2012)

Thursday 9 August 2012

எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்


எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள் :

சில படங்கள் ஷூட்டிங் துவங்கும் முன்பே ஒரு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.அதற்க்கு காரணம் அந்த படத்தின் கூட்டணி.நமக்கு பிடித்த ஹீரோ நடிக்கும் படம் என்றால் இருக்கும் எதிர்பார்ப்பை விட அதே ஹீரோ ஒரு எதிர்பாராத டைரக்டர் உடன் கூட்டணி அமைத்தால் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.மேலும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் இப்படி ஒரு வேடத்தில்,இத்தனை வேடத்தில் ,இத்தனை கெட்அப் களில் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.ரஜினி படங்களுக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.மணிரத்னம் ,ஷங்கர் போன்றவர்களின் படங்களுக்கு யார் ஹீரோவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.அப்படி நாம் மிகவும் எதிர்பார்த்த  ஒரு படம் நம்மை முழுமையாய் திருப்தி செய்துள்ளதா என்பதே கேள்வி? அப்படி நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களை பற்றி பார்ப்போம்.இந்த படங்கள் நடிகர்களின் ரசிகர்களையும் தாண்டி சராசரி மக்களையும் எதிர்பார்க்க வைத்தவை.நாம் விழுந்து  அடித்து கொண்டு பார்த்தவை.

நவரத்தினம் : எம்.ஜி.ஆர். நடித்த படம் இது. சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்ததற்கு போட்டியாக இன்னும் சொல்ல போனால் உல்டாவாக ஒரே எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளோடு பல சந்தர்பங்களில் வருவார்.அதில் நிறைய பேர் அவரை விரும்புவார்கள்.அவர் ஒருவரை மட்டுமே விரும்புவார்.இதில் இன்னும் சிறப்பென்றால் நவராத்திரி படத்தை இயக்கிய எ.பி.நாகராஜன் தான் இந்த படத்தையும் இயக்கினார்.மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ஓடவில்லை.

கர்ணன்: இந்த படம் அப்போது பிளாப் என்று சொன்னால் இன்று பலர் நம்ப மறுக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் கலரில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.இப்போது பார்க்க நன்றாக உள்ள இந்த படம் வெளி வந்த பொது ரசிக்க படவில்லை.அதற்க்கு காரணமாய் அப்போது சொல்லப்பட்டது கதை சிறப்பாக சொல்லபடாமல் பிரம்மாண்டம் மட்டுமே தெரிந்ததால்.

பாபா : யாருமே இந்த படத்தின் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.காரணம் படையப்பா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.ரஜினி அறிமுகமாகும்போது விசிலடித்த ரசிகன் பின் என்ன நடக்கிறது ,ஓடுவது தலைவர் படம் தானா என்று சந்தேகம் வந்து விட்டது.ராம நாராயணன் படம் போல ஆகிவிட்டதே என்று என்னும்படி ஏழு மந்திரம் ,இமயமலை ,பாபாஜி என்று கொட்டாவி வரவைத்து விட்டது.

ஆளவந்தான்: எதிரபார்க்க வைத்து ரசிகனை ஒரு வித முழுமையில்லாமல் அனுப்புவது ராஜபார்வை காலம்தொட்டே கமலுக்கு பழக்கம் தான்.ஆனாலும் ஆளவந்தான் படத்தின் பிரம்மாண்டம்,கமல் மொட்டை தலையோடு ,உடம்பை ஏற்றி ஆங்கில படங்களுக்கு இணையான ஒப்பனையோடு  வெளிவந்த ஸ்டில்களும்,செய்திகளும் எங்கு பார்த்தாலும் ஆளவந்தான் பேச்சுதான்.அதுவும் பட ரிலீஸ் தள்ளி கொண்டே போனதில் இன்னும் ஆர்வம் கூடியது.ஏற்கனவே படம் அதிக செலவு இதில் கமல் டூப் போட்டு எடுத்த காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி செலவு என்று தாணு " ஆளவந்தான் அழிக்கவந்தான் " என்று குமுதத்தில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஊற்றி கொண்டது.இந்த படத்தோடு வந்த படங்கள் ஷாஜகான்,நந்தா,தவசி,மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள்.எதுவுமே பெரிதாக ஓடாதது ஒரு விஷயம்.(நந்தா சுமார்.)

தமிழன் :
விஜய் படங்களில் அப்போது பெரிய பட்ஜெட்டில் தயாரான படம்,உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிக்கும் முதல் படம் என்று செய்தி எதிர்பார்ப்பை ஏற்றியது.ஆனால் படம் சட்டம் ,நாயகன் முக ஸ்டாம்ப் என்று ஓவராக இருந்தது.பொதுவாக விஜய் படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமே எதிர்பார்க்க வைக்கும்.பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காது.காரணம் விஜய் எந்த பெரிய இயக்குனரோடும் அப்போதெல்லாம்  சேர மாட்டார்.

சிட்டிசன் : அஜித்துக்கு ஒரு மார்க்கெட் வந்த பின், வித்தியாசமான படங்களில் கெட்அப் மாற்றி நடிக்க தொடங்கினார். தினம் ஒரு செய்தி ,இது அஜித்தா என்று சந்தேகிக்கும் புகைப்படங்கள் என்று இந்த  படம் வெளிவரும் வரை எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லை.நிக் ஆர்ட்ஸ் என்பது கிட்டத்தட்ட அஜித்தின் சொந்த நிறுவனம் போன்றது.அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத போது ராசி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது .அஜீத் ஒரு நல்ல விஷயமாக தனக்கு மார்க்கெட் இல்லாத போது தன்னை வைத்து படம் எடுத்த நிறுவனங்களுக்கு மார்க்கெட் வந்தவுடன் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார்.அப்படி நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் இந்த சிடிசன் படத்தை எடுத்தபோது அஜீத் தன் சொந்த பணத்தை அதிகம் முதலீடு செய்தார்.ஆனால் படம் தோல்வி.கிட்டத்தட்ட இதேபோல் வந்த சாமுராய் படமும் தோல்விதான்.இந்த லிஸ்டில் அசல்,ஏகன்,பில்லா 2 அடக்கம்.காரணம் அந்த படங்களின் அதீத எதிர்பார்ப்பு.

கந்தசாமி : படத்தொடக்க அழைப்பித்தழுக்கே ஒரு அழைப்பித்தழுக்கு 15 ஆயிரம் செலவு(லேப்டாப் தான் அழைபிதழ்).விக்ரம் பெண்ணாக,90 வயது முதியவாராக என்று செய்திகள்.ஸ்பெயின் , பெரு என்று ஷூட்டிங் போன நாடுகளின் பட்டியல் .சேவல் கெட்டப் .எல்லாமே விழலுக்கு இரைத்த நீரானது.ராவணன் ,ராஜபாட்டை வரை இப்படி கிளப்பிவிடப்பட்டு தோல்வி அடைவது விக்ரம் படங்களின் வாடிக்கை ஆகிவிட்டது.அந்த அளவு எதிர்பார்ப்பில்லாமல் வந்த தெய்வதிருமகள் ஓரளவு ஓடியது.

பாய்ஸ்: ஷங்கர் படங்களில் மக்களுக்கு பிடிக்காத படம் என்றால் பாய்ஸ் தான் முதல் இடம். அதிக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ,இரட்டை அர்த்த வசனங்கள் ,எப்படி எப்படியோ செல்லும் திரைகதை என்று படத்தின் குறைகள் நிறைய.போதா குறைக்கு தினமலர் வேறு கற்பனையான செய்திகளை தினமும்( ரஜினி தன் மகள்களோடு இந்த படம் பார்க்க வந்ததாகவும் ,படம் மோசமாக இருந்ததால் அவர்களை பாதியிலேயே அவர் அனுப்பிவிட்டதாகவும் செய்தி) வெளியிட்டு முடிந்தவரை எதிர்தது.மகளிர் அமைப்புகளும் ,ஹிந்து அமைப்புகளும் வேறு சேர்ந்து கொண்டு எதிர்த்தன.இங்கே இத்தனை களோபரங்கள் நடந்தாலும் தெலுங்கில் படம் ஹிட்.

அவன் இவன் :  இப்படி பட்ட மோசமான ,ஒன்றுமே இல்லாத பாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.விஷாலின் நடிப்பு வீண் ஆனது.ஒரே விஷயங்கள் திரும்ப திரும்ப அவர் படங்களில் வந்து சலிப்படைய வைத்து விட்டது.

சர்வம் : அறிந்தும் அறியாமலும் , பட்டியல்,பில்லா மூன்று  ஹிட் படங்களுக்கு பின் விஷ்ணுவரதன் இயக்கம்,ஆர்யா,த்ரிஷா  ,யுவனின் ஹிட் அடித்த இசை என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.அதை சுத்தமாக பொய்யாகும் வகையில் இருந்தது படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்: அலைபாயுதே ஹிட்.அடுத்த படம் அப்போதைய ஹிட் ஹீரோ மாதவன்,சிம்ரன் ,எ.ஆர்.ரகுமான் என்று ஒரு செமையான அலைபாயுதே போல் ரொமாண்டிக் படம் எதிர்பார்த்து வந்த ரசிகனுக்கு முற்றிலும் மாறுபட்ட அவர்கள் கொஞ்சமும் யோசிக்காத தளம்.அதை தொடர்ந்து ஆயுத எழுத்து ,ராவணன் என்று தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.என்னதான் அவர் படத்தை பற்றிய விஷயங்களை ரகசியமாய் வைத்து இருந்தாலும் எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது.

இந்திரலோகத்தில் ந.அழகப்பன்: 23 ம் புலிகேசியின் வெற்றி இந்த படத்தை எதிர்பாக்க வைத்தது.எமலோகம் கதை விட்டதால் படம் பப்படம் ஆனது.

சக்கரகட்டி : எ.ஆர்.ரகுமான் என்பதுதான் இந்த படத்தின் முதல் விசிடிங் கார்டு.படமே 1.50 நிமிடம் தான் ,அதில் ஆறு பாடல்கள் அறை மணி நேரமென்றாலும் மிச்சம் இருக்கும் ஒரு மணி சொச்ச நேரத்தை உட்கார விடாமல் செய்த படம்.

3: இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பும் என்று படம் எடுக்க தொடங்கும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.காரணம் "கொல வெறி " .அதுவே படத்திற்கு மைனஸ் ஆகி ஓவர் எதிர்பார்ப்பு படத்தை காலி செய்துவிட்டது.

இது போல் வருடத்திற்கு ஒரு படமாவது நம்மை ஏமாற வைக்கும்.பொதுவாக  எமலோகம்,சினிமாவில் சினிமா ( வெள்ளித்திரை ,கோடம்பாக்கம் போன்ற படங்கள்) போன்ற கதைகள் தமிழில் எடுபடுவதில்லை.அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.