Pages

Thursday, 21 November 2013

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி?

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி? ஒரு வாரத்திற்கு ஒரு புதிய படத்தின் பாடல்கள் வெளிவரும் காலம் இது.சில பாடல்கள் கேட்க்க கேட்க்க பிடிக்க தொடங்குவதற்குள் மேலும் சில படங்களின் பாடல்கள் வந்துவிடுகின்றது.இவற்றில் நான் ஓரளவு அடிக்கடி கேட்ட,கேட்டுவரும் 2 புதிய படங்களின் பாடல்களை பற்றி ஒரு அறிமுகம்.

பிரியாணி மற்றும் என்றென்றும் புன்னகை என வெளிவர காத்திருக்கும் 2 படங்கள் தான் அவை.

பிரியாணி: யுவனின் 100வது படம்.கார்த்தி நடித்துள்ள இந்த படம் அழகுராஜா படத்திற்கு முன்பே ரெடி என்ற போதிலும் அதை வெளியிடாமல் கிறிஸ்துமஸ் தினத்தில் வரும் என்று கேள்வி.8 பாடல்கள் உள்ளது  இந்த ஆல்பத்தில் .

1.பிரியாணி : புதுசாய் எதோ முயற்சித்து இருக்கிறார்கள் போல இருக்கிறது.ஆங்கில பாடல் போல தொடங்கி தமிழ் வரிகள் வழியும் பாடல்.

2.நா நானா : இந்த ஆல்பத்தின் ஹிட் நம்பர் என்றால் இந்த பாடல் தான்.மறைந்த வாலி எழுதிய இந்த பாடல் முழுதும் பே வாட்ச் பெண்கள் ,GIRLS,PATRY என்று அடிக்கிறது .இதுவரை வசனங்களில் கெட்ட  வார்த்தை வந்து பீப் சத்தம் கேட்டு இருப்போம்.இந்த படத்தில் இந்த பாடலில் எதோ ஒரு வார்த்தைக்கு இவர்களே பீப் கொடுத்திருக்கிறார்கள்.

3.போம் போம்: அமைதியான பாடல் .ஆர்பாட்டம் இல்லாத இசை.இரவில் கேட்ட்க ஏற்ற யுவன் ஸ்டைல் பாடல்.

4.மிசிஸிபி : மூட் சாங் என்று சொல்லப்படும் சல்லாப பாடல்.உதாரணமாய் அடிக்குது குளிரு (மன்னன் படத்தில்),நிலா காயுது (சகலகலா வல்லவன்) பாடல்களை போல நடுவில் பெண்ணின் சிணுங்கள் எல்லாம் உண்டு.கார்த்தியே பாடி இருப்பது சிறப்பு.நடுவில் பிரேம்ஜி வேறு எனக்கு எனக்கு என்று அலைகிறார்.

5.RUN FOR YOUR LIFE: தற்போதைய ட்ரெண்டு படி கானா பாலா பாடியுள்ள பாடல்.இறுதியில் மங்காத்தா சவுண்ட் எல்லாம் வருது .

6.எதிர்த்து நில்: சரோஜா படத்தில் நிமிர்ந்து நில் பாடலை ஞாபக படுத்தும் பாடல். விஜய் ஆண்டனி ,இமான் ,ஜி.வி.பிரகாஷ் ,தமன் என்று தற்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.மற்றபடி படத்தோடு பார்த்தால் ஒரு வேலை பிடிக்கலாம்.

மேலும் நா நானா பாடல் மேலும் இரு வகையாய் வருகிறது.யுவனின் மற்றுமொரு ஆல்பம் என்று பார்த்தால் ஓகே.ஆனால் 100வது படம் ,வெங்கட் பிரபு கூட்டணியில் என்று பார்த்தால்  பெரிதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.படம் கூட எனக்கு சந்தேகமாய் தான் உள்ளது.கோவா படம் போல மொக்கை போட போகிறார்கள் என்று சந்தேகமாய் உள்ளது.என்றென்றும் புன்னகை: தற்போதைய இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 (பொறுமை -- இசை அமைத்த படங்களின் ஹிட் சதவிகிதம் ) ஹாரிஸ் ஜெயராஜ் தான் .இது பற்றிய என் விரிவான பதிவு
http://scenecreator.blogspot.in/2013/01/1.html

வாமணன் என்ற மொக்கை படத்தை தந்த அஹ்மத் இயக்கி உள்ளார்.ஜீவா,த்ரிஷா கிழவி,வினய் ,வாசம் இழந்து வரும் சந்தானம் நடித்துள்ள படம்.இளமையான படம் என்று ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது.சரி பாடல்கள் எப்படி என்று பார்க்கலாம்.

1.ஏலே ஏலே தோஸ்து :  எதோ பைக் விளம்பரத்துக்கு போட்ட பாட்டு மாதிரி இருக்கு.அவ்வளதான்.

2.என்னை சாய்தாலே : ரொம்ப நாட்களுக்கு பின் ஹரிஹரன்.கேட்கும்படி இருக்கு .

3.கடல் தான் நான் : இந்த அல்பத்தின் ஹிட் .FM ,டிவி களில் இனி தினமும் பாடப்படும் சாத்தியம் உள்ளது.

4.வான் எங்கும் மின்ன: ஹாரிஸ் ஸ்டைல் பாடல்.அதே "டுக்- டாக்- த- டுக் " இசை கோர்வை .அதே போல ஹிட்டும் ஆகிவிடும்.

5.ஒத்தையிலே உலகம்: மெதுவாய் பாடினால் சோக பாடல் என்று யாரோ ஹாரிசுக்கு தப்பாக சொல்லி இருக்காங்க போல .அவர் போடும் சோக பாடல் என்றாலே மெதுவாக இருக்கும்.

6.என்னத்தை சொல்ல - வாரணம் ஆயிரம் அஞ்சலை வகை பாடல் .சொல்ல ஒன்றும் இல்லை.

யார் என்ன சொன்னாலும் நான் இப்படி தான் இசை அமைப்பேன்.எனக்கு ஒரு 10 TUNE  தான் தெரியும் அந்த 10 அப்படி இப்படி மாற்றி போட்டு 10 வருஷம் ஓட்டிட்டேன்.வண்டி ஓடுற  வரை ஓடட்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் நினைக்கிறார் போல .

5 comments:

 1. //தற்போதைய இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 (பொறுமை -- இசை அமைத்த படங்களின் ஹிட் சதவிகிதம் ) ஹாரிஸ் ஜெயராஜ் தான்//

  அடியாத்தி என்னாத்த சொல்லறது.. பயந்து வருது.. :P

  ReplyDelete
  Replies
  1. சண்டியரே எனக்கு ஹாரிஸ் பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம்.பொறுமையாக என் பதிவு லிங்கை படிக்கவும்.இன்றைய முன்னணி இசை அமைப்பாளர்களில் அதாவது ரகுமான்,யுவன்,ஹாரிஸ்,ஜி,வி இவர்களில் இசை அமைத்த படங்களும் அந்த படங்களின் ஹிட் சதவிகிதமும் பார்த்தால் ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.அதனால் தான் சொன்னேன். ரகுமான் நம்பர் 1 என்றால் அவர் இசை அமைத்த எதனை படங்கள் இந்த 10 ஆண்டுகளில் ஹிட்.? ஒரு சின்ன கணக்கு பாருங்கள்.

   Delete
  2. அந்த இசைப் பதிவை முழுசா படிச்சுட்டு தான் அந்த கமெண்டே போட்டேன் பாஸ்..!! ஹிட் ஆச்சுனு எத வச்சி சொல்றீங்கனு தெரில.. ஹாரிஸ் போட்ட எத்தனை பாட்ட இப்போ நீங்க மறுபடியும் கேக்குறீங்க.. ஹிட் சதவீதத்தை வைத்து பார்த்தால் இப்போதைக்கு அனிருத் தான் நம்பர் ஒன்..!! போட்ட அத்தனை பாட்டும் ஹிட்டு..

   அப்றம் என்னா சொன்னீங்க.. சண்டியரேவா.. நல்லாருக்கே.. :) :)

   Delete
 2. பாட்டு ஹிட் பற்றியோ எனக்கு பிடிப்பதை பற்றியோ இல்லை நண்பா,பட ஹிட் கணக்கை வைத்தே சொன்னேன்.ரகுமான் இதுவரை 75 படம் இசை அமைத்தார் என்று வைத்துகொள்வோம் அதில் படம் ஹிட் எத்தனை .மரியான் பாடல்கள் ஹிட் தான் படம்? அப்படி ரகுமான் பட லிஸ்டை பார்த்து எத்தனை ஹிட் என்று பாருங்கள்.அப்படியே ஹாரிஸ் லிஸ்டும் பாருங்கள்.மீண்டும் எனக்கு பதில் சொல்லுங்கள்.இப்பவும் சொல்றேன் ஹாரிஸ் எனக்கு பிடிக்காத இசை அமைப்பாளர்.அனிருத் இசை அமைத்து எந்த படம் ஹிட்? 3,எதிர் நீச்சல்,வணக்கம் சென்னை.அதில் எதிர் நீச்சல் படம் மட்டுமே ஹிட்.அப்புறம் எப்படி அவர் நம்பர் 1?

  ReplyDelete
  Replies
  1. படம் ஹிட் ஆகறதுக்கு பல காரணிகள் இருக்கே நண்பா.. அதுக்கு இசையமைப்பாளர் மட்டுமே காரணமில்லையே. பல ஹிட் ஆன படங்கள்ல மோசமான இசையும் இருந்திருக்கே. சரி வுடுங்கோ.. ரகுமான் படங்கள் பல தோல்வி அடைந்தது உண்மைதான். அதற்கு அவர் என்ன பண்ண முடியும். அனிருத் 3 படங்களும் பாடல்கள் ஹிட். அதைவச்சி தான் நம்பர் ஒன்னுனு சொன்னேன். உங்க கணக்குபடி பாத்தா இல்லைதான்.

   அண்ணே, பூவ பூனும் சொல்லலாம். புய்ப்பம்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் :P :D

   Delete