Pages

Wednesday, 18 July 2012

பில்லா 2 தோல்வி ஏன் ?


பில்லா 2 தோல்வி ஏன் ? 

பில்லா 2 மரண மொக்கை, பணம் வேஸ்ட் ,கவுத்துட்டானுங்க இப்படி படம் வந்த கடந்த நான்கு நாட்களாக ஒரே சத்தம்.மறுபுறம் தல ராக்ஸ், தமிழில் ஒரு ஆங்கில படம்,இது போல ஸ்டைல் ஆன படத்தை தமிழ் சினிமா இதுவரை பார்த்த தில்லை என்பது அஜித் ரசிகர்களின் சப்பை கட்டு .ஆனாலும் அந்த சத்தம் ரொம்ப ஈன ஸ்வரத்திலேயே கேட்டது.காரணம் அஜித் ரசிகர்களுக்கே படம் பிடிக்க வில்லை. இதற்க்கு முன் அஜித்தின் தோல்வி அடைந்த படங்களான ஏகன்,அசல் போன்ற படங்களாவது பிளாப் ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்தது.இது அக்கேடும் இல்லை.

மங்காத்தாவுக்கு முன் அசல் ,ஏகன் என தொடர்ந்து தோல்விகள்.சரி என்ன செய்வது ?அஜித்தின் கடைசி 15 படங்களில் வெற்றி படங்கள்என்று  பார்த்தால் வில்லன் ,வரலாறு,பில்லா இந்த மூன்று மட்டும் தான்.வேறு வழியும் தெரியவில்லை.பில்லாவிலும் பில்லாவை சாக அடித்தாகி விட்டது.சரி ஆங்கில படங்களில் வருவது போல் prequel எடுத்து பாப்போம்.என்ன பில்லா ன்னு சொன்ன ஆளுங்க பார்க்க வந்துடுவாங்க என்று நினைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

சரி படம் ஊத்திகிச்சு பார்க்க வேண்டாம் என்று பார்த்தால் பதிவர் ராஜ் ,இன்னும் சிலர் படம் ஓகே அப்படின்னு சொல்ல,ஒரே குழப்பம்,அதிலும் ஒரு பதிவர் தான் விஜய் ரசிகர் என்றும் படம் பார்க்கும் முன் தானே பில்லாவை கலாய்த்து இருந்ததாகவும்,படம் பார்த்தவுடன் பிடித்ததாக எழுத எனக்கு ஒரே குழப்பம்.ஏன் என்றால் நன்றாக இல்லை என்று பலர் சொன்ன படங்கள் பல எனக்கு பிடித்தது.சரி பாப்போம் என்று நேற்று (செவ்வாய் கிழமை ) பார்த்தேன்.படம் எனக்கு திருப்தி இல்லை தான் .விமர்சனம் நிறைய எழுதி ஆகி விட்டதால் ,படத்தின் பிளஸ்,மைனஸ் மட்டும் பார்க்கலாம் .சில பிளஸ் ஆன  விஷயங்களே சில இடங்களில் மைனஸ் ஆகவும் இருகின்றது.

பிளஸ்:
1. அஜித் . படத்தை  முழுதும் தாங்கி நிற்கிறார்.
2. பல இடங்களில் படத்தின் மேகிங் .
3.ஒளிபதிவு ,இசை ,location
4.சண்டை காட்சிகள் 
மைனஸ் :
1. அஜித் தொப்பையும் தொந்தியும் ஆக சித்தப்பா தோற்றத்தில் இருக்கிறார்.சண்டை காட்சிகளில் காலை தூக்கி அடிக்க முடியாதபடி தொப்பை இடிக்கிறது. முகத்திலும் பொலிவில்லை.மங்காத்தாவில் நரைத்த தலையோடு இருந்தாலும் படு ஸ்மார்ட் ஆக இருப்பார்.இதில் என்ன ஆச்சு.? 
2.ஒரு மனுஷன் எப்பவுமேவா பஞ்ச் வசனம் பேசிக்கிட்டு இருப்பான்? படத்தில் அஜீத் வாயை திறந்தாலே பஞ்ச் தான்.முதலில் நன்றாக இருந்தாலும் போக போக வெறுப்பாக இருக்கிறது.ஒரு வேலை படம் தோய்வாக இருப்பதாலோ?
3.வில்லன்கள் . ஒரு மாற்றத்திற்காக புதிதாக இருந்தாலும் படத்தில் ஒன்றவில்லை.பில்லா முதல் பாகம் வெற்றிக்கு பிரபு,ரகுமான்,சந்தானம்,ஆதித்யா போன்ற தெரிந்த முகங்கள் ஒரு சிறு அளவேனும் காரணமாக இருந்திருக்கும்.
4.படத்தின் மேகிங் சில இடங்களில் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.அதுவும் கடைசியில் அஜீத் இனிதான் ஆரம்பம் என்று சொன்ன பிறகு போலீஸ்,ஸ்ரீமன், முதலமைச்சர் போன்றவர்களை கொள்ளும் இடங்களில் படு அமெச்சூர் தனம்.அவசரம்.
5.எல்லாவற்றையும் விட பெரியது திரைக்கதை.முதல் அறை மணி நேரம் மட்டும் ஓகே. பின்பு நீங்கள் யூகிக்கும்படியே செல்கிறது.அடுத்த அடுத்த காட்சி நீங்கள் சொல்லிவிடலாம்.

டிஸ்கி : நான் என் பதிவில் அஜீத் படங்களுக்கு வந்த முதல் இரண்டு மூணு நாள் கழித்து பார்த்தால் கூட்டம் இருக்காது என்று அவ்வபோது சொல்லி இருக்கிறேன்.இந்த படம் வெள்ளி கிழமை வந்தது.நான் செவ்வாய் கிழமை பார்கிறேன்.தியேட்டரில் மொத்தம் 46 பேர் தான்.நானே எண்ணினேன்.என் நண்பர் ஒருவர் முன்தினம் வேறு இடத்தில் படம் பார்த்தார்.அங்கும் கூட்டம் இல்லை.
-- 

36 comments:

 1. ஏன் ராசா அஜிதில் இப்படி ஒரு நேசம்????

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அஜித்தின் ராசிதான்

   Delete
 2. அய்யோ....இங்க மதுராந்தகம் ஆர் கே தியேட்டரில் நேற்று மாலை காட்சி பார்த்தேன்.மொத்தமே 31 பேரு தான்..படம் சுமார் தான்.ஒரு முறை பார்க்கலாம்.அந்த 31பேரை நம்பி போட்ட சமோசாவினை தியேட்டர் கான்டீன் ஆளுங்க கூவி கூவி விற்றதை மறக்க முடியாது..

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இருக்கும் ஒன்றிரண்டு அஜித் ரசிகர்களே கேட்டுக்கங்க .

   Delete
  2. கோவை ஜீவா,

   மதுராந்தகத்தில எல்லாம் படம் பார்க்கிறிங்களா? பெரிய ஆள் தான், நான் அங்கே எல்லாம் பார்த்து இருக்கேன், அச்சிரப்பாக்கத்தில் மேம்பலம் பக்கத்தில பாலாஜினு ஒரு தியேட்டர் இருக்கும் அங்கே கூட இப்போலாம் ரிலீஸ் செய்றாங்க, சிட்டில ஓஹோனு ஓடுறப்படம் எல்லாம் முதல் நாளுக்கு அப்புறம் காத்தாடும் :-))
   இதை சொன்னால் ஒரு பிரபலப்பதிவர் சண்டைக்கு வருவார்!!!

   முன்னர் எல்லாம் சென்னை ,செங்கல்ப்பட்டு, அப்புறம் திண்டிவனத்தில தான் படம் ரிலீஸ் ஆகும் இப்போ வழியில இருக்கிற டூரிங்க் கொட்டாயில எல்லாம் ரிலீஸ் செய்துட்டு 1000 தியேட்டர்ல ரிலீஸ்னு பெருமை அடிச்சுக்கிறாங்க :-))

   Delete
 3. நல்ல அலசல் நண்பரே ....

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


  பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete
 4. கடைசியல நீங்களும் படம் பார்த்துட்டேங்க ..... :)

  ReplyDelete
  Replies
  1. ராஜ் நான் படம் பார்க்க நீங்களும் ஒரு காரணம்.அந்த பழி பாவம் உங்களையும் சேரும் நண்பா.எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

   Delete
  2. ப்ரீயா விடுங்க பாஸ்...... :)

   Delete
 5. Unkaluku scenecreater porutha illa..vijay fan createrthan sari

  ReplyDelete
  Replies
  1. நன்றி .இன்னொரு ப்ளாக் தொடங்கினால் கண்டிப்பாக அந்த பெயரை உபயோக படுத்த முயற்சிக்கிறேன்.

   Delete
 6. //இன்னும் இருக்கும் ஒன்றிரண்டு அஜித் ரசிகர்களே கேட்டுக்கங்க .

  தம்பி உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத தம்பி ...

  உன்னை மாதிரி ஆளுங்களை இங்க கிழி கிழின்னு கிழிச்சிருக்கோம் வந்து படிச்சிட்டு போ தம்பி ....

  http://www.balapakkangal.blogspot.com/2012/07/blog-post_19.html

  ReplyDelete
  Replies
  1. அந்த பாலா விஜயை கலாய்த்து ஹிட் பார்க்கும் ஈன பிறவி. எங்கே ஒரு ரெண்டு மாதம் விஜயையோ விஜய் சம்மந்தமான எந்த விஷயமும் இல்லாமல் பதிவு போடசொல்லு .அவன போய் ஒரு ஆளுன்னு சொல்லிக்கிட்டு என் கிட்ட போ போ.யூவ் நீயும் அப்படி தான்னு எனக்கு தெரியும்.நீ உனக்கு பிடிச்ச நடிகன சப்போர்ட் பண்ணி ,பிடிக்காதவன கலைக்கிற.அத நான் பண்ணுனா வந்து பின்னோட்டம் போடற? என்ன ஆளுய நீ ?

   Delete
 7. தம்பி அங்கலாம் வந்தமா படிச்சமா டென்ஷன் ஆனமான்னு போய்கிட்டே இருக்கணும் , மீறி கமெண்ட் போடனும்னேல்லாம் ஆசைபடகூடாது , அது கலவர பூமி காம்ப்ளான் குடிக்கிற பயலுக எல்லாம் அங்க கால் வச்சா சிக்கி சின்னாபின்னாமாகிடுவாணுக

  ReplyDelete
 8. ஒரு வழியா படம் பார்த்துட்டீங்க..பிளஸ் மைனஸ் என்று எழுதிட்டீங்க..
  ஒருவருக்கு ஒரு படம் பிடிக்கிறது பிடிக்காதது எல்லாம் அவங்க அவங்களோட விருப்பம் இல்லையா..? உங்களோட விருப்பத்தை நீங்க சொல்லிட்டீங்க..நல்லாருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமரன்.

   Delete
 9. Replies
  1. நன்றி மோகன் சார்.

   Delete
 10. அஜித்தின் கடைசி 15 படங்களில் வெற்றி படங்கள்என்று பார்த்தால் வில்லன் ,வரலாறு,பில்லா இந்த மூன்று மட்டும் தான்/// மங்காத்தாவை விட்டுடீங்க

  ReplyDelete
  Replies
  1. ஓகே சேர்த்துக்கலாம்.

   Delete
 11. மொத்தம் 46 பேரா?
  நம்ப முடியவில்லை - தியேட்டர் வேலை ஆட்களை சேர்த்து
  கணக்கில் சேர்த்தீர்களா....

  ReplyDelete
  Replies
  1. ஏன் உங்க ஊரு தியேட்டர்ல அந்த அளவு கூட்டம் கூட இல்லையா? பரிதாபம் தான்.

   Delete
 12. boss neenga vijay fana avana mathiriyae neegalum comedy peesa iruppenga p[olae

  ReplyDelete
  Replies
  1. இருந்துட்டு போறேன். நீ அஜீத் fan ஆக இருந்து அவன மாறி வெத்து வேட்டா ஆகிடாத ராசா.

   Delete
 13. வந்தியத்தேவன்20 July 2012 at 12:07

  //ஒரு வேலை படம் தோய்வாக இருப்பதாலோ?//

  ஒரு முக்கால் பக்கம் பதிவு. அதில் முப்பது எழுத்துப்பிழைகள். இதில் படத்தில் குறை கண்டுபிடிக்கும் ஆவல் வேறு! என்னா ஒரு வில்லத்தனம் :-) இது நிற்க... நேற்று படம் பார்த்தேன், நீங்கள் சொல்லும் அளவிற்க்கு மோசமில்லை. திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் மிகப் பெரிய வெற்றிப்படமாகவே வந்திருக்கும்.

  வ-தேவன்.

  ReplyDelete
  Replies
  1. இப்போ படம் படு தோல்வி தான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி .

   Delete
 14. //எங்கே ஒரு ரெண்டு மாதம் விஜயையோ விஜய் சம்மந்தமான எந்த விஷயமும் இல்லாமல் பதிவு போடசொல்லு //
  இதையே நீங்களும் அஜித்துக்கு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்!

  நீங்க எல்லாப்பதிவும் நல்லாத்தான் எழுதுறீங்க.. ஏன் அஜி்த்னு டாபிக் வந்துட்டா மட்டும் ஒரே பக்கச் சார்பா எழுதுறீங்களோ தெரியலை.. இதை மாத்திக்கொண்டால் நல்லது பாஸ்! படம் பிடிக்கலைன்னு மத்தவங்க எழுதின விமர்சனங்களையும்படிச்சிருக்கேன்.. ஆனா உங்களதுதான் ரொம்ப partialஆவே இருக்கு..

  படத்துக்கு திரைக்கதை முற்பாதியில ஸ்ட்ராங்காவும். பிற்பாதியில பலவீனமாவும் இருக்குதான்.. படம் முழுக்க பிளாஷ்பேக்குக்காக அல்பத்தை புரட்டிப்பார்க்குற மாதிரி இருக்கு தான்.. படத்துல கேரக்டர்களோட மனோ நிலையை டெப்தாக developபண்ணலைதான்.. ஆனா டோல்டி ஒண்ணும் நோலன் இல்லையே..

  படத்தை பிளாப்னு சொல்ல முதல்லா நீங்க critical response, commercial response ரெண்டையும் கன்ஸிடர் பண்ணியாகனும்.

  படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் என நீங்கள் கூறுவது பிழை.. முதல்லேர்ந்து இப்போ வரைக்கும் Mixedதான்.. படத்துக்கு ஓவரா எதிர்பார்த்து போனவங்கதான் டோஸ் வாங்கினவங்களா இருப்பாங்க.. என் பிரெண்ட்ஸுக்குல்லாம் படம் பெரும் சர்ப்ரைஸ்.. (அவங்க இந்த வருஷத்துலேயே எதிர்பார்த்ததிருக்கும் ஒரே படம் விஸ்வரூபம்தான்.)

  அப்புறம் படம் கமர்சியலா என்னன்னு யாரும் சொல்லவே தேவையில்லை.. ஓப்பனிங் ரெக்கார்ட், தொடர்ந்து 4வது டே, 5வது டேன்னு தொடர்ந்துகிட்டே இருக்கு.. ஒவ்வாரு நாளும் 10 கோடிக்கு குறைவில்லாமல் வியாபாரம் பார்த்து வருகிறது.. இதற்குள் "தயாரிப்பாளருக்கு நஷ்டம்"னு விஜய் ரசிகர்கள் கூவும் கமென்டுகளைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்ய??

  நான் நினைக்கறது சரியா இருந்தா உங்க ஏரியாவுல அஜித் ரசிகர்கள் குறைவா இருக்கனும், இல்லாட்டி தியேட்டடர் கண்டிஷன் சரியில்லாம இருக்கனும்.. நான் முதல் நாள் முதல் ஷோ போயிட்டு, பிறகு புதன்கிழமை இரு நண்பர்களுடன் திருப்பி படம் பார்க்க தெஹிவளை கொன்கோர்டுக்கு போனேன்.. அபபோவும் balcony புல்..(மீ பால்கனி)) ODCயிலயும் கூட்டம் அதிகமாத்தான் இருந்திச்சு..

  நீங்க Balaவுல தொடங்கி Realsanthanamfanz (http://realsanthanamfanz.blogspot.com/2012/07/blog-post_16.html இந்த போஸ்டை இப்பதான் வாசிச்சுட்டு வர்றேன்) வரைக்கும் பல பேரோட வெறுப்பை சம்பாதிச்சுகிட்டே வர்றீங்க பாஸ்.. ஆனா, நான் உங்க நண்பனாவே இருக்க நினைக்கிறேன்..
  அதுனால இதை மாத்திக்கலாமேன்னு சின்ன ரெக்கமென்ட்.. அம்புட்டுதேன் :)

  ReplyDelete
 15. முதலில் உங்கள் வருகைக்கு நன்றி.அஜீத் பற்றி எழுதாமல் இருக்க நான் ரெடி.நான் எல்லா பதிவும் நன்றாக எழுதுவதை சொன்னதை கேட்க மகிழ்ச்சி.எனக்கு விஜய் அஜீத் இருவரும் பிடிக்கும்.விஜய் ஒரு படி அதிகமாகவே பிடிக்கும்.ஆனால் அஜீத் ரசிகர்களை சுத்தமாக பிடிக்காது.அவர்களுக்கு விஜயை கலாய்ப்பதே முழு வேலை.நீங்கள் சொன்ன பாலா அவர்களின் பதிவில் விஜயை கிண்டல் பண்ணி எத்தனை பதிவு இருக்கின்றது என்று பார்த்தீர்களா?அவர் மட்டுமில்லை பலர் குறிப்பாக விஜயை கிண்டல் பண்ணுவதே வேலையாக இருக்கிறார்கள்.paartial என்று தெரிந்தே தான் எழுதுகிறேன்.காரணமும் அவர்களே தான்.அவர்கள் செய்யும் வேலையை நான் செய்தால் வந்து அசிங்கமாக என்னை திட்டி பின்னூட்டம் போடுகிறார்கள்.ஏன்? அவர்களுக்கு பிடித்த நடிகரை சப்போர்ட் செய்தும்,பிடிக்காத விஜயை இறக்கியும் எழுதுகிறார்கள்.அதேவேலையை நான் செய்தால் என்ன தப்பு?

  ஒவ்வொரு நாளும் பத்து கோடிக்கு வசூலா ? அப்ப படம் வந்து இன்னைக்கு ஒன்பதாவது நாள்.அப்பா தொண்ணூறு கோடி வசூலா. செம காமெடி தலைவா.படம் ஹிட் தோல்வி என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.என் சொந்தகாரர்கள் தியேட்டர் வைத்திருக்கிறார்கள்.இரு அரங்கில் பில்லா போட்டு இப்போது வசூல் இல்லாமல் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் நான் தொலைபேசியில் விசாரித்த போது எல்லா இடங்களிலும் முதல் மூணு நாட்களுக்கு பின் காலி என்று சொன்னார்கள்.

  நான் இன்றைக்கே அஜீத் பத்தி எழுதுவதை நிறுத்த ரெடி. மற்றவர்கள் ?என்ன செய்யலாம் சொல்லுங்கள்.? நானும் உங்களுடன் சக பதிவராக நட்புடன் இருக்கவே ஆசை படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே. உங்கள் வலைத்தளத்தில் வந்து பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும். என் மரியாதை கருதி பின்னூட்டமிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த ஒரே ஒரு வரிக்காக பின்னூட்டமிடுகிறேன்.

   //அவர்கள் செய்யும் வேலையை நான் செய்தால் வந்து அசிங்கமாக என்னை திட்டி பின்னூட்டம் போடுகிறார்கள்.ஏன்?

   நான் எப்போது உங்களை அசிங்கமாக திட்டினேன்? எங்கே ஒரே ஒரு சான்றை காட்டுங்கள் பார்க்கலாம்?

   நீங்கள் என்னை ஈனப்பிறவி என்று வர்ணித்ததை (கவனியுங்கள் என்னை வர்ணித்ததை அஜித்தை அல்ல) முட்டாள்தனம் என்று கூறினேன். தங்கள் கருத்தை தெரிவிப்பதையே அசிங்கமாக திட்டுவது என்று நீங்கள் நினைப்பதை என்னவென்று சொல்வது?

   // அஜீத் ரசிகர்களை சுத்தமாக பிடிக்காது.அவர்களுக்கு விஜயை கலாய்ப்பதே முழு வேலை.
   மேலே உள்ள வரியில் அஜீத் விஜய் இரண்டையும் மாற்றிபோட்டுக்கொள்ளுங்கள். அதுதான் என் மன நிலை. மற்றபடி விஜய் என்ன எனக்கு ஜென்ம விரோதியா?

   //paartial என்று தெரிந்தே தான் எழுதுகிறேன்.
   இடையே தான் நானும் சொன்னேன். நீங்கள்தான் ஆத்திரம் தலைக்கெறி ஈனப்பிறவி, Anti vijay Groups என்று கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டீர்கள். இது வரைக்கும் உங்களை ஒருமுறை கூட ஒருமையிலோ, கேவலமாகவோ விளித்தது இல்லை. ஆனால் என்னை அவன் இவன் என்னும் அளவிற்கு வர்ணனை செய்து விட்டீர்கள். ஆனால் கடைசியில் நல்ல பிள்ளை மாதிரி அவர்கள் என்னை அசிங்கமாக திட்டுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். இது எந்த வகையில் நியாயம் நண்பா? நான் கெட்டவன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நல்லவர் அல்லவா? கொஞ்சம் மனசாட்சியோடு யோசியுங்கள்.

   மறுபடியும் உங்கள் தளத்தில் வந்து பின்னூட்டமிட்டதற்கு மன்னித்து விடுங்கள்.

   Delete
  2. ஒவ்வொரு நாளும் 10 கோடிக்கு குறைவில்லாமல் எடுத்தது முதல் 6 நாட்களுக்கு தான் பாஸ்.. அப்படியே தொடர்ந்து எந்தப் படத்தாலயுமேதான் எடுக்க முடியாது..
   Anyway எனது கமென்டை கூல் மூடிலேயே வாசித்து தொடர்ந்தும் நண்பனாக இருப்பதற்கு நன்றி!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 16. எங்களுக்கு விஜய பிடிக்காம போனதே உங்களை மாதிரி ரசிகர்கலாலதான்.சுறா படமே ஹிட் எண்டு சொல்றவைங்கதானே நீங்க.

  இப்போ facebookla எல்லாம் பார்த்தா பவர் ஸ்டாரும், விஜயும் தான் எங்களுக்கு பொழுது போக்கு.

  ReplyDelete
 17. அதேதான் ராசா .ஆனால் எனக்கு அஜீத் பிடிக்கும் அஜீத் ரசிகர்கள் பிடிக்காது.நீங்க ஆஞ்சநேய,ஆழ்வார்,ரெட்,ராஜா ,ஏகன் எல்லாம் ஹிட் என்று சொல்லும்போது சுறா ஹிட் என்று ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.அஜீத் ரசிகர்களுக்கு விஜய் ஒரு பொழுது போக்கு.விஜய் ரசிகர்களுக்கு அஜீத் ஒரு பொழுதுபோக்கு.விளையாடுங்க.

  ReplyDelete
 18. adai yen ipdi avanuga inneram adutha padathuku thethi kurihitu iruppanunga neega thevai illama sanda poduratha vittutu mathiya sapadu readyanu parunga

  ReplyDelete
 19. அஜித் தொப்பையும் தொந்தியும் ஆக சித்தப்பா தோற்றத்தில் இருக்கிறார்.சண்டை காட்சிகளில் காலை தூக்கி அடிக்க முடியாதபடி தொப்பை இடிக்கிறது. முகத்திலும் பொலிவில்லை.மங்காத்தாவில் நரைத்த தலையோடு இருந்தாலும் படு ஸ்மார்ட் ஆக இருப்பார்.இதில் என்ன ஆச்சு

  ஒரு மனுஷன் எப்பவுமேவா பஞ்ச் வசனம் பேசிக்கிட்டு இருப்பான்? படத்தில் அஜீத் வாயை திறந்தாலே பஞ்ச் தான்.முதலில் நன்றாக இருந்தாலும் போக போக வெறுப்பாக இருக்கிறது.ஒரு வேலை படம் தோய்வாக இருப்பதாலோ?

  Arunmai Arumai

  ReplyDelete