Pages

Tuesday, 25 September 2012

T20 SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பை  SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பையில் ஒரு வழியாக லீக் போட்டிகள் முடிந்து விட்டன.எல்லா முன்னணி அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறி விட்டன.எந்த ஒரு அதிர்ச்சியும் தராமல் சிறிய அணிகளான பங்களாதேஷ் ,அயர்லேன்ட் ,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே அணிகள் போட்டியில்  இருந்து வெளியேறி விட்டன.உலக கோப்பைகளில் சிறிய அணிகள் திடீரென பெரிய அணி ஒன்றை வென்று அதிர்ச்சி தருவது அவ்வபோது நடந்து வரும் ஒன்று.இந்த உலக கோப்பையில் அது மிஸ்ஸிங் .இனி சூப்பர் எட்டுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் லீக் போட்டியில் ஆடியது பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்.

பாகிஸ்தான் : இப்போதைக்கு கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணியாக நான் நினைப்பது இந்த அணியைதான்.காரணம் எப்படியோ உலக கோப்பை போட்டிகளில் நன்றாக விளையாடி விடுகிறார்கள்.மற்ற அணிகள் ஆண்டுக்கு ஒரு மூன்று ஆல்லது நான்கு சர்வதேச T20 போட்டிகள் ஆடி உள்ளார்கள் என்றால் பாகிஸ்தான் ஆண்டுக்கு பத்திற்கு மேல் ஆடி இருப்பார்கள்.காரணம் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் நாட்டிற்கு எந்த அணியும் சுற்று பயணம் செய்வதில்லை.அதனால் அவர்கள் தங்கள் சார்பு போட்டிகளை துபையில் நடத்தி வருகிறார்கள்.எந்த அணி சுற்று பயணம் என்றாலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தாமல் வெறும் ஒரு நாள் ,T20 போட்டிகள் மட்டுமே நடத்த பட்டு அவர்கள் பெரும் அனுபவம் பெற்று விட்டார்கள்.அணியின் பலம் பேட்டிங் -30% பவுலிங் -70% என்று உள்ளது.சயித் அஜ்மல் எப்படியும் மூன்று நான்கு விக்கெட் எடுத்து விடுகிறார்.ரன்னும் அதிகம் கொடுபதில்லை.பேட்டிங் யாரவது ஓரளவு கை கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியா: வாய்ப்பு இல்லை என்று நினைகிறேன்.சூப்பர் எட்டில் தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது .பந்து வீச்சு நம்ப முடியவில்லை.ஒரு போட்டியில் நன்றாக வீசுபவரை நம்பினால் அவர் அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்.ஒரே பலம் பாட்டிங்.அப்படியே பாகிஸ்தான் அணிக்கு தலை கீழாக பாட்டிங் -70% பவுலிங் -30% பலம் உள்ளது.நாம் எவ்வளவு ரன் அடித்தாலும் அடுத்து ஆடும் அணி எளிதில் துரத்தி விடும் நிலைதான் உள்ளது.இதை எல்லாம் மீறி என்  கணிப்பு பொய்த்து இந்தியா வென்றால் மகிழ்ச்சி தான்.

ஆஸ்திரேலியா ; வாட்சன் எனும் ஒருவரை  பெரிதும் சார்ந்துள்ளது ஆஸ்திரேலியா.ஹஸ்ஸி ,வார்னர் போன்றோரை கொஞ்சம் நம்பலாம்.பந்து வீச்சுதான் சுத்தமாக எடுபடவில்லை.அங்கும் கை கொடுப்பது வாட்சன் தான்.பெரிய ஸ்பின்னர் இல்லாதது இழப்பு.

தென் ஆப்ரிக்கா : இனி தான் அவர்களுக்கு கண்டம் .எப்போதும் அவர்கள் கோட்டை விடுவது இங்கே தான்.ஜிம்பாப்வே அணியை பந்தாடிய இவர்கள் அடுத்த போட்டியில் இலங்கையுடன் மழையினால் குறைக்கபட்ட ஏழு ஓவர் ஆட்டத்தில் முதலில் ஆடி 78 ரன்கள் அடித்தனர்.சரி இலங்கை எளிதில் இதை அடித்து விடுவார்கள் என்று நினைத்தால் மிகவும் அற்புதமாக பந்து வீசி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டனர்.அவர்கள் பலம் சரியாக 50-50%  உள்ளதாக நினைகிறேன்.

இங்கிலாந்த் : இவர்களும் சூப்பர் எட்டோடு கிளம்ப வேண்டி இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.ஏமாந்த ஆப்கானிஸ்தான் அணியிடம் செம அடி அடித்த இவர்கள் இந்தியா அணியோடு மிக குறைந்த ரன்னில் சுருட்ட பட்டார்கள்.அவர்கள் பலம் வேக பந்து வீச்சு இலங்கையில் கை கொடுக்காது.இவர்கள் செய்த மெகா தவறு பீட்டர்சன் நீக்கம்.அவரை கமெண்ட்ரி சொல்ல டி.வியில் பார்க்கும் போது கோபம் வருகிறது.அற்புதமாக பேட் செய்ய கூடிய அதுவும் இந்தியா ,இலங்கை போன்ற களங்களில் ஆடி அனுபவம் பெற்ற அவரது நீக்கம் நிச்சயம் யோசிக்க வைக்கும்.சரி இங்கே நன்றாக ஆடும் இயன் பெல்லும் நீக்கம்.என்ன சொல்வது ? 

இலங்கை : இனி அவர்கள் தங்களை வெளி காட்டுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.தில்ஷன் சரியாக ஆடாதது குறை.அடுத்துவரும் போட்டிகளில் மலிங்கா எடுபடலாம்.மென்டிஸ் என்ற மர்மம் வேறு உள்ளது .எப்போதும் ஆஸ்திரேலியா ,தென் ஆப்ரிக்க போன்ற அணிகளோடு தடுமாறுவார்கள்.பாட்டிங் எடுபட்டால் முன்னேறலாம்.

நியூசிலாந்து : இவர்களும் கிளம்ப வேண்டி இருக்கலாம்.மெக்கலம் அவுட் ஆகி விட்டால் அடிக்க ஆள் இல்லை.பந்து வீச்சும் சொல்லும் படி இல்லை.ஏதாவது அதிசியம் நடந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

மேற்கு இந்தியதீவு: ஒரே பாயிண்ட் கெயில் அடித்தால் வெற்றி.இல்லாவிட்டால் கிளம்பலாம்.அது தான் நிலை.

மற்றபடி சிறிய அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்து சுவாரஸ்யத்தை கெடுக்காமல் இருந்தது ஒரு விஷயம்.பெரிய கேள்வி இந்த செப்டம்பர் ,அக்டோபர்  மாதங்களில் இந்தியா ,இலங்கை போன்ற இடங்களில் மழை வரும் என்பது தெரிந்தே ஏன் அங்கே போட்டிகளை நடத்த ஒப்பு கொண்டார்கள்? சென்ற இரண்டு T20 உலக கோப்பைகள் முறையே 2009 இல் இங்கிலாந்தில் ,2010 இல் மேற்கு இந்தியா தீவுகளில் நடந்தது.அதுவும் ஐ.பி.எல் முடிந்ததும் ஜூன் ,ஜூலை மாதங்களில் .அதே போல் இந்த முறையும் அட்டவணை தயாரிக்காமல் விட்டு விட்டு இப்போது மழை வந்து கெடுத்து விடுகிறது.இனி எத்தனை போட்டிகளில் மழையால் பாதிக்க போகிறதோ தெரியவில்லை.

1 comment:

 1. This is what I have shared in my blog:


  சூப்பர் 8 -ல் இந்தியா இருக்கும் க்ரூப் செம கஷ்டமான அணிகள் ! மறு க்ரூப் ஓரளவு ஈசியான அணிகள் !

  குருப் 1: இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள்

  குருப் 2: இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் (இன்று பங்களாதேஷ் மேட்ச் மட்டும் பாக்-குக்கு பாக்கி)

  ஒரு அணி தன் க்ரூப்பிலிருக்கும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை ஆடவேண்டும். ஒவ்வொரு க்ரூப்பிலும் இரு அணிகள் செமி பைனல் செல்லும்.

  செமி பைனல் செல்ல இந்தியா தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். அல்லது கடந்த இரு முறை போல சூப்பர் 8-உடன் திரும்ப வேண்டியிருக்கும் !

  ReplyDelete