Pages

Wednesday, 25 July 2012

இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை

 இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை :
சினிமாவில் ஐம்பதுகளில் தொடங்கியது  எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள் மோதல்.எம்.ஜி.ஆர்  நல்லவர்,ஊருக்கு கொடுப்பவர் ,தாயை காப்பவர் இப்படி பட்ட பாத்திரங்களில் நடித்தார்.படங்களில் அவர் புகை பிடிப்பதோ ,மது அருந்துவதோ போன்ற காட்சிகளில் கூட நடிக்க மாட்டார்.இறுதியில் வில்லனை கூட கொள்ள மாட்டார்.அவர் படங்கள் மொத்தம் அவரது பிம்பத்தை மக்கள் மனத்தில் உயர்வாக தூக்கி நிறுத்துவதாக அமைந்தன.சிவாஜி  வித்யாசமான ,நடிக்க வாய்ப்புள்ள ,இமேஜ் பற்றி கவலை படாத பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கினார்.அவர் படங்கள் அவரை போல் நடிக்க முடியுமா என்று மக்கள் நினைக்க வைக்கும் படங்களாகவே இருக்கும்.


இருவரது படங்கள் அந்த காலங்களில் வரும் போது ரசிகர்கள் அடித்து கொள்வதும் ,ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.ஆனாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சிவாஜி எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே மரியாதையோடு அழைத்துவந்தார்.எம்.ஜி.ஆறும் தன்னால் சிவாஜி அளவுக்கு நடிக்க முடியாது என்று பல முறை ஒப்புக்கொண்டுள்ளார்.சில படங்கள் தனக்கு செட் ஆகாது போனால் சிவாஜியை கை காட்டி விட்டதும்  உண்டு.

அவர்கள் காலத்திற்கு பின் ரஜினி -கமல் ,விஜய் -அஜீத் என்று இரண்டு செட் அப்படி வந்துவிட்டது.சில மாதங்களுக்கு முன் கர்ணன் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது தெரிந்தது.அதற்க்கு போட்டியாக அப்போதே சில இடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படம் போடப்பட்டது.ஆனாலும் கர்ணன் அளவுக்கு ரீச் இல்லை.கர்ணன் நூறு நாட்களை தொட்டுவிட்டது.இன்று ஒரு வேலையாக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் வளாகம் போனேன்.அங்கே எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் வெளியிட பட்டுள்ளது.அங்கே வைத்திருந்த பேனர்கள் மிரள வைத்தது.காரணம் எல்லா பேனரிலும் சிவாஜியையும் கர்ணன் படத்தையும் வசை பாடி போடப்பட்டுள்ளது.

அதில் எழுதப்பட்டு இருந்தவை :
அதாவது கர்ணன் படம் 1964 இல் ரிலீஸ் ஆகும் போதுஅதே நாளில்  எம்.ஜி.ஆரின்  வேட்டைக்காரன் படம் வந்தது.மிகுந்த பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்பில் வந்த கர்ணன் ஊத்திக்கொள்ள கருப்பு வெள்ளையில் வந்த வேட்டைக்காரன் ஹிட் ஆனதாம்.அதோடு எம்.ஜி.ஆர் நிஜ வாழ்கையிலேயே கர்ணனாக(வள்ளலாக ) வாழ்ந்தாராம்.நெகடிவ் கிடைக்காத கர்ணன்  படத்தை செலவு செய்து ஓட வைத்து பொய்யான ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்தவரை அவரை நெருங்க முடியாத சிவாஜி இப்போது அவர் படங்களை முந்தி விட்டதை போல் பொய்யான செய்தி பரப்புகிறார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களும் வெற்றியாம்.சிவாஜி நடித்த 250 படங்களுக்கு மேல் பெட்டியில் தூங்குகிறதாம்.இப்படி மேலும் பல அனல் கக்கும் வார்த்தைகளால் சிவாஜியை அர்ச்சனை செய்து குருவிகளுக்கு பருந்தின் பதில் என்று வேறு பஞ்ச்.

இன்று உள்ள விஜய் -அஜீத் மோதல் கூட blog,facebook,twitter இப்படி தான் உள்ளது.இப்படி பகிரங்கமாக படம் வெளியாகும் அரங்கில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவிற்கெல்லாம் இல்லை.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவருமே இப்போது இல்லை.

10 comments:

 1. சரியா சொன்னீங்க.....
  பதிவு நன்று. வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. // இன்று உள்ள விஜய் -அஜீத் மோதல் கூட blog,facebook,twitter இப்படி தான் உள்ளது.இப்படி பகிரங்கமாக படம் வெளியாகும் அரங்கில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவிற்கெல்லாம் இல்லை.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவருமே இப்போது இல்லை.//

  ஹா ஹா சின்ன வயசில் சண்டை போட்டுப்போம் ; அது நியாபகம் வருது

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமா ? ஆன நீங்க எம்.ஜி.ஆர் பக்கமா -சிவாஜி பக்கமான்னு சொல்லவே இல்லையே?

   Delete
 3. இன்னுமா இது ஓயல..எல்லா நடிகரையும் பிடிச்ச மாதிரி ஏத்து கிட்டா சண்டைகள் எதற்கு வீண் விவாதங்கள், போட்டிகள் எப்படி வரும்..இதுலா மாட்டி கிட்டது எம்ஜிஆரும், சிவாஜியும்-தான்..அவங்க ரெண்டு பேரும் சொர்க்கத்துல இருந்தால் இப்பயும் கட்டு பிடிச்சு நண்பர்களாதான் இருப்பாங்க.ரசிகர்கள் இதக்கூட தெரியாம அடிச்சிக்கிறத பார்த்து சிரிச்சாலும் சிரிப்பாங்க..

  சூப்பர் பதிவு விஜய் சார்..தொடருங்க..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமரன்.

   Delete
 4. என்ன கொடுமை சார்.. அப்போ அடிச்சுக்கிட்ட எம்.ஜி.ஆர்-சிவாஜி ரசிகர்களுக்குத்தான் இப்ப வயசாயிருக்குமே.. யாரு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு திரியுறது?

  ReplyDelete
 5. சம காமடிய இருக்கு பாஸ் இவனுங்க பண்றது............

  ReplyDelete
 6. அடடடா.. இது வேறயா..

  நண்பா கதை ஆரம்பம்.. நேரம் இருந்த வந்து பாருங்க.. சில மாற்றங்கள் செய்து இருக்கு..

  ReplyDelete
 7. நல்லாச் சொன்னீங்க... நன்றி.... (த.ம. 2)

  ReplyDelete