Pages

Friday, 20 July 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3 

ஹரர் படங்களின் முன்னோட்டத்தோடு 70s, 80s வந்த ஹரர் படங்கள் பற்றி சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம்.இனி 90 களில் அந்த படங்கள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.எண்பதுகளில்  வந்து வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொன்னூறுகளில் வரிசையாக வர தொடங்கின.மேலும் பல புதிய தளங்களிலும் மக்களை பயமுறுத்த படங்கள் வந்தன.

எண்பதுகளின் வந்த படங்களின் தொடர்ச்சியாக வந்த படங்களில் A NIGHTMARE AT ELM SREET ,CHILD'S PLAY,FRIADAY THE 13TH போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன்  வெளிவந்து சில பாகங்கள் வெற்றியும் பெற்றன .ஆனாலும் போக போக அந்த தொடர்ச்சியான படங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து வந்தது.அதற்க்கு காரணம் படத்தில் விஷயமில்லாமல் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்ட படங்கள். முதல் பாகங்களில் பெயர் பெற்றாகி விட்டது.இனி இந்த பெயருடன் இத்தனையாவது  பாகம் என்று போட்டுவிட்டால் அந்த பட ரசிகர்கள் வந்து படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள் என்று படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளுடன் வந்து ரசிக்கபடாமல் போய் விட்டன.

இந்தநிலையில் தான் SILENCE OF THE LAMBS என்ற படம் சத்தமில்லாமல் வந்து பரப்பாக ஓடியது.91 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் ஒரு SERIAL KILLER ஐ பற்றியது.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு சிறையில் உள்ள  நர மாமிசம் உண்ணும் ஒரு டாக்டர் உதவுகிறார்.இந்த படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.அதற்க்கு பின் குறிப்பிட வேண்டிய படம் என்றால் SCREAM .இந்த படம் SLASHER என்ற வகையை சார்ந்தது(படம் முழுவதும் கொலையாளி ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கொலைகள் செய்வது).படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் இளைஞர்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய அதே SLASHER வகையை கொண்டு மேலும் இரு படங்கள் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றது.அவை I KNOW WHAT YOU DID LAST SUMMER, URBAN LEGEND.இதில் I KNOW WTHAT YOU DID LAST SUMMER படம் நான்கு மாணவர்கள்.(இரு ஆண்,இரு பெண்) குடித்துவிட்டு பெரும் மகிழ்ச்சியுடன் காரில் வரும் போது மலை பாதையில் ஒருவனை இடித்து விடுகிறார்கள்.அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உடலை அப்புறபடுதும்போது அவன் விழித்துக்கொள்ள அவனை ஏரியில் முழ்கவிடுகிரார்கள்.பின் நால்வரும் இதை யாருக்கும் சொல்ல கூடாது என்றோ சத்தியம் செய்து பிரிகிறார்கள்.அடுத்த ஆண்டு அதே நாள் அவர்களில் ஒருவளுக்கு "I KNOW WTHAT YOU DID LAST SUMMER "என்று ஒரு கடிதம் வருகிறது. பின் அவள் கொள்ளபடுகிறாள்.மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்  என்பதே படம்.விமர்சர்களால் மோசமான படம் என்று விமர்சிக்கபட்டாலும் படம் நல்ல வசூல் பெற்று மேலும் இதே தீம் கொண்டு "I STILL KNOW WHAT YOU DID LAST SUMMER " மற்றும்" I ALWAYS KNOW WHAT YOU DID LAST SUMMER" என்று இரு படங்கள் வந்தன.

URBAN LEGEND படம் நம்ம ஊரில் விசில் என்று அப்படியே எடுத்திருப்பார்கள்.இதுவும் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டு வசூல் பெற்ற படம்.JACOBS LADDER படம் வித்தியாசமான களத்துடன் இறங்கியது.வியட்நாம் போரில் போரிட்ட ஒரு வீரன் ஓய்வு பெற்று வாழும்போது சில பயமுறுத்தும் உருவங்கள் மற்றும் மன ரீதியான மாற்றங்களை உணர்கிறான்.போரில் வீரர்கள் மேலும் வெறி கொண்டு தாக்க மறைமுகமாக மருந்துகள் செலுத்த பட்டதை படம் சொல்கிறது.

FROM DUSK TILL DAWN,NIGHT WATCH,WISHMASTER,RING(JAPANESE),AUDITION( ரொம்பவும் கொடூரம்  நிறைந்த படம்), போன்ற படங்கள்  தொன்னூறுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின் வந்த ஹர்ரர் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதன் முதல் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html

இரண்டாம் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html

2 comments:

  1. காசு குடுத்து பயப்படனுமா என நான் ஹாரர் படம் பாக்க மாட்டேன் :)

    ReplyDelete
  2. நல்ல ஹாரர் பட்டியல்..அனைத்துமே ஏற்கனவே அறிந்ததுதான் இருப்பினும் பல படங்கள் பார்க்காமல் தள்ளி போய்க்கொண்டே வருகிறது.
    உங்க அலசல் நன்று..நிறைய பேருக்கு நல்ல அறிமுகமாக இருக்கும்.நன்றி.

    ReplyDelete