Pages

Saturday, 20 April 2013

404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


பேய் படத்தில் இவ்வளவு விஞ்ஞான மருத்துவ விஷயங்களா? இது உண்மையில் பேய் படம் தானா ? அப்படி நினைத்து தான் பார்க்க தொடங்கினேன்.ஆனால் அதிகம் பயமுறுத்தாமல் பல ட்விஸ்ட் மூலம் நம்மை ஆச்சர்யபடுத்திவிடுகிரார்கள்.ஆனால் HORROR படம் இல்லை. PSYCHOLOGICAL THRILLER வகை படம். 
2011 இல் வந்த இந்த படத்தில் தெரிந்த முகங்கள்  யாரும் இல்லை. 

ஒரு மருத்துவ கல்லூரி .அங்கே முதலாம் ஆண்டு படிக்க வருகிறான் நாயகன் அபிமன்யு சுருக்கமாய் அபி.அங்கே சீனியர் மாணவர்கள் பலமாக ராக்கிங் நடக்கிறது.இவனும் சிக்குகிறான்.அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கிறான்.அங்கே விடுதியின் 404 ஆம் எண் அறை யாருக்கும் தராமல் பூட்டபட்டு இருப்பதை பார்கிறான்.அந்த அறையில் 3 வருடங்களுக்கு முன் படித்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் ஆவி அந்த அறையில் இருப்பதாய்  சொல்ல படுகிறது.அதை மறுத்து அந்த அறையை தனக்கு தருமாறு கேட்கிறான்.

ஆனால் தர மறுக்க படுகிறது.கல்லூரியில் ஆசிரியிராகவும் பெரிய எழுத்தாளராகவும்,பெரிய மேதையாக இருப்பவர் அனிருத் .அவரும் அந்த கல்லூரியில் பணிபுரிகிறார்.அந்த 404 அறையை அபி கேட்பதை தெரிந்து அதை அவனுக்கு தருமாறு பரிந்துரைக்கிறார்.அவனுக்கு அந்த அறை  கிடைக்கிறது.அடுத்த சில நாட்களில் மீண்டும் ராகிங் .அவன் அந்த அறையில் இருப்பதாய் தெரிந்த சீனியர் ஒருவன் அபியிடம் அவன் அறையில் இறந்தவனை பற்றி முழு விபரமும் அபி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை பார்க்கும்போது கேட்பேன் என்றும் சொல்கிறான்.


அபி சீரியசாக இறந்தவனை பற்றி தெரிந்து கொள்கிறான்.அப்போது தொடங்குகிறது பிரச்சனை .அந்த அறையில் இவன் கண்களுக்கு இறந்தவன் தெரிய தொடங்குகிறான்.இவனிடம் அவ்வபோது பேசுகிறான்.இவனுக்கு உதவ வருகிறார் அந்த ஆசிரியர் அனிருத் .உண்மையில் அவன் பார்ப்பது இறந்தவன் தானா? என்று பல பல அதிர்சிகளை நமக்கு தருகிறார்கள்.மனித மனம் பற்றி டாக்டர் அனிருத் சொல்லும் விஷயங்கள் அருமை.நம் மாதவன் நடித்த எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் DR.அணிருதாக நடித்துள்ளார்.அதிலும் கடைசி 5 நிமிடம் .CLASS

எனக்கு தெரிந்து இந்த படம் எந்த ஆங்கில உலக படத்தின் காப்பியும் இல்லை. ஒரு துணிச்சாலான ,புத்திசாலிதனமான படம்.கொஞ்சம் வித்யாசமான சில திடுக்கிடும் ட்விஸ்ட்கள் கொண்ட படம் பார்க்க விருப்பம் என்றால் நிச்சயம் பார்க்கலாம். இந்திய அளவில் ஒரு சிறந்த ,ORIGINAL ஆன கதையோடு கொண்ட ஒரு முயற்சி என்ற முறையில் இந்த படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

Monday, 15 April 2013

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா 

திரை படங்களில் கதை :
ஓர் திரை படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம்? அதானே உயிர்.ஒரு படம் உயிர் பெறுவது எப்படி.முதலில் கதையை எழுதி அதற்க்கு ஏற்றாற்போல் திரைக்கதை வடிவம் தந்து அதை முழுவடிவம் செய்து முடிப்பதே முதல் படியாக இருந்து வந்தது.இன்று வரும் படங்களில் கதை இருக்கிறதா?  கதை சரி இல்லை என்று தூக்கி எறியப்பட்ட படங்களை விடுவோம் .இன்று வெற்றி பெரும்  படங்களிலாவது கதை இருக்கிறதா?உதாரணதிற்கு 2012 மற்றும் 2013இல் இன்றுவரை வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டால்.2012 இல் ஹிட் துப்பாக்கி .சரி அதிலாவது ஆங்காங்கே குண்டு வைத்து நாட்டையே அதிர்சிக்குள்ளகும் தீவிரவாத குழுவுக்கு ஒரு ராணுவ வீரன் அந்த தீவிரவாதிகளுக்கே அதிர்ச்சி கொடுத்தால் ? என்ற ஒரு கரு இருந்தது.மற்ற படங்களான ஒரு கல் ஒரு கண்ணாடி ,கலகலப்பு போன்ற படங்களில் எதோ ஒரு வரி கதை அதை சுற்றி சில நகைச்சுவை காட்சிகள் அவ்வளவே படம்.அதில் சமீப வரவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் சேர்ந்துள்ளது.படமும் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில் இது மேலும் இதுபோல் கதை இல்லாத படங்கள் அதிகம் வருவதற்கான அபாய நிலையை அதிகம் ஆக்குமோ?

SPECIAL 26: 
HEIST வகை படங்கள் அதாவது கொள்ளையை மையமாக கொண்டு வரும் படங்கள் எனக்கு பிடிக்கும்.ஆங்கிலத்தில் நிறைய வருவதுண்டு.தமிழில் கலவையான "நாணயம் ",மங்காத்தா போல வெகு சில இருந்தாலும் இந்த SPECIAL 26 இந்திய அளவில் சமீப காலங்களில் வந்த சிறப்பான படம்.ரொம்ப நேர்த்தியாக இருந்தது.பிடித்த விஷயம் 1987இல் நடக்கும் கதை அதில் இந்த கால வேகமான எடிட்டிங் முறை இல்லாமல் இயல்பான எடிட்டிங் முறையில் படம் சீரான வேகத்தில் இருந்தது.போன வருடமே படம் வந்தாலும் இப்போது தான் பார்த்தேன்.காரணம் சப் டைட்டில் உடன் நல்ல பிரிண்ட் .

IPL COMEDY:
எந்த வித அதிர்சிகளும் இல்லாமல் ஏறகுறைய அதே 5அணிகள் தான் நன்றாக விளையாடி வருகிறார்கள் .சென்னை,மும்பை,பெங்களூர்,டெல்லி,கொல்கத்தா போன்றவற்றில் 4 அணி தான்  அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் இருக்ககூடும்.மற்ற ராஜஸ்தான்,பஞ்சாப்,பூனே,ஹைதராபாத் போன்றவை கடைசி இடங்களுக்கு வராமல் இருக்கத்தான் போட்டி .சன் நியூசில் தினமும் மாலை  6.30 பாஸ்கி ,நாணி போன்றவர்கள் IPL ஆட்டங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.சிலர் பார்த்திருக்கலாம். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சன் டிவியின் புத்தி காட்டி விடுகிறார்கள் .கோப்பையை வெல்ல கூடிய அணி அவர்களது சன் ஹைதராபாத் அணியாம் .இதை அவர்களை அவ்வபோது சொல்ல வைத்துவிடுகிறார்கள்.வெள்ளி கிழமை என்று நினைக்கிறன் யாரோ ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் வந்திருந்தார் அவரிடம் ஹைதராபாத் பற்றி கேட்க்க அவர் அது தேறாத அணி என்றதும் பாஸ்கி அவசரமாக பேச்சை மாற்றி தாவி விட்டார்.பார்க்க காமெடியாக இருந்தது.

வெறுப்பு ராஜா :
குமுதத்தில் இளையராஜா கேள்வி-பதில் சில மாதங்களாக வருகிறது..இதுவரை இளையராஜா பற்றி இருந்த எண்ணங்களை மாறிவிடுமோ என்று தோன்றுகிறது.ரஜினி,கமல்,பாரதிராஜா,எஸ்.பி.பி .ஜானகி ,பாலச்சந்தர் என யாரையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு பதில்களில் விளாசுகிறார்.எப்போது அந்த பகுதி நிறுத்துவார்களோ என்று காத்திருக்கிறேன்.

அஞ்சலியும் பதிவர்களும்:
நடிகை அஞ்சலி போனவாரம் முழுதும் பத்திரிக்கை ,செய்தி சேனல்களுக்கு ஒரு விஷயாமாக சிக்கினார்.பதிவர்களும் தங்கள் பங்கிற்கு அவ்வபோது செய்திகள் போட்டுக்கொண்டே இருந்தனர் சிலர் புலனாய்வு இதழ்கள் போல தலைப்பிட்டு பதிவுகள் தந்தனர். நேற்று பதிவர் இன்றைய வானம் எழுதிய பதிவு யோசிக்க வைத்தது.அது இங்கே 
-- http://indrayavanam.blogspot.in/2013/04/blog-post_8182.html

Sunday, 14 April 2013

தமிழ் டாப் நடிகர்களின் சமீபத்திய படங்கள் 2013 :

தமிழ் டாப் நடிகர்களின் சமீபத்திய படங்கள் 2013 :


ரஜினி ,கமலை தவிர்த்து மற்ற டாப் நடிகர்கள் 11 பேரின் சமீபத்திய 5 படங்களின் ஹிட்/ பிளாப் விகிதத்தை பார்ப்போமா? இங்கே அவர்கள் நடித்து வெளிவந்த கடைசி 5 படங்களை கணக்கில் எடுத்து கொள்கிறேன்.ஹிட் என்று சந்தேகம் இல்லாமல் எல்லாராலும் ஏற்று கொள்ளப்பட்ட படங்களை மட்டுமே ஹிட் லிஸ்டில் சேர்த்துள்ளேன்.கொஞ்சம் முன்னே பின்னே உள்ள படங்களை AVERAGE என்று சேர்த்துள்ளேன்.



11.சிம்பு : அடுத்தடுத்து பல படங்கள் நடிப்பதாக செய்தி வந்தாலும் ஒரு படம் நடிக்கும்போதே அதை கிடப்பில் விட்டு அடுத்தபடம் நடிக்க போய் விடுகிறார்.அதனால் படங்களுக்கு இடையில் ரொம்பவும் இடைவெளி .இவரது கடைசி 5 படங்களை பார்த்தால் 2008 இல் சிலம்பாட்டம் ,2012இல் போடாபோடி என 5 ஆண்டுகளில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
போடா போடி- FLOP
ஒஸ்தி -FLOP
வானம்-FLOP
விண்ணை தாண்டி வருவாயா -HIT
சிலம்பாட்டம்-BELOW AVERAGE

சிம்பு --- 1/ 5

10.தனுஷ்: கொலைவெறி மூலம் உலக புகழ் அடைந்தாலும் தமிழ் மார்கெட் என்னமோ சொல்லி கொள்ளும்படி இல்லை .கடைசி 5 படங்களுமே ஹிட் இல்லாமல்  இவர் மார்க்கெட் அதல பாதாளத்தில் இருக்கிறது.ஆனால் மனிதர் அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் ஹிந்தி என்ட்ரிக்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.அவர் நடித்து அடுத்து வரும் மரியான் படம் என்னவோ விக்ரம் நடித்த டேவிட் படத்தை நினைவு படுத்துகிறது.ஒருவேளை பட ரிசல்ட்டும் டேவிட் போலவே ஆகும் என்று தோன்றுகிறது.ஆடுகளம் (வியாபார ரீதியாக பெரிய ஹிட் இல்லை) தவிர்த்து மற்ற 4 படங்களும் படு தோல்வி.

3-FLOP
மயக்கம் என்ன-FLOP
வேங்கை -FLOP
மாப்பிள்ளை-FLOP
ஆடுகளம்-AVERAGE 

தனுஷ்- 0/5, 1 AVERAGE HIT

9.கார்த்தி : அட என பார்க்கும் போது விழ தொடங்கி விட்டார்.அசால்டான ,அலட்டல் இல்லாத நடிப்பு என நடிக்க துவங்கி தொடர்ச்சியாக சில ஹிட்கள்.சொந்த பட நிறுவனம் வேறு உள்ளது (STUDIO GREEN).கடைசி 5 படங்களில் பையா தவிர மற்ற 4 படமும் சொந்த தயாரிப்பு.

அலெக்ஸ் பாண்டியன் -FLOP
சகுனி -FLOP
சிறுத்தை -HIT
நான் மகன் அல்ல -AVERAGE
பையா-HIT

கார்த்தி -2/5 HIT, 1 AVERAGE 

8.ஜெயம் ரவி : அழகான ஹீரோ.சிம்பு போலவே இவரும்  அதிக படங்கள் நடிக்கவில்லை.2012 இல் ஒரு படமும் வெளிவரவில்லை. ஆதிபகவன் படத்திற்காக ரொம்ப நாள் காத்திருந்து விட்டார்.ஆனால் படம் சொதப்பி விட்டது.கடைசி 5 படம் என்றால் பேராண்மை என்ற நல்ல படத்தில் நடித்ததாக திருப்தி பட வேண்டியது தான்.

ஆதிபகவன்-FLOP
எங்கேயும் காதல்-FLOP 
தில்லாலங்கடி -FLOP
பேராண்மை-AVERAGE
தாம் தூம் -BELOW AVERAGE

ஜெயம் ரவி- 0/5, 1 AVERAGE HIT


7.ஆர்யா: தற்போது ஓரளவு மார்க்கெட் இருக்கும் ஹீரோ.பெண் ரசிகைகள் அதிகம் உள்ள தனிக்கட்டை.2009க்கு பின் மார்க்கெட் உயர தொடங்கி உள்ளது.மல்டி ஸ்டார் படங்களில் தயங்காமல் நடிப்பவர்.நண்பர்களுக்காக 1 சீன் என்றாலும் வருவார்.

சேட்டை- தற்போதைய நிலவரம் AVERAGE 
வேட்டை-AVERAGE
அவன் இவன்-FLOP
சிக்கு புக்கு-FLOP
பாஸ் (எ) பாஸ்கரன் -HIT

ஆர்யா- 1/5 HIT, 2 AVERAGE

6.விஷால் : அதல பாதாளத்தில் இருக்கிறார்.எப்படி பட்ட படங்களில் நடிப்பது என்று குழப்பம் உள்ளதாக தெரிகிறது.அவன் இவனில் குறை சொல்ல முடியாத நடிப்பு.ஆனால் படத்தில் விஷயமில்லை.கடன் ,சம்பளம் ஒழுங்காக வராதது என்று இவருக்கு பண பிரச்சனை வேறு இருபதாக தெரிகிறது.அடுத்து காமெடியை கையில் எடுத்து உள்ளார் பார்க்கலாம்.

சமர்-FLOP
வெடி -FLOP
அவன் இவன்-FLOP
தீராத விளையாட்டு பிள்ளை -FLOP
தோரணை-FLOP

விஷால் -0/5

5.ஜீவா- பாவம் இந்நேரம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டியது.கவுதம் மேனன் ,மிஷ்கின்,பிஜோய் நம்பியார் (டேவிட்) ,என்று ஹிட் இயக்குனர்கள் படங்களில் நடித்தாலும் அந்த பெரிய இயக்குனர்களுக்கே அந்த படங்கள் தோல்வி படமாகி விடுகிறது. கோ படத்திற்கு முன் பின் ஓரளவு மார்க்கெட்.

டேவிட் -FLOP
நீதானே என் பொன்வசந்தம்-FLOP
முகமூடி-FLOP
வந்தான் வென்றான் -FLOP
ரௌத்திரம்-FLOP

ஜீவா- 0/5

4.விக்ரம்: ஜீவா போலவே தான் இவரும் .எதிர் பார்த்த சில பெரிய படங்கள் ஓடவில்லை.ராஜபாட்டை எல்லாம் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார்? அநேகமாக அந்த 7 கெட் அப் வந்து விசாரணை செய்யனும் என்றதும் ஓகே சொல்லி இருப்பார்.அதே போல் தாண்டவமும் பார்வை அற்றவர் என்றதும் ஓகே  சொல்லி இருப்பார்.தனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கா என்றும் பார்க்கும் அளவிற்கு கதையில் கவனம் செலுத்த வேண்டும் .நல்ல நடிகர் அதனால் தான் இவ்வளவும்.

டேவிட்-FLOP
தாண்டவம்-FLOP
ராஜபாட்டை -FLOP
தெய்வ திருமகள் -AVERAGE 
ராவணன்-FLOP

விக்ரம்- 0/5, 1 AVERAGE HIT

3.சூர்யா: சிங்கம் தவிர கடைசி 5 படங்கள் சொல்லும்படி இல்லை.என்றாலும் எல்லாம் பெரிதும் எதிர்பார்க்க பட்ட படங்கள்( 7ஆம் அறிவு,மாற்றான்).ஓரளவு வந்த ஜோரில் கூட்டம் சேர்ந்தாலும் திருப்தி தராத படங்கள்.பெரிய இயக்குனர்கள் படங்கள் மட்டுமே என்பது இவர் பாலிசி .அதுவும் தற்போது எடுபட வில்லை.அடுத்து சிங்கம் 2, கவுதம்,லிங்குசாமி படங்கள்.பார்க்கலாம்.

மாற்றான்-AVERAGE
7ஆம் அறிவு-AVERAGE
ரத்த சரித்திரம்-FLOP
சிங்கம்-HIT
ஆதவன்-AVERAGE

சூர்யா: 1/5, 3 AVERAGE 

2.அஜித் : பில்லா 1 ,மங்காத்தா ஹிட், மற்றவை காலி .அதிக படங்கள் வரவில்லை.2007இல் வந்த பில்லா 1 கடைசி 5 படங்களில்  வருகிறது.பில்லா 2,ஏகன்,அசல் எல்லாம் ஏக எதிர் பார்ப்பில் வந்து ஊத்தி கொண்ட படங்கள்.

பில்லா 2-FLOP
மங்காத்தா -HIT
அசல்-FLOP
ஏகன்-FLOP
பில்லா 1-HIT

அஜித்- 2/5

1.விஜய்: சென்ற வருடத்தின் நம்பர் 1 படம்  துப்பாக்கி .அஜித்,விக்ரம்,சூர்யா என்று எல்லா பெரிய ஹீரோவின் படங்களும் சென்ற வருடம் ஊற்றிகொண்ட போதும் ஹிட் கொடுத்தார்.50 வது படம் என்று எதிர் பார்க்க பட்ட சுறா தவிர மற்றவை தோல்வி இல்லை என்றே சொல்லலாம் .வெற்றி அளவுதான் வித்யாசம்.

துப்பாக்கி -HIT
நண்பன்--AVERAGE
வேலாயுதம்-HIT
காவலன்-AVERAGE
சுறா-FLOP

விஜய்- 2/5 , 2 AVERAGE 

இங்கே நடிகர்களின் கடைசி 5 படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள பட்டது.பெரிய ஹிட் என்று எல்லோராலும் சந்தேகம் இல்லாமல் ஏற்றுகொண்ட படங்கள் மட்டுமே ஹிட் என்று சேர்த்துள்ளேன்.