Pages

Saturday 18 August 2012

மாற்றான் -தாண்டவம் பாடல்கள் எப்படி ?

மாற்றான் -தாண்டவம் பாடல்கள்  எப்படி ? 


சூர்யா நடிக்கும் மாற்றான் ,விக்ரம் நடிக்கும் தாண்டவம் இரண்டு பட பாடல்களும் வெளி வந்துள்ளன .இரண்டையும் கேட்டேன்.இரண்டுமே ஒன்றும் இல்லை.அதிலும் மாற்றான் மிக மோசம்.சிலர் கேட்க்க கேட்க அவை  பிடிக்கும் என்று சொல்வதுண்டு.அதுவும் கேட்க்க ஆரம்பித்தவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே போட்ட பல பாடல்கள் நினைவு படுத்துகின்றது.ஒரே அலுப்பு தான்.அட ச்சே என்றாகி விட்டது.ஏன் ஹாரிசை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்று தெரியவில்லை.அது சரி ஒரு நாயகன் ஒரு நாயகி பாடும் பாடலை ஏன் நான்கு ஐந்து பேர் பாடி உள்ளார்கள்.இந்த படம் என்றில்லை .சில காலமாக உள்ளது.

தாண்டவம் பட பாடல்களும் ஒன்று கூட நிற்கவில்லை.மிகவும் சிலாகித்து சொல்லப்பட்ட ஒரு பாதி கதவு நீயடி பாடல் அஜீத் நடித்த கிரீடம் படத்தின் அக்கம் பக்கம் பாடலை அப்படியே நினைவு படுத்துகிறது.இருந்தாலும் மாற்றான் பாடல்கள் ஹிட் ஆகிவிடும் என்று தோன்றுகிறது.காரணம் நம் எப்.எம் கள் .ஏற்கனவே தினமும் ஒலிபரப்ப தொடங்கி விட்டது.தற்போதைய ஹிட் ஹீரோ சூர்யா,ஹாரிஸ் என்றால் விட்டு விடுவார்களா? நான் படத்தில் தப்பெல்லாம் தப்பேயில்லை பாடல் நன்றாக உள்ளது.நான் மிகவும் எதிர்பார்ப்பது இளையராஜா,கவுதம் கூட்டணியில் வெளிவர  உள்ள "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தான்.படம் எப்படியும் விண்ணை தாண்டி வருவாயா போல் போர் அடிக்கும் .பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

5 comments:

  1. //கேட்க்க ஆரம்பித்தவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே போட்ட பல பாடல்கள் நினைவு படுத்துகின்றது//

    மரத்து போச்சுயா மரத்தமிழனுக்கு மரத்து போச்சுயா..

    ReplyDelete
  2. ஏன் அய்யா ரஹ்மானை வம்புக்கு இழுக்கிறீர்கள்?

    ReplyDelete
  3. பரவாயில்லைன்னு சொல்ல வர்றீங்க... பாடல் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே... (TM 1)

    ReplyDelete
  4. மாற்றான் பாடல்களுக்கு எனக்கும் சேம் ஃபீலிங்ஸ்.. ட்ரெயிலரில் நன்றாக ஒலித்த "ரெட்டைக் கதிரே" பாடலும், முழுசாகக் கேட்க ஃபீல் குறைஞ்ச மாதிரி இருக்கு! ஹாரிஸுக்கு சரக்குத் சீர்ந்து போச்சோ?
    "சிவ தாண்டவம்"- புடிச்ச பாடல். எஸ்.பி.பி வாய்ஸாலயும் இருக்கலாம்..
    நல்ல பதிவு நண்பா!

    ReplyDelete
  5. maatran romba waste

    ReplyDelete