Pages

Monday, 30 July 2012

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம் 
திரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த வரை முறையும் கிடையாது.ஆனால் இந்திய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்திய படங்கள் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே சில வரை முறைகள் வைத்து  பாடல்கள் ,சண்டை ,காமெடி இவை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று நினைத்து அவை தேவை இல்லாத நேரத்திலும் அவற்றை நிரப்பி விடுகிறார்கள்.அதற்க்கு காரணமும் சொல்கிறார்கள்.அதாவது பாடல்கள் ஆடியோ மார்கெட்டுக்கு தேவை .மேலும் பாடல்கள் இல்லாவிட்டால் படம் இரண்டரை மணிநேரம் தேராது.

இந்திய படங்கள் மூன்றரை மணி நேரம் ஓடிய காலம் எல்லாம் உண்டு.ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்குள் முடியும் படங்கள் வர தொடங்கி விட்டன.அதிலேயும் ஐந்து பாடல்கள் என்று ஒரு இருபது நிமிடம் போகிறது.சமீப காலங்களில்தமிழ்  படங்களின் கால அளவை எடுத்து கொண்டால் 120 சொச்ச நேரமாக குறைந்து விட்டது.சமீப காலங்களில் நேர அளவில் பெரிய படங்கள் என்றால் அஞ்சாதே ,நண்பன் போன்ற படங்களை சொல்லலாம்.மூன்று மணி நேரத்திற்கு மேல் போன இந்த படங்கள் ஓடிய அரங்கங்களில் காட்சி நேரங்கள் மாற்றப்பட்டது.

கருப்பு வெள்ளை காலங்களில் மூன்று நிமிடமாக இருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் நான்கு-ஐந்து நிமிடமாக ஆனது.ரகுமான் வந்த பின் அது சராசரியாக ஆறு -ஏழு நிமிடமாக மாறியது.எட்டு ஒன்பது நிமிட ரகுமான் பாடல்களும் உண்டு.இன்று சராசரியாக ஐந்து நிமிடம் என்று எடுத்து கொள்ளலாம்.பாடல்கள் இல்லாத படமாக உங்களுக்கு சட்டென வரும் படங்கள் என்ன.? அந்த நாள்,குருதி புனல் .இப்படி விரல் விட்டு என்னும் படங்களே.

இப்போதாவது பரவில்லை .தொன்னூறுகளில் வந்த சில படங்களில் ஒரு பாடல் வந்தால் தொடர்ந்து ஒரு சண்டையும் வரும்.அந்த பாடலும் சண்டையும் படத்திற்கு நேரத்தை நீட்டிததை தவிர பெரிதாக கதைக்கு உதவி இருக்காது.டி.ராஜேந்தர் பத்து பாட்டெல்லாம் வைத்து கொடுமை பண்ணுவார்.அதிலும் விக்ரமன் போன்றவர்கள் படங்களில் ஹீரோ வருத்தப்பட்டு சோகமாக  பாடும் பாடலை ஹீரோயின் வேறு ஒரு முறை பாடுவார்.கமெர்சியல் இயக்குனர்களை விட்டு விடுங்கள்.மணிரத்னம் போன்ற புதுமை விரும்பும் இயக்குனர்களும் ஐந்து ,ஆறு பாட்டு நிச்சயம் வேண்டும் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது.உலக பட விழாக்களுக்கு படத்தை அனுப்பும் போது பாடல்களை வெட்டி அனுப்புவார்.சமிபத்தில் சுஹாசினி ஒரு தொலைகாட்சியில் வெளி நாட்டினர் பட விழாக்களில் பாடல்களை வெட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள் ,இந்திய படங்களின் சிறப்பே பாடல்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் கேட்டதாக கூறினார்.ஆறுதலாக மிஷ்கின் ,சுசிந்திரன் போன்றவர்கள் இரண்டு ,மூன்று பாடல்களோடு நிறுத்தி வருகின்றனர்.பாடல்கள் தேவை இல்லை என்று முழுதும் சொல்ல வர வில்லை.அவை திணிக்க பட்டதாக இருக்க வேண்டாம் .

அதேதான் சண்டை மற்றும் காமெடி ட்ராக் விஷயத்திலும்.பாட்ஷா போன்ற படங்களிலேயே படத்தில் கதைக்கு தேவை  தான் சண்டை உள்ளது.ரஜினி ஆட்டோகாரனாக இருந்து மீண்டும் பாட்ஷா வெளிப்படும்  போது அதுவும் மிகவும் எதிர்பார்க்க வைத்து நடக்கும் சண்டை மறக்க முடியாதது.அதனால் தான் இன்றும் அந்த படம் ரஜினி ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.அறிமுகம் ஆகும்போது ஒரு சண்டை ,கதாநாயகியை காப்பாற்ற ஒரு சண்டை ,மார்க்கெட் சண்டை ,இறுதி சண்டை சண்டை என்று அலுப்பு ஏற்படுத்தும் சண்டைகள் குறைந்து வருவது நல்லதே.

காமெடி விஷயத்திலும் நாம் மாற வேண்டும்.இன்று சந்தானத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு ஓடும் படங்கள் நிறைய வந்து விட்டது.கவுண்டமணி ,வடிவேலு காலத்திலிருந்தே அது இருந்தாலும் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் தனி ட்ராக்  படத்தை காப்பாற்றாது.ஆனால் இது இப்போதைக்கு குறைவதாக தெரியவில்லை.

5 comments:

 1. சூப்பர் நண்பா வழமை போல உங்க ஸ்டைல அலசல் ஒரு சினி மினி கதம்பம் போல இருக்கு உங்க ஒவ்வொரு பதிவு..

  ReplyDelete
 2. உண்மை தான் நண்பா. தமிழ்ப்படங்களின் வேகத்திற்கு பெரும் முட்டுக்கட்டை இந்தப் பாடல்களும் திணிக்கப்பட்ட சண்டைகளும் தான். அதிலும் பல படங்களின் பாடல்கள் கேட்க சகிக்காது. டிவிடி என்றால் ஃபார்வட் பண்ணியாவது ஓட்டிடலாம். தியேட்டரில் பார்ப்பவர்கள் கதி தான் ரொம்ப பரிதாபம். :P

  ReplyDelete
 3. நல்லதொரு அலசல் நண்பரே....

  அந்தக் காலத்தில் சம்பூர்வ இராமாயணம் படம், நாலரை மணி நேரம் ஓடும்... மக்கள் அவ்வளவு விரும்பிப் பார்ப்பார்கள்...

  மக்கள் விருப்பத்திற்கேற்ற திரைப்படங்களும் மாறுகிறது.

  படத்தோடு ஒட்டி வரும் நகைச்சுவை காட்சிகள் மனதில் நிற்கும். அது அந்தக்காலம் என்றாலும் இந்தக்காலம் என்றாலும்..

  பகிர்வுக்கு நன்றி.

  (த.ம. 1)  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
 4. பாடல்கள் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் பாடல்களுக்காக ஓடிய படங்கள் பல.

  ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கூட டைட்டில் சாங் உண்டு, அந்த பாடல்களுக்காக ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இன்றும் உண்டு.

  பாடல்களில் என்னைக்கடுப்பேத்துவது 100 குருப் டான்சர், கிளப் டான்ஸ் என்று வைப்பது தான்.மகேந்திரன்,பாலு மகேந்திரா போல மாண்டேஜ் சாங் தேவையான அளவு படத்தில் வைக்கலாம்.அது இல்லாமல் ஹீரோ கிராமத்தில இரும்பு பட்டரை வச்சிருப்பார் ,ஆனால் மூடு வந்தால் மோளம் அடிச்சு சுதி சுத்தமா பாடுவதா காட்டுவது செம காமெடி :-))

  ReplyDelete
 5. சூப்பரான அலசல்...

  இப்போது பாடல்கள் பெரும்பாலும் தம்மடிக்க... அல்லது கொஞ்சம் வெளிநடப்பு செய்யவே உதவி வருகின்றன... விதிவிலக்கான பாடல்களும் ஏராளமம் இருக்கின்றன.

  செல்வராகவன் படங்களில் வரும், நாயகன் நாயகி பாடாமல்... அதற்கு பதிலாக காட்சிகளை ஓடவிடுவதும் ரசிப்பதற்குரியவை...

  ReplyDelete