Pages

Wednesday 22 August 2012

என் ஆங்கில பட அனுபவங்கள் :


என் ஆங்கில பட அனுபவங்கள் : 


இன்று ஆங்கில படங்களை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.அதுவும் பரபரப்பான படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம்.பொதுவாக இந்தியர்கள்  என்று பார்த்தால் 2000 ஆண்டுக்கு பிறகே அதிகம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.70 களில் ஆங்கில படங்கள் என்பது இந்தியாவில் எங்கோ ஒரு சில அரங்குகளில் மட்டுமே அதுவும் அமெரிக்காவில் வந்து பல மாதங்கள் கழித்து தான் இங்கே வரும்.அதற்கென்று சில குறிப்பிட்ட அரங்குகள் உண்டு.சென்னை எடுத்து கொண்டால் ஆனந்த் ,தேவி போன்ற திரை அரங்குகளில் ஆங்கில படங்கள் வரும்.புருஸ்  லீ நடித்த 'என்டர் தி டிராகன் ',OMEN ,THE EXORCIST போன்ற படங்கள் மாத கணக்கில் சென்னையில் ஓடி இருக்கின்றன.

அதன் பின் 80 களில் VCR வந்த பின் மெதுவாக ஆங்கில படம் பார்பவர்களின் எண்ணிக்கை கூடியது.அதுவும் எல்லா படங்களும் இந்தியாவில் கிடைக்காது.குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே .EVIL DEAD,TERMINATOR போன்ற ஹிட்டான படங்கள் மட்டுமே இங்கே கிடைக்கும்.பெரிய அளவிலான திருப்பம் என்பது 95 இல்  SPEED படம்.அதுவரை ஆங்கில படமே பார்க்காதவர்கள் கூட பார்க்க வைத்தது.இத்தனைக்கும் ஆங்கிலத்திலேயே வெளியானது.இருந்தும் நன்றாக ஓடியது.இதன் காரணமாக ஆங்கில படங்களுக்கு இந்தியாவில் ஒரு மார்க்கெட் கிடைத்தது.அதன் பின் முதலில் தமிழில் டப் செய்யப்பட்டு வந்தது ஜாக்கி சான் நடித்த SHANKAI NOON என்ற படம் ஷாங்காய் தளபதி என்ற பேரில் அடி வெளுத்து கட்டியது.அதன் பின் GODZILLA ,ANACONDAA, MUMMY ,DEEP BLUE SEA போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு நல்ல ஓட்டம் .அதனால்  பின் தங்கிய கிராமத்திலுள்ள டெண்ட் கொட்டைகளிலும் ஆங்கில ஹீரோக்கள் தமிழ் பேசினார்கள்.அங்கே பெரிய அளவில் ஓடாத VAN HEALSING,2012 போன்ற படங்கள் இங்கே சக்கை போடு போட்டன.இன்றும் SPIDERMAN படங்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக ரசிகர்கள் இருப்பதாக சமீபத்தில் படித்தேன்.

சரி என் விஷயத்திற்கு வருவோம்.1988 எனக்கு 9 வயது.அப்போது என் சித்தப்பா ஒருவர் VCR இல் EVIL DEAD படம் பார்த்தார்.டி.வியில் படம் என்பதே பெரிய விஷயமான அப்போது டேக்கில் படம்.அதுவும் ஆங்கில படம். அவர் நண்பர்கள் வேறு என்னையும் என்னுடன் இருந்த சிறுவர்களையும்  இது பேய் படம் .பயந்து விடுவீர்கள் என்று எச்சரித்தார்.இருந்தும் பயத்தோடு சில காட்சிகள் பார்த்தேன்.யாரும் இல்லாத ஒரு பாலம்.அதுவும் பாய் பாலம்.அதில் கார் போகிறது .நடுவில் பாய் கிழிந்து விடுகிறது.பயமுறுத்தும் வீடு.போதும் இனி தாங்காது என்று ஓடி விட்டேன்.அதன் பின்  ஆங்கில படம் என்றால் பேய் படம் ,ஜாக்கி சான் படம் இவை  மட்டும் தான் என்று நினைத்து விட்டேன்.அந்த நேரத்தில் ஆங்கில படம் பார்பவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.நானும் அப்படிதான் ஆங்கில படம் பார்பவர்களை பிரம்மிப்போடு பார்ப்பேன்.அதற்க்கு பின் ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கி விட்டேன் என்று சொல்ல முடியாது.

தொடரும் ,

8 comments:

  1. //1988 எனக்கு 9 வயது//

    நாங்கல்லாம் அந்த டைம்ல என்ட்ரீயாகவே இல்ல. ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. அட நான் பிறக்கவே இல்லைங்க

      யுத்தம் நாலாம் பகுதி ரிலிஸ் அடுத்தது நீங்க தான்

      benedictly@gmail.com

      Delete
  2. //இன்றும் SPIDERMAN படங்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக ரசிகர்கள் இருப்பதாக சமீபத்தில் படித்தேன்.//
    கேள்விப்படாத தகவல்.. கொஞ்சம் நம்ப முடியாமலும் இருக்கிறது!

    தொடர் போகப் போக சுவையான அனுபவங்கள் தொடர்ந்து வரும் போல் படுகிறது..

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் amazing spiderman வெளியானபோது படித்த தகவல் அது.

      Delete
  3. அனுபவங்கள் தொடர்ந்து வரும்

    ReplyDelete
  4. மிகவும் அழகாக எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Please include "Jurrasic park" also

    ReplyDelete