Pages

Thursday 28 November 2013

பதிவர்களின் பொதுவான குணங்கள் என்ன?

பதிவர்களின் பொதுவான  குணங்கள் என்ன? 



தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவனுக்கு ஓர் குணம் உண்டு என்று எப்போதோ யாரோ சொன்னதாக பாடத்தில் படித்திருக்கிறேன்.அது போல் பதிவர்கள் என்றால் பெருவாரியானவர்கள் செய்வது என்ன .அவர்கள் பகிர்வது என்ன (கவனிக்க பெருவாரியானவர்கள்).நீங்கள் நிறைய பதிவுகள் படிப்பவர் என்றால் இவற்றை  உணரலாம்.இது யாரையும் சிறுமை படுத்த அல்ல.பதிவுலக பெரிசுகள் தனிப்பட்ட முறையில் கருத வேண்டாம்.

பொதுவாக பதிவர்கள் பகிர்வது என்ன? 

யாருமே பார்க்காத படங்களுக்கு போவது (முக்கியமாய் பவர் ஸ்டார் ,ராஜகுமாரன் படங்கள் ).அங்கே நேரும் அனுபவங்களை எழுதுவது.

படம் பார்த்த அரங்கம்,டிக்கெட் விலை பாப்கார்ன் சாப்பிட்டது உட்பட கழிப்பறை சரியில்லை என்பதுவரை அனுபவங்களை பகிர்தல் .

பட விமர்சனங்களில் விகடன் ஸ்டைலில் மார்க் போடுவது அல்லது IMDB ஸ்டைலில் ரேடிங் கொடுப்பது.

புதிதாக ஏதாவது வந்தால் அதை அனுபவித்து எழுதுவது.உதாரணமாக  அம்மா உணவகம்,சின்ன பஸ்

10 நாளா பதிவு பக்கம் வரமுடியல என்று தன் பிஸி timing பற்றி அளப்பது.

வாரத்தில் ஒரு நாள் ஸ்பெஷல் பதிவு.அந்த வாரத்திலோ நடந்தது  பற்றி ஏழுதுவது ,தலைப்பில் உணவு பெயர் அல்லது கலப்படமான உணவின் பெயர்.அதில் பிடித்த பாடலின் வீடியோ பகிர்வும்  உண்டு.

விஜயை கலாய்ப்பது .ஆனால் தலைப்பில் விஜய் பெயர் போட்டு ஹிட்ஸ் பார்ப்பது.

சுஜாதவை புகழ்வது.சாருவை வாருவது

இளையாராஜா பாடல்களை ரசிப்பது.என்ன பாட்டுடா என்று சிலாகிப்பது.
 .
பயண கட்டுரை எழதுவது.பயணத்தை பிளான் பண்ணியது முதல் அங்கே சரக்கடித்து மட்டையாகியது மேற்கொண்டு வீடு வந்து சேர்ந்ததுவரை விலாவரியாக பார்ட் பார்ட்டாக எழுதுவது.நடுவில் போட்டோ பகிர்வும் உண்டு.

நேற்று டிவியில் இந்த படம்/அல்லது பாடல்  போய் கொண்டிருந்தது என்று தொடங்கி அந்த படம் தொடர்பான அல்லது அந்த படம்/பாடல் தன வாழ்வில் சம்பந்த பட்ட நிகழ்வுகளை பகிர்தல்.

டிவி நிகழ்சிகள் பற்றி முக்கியமாய் நீயா நானா பற்றி அவ்வபோது கதைப்பது.

வங்கி,திரை அரங்கம்,customer care அல்லது போலீஸ் போன்றவற்றுடன் அநியாயத்தை சந்தித்து பொங்கி எழுந்தது பற்றி பகிர்தல்.

தமிழ்மணம் சரியில்லை .அக்கிரமம் நடக்கிறது என்று புலம்புவது.

10000 ஹிட்ஸ் வழங்கியதற்கு நன்றி .100 வது பதிவு வரை நான் வந்ததற்கு நன்றி என்று நெஞ்சை நக்குவது.

வருட இறுதியில் அந்த வருடத்தில் பிடித்த/பிடிக்காத படங்களின் பட்டியல் தருவது.

இறுதியில் முக்கியமானது 

பெருவாரியானவர்கள் ரசிக்கும் படத்தை சரியில்லை என்பது அல்லது எல்லோரும் கழுவி ஊதும் படத்தை எனக்கு பிடித்திருந்தது என்பதுடன் இந்த  படத்தை நாம் கொண்டாடாவிட்டால் தமிழ் சினிமாவே கதியற்று போய் விடும் என்று வருத்தபடுவது .

உலக படங்களை பற்றி எழுதாத பதிவர்களா? 


பதிவுலகில் இருக்கும் எல்லோருமே இவற்றை கடந்து தான் வந்திருப்போம்.மேலும் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்.

Thursday 21 November 2013

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி?

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி? 



ஒரு வாரத்திற்கு ஒரு புதிய படத்தின் பாடல்கள் வெளிவரும் காலம் இது.சில பாடல்கள் கேட்க்க கேட்க்க பிடிக்க தொடங்குவதற்குள் மேலும் சில படங்களின் பாடல்கள் வந்துவிடுகின்றது.இவற்றில் நான் ஓரளவு அடிக்கடி கேட்ட,கேட்டுவரும் 2 புதிய படங்களின் பாடல்களை பற்றி ஒரு அறிமுகம்.

பிரியாணி மற்றும் என்றென்றும் புன்னகை என வெளிவர காத்திருக்கும் 2 படங்கள் தான் அவை.

பிரியாணி: யுவனின் 100வது படம்.கார்த்தி நடித்துள்ள இந்த படம் அழகுராஜா படத்திற்கு முன்பே ரெடி என்ற போதிலும் அதை வெளியிடாமல் கிறிஸ்துமஸ் தினத்தில் வரும் என்று கேள்வி.8 பாடல்கள் உள்ளது  இந்த ஆல்பத்தில் .

1.பிரியாணி : புதுசாய் எதோ முயற்சித்து இருக்கிறார்கள் போல இருக்கிறது.ஆங்கில பாடல் போல தொடங்கி தமிழ் வரிகள் வழியும் பாடல்.

2.நா நானா : இந்த ஆல்பத்தின் ஹிட் நம்பர் என்றால் இந்த பாடல் தான்.மறைந்த வாலி எழுதிய இந்த பாடல் முழுதும் பே வாட்ச் பெண்கள் ,GIRLS,PATRY என்று அடிக்கிறது .இதுவரை வசனங்களில் கெட்ட  வார்த்தை வந்து பீப் சத்தம் கேட்டு இருப்போம்.இந்த படத்தில் இந்த பாடலில் எதோ ஒரு வார்த்தைக்கு இவர்களே பீப் கொடுத்திருக்கிறார்கள்.

3.போம் போம்: அமைதியான பாடல் .ஆர்பாட்டம் இல்லாத இசை.இரவில் கேட்ட்க ஏற்ற யுவன் ஸ்டைல் பாடல்.

4.மிசிஸிபி : மூட் சாங் என்று சொல்லப்படும் சல்லாப பாடல்.உதாரணமாய் அடிக்குது குளிரு (மன்னன் படத்தில்),நிலா காயுது (சகலகலா வல்லவன்) பாடல்களை போல நடுவில் பெண்ணின் சிணுங்கள் எல்லாம் உண்டு.கார்த்தியே பாடி இருப்பது சிறப்பு.நடுவில் பிரேம்ஜி வேறு எனக்கு எனக்கு என்று அலைகிறார்.

5.RUN FOR YOUR LIFE: தற்போதைய ட்ரெண்டு படி கானா பாலா பாடியுள்ள பாடல்.இறுதியில் மங்காத்தா சவுண்ட் எல்லாம் வருது .

6.எதிர்த்து நில்: சரோஜா படத்தில் நிமிர்ந்து நில் பாடலை ஞாபக படுத்தும் பாடல். விஜய் ஆண்டனி ,இமான் ,ஜி.வி.பிரகாஷ் ,தமன் என்று தற்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.மற்றபடி படத்தோடு பார்த்தால் ஒரு வேலை பிடிக்கலாம்.

மேலும் நா நானா பாடல் மேலும் இரு வகையாய் வருகிறது.யுவனின் மற்றுமொரு ஆல்பம் என்று பார்த்தால் ஓகே.ஆனால் 100வது படம் ,வெங்கட் பிரபு கூட்டணியில் என்று பார்த்தால்  பெரிதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.படம் கூட எனக்கு சந்தேகமாய் தான் உள்ளது.கோவா படம் போல மொக்கை போட போகிறார்கள் என்று சந்தேகமாய் உள்ளது.



என்றென்றும் புன்னகை: தற்போதைய இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 (பொறுமை -- இசை அமைத்த படங்களின் ஹிட் சதவிகிதம் ) ஹாரிஸ் ஜெயராஜ் தான் .இது பற்றிய என் விரிவான பதிவு
http://scenecreator.blogspot.in/2013/01/1.html

வாமணன் என்ற மொக்கை படத்தை தந்த அஹ்மத் இயக்கி உள்ளார்.ஜீவா,த்ரிஷா கிழவி,வினய் ,வாசம் இழந்து வரும் சந்தானம் நடித்துள்ள படம்.இளமையான படம் என்று ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது.சரி பாடல்கள் எப்படி என்று பார்க்கலாம்.

1.ஏலே ஏலே தோஸ்து :  எதோ பைக் விளம்பரத்துக்கு போட்ட பாட்டு மாதிரி இருக்கு.அவ்வளதான்.

2.என்னை சாய்தாலே : ரொம்ப நாட்களுக்கு பின் ஹரிஹரன்.கேட்கும்படி இருக்கு .

3.கடல் தான் நான் : இந்த அல்பத்தின் ஹிட் .FM ,டிவி களில் இனி தினமும் பாடப்படும் சாத்தியம் உள்ளது.

4.வான் எங்கும் மின்ன: ஹாரிஸ் ஸ்டைல் பாடல்.அதே "டுக்- டாக்- த- டுக் " இசை கோர்வை .அதே போல ஹிட்டும் ஆகிவிடும்.

5.ஒத்தையிலே உலகம்: மெதுவாய் பாடினால் சோக பாடல் என்று யாரோ ஹாரிசுக்கு தப்பாக சொல்லி இருக்காங்க போல .அவர் போடும் சோக பாடல் என்றாலே மெதுவாக இருக்கும்.

6.என்னத்தை சொல்ல - வாரணம் ஆயிரம் அஞ்சலை வகை பாடல் .சொல்ல ஒன்றும் இல்லை.

யார் என்ன சொன்னாலும் நான் இப்படி தான் இசை அமைப்பேன்.எனக்கு ஒரு 10 TUNE  தான் தெரியும் அந்த 10 அப்படி இப்படி மாற்றி போட்டு 10 வருஷம் ஓட்டிட்டேன்.வண்டி ஓடுற  வரை ஓடட்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் நினைக்கிறார் போல .

Thursday 14 November 2013

வில்லா --பிட்சா 2 விமர்சனம்

வில்லா --பிட்சா 2 விமர்சனம் 



சென்ற ஆண்டு வெளியான பிட்சா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் அந்த திரைக்கதை செமையாக இருக்கும்.படம் வரும் முன்பே எனக்கு அந்த படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.அதை அந்த படம் மெய்பித்தது .இந்த வில்லா -பிட்சா 2 படம் எடுக்கிறார்கள் என்றதுமே எனக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுத்திவிட்டது.ட்ரைலர் பெரிய இம்பாக்ட் கொடுக்காவிட்டாலும் படம் எப்படியும் நன்றாக இருக்கும்.பிட்சா முதல் பாகத்தில் பாதி இருந்தால் கூட போதும் என்று இருந்தேன்.தீபாவளிக்கு வந்த படங்கள் எதையும் கூட நான் இன்னும் பார்க்கவில்லை.இந்த படத்தை முதல் நாளே அடித்து பிடித்து பார்த்தேன் .படம் எப்படி பாப்போம்.

முதலில் பிட்சா முதல் பாகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.ஒரு சில நடிகர்கள் இதிலும் இருக்கிறார்கள் அவ்வளவே.

கதை என்ன? ஒரு இளம் எழுத்தாளன் ஜெபின் .பட தொடக்கத்திலேயே தந்தையை இழக்கிறான்.தன் சொத்துகளை இழந்து தான்  எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறான்.அவனுக்கு ஒரு காதலி ஆர்த்தி.அவள் ஒரு ஓவிய மாணவி.அந்த நேரத்தில் ஜெபின் பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா (மாளிகை போன்ற வீடு ) இருப்பதை தெரிந்து கொள்கிறான்.எதனாலோ அவன் தந்தை அந்த வீட்டை அவனுக்கு தெரியாமல் வைத்து இருந்திருக்கிறார்.அந்த வீட்டை விற்க அங்கே செல்லும் அவன் அங்கு சில ஓவியங்களை பார்க்கிறான்.அதிர்கிறான்.காரணம் அவன் வாழ்வில் கடந்த சம்பவங்கள் ஓவியங்களாக அங்கே இருக்கின்றது .ஆனால் அவை அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே வரையப்பட்டவை.மேலும் அடுத்து சில ஓவியங்கள் இன்னும் அவன் வாழ்வில் நடக்காதவை.அவை இனி நடக்க போகின்றதா? அந்த வீட்டின் ரகசியம் என்ன?

என்ன கதை கேட்ட்க சுவாரஸ்யமாக இருக்கா? இவை முதல் பாதி தான்.இரண்டாம் பாதி படத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.என்னவோ பிரெஞ்சு மந்திரவாதி ,நரபலி,நெகடிவ் எனெர்ஜி,எதிர் வினை என்று போய் கொண்டே இருக்கிறது.படம் எனக்கு கொஞ்சமும் திருப்தியை தரவில்லை.இதற்க்கா  இப்படி அலைந்து  பார்த்தோம் என்றாகிவிட்டது.

முடிவு பிட்சாவை போலவே முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து முடித்திருக்கிறார்கள்.பிட்சா 1 இல் கதை பெரிதாக இல்லாவிட்டாலும் படம் நம்மை பயமுறுத்தும்.இறுதியில் ட்விஸ்ட் அடித்து முடியும்.இந்த படத்தில் கதை வலுவானது தான்.ஆனால் திரைக்கதை தான் சொதப்பலாக இருக்கிறது.தீபன் இயக்கி இருக்கிறார்.கதை மட்டும் எழுதி கார்த்திக் சுப்புராஜிடமோ,நலன் குமாரசமியிடமோ கொடுத்து இருந்தால் அட்டகாசமாய் எடுத்திருக்க வேண்டிய படம்.சொதப்பலாக போய் விட்டது.

அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும் என்று எடுத்த 3 படங்களும் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார் கொடுத்திருக்கும் முதல் தோல்வி படம்.நல்ல வேலை விஜய சேதுபதி நடிக்கவில்லை.படம் 1.45 நேரம் தான்.முதல் பாதி ஓகே.இரண்டாம் பாதி சொதப்பல்.