Pages

Tuesday, 30 July 2013

HORRIBLE BOSSES (2011) : இது காமெடி படமாம்

HORRIBLE BOSSES (2011) : இது காமெடி படமாம் நம் எல்லோருக்குமே நம்மை ஏய்த்து விரட்டுபவர்களை பிடிக்காது.அதுவே விரட்டுபவர் வேளையில் நமது பாஸாக இருந்தால்? அதுவும் ஒரு அளவிற்கு மேல் ஆகிவிட்டால்? இதற்க்கு மேல் பொறுக்க  முடியாது ,அதுக்காக வேறு வேலைக்கும் செல்ல இது தருணம் அல்ல.காரணம் எல்லா இடங்களிலுமே உள்ள பொருளாதார நெருக்கடி அதனால் வேலையின்மை .

முதலில் நிக் .பல மாதங்களாக பல மணி நேரம் கடுமையாய் உழைத்தும் சில்லி காரணங்களுக்காக  தன்  பனி உயர்வை தடுத்த தன்  பாஸ் மீது வெறி கொண்டுள்ள நிக்.

அடுத்து டே. ஒரு பெண் பல் மருத்துவரிடம் உதவியாளனாக இருப்பவன்.தன் காதலியை கரம் பிடிக்க இருப்பவன்.ஆனால் அவன் பணி புரியும் பெண் மருத்துவர் இவனிடம் காம கண்ணோடு இவனை அடைய பார்க்கிறார்.தன்  காதலியிடம் தன்னை பற்றி தப்பாக போட்டு கொடுப்பேன் என்று சொல்லி மிரட்டியதால் என்ன செய்வது என்று தெரியாமலும் ஆனாலும் அவள் ஆசைக்கு இணங்க முடியாமலும் தன் பாஸ் மீது கொலைவெறி கொண்டுள்ளான்.

அடுத்து கார்ட் .ஒரு நல்ல மனிதரிடம் வேலை செய்கிறான்.அவன் நேரம் அந்த முதலாளி இறந்து போகிறார்.அந்த இடத்திற்கு வரும் முதலாளி  மகன் ஒரு திமிர் பிடித்த,பெண் பித்தன்.அவனிடம் மாட்டி கொண்டிருக்கிறான் கார்ட் .இந்த மூவரும் ஒரு குடி சந்திப்பில் தத்தமது மனக்குறையை பேசி வேலை மாறலாம் என்று முடிவெடுக்கும்போது அங்கே தங்கள் பழைய நண்பன் உயர்ந்த வேளையில் இருந்து தற்போது கஷ்டப்பட்டு வருவதை அறிந்து வேலையை விடுவதை கை விடுகிறார்கள்.அதன் பின் நல்ல ஒரு ரவுடியை தேடி அலைந்து அவனிடம் ஏமார்ந்து பின் ஒவ்வொருவரும் இன்னொருவரின் பாஸை காலி செய்ய முடிவெடுக்கிறார்கள்.

அதன் பின் நடக்கும் சாகசங்களை கொஞ்சமே  புன்னைகைக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள்.பெரிய அளவு வெடித்து சிரிக்கும் அளவிற்கு எல்லாம் படம் இல்லை.ஆனால் இந்த படம் 6.9 IMDB RATING பெற்றுள்ளது.ரொம்ப ஓவர்.இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தால் ஓகே ஆகியும்  5 ஆண்டுகளுக்கு மேல் படபிடிப்பு தொடங்கபடாமலேயே   இருந்ததாம்.

2011 இல் வெளி வந்த இந்த படம் மிக பெரிய வெற்றியாம்.அது சரி ஓகே ஓகே,கேடி பில்லா கில்லாடி  ரங்கா வகை மொக்கை படங்கள் இங்கே ஹிட்டாக ஓடவில்லையா? இந்த படம் 2ஆம் பாகம் வர உள்ளதாம் .எஸ்கேப் .

அது சரி எனக்கு HANGOVER படமே பெரிய காமெடியாய்  தெரியவில்லை.அனாலும் இங்கே இருக்கும் நம்ம ஆட்கள்  அதையே கிளாசிக் காமெடி என்று சொல்லி பல முறை பார்த்து கொண்டாடினார்கள்.அனாலும் அவர்கள்  நம் மைக்கேல்  மதன காமராஜன் படத்தை கூட நொள்ளை சொல்வார்கள்.அது தான் பிரச்சனையே .

Saturday, 27 July 2013

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

பார்த்த 30 படங்களில் சூப்பர் என்று சொல்லகூடிய லிஸ்ட் இது :

இதில் 3 படங்களுக்கு சக பதிவர்களின் லிங்க் கொடுத்து உள்ளேன்.அதை விட சிறப்பாக எழுதிவிட முடியாது என்பதால் அவர்களின் பதிவே இங்கே முறை.The Hidden Face (2011):

உங்களுக்கு பிடித்தமானவர்கள் உதாரணமாய் உங்கள் கணவனோ ,மனைவியோ அல்லது காதலரோ காதலியோ (மணம்  ஆகாமல் ஒன்றாய் இருப்பது இந்தியாவில் சாத்தியமோ) நீங்கள் இல்லாத போது அவர் என்ன செய்வார் என்பதை பார்க்க நினைத்தால் ? அதுவும் மிக அருகில் இருந்து (கேமரா வைத்து எல்லாம் இல்லை)

தன்னை விட்டு பிரிந்து ஓடிவிட்ட காதலி அவன் பார்பதற்காக ஒரு வீடியோவில் பேசி, தான் போவதாகவும் வேறு ஒருவனை விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் வெறுப்பு அடையும் அவன் குடிக்க போன இடத்தில வேறு ஒருவளை சந்தித்து, அவளுடன் நட்பாகி அவளை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவளோடு உறவு கொள்கிறான்.

முன் கதை : இசை நடத்துனரான அந்த நாயகன் தன் குழுவில் உள்ள ஒரு பெண்ணோடு உறவு உள்ளதாக நினைக்கிறாள் காதலி.அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு வயதான பெண்ணிடம்(வேறு ஊரில் வசிப்பவர் ) தன் எண்ணத்தை சொல்கிறாள்.அந்த வீடு ஒரு வித்யாசமான வீடு .வீட்டிற்கு  நடுவில் ஒரு சிறு இருட்டு அறை .ஆனால் வெளியில்  இருந்து பார்த்தல்  வெறும் பீரோ,கண்ணாடி ,சுவர் என்றே தெரியும்.அதன் உள்ளே செல்லும் வழியும் தெரியும்படி இருக்காது. ஒரு பக்க முகம் பார்க்கும் கண்ணாடியும் பின் பக்கம் சாதாரண கண்ணாடியும் உள்ளதால் வீடு முழுதும் என்ன நடக்கிறது என்று அந்த அறையில் இருந்தே பார்க்கலாம். இந்த விஷயம் அந்த உரிமையாளர் பெண் சொல்லித்தான் காதலிக்கு தெரிய வருகிறது.மேலும் உண்மையை கண்டுபிடிக்க அந்த அறையில் தங்கிவிட்டால் போதும் என்கிறாள்.சரி என்று ஒரு காமெராவில் தான் அவனை விட்டு போவாத சொல்லி மறைகிறாள்.மறைந்த இடத்தில உள்ளே வந்து பூட்டிய இடத்தில சாவி தொலைகிறது.என்ன கத்தினாலும் கேட்காது.அப்படி ஒரு அறை  இருப்பதே காதலனுக்கு தெரியாது.அவள் எப்படி வெளியே வருகிறாள்? 

ஸ்பானிஷ் மொழி படம் .2011 வந்தது.ஹிந்தியில் வெளி வந்த murder 3 இந்த படத்தின் அதிகார பூர்வமான ரீமேக் .

வித்யாசமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.

Coldfish: ஒரு மனிதனை கொன்றால் அப்படி ஒருவன் இருந்ததற்கே அடையாளம் இல்லாமல் அழிப்பது எப்படி என்பதை ஆற அமர துண்டு துண்டாக வெட்டி ரத்தம் எல்லாம் எடுத்து எலும்பை தனியாக எடுத்து எரித்து அதை நதியில் கொட்டி ,வெட்டிய அறையை சுத்தம் செய்வது வரை முழுவதும் விலாவரியாக காட்டுகிறார்கள்.கதை எல்லாம் பெரிதாக இல்லை.

ஒரு கணவன் மனைவி.சிறய மீன் கடை நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு பெண்.அந்த பெண்ணை இன்னொரு பெரிய மீன் கடையில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.அந்த கடையின் உரிமையாளரும் அவன் மனைவியும் சைக்கோ கொலைகாரர்கள்.அவர்களிடம் சிக்கும் அந்த சிறைய கடையின் கணவன்.அவனை அடிமையாக்கி கொலைகளுக்கு உதவ வைக்கிறார்கள்.அவன் என்ன செய்தான் என்பதே படம். ஜப்பானிய படங்கள் பார்பவர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட் .ரசனையான படம்.

Bedevilled (2010) : வங்கி ஒன்றில் பணி புரியும் ஹெவோன் விடுமுறைக்காக தான் வளர்ந்த தீவிற்கு போகிறாள் .தற்போது அங்கு இருப்பது மொத்தமே ஒரு 10 பேர் தான்.சிறு வயதில் தன் தோழியான போக்னம் வீட்டில் தங்குகிறாள்.அவளுக்கு 10-12 வயதில் ஒரு பெண்.அவள் கணவன் முரடன்.அவன் தம்பி ஒரு பெண்பித்தன்.தன அண்ணன் மனைவியையே அவ்வபோது உறவு கொள்கிறான்.வந்திருக்கும் தோழி மீது ஒரு கண்.மற்றவர்கள் கடுமையான மக்கள் .ஈவு இரக்கம் இல்லாதவர்கள்.ஒரு நாள் ஒரு சண்டையில் அவள் சிறு பெண் இறக்கிறாள்.அதனால் வெறி வந்த போக்னம் அந்த தீவின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கொடூரமாக கொள்கிறாள்.அவள் வீட்டிற்கு வந்திருக்கும் தோழி? இந்த ஆசிய கொரியா படங்கள் கதை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் மேகிங்கில் அசத்தி விடுகிறார்கள்.


Memories of Murder (2003): நான் பார்த்த இந்த சூப்பர் லிஸ்டில் இந்த படத்திற்கு தான் நம்பர்  1 .அவ்வளோ சூப்பர் படம்.நம் யுத்தம் செய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

ஜாக்கி சேகர் எழுதிய இந்த படத்தின் விமர்சனம் 


City Of God (2002) : இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் பதிவர் ஹாலிவுட் ராஜ் .அவர் எழுதிய விமர்சனம் லிங்க் 
 

Mulholland Drive (2001): 

இந்த படத்தை பற்றி இதற்க்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.என்று சொல்லும் அளவிற்கு கீதபிரியன் எழுதி  இருக்கிறார்.அவ்வளோ விஷயம் இருக்கு இந்த படத்தில் .படத்தில் .

இந்த படத்தின் டிவிடியில் இயக்குனர் ஒரு பத்து கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கும் கீதபிரியன் தனி பதிவில் விளக்கம் எழுதி இருக்கிறார்.படத்தை பார்த்து உள்ளவர்களுக்கு இந்த லிங்க் ஒரு ஆச்சர்யம்.அந்த லிங்க் 

அடுத்த பதிவில் 45 படங்களில் சுமார் படங்கள் 

இதன் முந்தய பகுதிகள் 

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:பகுதி 1   : 

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

Monday, 15 July 2013

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

பார்த்தது 30 படங்கள் என்றாலும் அதில் தேறியது என்னவோ 6 படங்கள் தான் சூப்பர் ரகம் .மேலும் 7 அல்லது 8 படங்கள் ஓகே ரகம்  ,மற்றவை மொக்கை தான் .


இவற்றில் 

சூப்பர் என்று சொல்ல கூடிய படங்கள் : 

1.Memories of murder (2003)
2.Cold fish (2010)
3.Mullholland drive (2001)
4.City of god (2002)
5.The hidden face (2011)
6.Bedevilled (2010)

ஜஸ்ட் ஓகே .ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல கூடிய படங்கள்.

1.Stir of echos (1999)
2.The vanishing (1988)
3.100 feet (2008)
4.Chained (2012)
5.Mindhunters (2004)
6.Restraint (2008)
7.Texas 3d (2013) 
8.Halloween (2007)

மொக்கையாய் நேரத்தை வீண் அடித்த படங்கள் :

1.The shrine (2010)
2.The tallman (2012)
3.The Barrens (2012)
4.Absentia (2012)
5.American Mary (2012)
6.Fragile (2005)
7.Insomnia (2002)---- CHRISTPER NOLAN படமாம்.
8.House (2008)
9.Intruders (2011)
10.Lakeview terrace (2008)
11.Mama (2013) 
12.The crazies (2010)
13.The Ferryman (2007)
14.The pact (2012)
15.The collection (2012)
16.The Echo (2008)
17.The gravedancers (2006)
18.The Killing floor (2006)
19.The Mothman propecies (2002)
20.Unknown (2011)
21.Grave Encounters (2011) 

இவை தவிர 88 Minutes, shame (2011), contagion (2011) இந்த படங்களை பார்க்க தொடங்கி பார்க்க முடியாத அளவிற்கு மொக்கையாய் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.

மேற் சொன்ன 3 லிஸ்ட்களில் சூப்பர் படங்களை பற்றி தனித்தனி  பதிவுகளும் ,ஜஸ்ட் ஓகே படங்களை ஒரே பதிவில் எழுத திட்டமிட்டுளேன். பார்க்கலாம். 


45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-1

இந்த பதிவின் முதல் பகுதி லிங்க்