Pages

Saturday, 2 February 2013

கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன்


கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன் நேற்று முதல் கடல் படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கி உள்ளன.பல விமர்சனங்கள் படத்தை கழுவி கழுவி ஊத்தி இருக்கிறார்கள் .இன்னும் சிலர் மணிரத்னத்தின் ரசிகர்கள் போலும் .படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றும் யாருக்கும் வலிக்காமல் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள்.

மணிரத்னம் எப்பவோ FIELD OUT ஆனவர் .அவர் படம் கடைசியாக ஹிட் ஆனது எது என்று ஞாபகம் இருக்கா ?

இதற்க்கு முன் வந்ததில் ராவணன் ,குரு ,ஆயுத எழுத்து ,கன்னத்தில் முத்தமிட்டால்  ஆகியவை தோல்வி .நடுவில் அலைபாயுதே தப்பித்து .அதற்கும் முன் உயிரே ,இருவர் படங்கள் காலி. ,நடுவில் பாம்பே ஹிட் ,அதற்கும் முன் திருடா திருடா என்று குப்பை .

ஆக ரோஜா -- கடல் 11 படங்கள் .அதில் ரோஜா ,பாம்பே ,அலைபாயுதே இந்த 3 மட்டும் தான் ஹிட்.

என்னதான் எனக்கு அவரின் மேகிங் பிடிக்கும் .இளமையாக படம் எடுப்பார் என்று அவர் ரசிகர்கள் தன்னை தானே ஏமாற்றி கொண்டாலும் அவருக்கு இது அந்திம காலம்.அவர் பாலச்சந்தர் ,பாரதிராஜா ,பாக்யராஜ் போல பழம் பெருமை பேசி காலம் ஓட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது .எனக்கு அவரை பிடித்தது .தளபதிக்கு முன் அவர் படங்கள் நாயகன்,மௌன ராகம் ,அக்னி நட்சத்திரம்,இதயத்தை திருடாதே இந்த 5 படங்கள்.classic.

அதன் பின் அவர் படங்கள் க்ளீஷேக்களின்  கோர்வைகளாகதான் நான் பார்த்தேன் .அதிலும் கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் அந்த  குழந்தைகள் பேசுவதை சமீபத்தில் டிவியில் மீண்டும் பார்க்க நேர்ந்தது .முடியல .(சிலருக்கு இப்போதும் பிடிக்கலாம் )

விஷயம் இதுதான் .நேற்று முதல் வந்த சில கடல் விமர்சனங்களில்  மணிரத்னத்தை குறை கூறாமல் அவரை விமர்சன தாக்குதலில் இருந்து தப்பிக்க சிலர் பதுக்குகிறார்கள் .அவர்கள்  பழி போட கிடைத்த ஆள் .ஜெயமோகன் .படத்தின் கதை -வசனம் எழுதியவர் .என்னமோ ஜெயமோகன்  எழுதியதை அப்படியே மணி வாங்கி வந்து படம் ஆக்கியதை போல் பழி போடுகிறார்கள் .மணிரத்னம் ஒன்றும் அப்படியே ஏற்றுக்கொள்பவர் இல்லை.பல கட்ட  விவாதங்கள் -உரையாடல்கள் நடந்த பின் தான் முடிவு செய்திருப்பார் .அவர் அவ்வளோ மொக்கையை ஓகே சொல்பவரா? அப்படி சொல்பவர் என்றால் இந்த புகழுக்கு தகுதி உடையவரா?

இன்று ஒரு சில பதிவர்கள் அன்புள்ள மணிரத்னத்திற்கு என்று கடிதம் அவருக்கு வலிக்காமல் கடிதம் எழுதி இறக்கிறார்கள் .ஒரு பதிவர் 2011 ஆம் ஆண்டு ஒரு நடிகருக்கு தன் பதிவில் கடிதம் எழுதி இருப்பார் .அதில் தெரியும் கடுமை 100இல் 10 சதம் கூட இந்த கடல் பட தொடர்பான அவர் கடிதத்தில் இல்லை.அதிலும் இலக்கியவாதிகளோடு சேராதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.அதை படித்ததும் கொள்ளேன சிரிப்புதான் .ஒரு வேலை அவர்களும் கிண்டல் தான் செய்கிறார்களோ ?இந்த படத்தில் ஜெயமோகனோடு  சேர்ந்துள்ளார் சரி ராவணன் ,குரு ,ஆயுத எழுத்து எல்லாம் யாரோடு சேர்ந்தார்? ஏன் மோசமாக இருந்தது? நடிகர்கள் மீது காட்டும் கடுமையை ஏன் இவர் மீது காட்டவில்லை? பழி ஏன் ஜெயமோகன் மீது போடுகிறீர்கள் ?

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரைலர் என்று தன் முகப்புதகத்தில் பரிந்துரை செய்தவர்களை தேடி கொண்டிருக்கிறேன் அவர்களின் மணிரத்தின சார்பு பேச்சு கேட்க்க .

4 comments:

 1. கடல் 100% மொக்கை. ராவணன் அதைவிட பெரிய மரண மொக்கை. ஆனால்... மீண்டும் மீண்டும் எப்படி குரு, ஆய்த எழுத்து படங்களை குப்பை என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் தான் நல்ல படம் என்றால் சகுனி, பில்லா 2 தான் வெற்றிப்படங்கள்... திடீரென்று இப்பொழுது கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் படங்களையும் "குப்பை" லிஸ்டில் ஏற்றுகிறீர்கள். சிரிப்பு தான் வருகிறது. இந்த இரண்டு படங்களையும் நான் மட்டுமல்ல எனக்குத் தெரிந்து பல பேர், பல முறை பார்த்திருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள், ஆல் டை பேவரிட் லிஸ்டில் வைத்திருக்கிறார்கள்.

  மணிரத்னம் பீட் அவுட் ஆகிக்கொண்டிருக்கிறார் என்பது நிஜம். ஆனால் மன்னிக்கவும்... ராவணனுக்கு முந்தைய அவரது படங்கள் அனைத்தும் கிளாசிக். இதை நான் மட்டும் சொல்லவில்லை...

  ReplyDelete
 2. நண்பரே ,

  எனக்கும் பழய மணிரத்தனத்தின் படங்கள் பிடிக்கும் . தளபதி, நாயகன், அக்னி நட்சத்திரம் ,மௌன ராகம் , ரோஜா அதில் அடங்கும் . அவருடய வேறு எந்த படமும் என்னை கவரவில்லை. அவருக்கு சரக்கு போய் விட்டது என்பதே உண்மை.

  இருந்தாலும் விஜய்யை வைத்து "பொன்னியின் செல்வம்" எடுப்பதாக இருந்தது. , அதனால் சந்தோசப்பட்டேன். Atleast, படம் ஹிட் ஆகலனாலும் பேரு எடுத்து இருக்கும்.

  //ஜெயமோகன் .படத்தின் கதை -வசனம் எழுதியவர் .என்னமோ ஜெயமோகன் எழுதியதை அப்படியே மணி வாங்கி வந்து படம் ஆக்கியதை போல் பழி போடுகிறார்கள்//

  எனக்கு ஓர் சந்தேகம்.ஒரு படம் ஹிட் ஆனா, தனக்கு பிடித்த டைரக்டர் இல்ல ஹீரோ தான் காரணம் சொல்லுவாங்க. அதுவே பலாப் ஆனா தனக்கு பிடிக்காத டைரக்டர் இல்ல ஹீரோ தான் காரணம் சொல்லுவாங்க. ஒரு வேள டைரக்டர் , ஹீரோ இரண்டு பேரும் புடிச்சா கதை ஆசிரியர் காரணமா?. அப்ப கதை ஆசிரியரயும் புடிச்சா யார சொல்லுவாங்க ? படம் பார்பவர்களையா ?

  ReplyDelete
 3. கடலில் ஜெயமோகனின் பங்கு என்ன என்று இந்தப் பதிவு சொல்கிறது:

  http://www.jeyamohan.in/?p=33734

  கடல் அனுபவம் பற்றி, திரைக்கதை பற்றி ஜெயமோகன் சொன்னது “சினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை.”...இங்கே :

  http://www.jeyamohan.in/?p=31627

  ReplyDelete
 4. ஆனால், காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திட்டவும் உரிமை உண்டு. எனவே அதை நாம் தவறென்று சொல்ல முடியாது.

  ReplyDelete