Pages

Tuesday, 11 March 2014

கொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்

கொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள் 
முத்து,படையப்பா,பாபா,சிவாஜி,எந்திரன் படங்களை தொடர்ந்து ரஜினி-ரகுமான் கூட்டணி.இந்த படத்தின் மேல் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை.ஆனால் பாடல்களை மட்டும் ரொம்பவும் எதிர்பார்த்தேன்.காரணம் ஏ.ஆர்.ரகுமான்.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பாடல்கள் என்று பார்ப்போம்.

எங்கே போகுதோ வானம்: சென்ற வருடமே வெளிவந்துவிட்டது.PICK OF THE ALBUM இந்த பாடல்தான்.ஆனால் வைரமுத்து ரஜினி உடல்நிலை சரியாகி வந்ததை எல்லாம் பாட்டில் ஏற்றி (படத்தின் கதைக்கு ஒரு வேலை பொருந்துமோ) ரஜினிக்கு வைரமுத்து எழுதினால் தான் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லவேண்டும் என்று விரும்பி எழுதியது இன்னொரு முறை வெளிப்பட்டுள்ளது.ஏற்கனவே "ஒரு துளி வியர்வைக்கு ",கட்சியெல்லாம் நமக்கு எதுக்கு என்னமோ திட்டம் இருக்கு ",கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மார்க்க மாட்டேன் ,தமிழ் மண் என்று ரஜினி ரசிகர்களை அரசியல் நோக்கி தூண்டும் விதமாக எழுதுவார் .இந்த பாடல் தடைகளை உடை -வானமே எல்லை என்று எழுச்சி சொல்லும் பாடல் .

எங்கள் கோச்சடையான் : ஈசன் ,சிவன் சரணம் என்று பாடலில்  சைவ வாடை .ரகுமான் இசை .இந்த பாடல் கேட்ட்கும்போது ஏனோ ரகுமான் பாய்ஸ் படத்தில் வரும் அய்யப்ப பாடலை இசை அமைக்க மறுத்ததாக கேள்விப்பட்ட விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

இதயம் : ஸ்ரீநிவாஸ்,சின்மயீ பாடியுள்ள பாடல்.ரொம்பவும் மெதுவாக இருக்கிறது.ஆனால் அருமை.ஜனங்கள் தியேட்டரில்  உட்கார மாட்டார்கள்.

கர்ம வீரன் : ரகுமான் தன சகோதரியுடன் பாடியுள்ள பாடல்.படத்தோடு பார்த்தால்  ஒருவேளை பிடிக்கலாம்.தத்துவ மழை பாடல் முழுதும்.

மாற்றம் ஒன்றே : ரஜினி குரல் கொடுத்துள்ள பாடல்.(பாடவில்லை வசன நடைதான்) .மன்னிப்பு சிறந்த பழிவாங்கல்,பணத்தால் சந்தோசத்தை வாடகைக்கு வாங்கலாம்,சினத்தை அடக்கு,எதிரியைவிட துரோகம் செய்யும் நண்பன் ஆபத்தானவன் என்று தத்துவ மழைதான் போங்கள் .கேட்க்க காமெடியாக இருக்கு .

மணமகனின் சத்தியம்: தூக்கம் வரும் பாடல் நம்பர் 1.ரஜினி படத்தில் இவ்வளோ மெதுவாக பாடலா? இந்த பாடல் படத்தில் வந்தால் மக்கள் கொட்டாவி விடுவது நிச்சயம்.

மன்னிப்பேன் சத்தியம்: போன பாடலின் பெண் Version .ரஜினின் மனைவி லதா அவர்கள் பாடியுள்ள பாடல்.ஏற்கனவே டிக் டிக் டிக்,ரஜினியின் சொந்த படமான வள்ளியிலும் பாடயுள்ளார்.அனால் அந்த பாடல்களில் இருந்து குரல் நிச்சயம் வேறுபடுகிறது.ஒரு வேலை ரகுமானின் டெக்நாலஜி வேலையோ .


மெதுவாகத்தான் :டூயட் பாடலில் கவனம் ஈர்க்கும் பாடல்.எஸ்.பி.பியின் குரல் தேன் .ஹிட் ஆவதற்கான அதனை அறிகுறிகள் உண்டு.

RANA'S DREAM: இது ஒரு instumental song.எந்த தடதட்ப்பும் இன்றி மெதுவாக கடந்து செல்கிறது.

மொத்தத்தில் எஸ்.பி.பி பாடியுள்ள 2 பாடல்கள் மட்டுமே ரஜினி படம் என்று தெரிகிறது.மற்றவை ரொம்பவும் மெதுவாக இருக்கிறது.பாட்டாக கேட்டல் பிடிக்கும் .பாட்டு கேட்க்காமல் படம் பார்க்கும் ரசிகர்கள் உட்கார முடியாமல் நெளிய போகிறார்கள்.மரியான் படத்திலும் 3 மெதுவான பாடல்களை (இன்னும் கொஞ்ச நேரம்,எங்க போன ராசா,,நேற்று அவள் இருந்தால் )தந்த ரகுமான் ,இந்த கோச்சடையான் படத்திலும் அதை தொடர்ந்து இருக்கிறார்.

எனக்கு கோச்சடையான்  படம் ஓடுமா என்று பெருத்த சந்தேகம் உள்ளது.இன்னொரு குசேலன் ஆக சாத்தியம் உள்ளதாக நினைக்கிறன்.பாப்போம்.

VERDICT--- VERY SLOW SONGS+ OVER தத்துவம்

Monday, 3 March 2014

தெகிடி --- நல்ல முயற்சி

தெகிடி --- நல்ல முயற்சி 

பதிவு எழுதியே பல வாரங்கள்.என்னதே எழுதி என்று பதிவு எழுத கையே போகவில்லை.பிட்சா 2 தி வில்லா ரொம்பவும் எதிர்பார்த்து பார்த்து நொந்து போனேன்.நடிகன் படத்தில் கவுண்டமணி சொல்வாரே "புளி  சாதத்தில முட்டைய வச்சு பிரியாணின்னு எமாதானுங்க என்று "அது போல எதையோ கடகடன்னு எடுத்து அதற்க்கு பிட்சா 2 ன்னு வேற டைட்டில் கொடுத்து எமாத்திட்டாணுக .அதனால் இந்த படம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.வரட்டும் பார்க்கலாம்ன்னு இருந்தேன்.3 நாளாக ஓரளவு படம் பார்க்கலாம் என்று சொல்லியதால் பார்த்துவிட்டேன்.எம்.ஏ  கிரிமினலாஜி புதிதாய் முடித்த ஒருவன் ஒரு துப்பறியும் நிறுவனத்தில் டிடெக்டிவ் பணியில் சேருகிறான்.அவன் அதிகாரி ஒரு நாலு பேரின் தகவல்களை சொல்லி அவர்களை தொடர  சொல்கிறார்.அவனும் தொடர்கிறான்.ஒரு திருப்பமாக அவன் தொடர்ந்த 2 பேர் மர்மான முறையில் இறந்துவிட்டதை அறிகிறான்.மீதி உள்ள இருவரை காப்பாற்ற முயல்கிறான்.அவர்கள் தப்பிதார்களா? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன? இவன் கண்டுபிடித்தானா? 

இதற்க்கு மேல் கதை பற்றி வேறு எதுவும் எழுதி  படத்தினுள் சென்று சொல்ல கூடாது. இது போன்ற படங்களுக்கு விமர்சகர்கள் ரொம்பவும் ஜாக்கரதையாக எழுத வேண்டும்.ஒரு வரி அதிகமாக எழுதி விட்டாலும் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து சப்பென்று ஆகிவிடும்.பிட்சா படத்திற்கு ஒரு புண்ணியவான் (அநேகமாக சி.பி ) எழுதிய விமர்சனத்தை தெரியாத்தனமாக படித்துவிட்டேன் .படத்தின் இயக்குனரிடம் சில கேள்விகள் என்று முக்கிய விஷயத்தை உடைத்துவிட்டார்.

தெகிடி என்றால் என்ன? தெரியவில்லை.ஆனாலும் பேர் நன்றாக உள்ளது.ஹீரோ அசோக் செல்வன் சில இடங்களில் நன்றாக நடித்து உள்ளார்.என்ன எல்லா காட்சிகளிலும் அப்போதுதான் தூங்கி எழுந்தது  போல் இருக்கிறார்.நாயகி ஜனனி இயர்.ரொம்பவும் சோகையாக உள்ளார்.நல்ல நிறம் .கொஞ்சம் சதை பிடித்தால் நன்றாக இருப்பார்.ஹீரோவின் நண்பராக காளி.கலகலப்பாக பேசுகிறேன் என்று மொக்கை போடுகிறார்.ஆனால் உடல் மொழி அருமை.ஜெயப்ரகாஷ் வழக்கம் போல ஜோர்.

படத்தின் பிளஸ் :  

1.ஒரு நல்ல மிஸ்டரி வகை படம்.ஏன் இப்படி நடக்கிறது என்று படம் முழுக்க நம்மை யோசித்து கொண்டே இருக்க வைக்கிறது.

2.படத்தின் முக்கிய விஷயம் ஒன்றை (போலியான ஒன்றை பற்றி).அநேகமாக யாரும் தொடாத விஷயம்.அந்த விஷயத்தை பற்றி சொல்ல முடியாது.

3.நச்சென 2 மணி நேரத்தில் முடித்து.

4.இசை .ஏற்கனவே சில முறைகள் பாடல்களை கேட்டுளேன்.அதனால் பிடித்தது.பின்னணி இசையும் செம.(முக்கியமாய் அந்த இடைவேளை நேரத்தில்)

படத்தின் மைனஸ் :

1.வசனம் ஆரம்பத்தில் நன்றாக இருப்பது போல் தோன்றியது.பின் மெல்ல சலித்து ரொம்பவும் FORMULA வசனமாக.அதுவும் நாயகி,மற்றும் ஹீரோவின் நண்பர் பேசுவது ரொம்பவும் சினிமா வசனம்.

2.போலீசாக வரும் ஜெயப்ரகாஷ் பாத்திரம் .எந்த போலிசும் விசாரணையில் ஒரு சாதாரண ஆள் நுழைந்து அவர்களையும் தாண்டி செல்ல இவ்வளவு இடம் கொடுக்காது.அவர் என்னடா என்றால் இந்த கேஸ் உனக்கு புது அனுபவமாக இருக்கும் என்று சாதரணாமாக ஹீரோவை அனுப்பி வைக்கிறார்.

மற்றபடி பிட்சா -தி வில்லா போல் ஏமாற்றவும் இல்லை .பிட்சா அளவுக்கு அசத்தவும் இல்லை.ஆனால் அது சிக்ஸர் என்றால் இந்த படம் மெதுவாக ஓடி எப்படியோ FOUR அடித்து விடுகிறது.

எல்லோரும் பார்க்கலாம்.த்ரில்லர்,சஸ்பென்ஸ் பட விரும்பிகளுக்கு ஒரு அளவு சாப்பாடு.