Pages

Friday 2 November 2012

DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம்


DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம் 


இப்போது ஜேம்ஸ் பாண்ட் படம் வந்துள்ளது.அதன் ஹீரோ டேனியல் கிராக் உங்களுக்கு பிடித்தால்,அவரது வேறு படம் ஏதாவது பார்க்கலாம் என்றால்,இந்த படத்தை பார்க்க யோசிக்கலாம்.படம் ஒரு மிஸ்டரி த்ரில்லர் வகை படம்.நீங்கள் இதுவரை (நானும் தான்) டேனியல் கிராகை அடிதடியில் மட்டும் பார்த்து இருந்தால் ,ஒரு மாற்றத்திற்காக இந்த படத்தை பார்க்கலாம்.இதில் கொஞ்சம்(?) நடித்தும் உள்ளார்.

வழக்கமான ஹாரர் படங்களை போல் ஹீரோ தன் குடும்பத்தோடு புதிய வீட்டிற்கு குடி வருகிறார்.அங்கே நடக்கும் சில புதிரான சம்பவங்களுக்கு பின் அந்த வீட்டில் அதற்க்கு முன் இருந்தவன் தன மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்போது மன நல காப்பகத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.நாமாக இருந்தால் என்ன செய்வோம் அந்த வீடு வேண்டாம் என்று காலி செய்து வேறு வீடு ஓடி வந்திருப்போம்.ஆனால் இந்த திகில் பட ஹீரோக்கள் அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டார்கள்.இதிலும் நம் ஹீரோ போலீஸ் உதவியை நாடி அந்த வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறான்.

போலீஸ் ஒரு மாதிரி பூசி மொழுகி  பயப்படாமல் இருக்க சொல்லி அனுப்பி விடுகிறது.அதன் பின் எதிர் வீட்டில் இருக்கும் பெண் தன்னை பார்த்து ஒரு மாதிரி நடந்து கொள்வதை பார்த்து அவளை நாடுகிறான்.அவள் அவன் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு காரணமான அந்த ஆளின் பேரை (பீட்டர் வார்டு) சொல்லி , ஒரு மருத்துவமனை பேரை சொல்லி அங்கே அனுப்புகிறாள்.அங்கே செல்லும் நாயகன் காண்பது என்ன? (படத்தில் ஒரு முக்கிய திருப்பம் அங்கே) அங்கே அவன் கண்டது தான் நிஜமா? (இறுதியில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் ).

இது போல் சில படங்கள் நிறைய வந்திருந்தாலும் சில இடங்களில் வரும் ட்விஸ்ட் படத்தை தனித்து காண்பிக்கிறது.டேனியல் கிராக் ஓகே என்று சொல்லும்படி தான் இருக்கு நடிப்பு.நாயகி மம்மி படத்தில் வந்தவர்.எதிர்  வீடு பெண்ணாக கிங் காங் படத்தில் வந்தவர்.

படம் பிளாப் ஆன படம் தான்.படத்தின் இயக்குனர்,நாயகன் ,நாயகி ஆகியோர் படத்தின் இறுதி வடிவம் பார்த்து அதிருப்தி ஆகி படத்தின் விளம்பர நிகழ்சிகளுக்கு  வரவில்லை.படத்தின் பெரிய திருப்பம் ஒன்று ட்ரைலரில் வந்து விட்டதாலும் பெரிய சறுக்கல்.உங்களுக்கு டேனியல் கிராக் ரொம்ப பிடிக்கும்,ஒரு லீவ் நாளை கொஞ்சம் த்ரில்லான படம் பார்க்கலாம் என்றால் பார்க்கலாம்.இல்லையா எஸ்கேப் .2011 இல் வந்த படம் 1.30 மணி நேரம் ஓடும்.