Pages

Tuesday, 11 March 2014

கொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்

கொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள் 
முத்து,படையப்பா,பாபா,சிவாஜி,எந்திரன் படங்களை தொடர்ந்து ரஜினி-ரகுமான் கூட்டணி.இந்த படத்தின் மேல் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை.ஆனால் பாடல்களை மட்டும் ரொம்பவும் எதிர்பார்த்தேன்.காரணம் ஏ.ஆர்.ரகுமான்.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பாடல்கள் என்று பார்ப்போம்.

எங்கே போகுதோ வானம்: சென்ற வருடமே வெளிவந்துவிட்டது.PICK OF THE ALBUM இந்த பாடல்தான்.ஆனால் வைரமுத்து ரஜினி உடல்நிலை சரியாகி வந்ததை எல்லாம் பாட்டில் ஏற்றி (படத்தின் கதைக்கு ஒரு வேலை பொருந்துமோ) ரஜினிக்கு வைரமுத்து எழுதினால் தான் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லவேண்டும் என்று விரும்பி எழுதியது இன்னொரு முறை வெளிப்பட்டுள்ளது.ஏற்கனவே "ஒரு துளி வியர்வைக்கு ",கட்சியெல்லாம் நமக்கு எதுக்கு என்னமோ திட்டம் இருக்கு ",கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மார்க்க மாட்டேன் ,தமிழ் மண் என்று ரஜினி ரசிகர்களை அரசியல் நோக்கி தூண்டும் விதமாக எழுதுவார் .இந்த பாடல் தடைகளை உடை -வானமே எல்லை என்று எழுச்சி சொல்லும் பாடல் .

எங்கள் கோச்சடையான் : ஈசன் ,சிவன் சரணம் என்று பாடலில்  சைவ வாடை .ரகுமான் இசை .இந்த பாடல் கேட்ட்கும்போது ஏனோ ரகுமான் பாய்ஸ் படத்தில் வரும் அய்யப்ப பாடலை இசை அமைக்க மறுத்ததாக கேள்விப்பட்ட விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

இதயம் : ஸ்ரீநிவாஸ்,சின்மயீ பாடியுள்ள பாடல்.ரொம்பவும் மெதுவாக இருக்கிறது.ஆனால் அருமை.ஜனங்கள் தியேட்டரில்  உட்கார மாட்டார்கள்.

கர்ம வீரன் : ரகுமான் தன சகோதரியுடன் பாடியுள்ள பாடல்.படத்தோடு பார்த்தால்  ஒருவேளை பிடிக்கலாம்.தத்துவ மழை பாடல் முழுதும்.

மாற்றம் ஒன்றே : ரஜினி குரல் கொடுத்துள்ள பாடல்.(பாடவில்லை வசன நடைதான்) .மன்னிப்பு சிறந்த பழிவாங்கல்,பணத்தால் சந்தோசத்தை வாடகைக்கு வாங்கலாம்,சினத்தை அடக்கு,எதிரியைவிட துரோகம் செய்யும் நண்பன் ஆபத்தானவன் என்று தத்துவ மழைதான் போங்கள் .கேட்க்க காமெடியாக இருக்கு .

மணமகனின் சத்தியம்: தூக்கம் வரும் பாடல் நம்பர் 1.ரஜினி படத்தில் இவ்வளோ மெதுவாக பாடலா? இந்த பாடல் படத்தில் வந்தால் மக்கள் கொட்டாவி விடுவது நிச்சயம்.

மன்னிப்பேன் சத்தியம்: போன பாடலின் பெண் Version .ரஜினின் மனைவி லதா அவர்கள் பாடியுள்ள பாடல்.ஏற்கனவே டிக் டிக் டிக்,ரஜினியின் சொந்த படமான வள்ளியிலும் பாடயுள்ளார்.அனால் அந்த பாடல்களில் இருந்து குரல் நிச்சயம் வேறுபடுகிறது.ஒரு வேலை ரகுமானின் டெக்நாலஜி வேலையோ .


மெதுவாகத்தான் :டூயட் பாடலில் கவனம் ஈர்க்கும் பாடல்.எஸ்.பி.பியின் குரல் தேன் .ஹிட் ஆவதற்கான அதனை அறிகுறிகள் உண்டு.

RANA'S DREAM: இது ஒரு instumental song.எந்த தடதட்ப்பும் இன்றி மெதுவாக கடந்து செல்கிறது.

மொத்தத்தில் எஸ்.பி.பி பாடியுள்ள 2 பாடல்கள் மட்டுமே ரஜினி படம் என்று தெரிகிறது.மற்றவை ரொம்பவும் மெதுவாக இருக்கிறது.பாட்டாக கேட்டல் பிடிக்கும் .பாட்டு கேட்க்காமல் படம் பார்க்கும் ரசிகர்கள் உட்கார முடியாமல் நெளிய போகிறார்கள்.மரியான் படத்திலும் 3 மெதுவான பாடல்களை (இன்னும் கொஞ்ச நேரம்,எங்க போன ராசா,,நேற்று அவள் இருந்தால் )தந்த ரகுமான் ,இந்த கோச்சடையான் படத்திலும் அதை தொடர்ந்து இருக்கிறார்.

எனக்கு கோச்சடையான்  படம் ஓடுமா என்று பெருத்த சந்தேகம் உள்ளது.இன்னொரு குசேலன் ஆக சாத்தியம் உள்ளதாக நினைக்கிறன்.பாப்போம்.

VERDICT--- VERY SLOW SONGS+ OVER தத்துவம்

7 comments:

 1. அப்போ சல்மான்கான் சொன்னது மாதிரி - ஏஆர் ரஹ்மான் ஒரு சராசரி இசையமைப்பாளர்தான் எனபது உண்மைதான் போல...
  இன்னனும் எனக்கு கொச்சாடையான் என்ற இந்த டுபாக்கூர் படம் வெளிவருமா எனபது சந்தேகமாகத்தான் உள்ளது..அப்படியே வெளி வந்தாலும் கால் மணி நேரத்தில் படம் சுருண்டு கொள்ளும் என்று நினைக்கிறேன்...டிரைலேரை பார்த்தால் சகிக்கவில்லை...இருக்கும் கொஞ்சூண்டு விசிலடிச்சான் குஞ்சுகள் டாஸ்மாக் கடைகளில் இருந்து நேரடியாக வந்து பார்த்துவிட்டு புலன்காகிதமடையலாம்...விபச்சார பத்திரிகை நாய்கள் கிடைக்கும் பிச்சை குவட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்துக்கும் விசுவாசமாக ஆகா ஓஹோ என்று ஒத்து ஊதலாம்..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ரகுமான் சராசரியான இசை அமைப்பாளர் இல்லை.இன்ற இந்திய அளவில் முதன்மையானவர் அவர் தான்.படம் எப்படி இருந்தாலும் பாட்டு சூப்பர் என்று சொல்லும்படியே இவர் இசை அமைக்கும் படங்கள் இருக்கும்.இந்த கொச்சடையான் பாடல்கள் கூட நன்றாகத்தான் இருக்கு .பாடல்கள் ரொம்ப மெதுவாக இருக்கு ரஜினிக்கு செட் ஆகுமா என்பதே என் கேள்வி.மற்றபடி கோச்சடையான் படம் மீது எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.பார்க்கலாம்.

   Delete
 2. ipditha veeram stills paathu siripa eruku'nu sona kadaisila ena aachunu unakey theriyum, ipa kochadayana paathu siripu varuthu thookam varuthunu solara, unakela yosikara sensey ilaya.....release aana orey naala music hit ilanu sola varaye unayela evanda mathika pora ok.....polambaratha polambu

  ReplyDelete
  Replies
  1. பாடல்கள் நன்றாக இல்லை என்றா ஒரே அடியாக சொன்னேன்?ரஜினியை மறந்துவிட்டு கேட்டால் அருமையான பாடல்கள்தான்.ரஜினி பாட்டுன்னு சொல்லும்படி இருப்பது 2 பாட்டுதான்.பாடல்கள் மெதுவாக இருக்கு ரஜினிக்கு செட் ஆகுமா என்பதே இந்த பதிவின் மூலம்.ரமேஷ் நீங்கள் பாடல்களை கேட்டீர்களா? இல்லை ரஜினி பட பாட்டை எப்படி விமர்சனம் செய்யல்லாம் என்று வந்துவிடீர்களா? .அட போங்க வீரம் படத்தை டிவியில் ஓடவிட்டு நானும் என் நண்பர்களும் அஜித்-தமன்னா ஜோடியையும் ,அஜீத் காலை தூக்கி சண்டை போடுவது,நடனம் ஆடுவது போன்றவற்றை பார்த்து சிரித்து சிரித்து வயறு வலிதான் .செம ஜாலி.எனக்கு இப்போதும் தங்கமே தங்கமே பாட்டை டிவியில் பார்த்தல் அடக்கமுடியாத சிரிப்பு.பட்டன் தெறிக்கும் அளவுக்கு தொப்பையை அடக்கி டிரஸ் போட்டுகொண்டு நடக்கவே முடியாமல் இருக்கும் அஜித்தை நடனம் எல்லாம் ஆடவிட்டு சியரமபடுதி இருக்கிறார்கள்.வயசான காலத்தில் அவருக்கு எதுக்கு இதெல்லாம்.என்ன படித்தவுடன் கோபம் வருதா.அதான் வேணும்.
   --

   Delete
  2. kobam enaku varala... enakuma athey feel tha erunthchu only when they come together...atha na othukara...but overall film hit so athu pathi enaku care ila... atha vidunga but songs elamey nalla erukumbothu thoongiruvanga poiruvanganu yepdi solreenga elamey visual'lla puthusa theriyumbothu...pakaravangaluku athu kandipa pudikum...FYI epavumey ar'oda music udaney reach aagathu ana elamey slow and super hit aagum... athukulla vanthu ipdi solarathu tha enaku seriya padala oru padam hita flop ah nu paathu tha mudivu pananumey thavara athu oru animationgara oru reason'kaga negative sola koodathu....anyway neenga decenta pesuveengau yethirpaakala...nanum apdi da'nu soli pesi eruka koodathu sry...

   Delete
  3. rajinuku intha padam set aagumaney theriyala athukulla music pathi nama yehuku kavala padanum...overall album supera eruku ithu enoda karuthu..sry enaku tamil'la yepdi type panrathu theriyala itha first time comment panrathu....

   Delete
  4. கோச்சடையான் படம் மீது எனக்கும் நம்பிக்கை இல்லை பார்க்கலாம்.

   Delete