Pages

Monday, 17 September 2012

சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம்


சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம் 


அது என்ன ராசியோ தெரியவில்லை இதுவரை வந்த சசிகுமார் படங்களை திரை அரங்குக்கு மட்டுமே சென்று பார்த்துள்ளேன்.அதுவும் எப்படியோ பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது.சில படங்களை நிச்சயம் தியட்டருக்கு போகலாம் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம்  அமையாது ((உதா: நான் படம்).இந்த படம் பார்க்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லாமல் இருந்தது.காரணம் டி.வியில் போட்ட ட்ரைலர்கள் சசிகுமார் முந்தய படங்களை ஞாபக படுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தேன்.இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்று கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பின் கமலா தியேட்டர்.(முன்பு வேட்டை சின்ன ஸ்க்ரீனில் பார்த்தேன்.)அரங்கம் நிறைந்து இருந்தது.குறிப்பாக அதிகம் பெண்கள் .

நிச்சயம் சசிகுமார் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்து  விட்டார் என்று சொல்லலாம்.இத்தனைக்கும் இந்த படம் அவர் நடிக்கும் நான்காவது படம்.போன படம் போராளியே நன்றாக தான் இருந்தது.ஆனால் எதோ ஒன்று குறைந்ததால் சரியாக ஓடவில்லை.அந்த குறையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம்.ஆனால் சிலர் எழுதியது போல் நாடோடிகளை இந்த படம் தூக்கி  சாப்பிட்டுவிடும் என்று சொல்ல முடியாது.

கதை என்றால் அதே சசிகுமார் பிராண்ட் காதல் ,நட்பு ,துரோகம் தான்.நம்ம டி.ஆர் எண்பதுகளில் தங்கை செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுதது போல் சசிகுமார் நட்பு செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுகிறார்.டி.ஆர் காலத்தில் சினிமாவை வாழவைத்தது பெண்கள் கூட்டம் அதனால் தங்கை  செண்டிமெண்ட்.இப்போது சினிமாவை வாழவைத்து வருவது இளைஞர்கள் ,அதனால் நட்பு செண்டிமெண்ட்.கூடவே "நட்புன்ன என்று ஆரம்பித்து சில பன்ச் டயலாக்.இறுதியில் ஒரு சின்ன திருப்பம்.அவ்வளவுதான் படம்.

சசிகுமார் நடிப்பை குறை சொல்ல முடியாது.ஹீரோயிசம் என்று சேர்த்து உள்ளதை தான் கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை.நாயகி சிரித்தால் அழகாக இருக்கிறார்.படத்தை கொண்டு செல்வது பரோட்டா சூரி தான்.மனுஷனுக்கு இந்த படம் நிச்சயம் திருப்புமுனை.செம டைமிங் .இனி முன்னணி நகைச்சுவை நடிகராக வந்து விடுவார்.அந்த அளவு அசத்தியுள்ளார்.அரங்கில் கைதட்டல் அதிகம் இவருக்குதான்.சசியும் பல காட்சிகள் இவர் பேசட்டும் என்று அடக்கி வாசித்துள்ளார்.என்ன சூரி  பேசி கொண்டே இருக்கிறார்.அடுத்து சில சின்ன படகதாநாயகர்கள் (அப்புக்குட்டி ,விஜய சேதுபதி ,இனிகோ ) முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.ஓடாத படங்களில் நாயகனாக நடிப்பதை விட ஓடும் இந்த படத்தில் நடிக்க இவர்கள் எடுத்த முடிவு பாராட்ட வேண்டியது.

படத்தின் பெரிய மைனஸ் இசை.சசி படங்களில் ஒரு பாடலாவது ஹிட் ஆகும் ,இதில் ஏமாற்றி விட்டாகள்.ஏன்  கவனிக்காமல் விட்டார்கள்.இனி டி.வியில் போட்டு பாடலை ஹிட் ஆக்கினால்தான் உண்டு.இயக்கியவர் சசிகுமாரின் உதவியாளர் பிரபாகரன்.சசி என்ன கதை சொன்னால் ஓகே சொல்வார் என்று அறிந்து அதை எப்படி கொடுத்தால் ரசிக்க வைக்கலாம் என்று அறிந்து படம் எடுத்துள்ளார்.சில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் படம் ஹிட் ஆகிவிடும்.

4 comments:

 1. படம் பார்க்க வேண்டும் நண்பரே... சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி...

  இளைய டி.ஆர் .சசிகுமார் - நல்லாத் தான் இருக்கு...!

  ReplyDelete
 2. படத்தை கொண்டு செல்வது பரோட்டா சூரி தான்.

  சுருக்கமான விமர்சனம். நண்பரே உண்மையில் டி.ஆரை சசிக்குமாருக்கு நீங்கள் ஓப்பிட்டது என்னை பிரமிக்க வைக்கிறது. ஏனெனில் இவ்வளவு ஆழம் நான் போகவில்லை. இருப்பினும் மயிலன் அவர்கள் எழுதிய விமர்சனத்தில் இப்படி ஒரு கருத்துரை எழுதினேன். அருமை

  ReplyDelete
 3. தல,
  சசிகுமாரை டி.யார் கூட கம்பேர் பண்ணி நீங்க சொன்னா உதாரணம் செம..யாரும் இந்த மாதிரி யோசிக்கவே இல்லை.. :)
  நீங்க சொல்லுறது சரி தான்.... சசி நட்பு, துரோகம், ரெண்டுலையும் விழுந்து மடிஞ்சு போயிருவர் போல தான்....

  ReplyDelete
 4. விமர்சனம் ஓகே.. பாடல்களில் கொண்டாடு மனசு முதல் கேட்ட போதே பிடித்தது.. இலங்கை F M களில் அடிக்கடி போடறாங்க.. நேற்று தான் தெரியும் அது இந்த படம்னு.. இந்த பாட்டு ஹிட் ஆகிடுனு தான் நினைக்கிறேன்

  ReplyDelete