Pages

Monday, 30 July 2012

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம் 
திரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த வரை முறையும் கிடையாது.ஆனால் இந்திய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்திய படங்கள் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே சில வரை முறைகள் வைத்து  பாடல்கள் ,சண்டை ,காமெடி இவை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று நினைத்து அவை தேவை இல்லாத நேரத்திலும் அவற்றை நிரப்பி விடுகிறார்கள்.அதற்க்கு காரணமும் சொல்கிறார்கள்.அதாவது பாடல்கள் ஆடியோ மார்கெட்டுக்கு தேவை .மேலும் பாடல்கள் இல்லாவிட்டால் படம் இரண்டரை மணிநேரம் தேராது.

இந்திய படங்கள் மூன்றரை மணி நேரம் ஓடிய காலம் எல்லாம் உண்டு.ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்குள் முடியும் படங்கள் வர தொடங்கி விட்டன.அதிலேயும் ஐந்து பாடல்கள் என்று ஒரு இருபது நிமிடம் போகிறது.சமீப காலங்களில்தமிழ்  படங்களின் கால அளவை எடுத்து கொண்டால் 120 சொச்ச நேரமாக குறைந்து விட்டது.சமீப காலங்களில் நேர அளவில் பெரிய படங்கள் என்றால் அஞ்சாதே ,நண்பன் போன்ற படங்களை சொல்லலாம்.மூன்று மணி நேரத்திற்கு மேல் போன இந்த படங்கள் ஓடிய அரங்கங்களில் காட்சி நேரங்கள் மாற்றப்பட்டது.

கருப்பு வெள்ளை காலங்களில் மூன்று நிமிடமாக இருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் நான்கு-ஐந்து நிமிடமாக ஆனது.ரகுமான் வந்த பின் அது சராசரியாக ஆறு -ஏழு நிமிடமாக மாறியது.எட்டு ஒன்பது நிமிட ரகுமான் பாடல்களும் உண்டு.இன்று சராசரியாக ஐந்து நிமிடம் என்று எடுத்து கொள்ளலாம்.பாடல்கள் இல்லாத படமாக உங்களுக்கு சட்டென வரும் படங்கள் என்ன.? அந்த நாள்,குருதி புனல் .இப்படி விரல் விட்டு என்னும் படங்களே.

இப்போதாவது பரவில்லை .தொன்னூறுகளில் வந்த சில படங்களில் ஒரு பாடல் வந்தால் தொடர்ந்து ஒரு சண்டையும் வரும்.அந்த பாடலும் சண்டையும் படத்திற்கு நேரத்தை நீட்டிததை தவிர பெரிதாக கதைக்கு உதவி இருக்காது.டி.ராஜேந்தர் பத்து பாட்டெல்லாம் வைத்து கொடுமை பண்ணுவார்.அதிலும் விக்ரமன் போன்றவர்கள் படங்களில் ஹீரோ வருத்தப்பட்டு சோகமாக  பாடும் பாடலை ஹீரோயின் வேறு ஒரு முறை பாடுவார்.கமெர்சியல் இயக்குனர்களை விட்டு விடுங்கள்.மணிரத்னம் போன்ற புதுமை விரும்பும் இயக்குனர்களும் ஐந்து ,ஆறு பாட்டு நிச்சயம் வேண்டும் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது.உலக பட விழாக்களுக்கு படத்தை அனுப்பும் போது பாடல்களை வெட்டி அனுப்புவார்.சமிபத்தில் சுஹாசினி ஒரு தொலைகாட்சியில் வெளி நாட்டினர் பட விழாக்களில் பாடல்களை வெட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள் ,இந்திய படங்களின் சிறப்பே பாடல்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் கேட்டதாக கூறினார்.ஆறுதலாக மிஷ்கின் ,சுசிந்திரன் போன்றவர்கள் இரண்டு ,மூன்று பாடல்களோடு நிறுத்தி வருகின்றனர்.பாடல்கள் தேவை இல்லை என்று முழுதும் சொல்ல வர வில்லை.அவை திணிக்க பட்டதாக இருக்க வேண்டாம் .

அதேதான் சண்டை மற்றும் காமெடி ட்ராக் விஷயத்திலும்.பாட்ஷா போன்ற படங்களிலேயே படத்தில் கதைக்கு தேவை  தான் சண்டை உள்ளது.ரஜினி ஆட்டோகாரனாக இருந்து மீண்டும் பாட்ஷா வெளிப்படும்  போது அதுவும் மிகவும் எதிர்பார்க்க வைத்து நடக்கும் சண்டை மறக்க முடியாதது.அதனால் தான் இன்றும் அந்த படம் ரஜினி ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.அறிமுகம் ஆகும்போது ஒரு சண்டை ,கதாநாயகியை காப்பாற்ற ஒரு சண்டை ,மார்க்கெட் சண்டை ,இறுதி சண்டை சண்டை என்று அலுப்பு ஏற்படுத்தும் சண்டைகள் குறைந்து வருவது நல்லதே.

காமெடி விஷயத்திலும் நாம் மாற வேண்டும்.இன்று சந்தானத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு ஓடும் படங்கள் நிறைய வந்து விட்டது.கவுண்டமணி ,வடிவேலு காலத்திலிருந்தே அது இருந்தாலும் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் தனி ட்ராக்  படத்தை காப்பாற்றாது.ஆனால் இது இப்போதைக்கு குறைவதாக தெரியவில்லை.

Wednesday, 25 July 2012

இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை

 இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை :
சினிமாவில் ஐம்பதுகளில் தொடங்கியது  எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள் மோதல்.எம்.ஜி.ஆர்  நல்லவர்,ஊருக்கு கொடுப்பவர் ,தாயை காப்பவர் இப்படி பட்ட பாத்திரங்களில் நடித்தார்.படங்களில் அவர் புகை பிடிப்பதோ ,மது அருந்துவதோ போன்ற காட்சிகளில் கூட நடிக்க மாட்டார்.இறுதியில் வில்லனை கூட கொள்ள மாட்டார்.அவர் படங்கள் மொத்தம் அவரது பிம்பத்தை மக்கள் மனத்தில் உயர்வாக தூக்கி நிறுத்துவதாக அமைந்தன.சிவாஜி  வித்யாசமான ,நடிக்க வாய்ப்புள்ள ,இமேஜ் பற்றி கவலை படாத பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கினார்.அவர் படங்கள் அவரை போல் நடிக்க முடியுமா என்று மக்கள் நினைக்க வைக்கும் படங்களாகவே இருக்கும்.


இருவரது படங்கள் அந்த காலங்களில் வரும் போது ரசிகர்கள் அடித்து கொள்வதும் ,ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.ஆனாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சிவாஜி எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே மரியாதையோடு அழைத்துவந்தார்.எம்.ஜி.ஆறும் தன்னால் சிவாஜி அளவுக்கு நடிக்க முடியாது என்று பல முறை ஒப்புக்கொண்டுள்ளார்.சில படங்கள் தனக்கு செட் ஆகாது போனால் சிவாஜியை கை காட்டி விட்டதும்  உண்டு.

அவர்கள் காலத்திற்கு பின் ரஜினி -கமல் ,விஜய் -அஜீத் என்று இரண்டு செட் அப்படி வந்துவிட்டது.சில மாதங்களுக்கு முன் கர்ணன் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது தெரிந்தது.அதற்க்கு போட்டியாக அப்போதே சில இடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படம் போடப்பட்டது.ஆனாலும் கர்ணன் அளவுக்கு ரீச் இல்லை.கர்ணன் நூறு நாட்களை தொட்டுவிட்டது.இன்று ஒரு வேலையாக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் வளாகம் போனேன்.அங்கே எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் வெளியிட பட்டுள்ளது.அங்கே வைத்திருந்த பேனர்கள் மிரள வைத்தது.காரணம் எல்லா பேனரிலும் சிவாஜியையும் கர்ணன் படத்தையும் வசை பாடி போடப்பட்டுள்ளது.

அதில் எழுதப்பட்டு இருந்தவை :
அதாவது கர்ணன் படம் 1964 இல் ரிலீஸ் ஆகும் போதுஅதே நாளில்  எம்.ஜி.ஆரின்  வேட்டைக்காரன் படம் வந்தது.மிகுந்த பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்பில் வந்த கர்ணன் ஊத்திக்கொள்ள கருப்பு வெள்ளையில் வந்த வேட்டைக்காரன் ஹிட் ஆனதாம்.அதோடு எம்.ஜி.ஆர் நிஜ வாழ்கையிலேயே கர்ணனாக(வள்ளலாக ) வாழ்ந்தாராம்.நெகடிவ் கிடைக்காத கர்ணன்  படத்தை செலவு செய்து ஓட வைத்து பொய்யான ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்தவரை அவரை நெருங்க முடியாத சிவாஜி இப்போது அவர் படங்களை முந்தி விட்டதை போல் பொய்யான செய்தி பரப்புகிறார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களும் வெற்றியாம்.சிவாஜி நடித்த 250 படங்களுக்கு மேல் பெட்டியில் தூங்குகிறதாம்.இப்படி மேலும் பல அனல் கக்கும் வார்த்தைகளால் சிவாஜியை அர்ச்சனை செய்து குருவிகளுக்கு பருந்தின் பதில் என்று வேறு பஞ்ச்.

இன்று உள்ள விஜய் -அஜீத் மோதல் கூட blog,facebook,twitter இப்படி தான் உள்ளது.இப்படி பகிரங்கமாக படம் வெளியாகும் அரங்கில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவிற்கெல்லாம் இல்லை.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவருமே இப்போது இல்லை.

Tuesday, 24 July 2012

தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை


தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை 

இன்று ஒரு படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் படத்தின் வெற்றியை ஒப்பனிங் தான் தீர்மானிக்கிறது.ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் பின் வரும் ஞாயிற்று கிழமை வரை வசூல் தான் ஒப்பனிங் வசூல் என்பது.பெரும்பாலும் படங்கள் வெள்ளிகிழமைகளில் தான் வெளியிடப்படும்.பண்டிகை நாட்களில் இது மாறலாம்.ஒரு படத்தின் வெற்றியை ஓபனிங் தீர்மானிக்க தொடங்கியது ரஜினி நடித்த "சிவாஜி " படத்தில் இருந்துதான்.அதற்கு முன் ஒரு படத்தின் வெற்றி அந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கபட்டு வந்தது.ஆனால் சிவாஜி படத்தின் வெற்றியை தீர்மானிக்க நாட்கள் தேவை படவில்லை.எத்தனை காட்சிகள் ,தியேட்டர்களில் ஓடியது என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் வெளிவந்த சில நாட்கள் கூட்டமில்லாமல்,பின் மெல்ல கூட்டம் வரத்தொடங்கி ஹிட் ஆன படங்களும் உண்டு.சேது,சித்திரம் பேசுதடி,உள்ளத்தை அள்ளித்தா,பூவே உனக்காக என் பட்டியல் நீளும்.மக்களுக்கு பிடித்திருந்து வாய்வழியாக சொல்லப்பட்டு சில நாட்களில் கூட்டம் வரத்தொடங்கி பின் நூறுநாள்,இருநூறு நாள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படத்தை போட்டு ,சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் நிலைக்கு ஆளாக்கி தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு ஓபனிங் முறை வழி வகுக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் டி வி டி .படம் வந்த அடுத்த நாளே அற்புதமான பிரிண்ட் வரத்தொடங்கியதும்,ஒரு டிக்கெட் விலை நூறை தொட்டுவிட்டதாலும் ,முப்பது ரூபாயில் குடும்பமாக பார்கிறார்கள்.படித்தவர்கள் கூட இவர்களே வெளிநாட்டு படத்தை காப்பி அடித்துதான் படம் எடுக்கிறார்கள் .இவர்கள் படத்தை இப்படி பார்த்தால் என்ன என என்ன தொடங்கிவிட்டார்கள்.

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தின் சென்னை உரிமையை 6.2 கோடிக்கு அபிராமி தியேட்டர் வாங்கியது.அதற்க்கு முன் வந்த சந்திரமுகி கூட நெருங்க முடியாத தொகை அது.போட்ட காசை எடுப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டது.அதுதான் அதிக அரங்குகளில் வெளியிடும் திட்டம்.அதற்க்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் 10 அல்லது 15 அரங்குகளில் தான் வரும்.ஆனால் சிவாஜி 30 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.அப்படம் முதல் நான்கு நாட்களில் 1.34 கோடிகள் வசூலித்து,மூன்றாம் வாரத்திலேயே போட்ட 6.2 கோடியை வசூலித்து கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 12 கோடி கிடைத்தது.அதுபோல் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியிட்டு நல்ல பணம் கண்டது .அதன் மூலம் தமிழ் படங்களுக்கு புதிய வெளியீட்டு முறை களமிறக்க பட்டது.சிவாஜிக்கு பின் பில்லா சென்னையில் மூன்று நாட்களில் 59 லட்சங்கள் ,மொத்தமாக சென்னையில் 4.5 கோடி வசூல் பெற்றது.அன்றைய தேதியில் அது பெரிய விஷயம் தான்.அதன் பின்
தசாவதாரம் சென்னையில் மூன்று நாட்களில் 95 லட்சம் மொத்தமாக சென்னையில் மட்டுமே 11 கோடி பெற்றது.
மங்காத்தா 5 நாட்களில் 1.8 கோடியும் மொத்தமாக சென்னையில் எட்டு கோடியும் பெற்றது.ரஜினி ,கமலுக்கு பின் சென்னையில் எட்டு கோடி தொட்ட நடிகர் என்ற பெருமையை அஜீத் பெற்றார்,
7 ஆம் அறிவு 5 நாட்களில் 2.2 கோடியும் மொத்தமாக 9 கோடியும் தொட்டது.ரஜினி கமலுக்கு பின் சென்னையில் 9 கோடி தொட்ட நடிகராக சூர்யா பெயர் பெற்றார்.
விஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில்  1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.

இப்போது படம் நன்றாக இருந்தால் மூன்று வாரத்தில் லாபம் பார்த்துவிடுகிறார்கள்.ஐந்து வாரம் ஓடினால் அப்படம் மிகபெரிய வெற்றி.ஒரு படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை தவிர்த்து படம் வெளியாகும் காலம்,அரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் இப்போது ரொம்ப முக்கியம்.பண்டிகை காலங்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வருவதால் வெளியிடும் அரங்குகள் குறையும் அதனால் வசூலும் குறையும்.உதாரணமாக மங்காத்தா ,பில்லா 2 ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள்  தனியாக வேறு படங்கள் போட்டியில்லாமல் வந்து வசூல் அடைந்தன.ஆனால் 7 ஆம் அறிவு வேலாயுதம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் இரண்டு படங்களுமே பாதிக்கபட்டிருக்கும்.தனித்தனியாக வந்திருந்தால்  இரண்டுமே இன்னும் அதிகம் வசூல் அடைத்திருக்கும்.தற்போதைய நிலவரப்படி ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும்  .சில படங்கள் நடிகர்களை தாண்டியும் ஓபனிங் பெரும்.வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்ய படவைக்கும் ஓபனிங் பெற்றது..அதற்க்கு காரணம் வடிவேலுவின் முந்தய படமான புலிகேசி மற்றும் ராஜேஷ் -சந்தானம் கூட்டணியில் வந்த முந்தய படமான பாஸ் எ பாஸ்கரன்.அது மட்டமல்ல அந்த நேரத்தில் வேறு புதிய படங்களை வர விடாமல் தடுக்கும் அந்த பட குழு.

டிஸ்கி :இந்த ஓபனிங் வரவும் அதிக விளம்பரம் தேவை.நல்ல சில படங்கள் விளம்பரம் இல்லாமல் போய் விடுவதும் உண்டு.மேலே சொன்ன வசூல் சில புத்தகங்களிலும் ,நெட்டிலும் கண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது.

Friday, 20 July 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3 

ஹரர் படங்களின் முன்னோட்டத்தோடு 70s, 80s வந்த ஹரர் படங்கள் பற்றி சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம்.இனி 90 களில் அந்த படங்கள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.எண்பதுகளில்  வந்து வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொன்னூறுகளில் வரிசையாக வர தொடங்கின.மேலும் பல புதிய தளங்களிலும் மக்களை பயமுறுத்த படங்கள் வந்தன.

எண்பதுகளின் வந்த படங்களின் தொடர்ச்சியாக வந்த படங்களில் A NIGHTMARE AT ELM SREET ,CHILD'S PLAY,FRIADAY THE 13TH போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன்  வெளிவந்து சில பாகங்கள் வெற்றியும் பெற்றன .ஆனாலும் போக போக அந்த தொடர்ச்சியான படங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து வந்தது.அதற்க்கு காரணம் படத்தில் விஷயமில்லாமல் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்ட படங்கள். முதல் பாகங்களில் பெயர் பெற்றாகி விட்டது.இனி இந்த பெயருடன் இத்தனையாவது  பாகம் என்று போட்டுவிட்டால் அந்த பட ரசிகர்கள் வந்து படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள் என்று படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளுடன் வந்து ரசிக்கபடாமல் போய் விட்டன.

இந்தநிலையில் தான் SILENCE OF THE LAMBS என்ற படம் சத்தமில்லாமல் வந்து பரப்பாக ஓடியது.91 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் ஒரு SERIAL KILLER ஐ பற்றியது.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு சிறையில் உள்ள  நர மாமிசம் உண்ணும் ஒரு டாக்டர் உதவுகிறார்.இந்த படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.அதற்க்கு பின் குறிப்பிட வேண்டிய படம் என்றால் SCREAM .இந்த படம் SLASHER என்ற வகையை சார்ந்தது(படம் முழுவதும் கொலையாளி ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கொலைகள் செய்வது).படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் இளைஞர்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய அதே SLASHER வகையை கொண்டு மேலும் இரு படங்கள் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றது.அவை I KNOW WHAT YOU DID LAST SUMMER, URBAN LEGEND.இதில் I KNOW WTHAT YOU DID LAST SUMMER படம் நான்கு மாணவர்கள்.(இரு ஆண்,இரு பெண்) குடித்துவிட்டு பெரும் மகிழ்ச்சியுடன் காரில் வரும் போது மலை பாதையில் ஒருவனை இடித்து விடுகிறார்கள்.அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உடலை அப்புறபடுதும்போது அவன் விழித்துக்கொள்ள அவனை ஏரியில் முழ்கவிடுகிரார்கள்.பின் நால்வரும் இதை யாருக்கும் சொல்ல கூடாது என்றோ சத்தியம் செய்து பிரிகிறார்கள்.அடுத்த ஆண்டு அதே நாள் அவர்களில் ஒருவளுக்கு "I KNOW WTHAT YOU DID LAST SUMMER "என்று ஒரு கடிதம் வருகிறது. பின் அவள் கொள்ளபடுகிறாள்.மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்  என்பதே படம்.விமர்சர்களால் மோசமான படம் என்று விமர்சிக்கபட்டாலும் படம் நல்ல வசூல் பெற்று மேலும் இதே தீம் கொண்டு "I STILL KNOW WHAT YOU DID LAST SUMMER " மற்றும்" I ALWAYS KNOW WHAT YOU DID LAST SUMMER" என்று இரு படங்கள் வந்தன.

URBAN LEGEND படம் நம்ம ஊரில் விசில் என்று அப்படியே எடுத்திருப்பார்கள்.இதுவும் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டு வசூல் பெற்ற படம்.JACOBS LADDER படம் வித்தியாசமான களத்துடன் இறங்கியது.வியட்நாம் போரில் போரிட்ட ஒரு வீரன் ஓய்வு பெற்று வாழும்போது சில பயமுறுத்தும் உருவங்கள் மற்றும் மன ரீதியான மாற்றங்களை உணர்கிறான்.போரில் வீரர்கள் மேலும் வெறி கொண்டு தாக்க மறைமுகமாக மருந்துகள் செலுத்த பட்டதை படம் சொல்கிறது.

FROM DUSK TILL DAWN,NIGHT WATCH,WISHMASTER,RING(JAPANESE),AUDITION( ரொம்பவும் கொடூரம்  நிறைந்த படம்), போன்ற படங்கள்  தொன்னூறுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின் வந்த ஹர்ரர் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதன் முதல் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html

இரண்டாம் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html

Thursday, 19 July 2012

மணிரத்னம் ரசிகரே இது ஞாயமா ?

மணிரத்னம் ரசிகரே இது ஞாயமா ? 

என் பதிவுகளில் அதிகம் ஹிட்ஸ் கிடைத்த பதிவுகளில் ஒன்று  விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ? என்ற பதிவு .
பல்வேறு மோசமான பின்னூட்டங்களை கண்ட அந்த பதிவு தினமும் என் ப்ளாக் பக்கம் வருகிறவர்களால் கவனிக்க படுகிறது.
விஷயம் என்னவென்றால் என் இந்த பதிவை ஒருவர் அவர் எழுதியது போல் அப்படியே போட்டுகொண்டது  மட்டும் இல்லாமல் நான் பதிவு போட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னால் அந்த பதிவை எழுதியதாக மாற்றிவிட்டார்.ஒருவர் புதிதாக படித்தால் நான் தான் அவரிடம் இருந்து எடுத்து போட்டுகொண்டதாக தானே நினைப்பார்கள்.ஒருவேளை என் பேரையோ ,அல்லது என் ப்ளாகை பற்றியோ அவர் குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. ப்ளாகில் இவை நடப்பவை தான் என்றாலும் தேதி மாற்றம் நிச்சயம் எனக்கு அதிர்ச்சி தான்.


அந்த நல்ல உள்ளத்தின் பதிவு :  http://balaganesan305.blogspot.in/2012/06/blog-post_3817.html Wednesday, 18 July 2012

பில்லா 2 தோல்வி ஏன் ?


பில்லா 2 தோல்வி ஏன் ? 

பில்லா 2 மரண மொக்கை, பணம் வேஸ்ட் ,கவுத்துட்டானுங்க இப்படி படம் வந்த கடந்த நான்கு நாட்களாக ஒரே சத்தம்.மறுபுறம் தல ராக்ஸ், தமிழில் ஒரு ஆங்கில படம்,இது போல ஸ்டைல் ஆன படத்தை தமிழ் சினிமா இதுவரை பார்த்த தில்லை என்பது அஜித் ரசிகர்களின் சப்பை கட்டு .ஆனாலும் அந்த சத்தம் ரொம்ப ஈன ஸ்வரத்திலேயே கேட்டது.காரணம் அஜித் ரசிகர்களுக்கே படம் பிடிக்க வில்லை. இதற்க்கு முன் அஜித்தின் தோல்வி அடைந்த படங்களான ஏகன்,அசல் போன்ற படங்களாவது பிளாப் ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்தது.இது அக்கேடும் இல்லை.

மங்காத்தாவுக்கு முன் அசல் ,ஏகன் என தொடர்ந்து தோல்விகள்.சரி என்ன செய்வது ?அஜித்தின் கடைசி 15 படங்களில் வெற்றி படங்கள்என்று  பார்த்தால் வில்லன் ,வரலாறு,பில்லா இந்த மூன்று மட்டும் தான்.வேறு வழியும் தெரியவில்லை.பில்லாவிலும் பில்லாவை சாக அடித்தாகி விட்டது.சரி ஆங்கில படங்களில் வருவது போல் prequel எடுத்து பாப்போம்.என்ன பில்லா ன்னு சொன்ன ஆளுங்க பார்க்க வந்துடுவாங்க என்று நினைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

சரி படம் ஊத்திகிச்சு பார்க்க வேண்டாம் என்று பார்த்தால் பதிவர் ராஜ் ,இன்னும் சிலர் படம் ஓகே அப்படின்னு சொல்ல,ஒரே குழப்பம்,அதிலும் ஒரு பதிவர் தான் விஜய் ரசிகர் என்றும் படம் பார்க்கும் முன் தானே பில்லாவை கலாய்த்து இருந்ததாகவும்,படம் பார்த்தவுடன் பிடித்ததாக எழுத எனக்கு ஒரே குழப்பம்.ஏன் என்றால் நன்றாக இல்லை என்று பலர் சொன்ன படங்கள் பல எனக்கு பிடித்தது.சரி பாப்போம் என்று நேற்று (செவ்வாய் கிழமை ) பார்த்தேன்.படம் எனக்கு திருப்தி இல்லை தான் .விமர்சனம் நிறைய எழுதி ஆகி விட்டதால் ,படத்தின் பிளஸ்,மைனஸ் மட்டும் பார்க்கலாம் .சில பிளஸ் ஆன  விஷயங்களே சில இடங்களில் மைனஸ் ஆகவும் இருகின்றது.

பிளஸ்:
1. அஜித் . படத்தை  முழுதும் தாங்கி நிற்கிறார்.
2. பல இடங்களில் படத்தின் மேகிங் .
3.ஒளிபதிவு ,இசை ,location
4.சண்டை காட்சிகள் 
மைனஸ் :
1. அஜித் தொப்பையும் தொந்தியும் ஆக சித்தப்பா தோற்றத்தில் இருக்கிறார்.சண்டை காட்சிகளில் காலை தூக்கி அடிக்க முடியாதபடி தொப்பை இடிக்கிறது. முகத்திலும் பொலிவில்லை.மங்காத்தாவில் நரைத்த தலையோடு இருந்தாலும் படு ஸ்மார்ட் ஆக இருப்பார்.இதில் என்ன ஆச்சு.? 
2.ஒரு மனுஷன் எப்பவுமேவா பஞ்ச் வசனம் பேசிக்கிட்டு இருப்பான்? படத்தில் அஜீத் வாயை திறந்தாலே பஞ்ச் தான்.முதலில் நன்றாக இருந்தாலும் போக போக வெறுப்பாக இருக்கிறது.ஒரு வேலை படம் தோய்வாக இருப்பதாலோ?
3.வில்லன்கள் . ஒரு மாற்றத்திற்காக புதிதாக இருந்தாலும் படத்தில் ஒன்றவில்லை.பில்லா முதல் பாகம் வெற்றிக்கு பிரபு,ரகுமான்,சந்தானம்,ஆதித்யா போன்ற தெரிந்த முகங்கள் ஒரு சிறு அளவேனும் காரணமாக இருந்திருக்கும்.
4.படத்தின் மேகிங் சில இடங்களில் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.அதுவும் கடைசியில் அஜீத் இனிதான் ஆரம்பம் என்று சொன்ன பிறகு போலீஸ்,ஸ்ரீமன், முதலமைச்சர் போன்றவர்களை கொள்ளும் இடங்களில் படு அமெச்சூர் தனம்.அவசரம்.
5.எல்லாவற்றையும் விட பெரியது திரைக்கதை.முதல் அறை மணி நேரம் மட்டும் ஓகே. பின்பு நீங்கள் யூகிக்கும்படியே செல்கிறது.அடுத்த அடுத்த காட்சி நீங்கள் சொல்லிவிடலாம்.

டிஸ்கி : நான் என் பதிவில் அஜீத் படங்களுக்கு வந்த முதல் இரண்டு மூணு நாள் கழித்து பார்த்தால் கூட்டம் இருக்காது என்று அவ்வபோது சொல்லி இருக்கிறேன்.இந்த படம் வெள்ளி கிழமை வந்தது.நான் செவ்வாய் கிழமை பார்கிறேன்.தியேட்டரில் மொத்தம் 46 பேர் தான்.நானே எண்ணினேன்.என் நண்பர் ஒருவர் முன்தினம் வேறு இடத்தில் படம் பார்த்தார்.அங்கும் கூட்டம் இல்லை.
-- 

Sunday, 15 July 2012

ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு நடிகர்கள் நடித்த படங்கள் ஏராளமாய் சொல்லலாம்.சில படங்கள் வெறும் கதை மட்டும் பிடிக்காமல் மறுத்திருப்பார்கள்.இந்த பதிவு ஓரளவு அந்த படங்களை பற்றி சொல்லும் .ஒருவர் நடிக்க மறுத்து விலக பல காரணங்கள் இருக்கலாம்.இறுதியில் அந்த நடிகர் நடிக்காமல் விட்ட படம் வெற்றி அடைந்ததா என்பதே முக்கியம்.ஒரு சின்ன உதாரணம்.பாக்கியராஜ் மகன் சாந்தனு இதுவரை ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை.சூப்பர் ஹிட்டான களவானி படம் அவர் நடிக்க மறுத்த படம்.கிராமத்து படம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய படம்.

எம் ஜி ஆர் நடிக்க மறுத்த படங்கள்:
கர்ணன்: சிவாஜிக்கு முன் கர்ணனாக நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். ஆச்சர்யமாக உள்ளது இல்லையா? அண்ணா இதிகாச படங்களில் நடிக்க வேண்டாம் என்று எம்.ஜி,ஆரை கேட்டு கொண்டதால் அவர் விலக ,பிறகே சிவாஜி நடித்தார்.ஆனாலும் அது அந்த காலத்தில் தோல்வி அடைந்து இன்று வெற்றி பெற்றது வேறு கதை.
சிவந்த மண் : இந்த படம் வேறு பேரில் எம்.ஜி.ஆரை வைத்து துவங்கப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்று பெயர் மாற்றம் கண்டது.
இது போல் சில படங்கள் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த பாத்திரம் ஒத்துவராது தம்பி சிவாஜி கணேசனே இதற்க்கு சரியான தேர்வு என்று கை காட்டிய படங்களும் உண்டு.

சிவாஜி நடிக்க மறுத்த பழைய படங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வை ஷண்முகி(ஜெமினி கணேசன்),நட்புக்காக (விஜயகுமார்) போன்ற படங்கள் அவர் மறுத்தவை.
ரஜினி நடிக்க மறுத்த படங்கள் :  முதல்வன்,மக்கள் ஆட்சி,ஜக்குபாய்
கமல் : ஜென்டில்மேன் ,எந்திரன்,பச்சை கிளி முத்துச்சரம்,
எந்திரன் கமல் நடிப்பில் எடுக்க பட்ட புகை படங்கள் :

விஜய்: முதல்வன், உன்னை நினைத்து ,சண்ட கோழி,தூள்,வேட்டை
அஜித்: இவர் மறுத்த படங்கள் எல்லாம் சூரியாவை வளர்த்து விட்ட படங்கள் . நேருக்கு நேர்,நந்தா,கஜினி,நான் கடவுள்,நியூ .
சூர்யா : நண்பன் விஜயிடம் இருந்து இவரிடம் வந்து மீண்டும் விஜய்க்கே சென்றது,வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் பிரியாணி சூர்யா நடிக்க இருந்து இப்போது கார்த்தி நடிக்கிறார்.முகமூடி படமும் இவர் நடிக்க வேண்டியது.அவன் இவன் படத்தை சூர்யா கார்த்தி இருவரை வைத்து எடுக்க தான் பாலா முதலில் திட்டமிட்டார்.
சிம்பு : பாய்ஸ்,கோ,நண்பன் .
விமல் நடிக்க மறுத்த வேடத்தில் தான் எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந் நடித்தார்.
சத்யராஜ் - சிவாஜி படத்தில் சுமன் வேடத்தில் நடிக்கவும்,தசாவதாரம்,விருமாண்டி போன்ற படங்களில் நெப்போலியன் ஏற்ற வேடத்தில் சத்யராஜ் மறுத்துள்ளார்.

சில படங்களில் இப்போதும் சில நடிகர்களை பார்க்கும் போது  இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று நாம் நினைப்போம்.ஆனால் முதலில் அனுகப்பட்டவரே  நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை.இதனால் இந்த படங்கள் வெற்றி தோல்வி மாறி இருக்குமா? 


Tuesday, 10 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 2 


ஹரரர் படங்களை பற்றிய முன்னோட்டத்தோடு 1970 களில் ஹரரர் படங்களை பற்றி பார்த்தோம்.இனி எண்பதுகளில் அப்படங்களின் வளர்ச்சி பற்றி பாப்போம். STEPHEN KING பற்றி சொன்னேன் இல்லையா? அவர் யோசிக்க முடியாத பல விஷயங்களில் திகில் கதைகளை எழுதி புகழ் பெற்றார்.  MISERY,THE DARK HALF,THE SHAWSHANK REDEMPTION,THINNER,THE GREEN MILE,SECRET WINDOW,1408,THE MIST போன்ற படங்கள் அவரது கதைகள் தான்.திகில் படங்களில் அவர் பங்களிப்பை தவிர்க்க முடியாது.1980 இல் வந்த THE SHINING படம் அவரது கதை தான்.ஹர்ரர் படங்களின் மாஸ்டர் பீஸ் என்று இன்றைக்கும் சொல்ல படும் படம் அது.ஒரு எழுத்தாளர் விடுமுறை சீசன் இல்லாத ஒரு நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு பாதுகப்பாளராக பொறுப்பேற்கிறார் .அங்கே தனிமையில் அவர் குடும்பம் சந்திக்கும் அனுபவங்களே படம்.இறுதி காட்சியில்  காட்டப்படும் HEDGE வடிவ தோட்டம் பிரம்மிக்க வைக்கும் (கீழே படத்தில் உள்ளது).


FRIDAY THE 13TH படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் .ஆற்றங்கரை ஓரம் உள்ள தனிமையான வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க வருகிறவர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஒருவனால் கொள்ளபடுகிறார்கள்.ஒவ்வொரு படத்திலும் இறுதியில் கொள்ளப்படும் அல்லது கொன்றுவிட்டதாக கருதப்படும் ஜேசன் அடுத்த படத்தில் உயிரோடு வந்து அதே வேலையை  செய்கிறான்.முதல் பகுதி படம் விமர்சகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டாலும் மக்களுக்கு அந்த திக் திக் வினாடிகள் பிடித்து விட்டது ,வசூலும்  அமோகம்.தொடர்ந்து இன்றுவரை அதை திருப்பி திருப்பி எடுத்து வருகிறார்கள்.என்ன மக்களுக்கு தான் ஆர்வம் போய் விட்டது.படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணம்.ஒரு திகில் படத்திற்கு ஏற்ற வியலின்  விளையாடி இருக்கும்.

NIGHTMARE ON ELM STREET படமும் அதே போல் அதிக பாகங்கள் வந்துள்ளது.கனவில் வந்து கொலை தொந்தரவு கொடுக்கும் ஒருவனின் கதைதான்.இதன் முதல் பாகத்தில் தான் நடிகர் ஜானி டெப் படங்களில் நடிக்க துவங்கி நடித்த முதல் முக்கிய பாத்திரம் ஆகும்.இவற்றை தவிர என்று பார்த்தால் இந்தியர்களுக்கு மிகவும் தெரிந்த EVIL DEAD.குறைந்த செலவில் எங்காவது ஒரு காட்டில் ஒரு ஐந்தாறு நடிகர்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் திகில் படங்களுக்கு முன்னோடி இந்த படம்.இது இந்தியர்கள் முதலில் அதிகம் பார்த்த திகில் படமாக இருக்கலாம்.VCR வந்த புதிதில் அதை வைத்திருந்த அனைவரும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்.

CHILD'S PLAY வை மறந்து விட்டேனே.மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் போலீஸ் துரத்தலில் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் தன் உயிரை ஒரு பொம்மையில் செலுத்தி கொள்கிறான்.அந்த பொம்மை செய்யும் கொலைகளே படம்.கதை குழந்தை தனமாக இருந்தாலும் அருமையாய் எடுத்திருப்பார்கள்.இதுவும் ஐந்து பாகங்கள் வரை வந்துள்ளது.

எண்பதுகளில் வந்த மற்ற திகில் படங்களில் குறிப்பிட்டு  சொல்லலாம் என்றால் THE BOOGEYMAN,MY BLODDY VALENTINE,CREEPSHOW,POLTERGEIST,THE THING,FRIGHT NIGHT,THE HITCHER,HELL RAISER,PREDATOR போன்ற படங்களை சொல்லலாம்.

அடுத்த பகுதியில் 90 களில் வந்த ஹர்ரர் படங்களை பற்றி பாப்போம்.
இதன் முதல் பகுதி லிங்க்  http://scenecreator.blogspot.com/2012/07/horror-1.html 


Sunday, 8 July 2012

இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?


இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?

IMDB போன்ற தளங்களில் நல்ல ரேடிங் பெரும் எல்லா படங்களும் நமக்கு பிடித்து போவதில்லை.இந்த படத்திற்கு போய் எப்படி இவ்வளவு புள்ளிகள் கிடைத்தது என்று நமக்குள் சில படங்களை பார்க்கும் வேலையில் தோன்றும்.அதே போல் ரைடிங் குறைவாக இருக்கும் படங்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவதில்லை.நான் இங்கு IMDB யில் டாப் ரேடிங்  பெற்று எனக்கு பிடிக்காமல் போன, முழுதும் பிடித்த ,சுமாரான, பார்க்க உள்ள படங்களை சொல்கிறேன்.இவற்றில் உங்களுக்கு பிடித்து எனக்கும் பிடித்ததும் இருக்கும் ,உங்களுக்கு பிடித்து எனக்கு பிடிக்காமல் போனவையும் இருக்கும்.இறுதில் குறிப்பிட்டுள்ள பார்க்க உள்ள படங்களை பற்றி பார்த்தவர்கள் எனக்கு  சொன்னால் சில படங்களில் இருந்து தப்பிக்கலாம்.

IMDB TOP இல் எனக்கு பிடித்தவை :
KILL BILL
THE DEPARTED
MOMENTO
NO COUNTRY FOR OLD MEN
FARGO
PSYCHO
THE SHAWSHANK REDEMPTION
THE SHINING
OLD BOY

IMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :
USUAL SUSPECTS
SEVEN
SILENCE OF THE LAMBS
RESEVOIR DOGS
DISTRICT 9
BOURNE SERIES
THE SECRET IN THEIR EYES

IMDB TOP இல் சுமாரான படங்கள்:
PRESTIGE
FIGHT CLUB
GREAT ESCAPE
AMORES PERROS 
DOGDAY AFTRENOON

IMDB TOP இல் பார்க்க உள்ள படங்கள்:
PULP FICTION
INCEPTION
SIN CITY
GOOD FELLAS
SHUTTER ISLAND
BLACK SWAN
SCAR FACE
MYSTIC RIVER
BUTTERFLY EFFECT
WAGES OF FEAR
HIGH AND LOW

நண்பர்களே,இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லையா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.பார்க்க உள்ள படங்களில் நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி சொல்லவும்.மொக்கை படமாக இருந்தால் தப்பிப்பேன்.இந்த லிஸ்டில் இல்லாத நல்ல படமாக இருந்தாலும் சொல்லுங்கள்.

காக்டெயில்

காக்டெயில் :

நான் ஒவ்வொரு வாரமும் குமுதம் ,ஆனந்த விகடன் இரண்டையுமே வந்தவுடன் வாங்கி விடுவேன்.இது பதினேழு வருடங்களாக  தொடர்கிறது.நடுவில் சில முக்கிய விஷயங்களுக்காக வேறு சில புத்தகங்களும் வாங்குவேன்.இப்போ விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகம் வாங்கினேன்.அசந்துவிட்டேன்.அவ்வளவு விஷயங்கள்.நான் முன்பு வாங்கிய போது வெறும் படங்கள் என்று பக்கங்களை ஒப்பேற்றி இருப்பார்கள்.அதனால் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்து விட்டேன்.சரி என்று போன மாதம் வாங்கிய போது தான் இப்படி.நிறைய விஷயங்கள்,விமர்சனம்,பேட்டிகள்,பழைய படங்களை பற்றிய அறிந்திராத செய்திகள்,நடிகர் நாசர் எழுதும் அனுபவ கட்டுரை ,இப்படி நிறைய.நீங்கள் சினிமா ஒன்றுக்காக பத்து ரூபாய் கொடுத்து குமுதமோ ,குங்குமமோ வாங்குகிறீர்கள் என்றால்  அதே பத்து ரூபாயில் சினிமா எக்ஸ்பிரஸ் அதிக நிறைவு தரும்.

டிராவிட் கேப்டன் பதவியில் இருந்த போது அவர் தலைமையில் வெற்றி பெற்றுவதை அணியின் பலர் ரசிக்கவில்லை என்று கொளுத்தி போட்டுள்ளார் கிரேக் சாப்பெல்.போகிற பதவிகளில் அனுசரித்து போக முடியாமல் எல்லா இடங்களிலும் கழட்டி விடப்படும் இவர் சரி புத்தகம் எழுதி சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.ஏற்கனவே சச்சின் பற்றி எழுதி வாங்கி கட்டிகொண்டார்.டிராவிட் தலைமையில் அணி  எப்படி விளையாடி இருந்தாலும் இவர் இப்போது வார்த்தைகளால் விளையாடுவது தன் புத்தகம் அதிக விற்கவே.

இருக்கிற பிரச்சனை போதாதென்று சேவாக் வேறு தோனியால் மட்டுமே நாம்  உலக கோப்பை வெல்ல வில்லை.நல்ல அணி இருந்ததால் வென்றோம் என்று கூறியுள்ளார்.விடுமா மீடியாக்கள் ஆரம்பித்து விட்டன.எனக்கு இருவருமே பிடிக்கிறது அதனால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

என்னமோ விஜய் மட்டுமே ரீமேக் படங்களில் நடிப்பது போலவும் மற்றவர்கள் அதை தீண்டுவது இல்லை எனவும் பலர் விஜயை கிண்டல் அடிக்கிறார்கள்.என்ன செய்ய விஜய்க்கு இணைய தளம்,ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் ரசிகர்களை விட அதை பற்றி தெரியாத ரசிகர்கள் அதிகம்.விஷயம் என்ன என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் எவ்வளோ ரீமேக் படங்கள் நடித்துள்ளார் என்று பலருக்கு தெரியாது.அது பற்றி நண்பர் முரளி கண்ணன் பதிவின் இணைப்பு .

ரஜினியும் ரீமேக் படங்களும்

http://muralikkannan.blogspot.in/2008/10/blog-post_18.html 

ஈ படம் எதிர்பார்த்த படியே சூப்பர்.ஆனால் ஓடுமா என்பதில் எனக்கு சந்தேகம்.காரணம் சில வாரங்களுக்கு  முன் வந்த தடையற தாக்க படம் ரொம்பவும் நன்றாக இருந்தது.ஆனால் பெரிதாக ஓடவில்லை.அடுத்த வாரம் பில்லா வருவதால் ஈ என்னவாகும்.ஈ பில்லாவை ஓட்டுதா இல்லை
பில்லா ஈ ஓட்டுதா என்று பார்க்கலாம்.

Friday, 6 July 2012

நான் ஈ -- சினிமா விமர்சனம்

நான் ஈ -- சினிமா விமர்சனம் 


தெலுங்கில் ராஜமௌலி முக்கியமான ஒரு இயக்குனர்.அவர் இயக்கியதில் பெரும்பாலும் வெற்றி படங்கள்.அவரது மாவீரன் (தெலுங்கு மகதீரா) எனக்கு பிடித்தது.இந்த நான் ஈ படத்தின் trailer சில மாதங்களுக்கு முன் முதல் முறை பார்த்த போதே நிச்சயம் இந்த படத்தை தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஆனால் பட ரிலீஸ் தள்ளி தள்ளி போய் ஒரு வழியாக இன்று வெளியானது.

கதை trailer பார்த்தபோதே பலரை போல் எனக்கும் புரிந்து விட்டது.படம் பார்த்த போது நூறு சதவிகிதம் அதே கதை தான்.தன்னை கொன்றவனை ,தன் காதலியை அடைய நினைக்கும் வில்லனை நாயகன் ஈ உருவில் வந்து பழி வாங்குகிறான்.கதை எளிது தான்.ஆனால் காட்சிகள் அதற்கான ஐடியா லீட் ,கிராபிக்ஸ் எல்லாம் சேர்ந்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.இயக்குனரே கூட இந்த கதை போதும் காட்சிகளில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி விட்டதை போல் உள்ளது.படம் தொடங்கி நாயகனை காட்டியதுமே எப்போது இவன் இறந்து ஈயாவன் என்று ஆவல் வந்து விடுகிறது.

ஹீரோ நாணி .(படத்திற்கும் ,இவர் பேருக்கும் என்ன ஒரு பொருத்தம்).பழைய பிரசாந்தையும் இன்னும் சில நடிகர்களையும் நினைவு படுத்துகிறார்.படத்தில் மொத்தமே ஒரு அறை மணி நேரமே உயிருடன் இருக்கிறார்.ஓவராக முக பாவங்கள் காட்டுகிறார்.ஹீரோயின் சமந்தா .அழகான முகம்.ஒன்று சிரிக்கிறார்.அல்லது முகத்தை சோகமாக வைத்துகொள்கிறார்.படத்தின் இன்னொரு பலம் வில்லன் கிச்சா சுதீப்.மனுஷன் பின்னி எடுத்துள்ளார்.படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கூடவே ஆதித்யா.நிறைய தெலுங்கு முகங்கள்.படத்தை இரு மொழிகளில் எடுத்ததாக சொன்னாலும் முழுக்க தெலுங்கு வாயசைப்பு தெரிகிறது.பட்ஜெட் பிரச்சனை இல்லை.இரு மொழிகளிலும் எடுத்திருக்கலாம்.இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.முக்கால் வாசி படம் போன பிறகு ஒரு காட்சியில் சந்தானம் வருகிறார்.பிறகு படம் முடிந்து எழுத்துக்கள் ஓடும் போது சில காமெடி காட்சிகள் வருகிறது(நிறைய பேர் கவனிக்காமல் போய் விட்டார்கள்).படத்தின் வியாபாரத்திற்காக சந்தனத்தை போட்டிருப்பார்களோ என்னவோ?

ஈ வில்லனை ஏர்போர்ட் செல்ல விடாமல் டிராபிக் ஜாம் ஏற்படுத்துவது,விபத்து ஏற்படுத்துவது,பணம் உள்ள லாக்கரை தீ மூட்டுவது,ஈ மருந்தை வில்லனையே  குடிக்க வைப்பது , மந்திரவாதியை  சமாளிப்பது,இறுதியில் வில்லனை கொள்வது என படம் முழுக்க ஐடியாக்கள் படத்தை நகர்த்தி செல்கின்றது...ஈடா ஈடா பாடல் சூப்பர்.மற்ற பாடல்கள் தெலுங்கு வாடை.குறை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசித்தால் அவ்வளவுதான்.மேலும் சில அறிந்த தமிழ் முகங்களை பயன்படுத்தி தமிழில் காட்சிகளை எடுத்திருந்தால் ஒரு படி மேலே இருந்திருக்கும். இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனருக்கு சபாஷ்.

டிஸ்கி : படத்தை தியேட்டரில் பல காட்சிகளில் கை தட்டி விசில் அடித்து ரசிக்கிறார்கள்.அதனால் படம் தப்பித்து கொள்ளும் என்று நினைக்கிறன் .ஆனாலும் அடுத்த வாரம் பில்லா வருவதால் நிறைய அரங்குகளை ஆக்கிரமித்துகொள்ளும்.படத்தை ஜூனில் ரிலீஸ் செய்திருந்தால் ஒரு வேலை இன்னும் ஓடி இருக்கலாம்.தெலுங்கில் ஹிட் அடிக்கிறதா பார்போம்.

Thursday, 5 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1


HORROR  படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1

பார்வையாளர்களின் மனதில் ஒரு வித பயத்தையும் ,அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பரபரப்பையும் எற்படுதுபவையே HORROR படங்களின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.அதற்காக படத்திற்கு தேவை இல்லாத ,திணிக்கப்பட்ட கட்சிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதில் பல தீம்கள் உண்டு. பேய் ,ரத்தக்காட்டேரிகள் ,தெரியாத இடத்தில மாட்டிகொள்ளுதல்,அமானுஷ்ய வீடு,அதீத வன்முறையுடன் கொடுமை படுத்துதல்,ஆளை கொள்ளும் வைரஸ்,மனநலம் பாதிக்க பட்ட கொலைகாரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழில் இதுவரை என்ன மொத்தம் இதுவரை ஒரு முப்பது திகில் படம் வந்திருக்குமா ?அதில்  அதே கண்கள், யார் நீ (ஜெய்சங்கர் நடித்தது),உருவம் (மோகன்),யாவரும் நலம் என்று மிக சில படங்களே தேறும்.மற்றவை ஆங்கில பட தழுவல்களே.மலையாளத்தில் சில படங்கள் உண்டு.தெலுங்கில் சமீப காலங்களில்  A FILM BY ARAVIND என்ற படம் நல்ல முயற்சி.ஹிந்தியில் எனக்குதெரிந்து பெரும்பாலும் ஆங்கில ,உலக படங்களில் இருந்தே உருவபடுகின்றது.
இனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள்  பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.

1970 கள் :
எழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான திகில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

1980, 1990 அடுத்த பகுதிகளில் 


Wednesday, 4 July 2012

சமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்

சமீபத்தில்  பார்த்த சில ஆங்கில படங்கள் :

SHALLOW GRAVE (1994):
                  ஒரு அபார்ட்மெண்டில்   குடியிருக்கும் மூவர் தங்களுடன் இன்னும் ஒருவரை சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து பலகட்ட நேர்முகங்களுக்கு பின் ஒருவனை சேர்த்துக்கொள்கின்றனர்.மறுநாள் அவன் தன் அறையில் இறந்து கிடக்கிறான்.ஒரு பெட்டி நிறைய பணம்.இனி என்ன? ரொம்ப ஆவலாக பார்த்த படம்,காரணம் நம் slumdog millionare ஆஸ்கார் பட டைரக்டர் டானி பாயல் இயக்கிய முதல் படம்.படம் செம மொக்கை .பார்த்து விடாதீர்கள்.

TRESPASS (2011)  :   சில நடிகர்கள் காலம் போக போக மொக்கை படங்களாக நடிப்பர்.நம்ம நிக்கோலஸ் கேஜ் அப்படிதான்.90 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.இந்த படத்தில் வைர வியாபாரியான இவர் வீடு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது.மனைவி மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார்.அந்த வீட்டுக்கு cctv கேமரா செட் செய்ய வருபவன் ,இவன் மனைவியோடு  கள்ள தொடர்பு  கொண்டு வீட்டை கொள்ளை அடிக்க தன் கும்பலுடன் வந்து இவர்களை மிரட்டுகிறான். ரொம்ப சுமார்.வெட்டியாக இருந்தால் மட்டும் பாருங்கள்.

THE EXPENDABLES (2010):
                சில விமர்சங்களை படித்து இத்தனை நாள் பார்க்காமல் இருந்தேன்.சரி பார்த்து தொலைத்தால் டெலிட் செய்யலாம் என்று பார்த்தேன்.படம்  ஏகப்பட்ட எதிர்பார்போடு ஒரு பட்டாளத்தோடு  வந்தது.படத்தில் ஒன்றுமே இல்லை.80 களில் வந்த படங்கள் போன்ற கதை.இதே போல் நம்மூரில் 90 கதைகளில் விஜய் நடித்தால் தோல்வி அடைகின்றது .எப்படி அங்கே ஹிட் என்பது தெரியவில்லை.இதில் இரண்டாம் பாகம் வேறு வர உள்ளது. 
         
DONNER PASS (2012)
          நான்கு நண்பர்கள் ,வார இறுதி .ஒரு பயணம் .அங்கே ஆபத்து. திகில் படம் எடுக்க ஈசி ஆன பார்முலா. இந்த வகையில் நானே ஏராளமான படங்கள் பார்த்துள்ளேன்.இந்த படம் சில குட்டி குட்டி கதை திருப்பத்தின் மூலம் வித்தியாச படுகிறது.ஒரு முறை பார்க்கலாம்.Tuesday, 3 July 2012

STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்


STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம் 

இது உண்மை சம்பவம் என்று தொடங்குகிறது.நள்ளிரவு நேரம் ,சாலை வெறிச்சோடி  கிடக்கிறது,வேகமாக வரும் கார் ,பாதையை கடக்கும் ஒருவனை இடித்து தள்ளி செல்கிறது.அடிபட்டவன் சாகாமல் பிழைத்துக்கொண்டு தன்னை இடித்தவனை கொள்ள முயற்சிப்பதாக நிறைய படங்கள் ( i know wnat you did last summer, hit and run உட்பட நிறைய) பார்த்திருக்கிறோம்.அதில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது? பார்க்கலாம்.


கதை ஒரு வெள்ளி கிழமை பிற்பகல் தொடங்குகிறது.நடு வயதில் இருக்கும் வேலையை இழந்த நம் ஹீரோ டாம்,அறை வாடகை குடுக்க முடியாமல் அங்கிருந்து துரத்த படுகிறான்.வேலை வாய்ப்பு அலுவலகமும் அலை கழிக்க தங்க இடம் இன்றி ,ஒரு பூங்காவில் தஞ்சமடைகிறான்.இரவு இரண்டு மணி அளவில் போலீஸ் துரத்தி விடுகிறது.பூங்காவை விட்டு வெளியே வந்த டாம் மெல்ல சாலையில் நடந்து செல்கிறான்.
ஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்க்கும் பிராண்டி தன் பதவி உயர்வுக்கு காத்திருக்கிறாள்.அதே வெள்ளி கிழமை இரவு தன் காதலனோடு ஒரு பாரில் நள்ளிரவு வரை குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு கூடவே போதை மாத்திரையும் சாப்பிட்டு தள்ளாடியபடி தன் காரை எடுக்கிறாள்.நேரம் அதே இரண்டு மணி.தன் காதலனுடன் செல்போன் பேசியபடி வரும் பிராண்டி சாலையை கடக்கும் நம் டாமை மோதிவிடுகிறாள்.காலில் மோதப்பட்ட டாம் ,முன் புறம் கண்ணாடி உடைந்து ,அவன் உடல் கார் மீதே கிடக்க ,மோதிய பயத்தில் போதை தெளிந்த பிராண்டி அப்படியே அவன் உடலோடு தன் வீட்டு ஷெட்டில் நிறுத்துகிறாள்.மெதுவாக கண்முழிக்கும் டாம் உதவிக்கு அழைக்க இவள் பயந்து ஓடிவிடுகிறாள்.சிறிது நேரத்தில் காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று பிராண்டி வீட்டிற்க்கு வரும் காதலனிடம் தான் ஒருவனை மோதிவிட்டதாக சொல்லும் பிராண்டி அவன் உடல் தன் கார் பான்நெட் மீது உள்ளதை சொல்லவில்லை.தன் சந்தோஷத்திற்கு இது இடைஞ்சல் என்று நினைக்கும் காதலன்,தான் இது போல் நிறைய விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் ,யாரும் பார்க்காததால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அவளுக்கு மீண்டும் ஒரு போதை மாத்திரை தந்து இருவரும் உல்லாசமாய் இருக்கிறார்கள்.மறுநாள் காலை தன் பணிக்கு செல்லும் பிராண்டி தன் செல்போன் காரில் இருப்பதை உணர்ந்து விரைகிறாள்.அதற்குள் போனை எடுக்கும் டாம் உதவிக்கு முயற்சிக்க battery தீர்ந்து விடுகிறது.அங்கே வரும் ப்ரண்டியிடம் டாம் தன்னால் அவளுக்கு பிரச்சனை இருக்காது என்றும் ,சரியாக பார்க்காமல் ரோட்டை கடந்தது தன் தவறு என்று போலீசில் சொல்லிவிடுவதாகவும் சொல்லி  கெஞ்சுகிறான்.உயிருக்கு போராடி உதவி கேட்க்கும் டாமிடம் போலீஸ் ,கேஸ் ,கோர்ட் இதெல்லாம் பயந்து தான் உதவ முடியாது என்றும் அவனை விரைவில் இறந்து விடசொல்கிறாள்.மேலும் தன் காதலன் உதவியுடன் டாமை கொன்று உடலை இரவில் அப்புறபடுத்த முயலுகிறாள்.இறுதியில் என்ன ஆனது என்பதை ரொம்பவும் ஜோராக காட்டியிருக்கிறார்கள் .நடிப்பும் குறை சொல்ல முடியாத ஒன்று.ஆரம்பம் முதலே அருமை.வள வள காட்சிகள் இல்லை.மொத படமே 85 நிமிடங்கள் தான்.


*texas நகரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவமான  இதில் அந்த பெண் 50 வருடம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.
* 2007 வந்த இந்த படத்தை விடுவார்களா நம்ம ஆட்கள் .இந்த படத்தை இரண்டு வருடத்தில் Accident on hill road என்ற பேரில் ஹிந்தியில் சுட்டுவிட்டார்கள்.
* Rotten tomatoes- 72% fresh 
*IMDB-6.6 
* வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இருப்பதால் கவனம் .
* த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.