Pages

Thursday, 9 August 2012

எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்


எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள் :

சில படங்கள் ஷூட்டிங் துவங்கும் முன்பே ஒரு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.அதற்க்கு காரணம் அந்த படத்தின் கூட்டணி.நமக்கு பிடித்த ஹீரோ நடிக்கும் படம் என்றால் இருக்கும் எதிர்பார்ப்பை விட அதே ஹீரோ ஒரு எதிர்பாராத டைரக்டர் உடன் கூட்டணி அமைத்தால் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.மேலும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் இப்படி ஒரு வேடத்தில்,இத்தனை வேடத்தில் ,இத்தனை கெட்அப் களில் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.ரஜினி படங்களுக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.மணிரத்னம் ,ஷங்கர் போன்றவர்களின் படங்களுக்கு யார் ஹீரோவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.அப்படி நாம் மிகவும் எதிர்பார்த்த  ஒரு படம் நம்மை முழுமையாய் திருப்தி செய்துள்ளதா என்பதே கேள்வி? அப்படி நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களை பற்றி பார்ப்போம்.இந்த படங்கள் நடிகர்களின் ரசிகர்களையும் தாண்டி சராசரி மக்களையும் எதிர்பார்க்க வைத்தவை.நாம் விழுந்து  அடித்து கொண்டு பார்த்தவை.

நவரத்தினம் : எம்.ஜி.ஆர். நடித்த படம் இது. சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்ததற்கு போட்டியாக இன்னும் சொல்ல போனால் உல்டாவாக ஒரே எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளோடு பல சந்தர்பங்களில் வருவார்.அதில் நிறைய பேர் அவரை விரும்புவார்கள்.அவர் ஒருவரை மட்டுமே விரும்புவார்.இதில் இன்னும் சிறப்பென்றால் நவராத்திரி படத்தை இயக்கிய எ.பி.நாகராஜன் தான் இந்த படத்தையும் இயக்கினார்.மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ஓடவில்லை.

கர்ணன்: இந்த படம் அப்போது பிளாப் என்று சொன்னால் இன்று பலர் நம்ப மறுக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் கலரில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.இப்போது பார்க்க நன்றாக உள்ள இந்த படம் வெளி வந்த பொது ரசிக்க படவில்லை.அதற்க்கு காரணமாய் அப்போது சொல்லப்பட்டது கதை சிறப்பாக சொல்லபடாமல் பிரம்மாண்டம் மட்டுமே தெரிந்ததால்.

பாபா : யாருமே இந்த படத்தின் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.காரணம் படையப்பா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.ரஜினி அறிமுகமாகும்போது விசிலடித்த ரசிகன் பின் என்ன நடக்கிறது ,ஓடுவது தலைவர் படம் தானா என்று சந்தேகம் வந்து விட்டது.ராம நாராயணன் படம் போல ஆகிவிட்டதே என்று என்னும்படி ஏழு மந்திரம் ,இமயமலை ,பாபாஜி என்று கொட்டாவி வரவைத்து விட்டது.

ஆளவந்தான்: எதிரபார்க்க வைத்து ரசிகனை ஒரு வித முழுமையில்லாமல் அனுப்புவது ராஜபார்வை காலம்தொட்டே கமலுக்கு பழக்கம் தான்.ஆனாலும் ஆளவந்தான் படத்தின் பிரம்மாண்டம்,கமல் மொட்டை தலையோடு ,உடம்பை ஏற்றி ஆங்கில படங்களுக்கு இணையான ஒப்பனையோடு  வெளிவந்த ஸ்டில்களும்,செய்திகளும் எங்கு பார்த்தாலும் ஆளவந்தான் பேச்சுதான்.அதுவும் பட ரிலீஸ் தள்ளி கொண்டே போனதில் இன்னும் ஆர்வம் கூடியது.ஏற்கனவே படம் அதிக செலவு இதில் கமல் டூப் போட்டு எடுத்த காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி செலவு என்று தாணு " ஆளவந்தான் அழிக்கவந்தான் " என்று குமுதத்தில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஊற்றி கொண்டது.இந்த படத்தோடு வந்த படங்கள் ஷாஜகான்,நந்தா,தவசி,மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள்.எதுவுமே பெரிதாக ஓடாதது ஒரு விஷயம்.(நந்தா சுமார்.)

தமிழன் :
விஜய் படங்களில் அப்போது பெரிய பட்ஜெட்டில் தயாரான படம்,உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிக்கும் முதல் படம் என்று செய்தி எதிர்பார்ப்பை ஏற்றியது.ஆனால் படம் சட்டம் ,நாயகன் முக ஸ்டாம்ப் என்று ஓவராக இருந்தது.பொதுவாக விஜய் படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமே எதிர்பார்க்க வைக்கும்.பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காது.காரணம் விஜய் எந்த பெரிய இயக்குனரோடும் அப்போதெல்லாம்  சேர மாட்டார்.

சிட்டிசன் : அஜித்துக்கு ஒரு மார்க்கெட் வந்த பின், வித்தியாசமான படங்களில் கெட்அப் மாற்றி நடிக்க தொடங்கினார். தினம் ஒரு செய்தி ,இது அஜித்தா என்று சந்தேகிக்கும் புகைப்படங்கள் என்று இந்த  படம் வெளிவரும் வரை எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லை.நிக் ஆர்ட்ஸ் என்பது கிட்டத்தட்ட அஜித்தின் சொந்த நிறுவனம் போன்றது.அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத போது ராசி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது .அஜீத் ஒரு நல்ல விஷயமாக தனக்கு மார்க்கெட் இல்லாத போது தன்னை வைத்து படம் எடுத்த நிறுவனங்களுக்கு மார்க்கெட் வந்தவுடன் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார்.அப்படி நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் இந்த சிடிசன் படத்தை எடுத்தபோது அஜீத் தன் சொந்த பணத்தை அதிகம் முதலீடு செய்தார்.ஆனால் படம் தோல்வி.கிட்டத்தட்ட இதேபோல் வந்த சாமுராய் படமும் தோல்விதான்.இந்த லிஸ்டில் அசல்,ஏகன்,பில்லா 2 அடக்கம்.காரணம் அந்த படங்களின் அதீத எதிர்பார்ப்பு.

கந்தசாமி : படத்தொடக்க அழைப்பித்தழுக்கே ஒரு அழைப்பித்தழுக்கு 15 ஆயிரம் செலவு(லேப்டாப் தான் அழைபிதழ்).விக்ரம் பெண்ணாக,90 வயது முதியவாராக என்று செய்திகள்.ஸ்பெயின் , பெரு என்று ஷூட்டிங் போன நாடுகளின் பட்டியல் .சேவல் கெட்டப் .எல்லாமே விழலுக்கு இரைத்த நீரானது.ராவணன் ,ராஜபாட்டை வரை இப்படி கிளப்பிவிடப்பட்டு தோல்வி அடைவது விக்ரம் படங்களின் வாடிக்கை ஆகிவிட்டது.அந்த அளவு எதிர்பார்ப்பில்லாமல் வந்த தெய்வதிருமகள் ஓரளவு ஓடியது.

பாய்ஸ்: ஷங்கர் படங்களில் மக்களுக்கு பிடிக்காத படம் என்றால் பாய்ஸ் தான் முதல் இடம். அதிக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ,இரட்டை அர்த்த வசனங்கள் ,எப்படி எப்படியோ செல்லும் திரைகதை என்று படத்தின் குறைகள் நிறைய.போதா குறைக்கு தினமலர் வேறு கற்பனையான செய்திகளை தினமும்( ரஜினி தன் மகள்களோடு இந்த படம் பார்க்க வந்ததாகவும் ,படம் மோசமாக இருந்ததால் அவர்களை பாதியிலேயே அவர் அனுப்பிவிட்டதாகவும் செய்தி) வெளியிட்டு முடிந்தவரை எதிர்தது.மகளிர் அமைப்புகளும் ,ஹிந்து அமைப்புகளும் வேறு சேர்ந்து கொண்டு எதிர்த்தன.இங்கே இத்தனை களோபரங்கள் நடந்தாலும் தெலுங்கில் படம் ஹிட்.

அவன் இவன் :  இப்படி பட்ட மோசமான ,ஒன்றுமே இல்லாத பாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.விஷாலின் நடிப்பு வீண் ஆனது.ஒரே விஷயங்கள் திரும்ப திரும்ப அவர் படங்களில் வந்து சலிப்படைய வைத்து விட்டது.

சர்வம் : அறிந்தும் அறியாமலும் , பட்டியல்,பில்லா மூன்று  ஹிட் படங்களுக்கு பின் விஷ்ணுவரதன் இயக்கம்,ஆர்யா,த்ரிஷா  ,யுவனின் ஹிட் அடித்த இசை என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.அதை சுத்தமாக பொய்யாகும் வகையில் இருந்தது படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்: அலைபாயுதே ஹிட்.அடுத்த படம் அப்போதைய ஹிட் ஹீரோ மாதவன்,சிம்ரன் ,எ.ஆர்.ரகுமான் என்று ஒரு செமையான அலைபாயுதே போல் ரொமாண்டிக் படம் எதிர்பார்த்து வந்த ரசிகனுக்கு முற்றிலும் மாறுபட்ட அவர்கள் கொஞ்சமும் யோசிக்காத தளம்.அதை தொடர்ந்து ஆயுத எழுத்து ,ராவணன் என்று தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.என்னதான் அவர் படத்தை பற்றிய விஷயங்களை ரகசியமாய் வைத்து இருந்தாலும் எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது.

இந்திரலோகத்தில் ந.அழகப்பன்: 23 ம் புலிகேசியின் வெற்றி இந்த படத்தை எதிர்பாக்க வைத்தது.எமலோகம் கதை விட்டதால் படம் பப்படம் ஆனது.

சக்கரகட்டி : எ.ஆர்.ரகுமான் என்பதுதான் இந்த படத்தின் முதல் விசிடிங் கார்டு.படமே 1.50 நிமிடம் தான் ,அதில் ஆறு பாடல்கள் அறை மணி நேரமென்றாலும் மிச்சம் இருக்கும் ஒரு மணி சொச்ச நேரத்தை உட்கார விடாமல் செய்த படம்.

3: இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பும் என்று படம் எடுக்க தொடங்கும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.காரணம் "கொல வெறி " .அதுவே படத்திற்கு மைனஸ் ஆகி ஓவர் எதிர்பார்ப்பு படத்தை காலி செய்துவிட்டது.

இது போல் வருடத்திற்கு ஒரு படமாவது நம்மை ஏமாற வைக்கும்.பொதுவாக  எமலோகம்,சினிமாவில் சினிமா ( வெள்ளித்திரை ,கோடம்பாக்கம் போன்ற படங்கள்) போன்ற கதைகள் தமிழில் எடுபடுவதில்லை.அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

10 comments:

 1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 2. நல்ல அலசல் + தொகுப்பு ... பாராட்டுக்கள் ...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

  ReplyDelete
 3. சூப்பராய் சொன்னிர்கள் அஜித்தின் பல படம் ஏமாற்றி உள்ளது...ஆளவந்தான் பாய்ஸ் எனக்கு பிடிக்கும்...

  ReplyDelete
 4. பாபா, ஆளவந்தான் மட்டுமே என்னை ஏமாற்றிய படங்கள்..

  ReplyDelete
 5. சூப்பர் மாமா கலக்கிட்ட வழமை போல.. கேப் விட்டு எழுதும் போதே புள்ளை ஏதும் வித்தியாசமா எழுதும்னு நினைச்சன்.. கலக்கிட்ட..
  எனக்கு இதிலே ஆளவந்தான், சிட்டிசன்,கன்னத்தில் முத்தமிட்டால் என்பன பிடிக்கும்.. சிட்டிசன் வெற்றி என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் கடந்த வாரம் போல இணையத்தை பார்த்த போது தான் தோல்வி என்று அறிந்தேன்..

  ReplyDelete
  Replies
  1. சிட்டிசன் அந்த அளவு மோசமான படமில்லை. இப்போது வரும் அஜீத் படங்களுக்கு( அசல் ,ஏகன்,ஆழ்வார் ,கிரீடம் ,பில்லா 2 ) அது பரவாயில்லை.

   Delete
 6. பல டப்பா படங்களுக்கிடையே கன்னத்தில் முத்தமிட்டாலை இணைத்திருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அது தோல்வி படமாக இருக்கலாம். ஆனால் நல்ல படம். மற்ற பல படங்கள் அப்படி நல்ல படம் என்று சொல்ல முடியாதவை. ( அப்படி பார்த்ததால் கர்ணனும் எடுக்க வேண்டும் இல்லையா? )

  ReplyDelete
  Replies
  1. கன்னத்தில் முத்தமிட்டால் நல்ல படம்தான் .ஆனால் ரசிகர்கள் வேறு எதிர்பார்த்து வந்தார்கள்.அதனால் வெற்றி பெறவில்லை.ஆனால் இன்றும் பலருக்கு அந்த படம் பிடிக்கிறது.

   Delete
 7. சர்வம், 3, கந்தசாமி போன்றவற்றை பார்த்துவிட்டு எரிச்சலின் உச்சத்துக்கு சென்றது தான் மிச்சம்.

  ReplyDelete