Pages

Tuesday, 10 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 2 


ஹரரர் படங்களை பற்றிய முன்னோட்டத்தோடு 1970 களில் ஹரரர் படங்களை பற்றி பார்த்தோம்.இனி எண்பதுகளில் அப்படங்களின் வளர்ச்சி பற்றி பாப்போம். STEPHEN KING பற்றி சொன்னேன் இல்லையா? அவர் யோசிக்க முடியாத பல விஷயங்களில் திகில் கதைகளை எழுதி புகழ் பெற்றார்.  MISERY,THE DARK HALF,THE SHAWSHANK REDEMPTION,THINNER,THE GREEN MILE,SECRET WINDOW,1408,THE MIST போன்ற படங்கள் அவரது கதைகள் தான்.திகில் படங்களில் அவர் பங்களிப்பை தவிர்க்க முடியாது.1980 இல் வந்த THE SHINING படம் அவரது கதை தான்.ஹர்ரர் படங்களின் மாஸ்டர் பீஸ் என்று இன்றைக்கும் சொல்ல படும் படம் அது.ஒரு எழுத்தாளர் விடுமுறை சீசன் இல்லாத ஒரு நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு பாதுகப்பாளராக பொறுப்பேற்கிறார் .அங்கே தனிமையில் அவர் குடும்பம் சந்திக்கும் அனுபவங்களே படம்.இறுதி காட்சியில்  காட்டப்படும் HEDGE வடிவ தோட்டம் பிரம்மிக்க வைக்கும் (கீழே படத்தில் உள்ளது).


FRIDAY THE 13TH படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் .ஆற்றங்கரை ஓரம் உள்ள தனிமையான வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க வருகிறவர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஒருவனால் கொள்ளபடுகிறார்கள்.ஒவ்வொரு படத்திலும் இறுதியில் கொள்ளப்படும் அல்லது கொன்றுவிட்டதாக கருதப்படும் ஜேசன் அடுத்த படத்தில் உயிரோடு வந்து அதே வேலையை  செய்கிறான்.முதல் பகுதி படம் விமர்சகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டாலும் மக்களுக்கு அந்த திக் திக் வினாடிகள் பிடித்து விட்டது ,வசூலும்  அமோகம்.தொடர்ந்து இன்றுவரை அதை திருப்பி திருப்பி எடுத்து வருகிறார்கள்.என்ன மக்களுக்கு தான் ஆர்வம் போய் விட்டது.படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணம்.ஒரு திகில் படத்திற்கு ஏற்ற வியலின்  விளையாடி இருக்கும்.

NIGHTMARE ON ELM STREET படமும் அதே போல் அதிக பாகங்கள் வந்துள்ளது.கனவில் வந்து கொலை தொந்தரவு கொடுக்கும் ஒருவனின் கதைதான்.இதன் முதல் பாகத்தில் தான் நடிகர் ஜானி டெப் படங்களில் நடிக்க துவங்கி நடித்த முதல் முக்கிய பாத்திரம் ஆகும்.இவற்றை தவிர என்று பார்த்தால் இந்தியர்களுக்கு மிகவும் தெரிந்த EVIL DEAD.குறைந்த செலவில் எங்காவது ஒரு காட்டில் ஒரு ஐந்தாறு நடிகர்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் திகில் படங்களுக்கு முன்னோடி இந்த படம்.இது இந்தியர்கள் முதலில் அதிகம் பார்த்த திகில் படமாக இருக்கலாம்.VCR வந்த புதிதில் அதை வைத்திருந்த அனைவரும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்.

CHILD'S PLAY வை மறந்து விட்டேனே.மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் போலீஸ் துரத்தலில் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் தன் உயிரை ஒரு பொம்மையில் செலுத்தி கொள்கிறான்.அந்த பொம்மை செய்யும் கொலைகளே படம்.கதை குழந்தை தனமாக இருந்தாலும் அருமையாய் எடுத்திருப்பார்கள்.இதுவும் ஐந்து பாகங்கள் வரை வந்துள்ளது.

எண்பதுகளில் வந்த மற்ற திகில் படங்களில் குறிப்பிட்டு  சொல்லலாம் என்றால் THE BOOGEYMAN,MY BLODDY VALENTINE,CREEPSHOW,POLTERGEIST,THE THING,FRIGHT NIGHT,THE HITCHER,HELL RAISER,PREDATOR போன்ற படங்களை சொல்லலாம்.

அடுத்த பகுதியில் 90 களில் வந்த ஹர்ரர் படங்களை பற்றி பாப்போம்.
இதன் முதல் பகுதி லிங்க்  http://scenecreator.blogspot.com/2012/07/horror-1.html 


5 comments:

 1. nice collection.... please keep posting such films..

  ReplyDelete
 2. இன்னும் இரு பகுதிகள் உள்ளது. தொடர்ந்து படிக்கவும் .நன்றி

  ReplyDelete
 3. good post i am like it http://www.kollywoodthendral.in

  ReplyDelete
 4. collections அருமை நண்பரே
  என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததமைக்கு நன்றி.
  சமயம் கிடைத்தால் நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டுபோங்க.
  http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
  தங்களின்அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 5. ஹாரர் படங்களை ஒரு சேர இணைக்கிற தங்களது முயற்சி வரவேற்க்கதக்கது..தொடருங்கள்..இதில் பல படங்களை பார்த்தாச்சு சார்.

  ReplyDelete