Pages

Sunday, 8 July 2012

காக்டெயில்

காக்டெயில் :

நான் ஒவ்வொரு வாரமும் குமுதம் ,ஆனந்த விகடன் இரண்டையுமே வந்தவுடன் வாங்கி விடுவேன்.இது பதினேழு வருடங்களாக  தொடர்கிறது.நடுவில் சில முக்கிய விஷயங்களுக்காக வேறு சில புத்தகங்களும் வாங்குவேன்.இப்போ விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகம் வாங்கினேன்.அசந்துவிட்டேன்.அவ்வளவு விஷயங்கள்.நான் முன்பு வாங்கிய போது வெறும் படங்கள் என்று பக்கங்களை ஒப்பேற்றி இருப்பார்கள்.அதனால் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்து விட்டேன்.சரி என்று போன மாதம் வாங்கிய போது தான் இப்படி.நிறைய விஷயங்கள்,விமர்சனம்,பேட்டிகள்,பழைய படங்களை பற்றிய அறிந்திராத செய்திகள்,நடிகர் நாசர் எழுதும் அனுபவ கட்டுரை ,இப்படி நிறைய.நீங்கள் சினிமா ஒன்றுக்காக பத்து ரூபாய் கொடுத்து குமுதமோ ,குங்குமமோ வாங்குகிறீர்கள் என்றால்  அதே பத்து ரூபாயில் சினிமா எக்ஸ்பிரஸ் அதிக நிறைவு தரும்.

டிராவிட் கேப்டன் பதவியில் இருந்த போது அவர் தலைமையில் வெற்றி பெற்றுவதை அணியின் பலர் ரசிக்கவில்லை என்று கொளுத்தி போட்டுள்ளார் கிரேக் சாப்பெல்.போகிற பதவிகளில் அனுசரித்து போக முடியாமல் எல்லா இடங்களிலும் கழட்டி விடப்படும் இவர் சரி புத்தகம் எழுதி சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.ஏற்கனவே சச்சின் பற்றி எழுதி வாங்கி கட்டிகொண்டார்.டிராவிட் தலைமையில் அணி  எப்படி விளையாடி இருந்தாலும் இவர் இப்போது வார்த்தைகளால் விளையாடுவது தன் புத்தகம் அதிக விற்கவே.

இருக்கிற பிரச்சனை போதாதென்று சேவாக் வேறு தோனியால் மட்டுமே நாம்  உலக கோப்பை வெல்ல வில்லை.நல்ல அணி இருந்ததால் வென்றோம் என்று கூறியுள்ளார்.விடுமா மீடியாக்கள் ஆரம்பித்து விட்டன.எனக்கு இருவருமே பிடிக்கிறது அதனால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

என்னமோ விஜய் மட்டுமே ரீமேக் படங்களில் நடிப்பது போலவும் மற்றவர்கள் அதை தீண்டுவது இல்லை எனவும் பலர் விஜயை கிண்டல் அடிக்கிறார்கள்.என்ன செய்ய விஜய்க்கு இணைய தளம்,ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் ரசிகர்களை விட அதை பற்றி தெரியாத ரசிகர்கள் அதிகம்.விஷயம் என்ன என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் எவ்வளோ ரீமேக் படங்கள் நடித்துள்ளார் என்று பலருக்கு தெரியாது.அது பற்றி நண்பர் முரளி கண்ணன் பதிவின் இணைப்பு .

ரஜினியும் ரீமேக் படங்களும்

http://muralikkannan.blogspot.in/2008/10/blog-post_18.html 

ஈ படம் எதிர்பார்த்த படியே சூப்பர்.ஆனால் ஓடுமா என்பதில் எனக்கு சந்தேகம்.காரணம் சில வாரங்களுக்கு  முன் வந்த தடையற தாக்க படம் ரொம்பவும் நன்றாக இருந்தது.ஆனால் பெரிதாக ஓடவில்லை.அடுத்த வாரம் பில்லா வருவதால் ஈ என்னவாகும்.ஈ பில்லாவை ஓட்டுதா இல்லை
பில்லா ஈ ஓட்டுதா என்று பார்க்கலாம்.

5 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. பாலா,
   நான் சொன்னது பொதுவாக விஜய் ரீமேக் அதிகம் நடிப்பார் என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு பதில்.ரீமேக் நடிப்பது பாவசெயல் அல்ல ரஜினி கூட அதிகம் ரீமேக் தான் என்று சொல்ல வந்தேன்.நீங்க சொன்ன 9 பாயிண்ட் விஷயம் ரெண்டாவது தான்.நான் கூட நீங்க ஒரு வேலை நடு நிலையாக தான் சொல்றீங்களோ என்று ஒரு நிமிடம் தப்பாக நினைத்து விட்டேன்.உங்கள் ப்ளாகுக்கு ஒரு முறை சென்ற பின் தான் தெரிந்தது ,நீங்கள் விஜயை கலாய்த்து அதிக ஹிட்ஸ் பெரும் ஈன பிறவி என்று.உங்களை போன்றவர்களுக்கு தான் அந்த மேட்டர் எழுதினேன். ஹ ஹ நல்லா வயிறு எரியுங்க .சந்தோசம்.

   Delete
  2. ithula vayiru eriurathuku enna irukku :(

   By Ramesh

   Delete
  3. விஜயை கலாய்க்க என்ன இருக்கோ அதுவே தான் வயிறு எறியவும் இருக்கு.என்ன லாஜிக் இல்லையா .நீங்க மட்டும் லாஜிக் இல்லாம விஜயை ஓட்டலாம் நான் சொல் கூடாதா? ANTI-VIJAY GROUP ஓடிப்போங்க .இனிமே வராதீங்க.

   Delete
 2. சபாஷ் மக்கா நீங்க ஒரு விஜய் ரசிகன் என்பதை அழுத்தமாக நிரூபித்து விட்டீர்கள் , எங்க பாஸ் எங்களோட கருத்துரைகள் எல்லாம் , விமர்சனத்தை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் பயந்து ஓடுகிறீர்களே , அதுவும் விவரமாக நீங்கள் எழுதிய பதில்கள் எல்லாம் இருக்கிறது நாங்கள் போட்ட ரிப்ளைகளை காணவில்லை , நீங்கள் எல்லாம் மற்றவர்களை பார்த்து அந்த பிறவி இந்த பிறவி என்று சொல்லுகிறீர்கள் , உண்மையில் அந்த பிறவி யார் என்பதை உங்கள் செய்கையிலேயே உணர்த்திவிட்டீர்கள் , சரி ஒரு தீவிர விஜய் ரசிகனிடம் இதைதானே எதிர்பார்க்க முடியும் ... வழக்கம் போல இதையும் டெலீட் பண்ணிருங்க ...

  அப்பறம் விஜய் அவர்களை பற்றிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் , அந்த பதிவுகளை எழுதும்போதெல்லாம் உங்கள் மூளை பொங்கி மூக்கு வழியே வழியுமே அதை அடிக்கடி பார்த்து ரசிக்க ஆசைபடுகிறேன்

  ReplyDelete