Pages

Tuesday, 22 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா --- வயிறு வலிக்க சிரிக்க ஆசையா?


கண்ணா லட்டு தின்ன ஆசையா --- வயிறு வலிக்க சிரிக்க ஆசையா?இப்படி கண்களில் நீர் வர சிரித்தே பல வருடங்கள் ஆயிற்று.படத்திற்குள் போகும் முன் ஒரு முன் கதை.நான் சென்னையில் அதிக பட்சம் ரூபாய் 180 வரை ஒரு டிக்கெட்டுக்கு கொடுத்து படங்கள் பார்திர்க்கிறேன்.அதில் பல படங்கள் கொடுத்த காசுக்கு கொஞ்சமும் நிறைவை தராதவை.இந்நிலையில் நேற்று நண்பன் ஒருவனுடன் டி.நகர் கடக்கும்போது கிருஷ்ணவேணி தியேட்டர் .இந்த படம்.நண்பன் பார்க்கலாமா என்று கேட்க்க சரி போவோம்.போனோம்.டிக்கெட் வெறும் 30 ரூபாய் .அதற்க்கு முன் இதை விட ஆறு மடங்கு அதிகம் கொடுத்ததும் படங்கள் கொடுக்காத நிறைவை இந்த படம் பல மடங்கு தந்தது.தியேட்டர் ஒரு மாதிரி தான் இருக்கு .ஆனால் இதே நிலையில் உள்ள அரங்குகள் பல குறிப்பாக சென்னைக்கு வெளியே இதை விட அதிக டிக்கெட் விலையில் விற்கும் போது இது மேலானதாக தெரிந்தது.

இந்நேரம் எல்லோருக்கும் பல ரிசல்ட் தெரிந்திருக்கும்.படம் செம ஹிட்.கூட வந்த அலெக்ஸ் பாண்டியனையும் சமரையும் பின்னுக்கு தள்ளி  அந்த படங்கள் ஓடிக்கொண்டிருந்த பல அரங்குகளில் இந்த படம் போடப்பட்டுள்ளது .கதை அதே பாக்யராஜ் பட கதை தான்.நான் ரொம்ப நாட்களுக்கு முன் பார்த்தது.ஆனாலும் எப்போதும் ப்ரெஷாக இருக்கும் படம்.சந்தானம் தயாரிக்க முடிவெடுத்து இந்த கதையை தேர்ந்து எடுத்தது ஒரு நல்ல மூவ் .

படத்தில் ஹீரோ சேது என்றாலும் பவர் ஸ்டார் ,சந்தானம் இருவரும் படம் முழுதும் வருகிறார்கள் .சேது நடிக்க போதிய வாய்ப்பு இல்லை.இவருக்கு அடுத்த படங்கள் கிடைக்குமா பாப்போம்.அடுத்து சந்தானம் .மனுஷன் புல் பார்மில் இருக்கிறார்.படம் முழுதும் பவர் ஸ்டாரை கலாய்த்து காய்ச்சி எடுக்கிறார்.இவர்க்கும் வி.டி .வி கணேஷுக்கும் நடக்கும் சம்பவங்களும் அதை தொடர்ந்து கோவை சரளா சொல்லும் பிளாஷ்பேக் எப்பா சிரித்து சிரித்து .படத்தின் ஸ்க்ரிப்டில் சந்தானம் ரொம்பவும் உழைத்திருப்பது நிறைய இடங்களில் தெரிகிறது.

அடுத்து பவர் ஸ்டார் .மனிதர் கூச்சம் ,தன்  வயது ,அழகு ,சுய மரியாதை போன்ற இன்ன பிற விஷயங்களை தள்ளி வைத்துவிட்டு சந்தானம் ,இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்.நிஜமாகவே "ஓடும் "ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார் சாரி இருக்கிறார்.நடிப்பு கொஞ்சமும் வர வில்லை. முக reaction எல்லாம் வேகமாக வருகிறது.சந்தானம் இவரை கலாய்த்த பின் வரவேண்டிய reaction எல்லாம் பாதி கலாய்த்து கொண்டிருக்கும்போதே வருகிறது.இருந்தாலும் இவர் இப்படிதான் என்று இவரை தெரிந்தவர்களுக்கு புரிகிறது.

அடுத்து வி.டி  வி கணேஷ் .பெரிய வித்துவானாக இவரை கற்பனை செய்யவே முடியல .அதிலும் சிந்து பைரவி பாடலுக்கு இவர் வாய் அசைத்தும் சிரிப்பை அடக்க முடியல.அடுத்து பவரின் குடும்ப உறப்பினர்கள் செம காமெடி.கோவை சரளா ஆர்வமாக நடித்து இருப்பது தெரிகிறது.நாயகி ஓகே.

குறை என்றால் கிளைமாக்ஸ் சண்டை ,வில்லன் போன்றவை தான்.மற்றபடி படம் ஓடும் 2.20 மணி நேரத்தில் 2 மணி நேரம் சிரிக்கலாம் .அதில் 1 மணி நேரம் அசுர சிரிப்பு நிச்சயம்.என் அனுபவத்தில் என்னால் சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீர் வந்து இதற்க்கு மேல் சிரிக்க முடியாது என்று வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது.எனக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பிடிக்கவில்லை.ஆனால் கலகலப்பு பிடித்தது.இந்த படம் அதை எல்லாம் சாப்பிட்டுவிட்டது.

ஒரு விஷயம்- பவர் ஸ்டாரை நிறைய பேருக்கு தெரியவில்லை.டிவியில் அவரை பார்த்தாலே சிரிப்பேன் நான்.என் வீட்டில் இந்த படம் காமெடி சீன்கள் டிவியில் ஓடும்போது நான் பயங்கரமாய் சிரிப்பதை பார்த்து இதுக்கு போய் இப்படி சிரிக்கிறே என்றார்கள்.காரணம் பவர் மகிமை தெரியவில்லை.அதனால் அவர் தரும் முக பாவங்களுக்கு அவரை புரிந்தவர்கள் மட்டுமே அரங்கில் சிரிக்கிறார்கள் .தியேட்டர்இல் எனக்கு ஒரு பக்கம் என் நண்பன்.இன்னொரு பக்கம் யாரோ ஒருவர் .பவர் காமெடிக்கு சிரிக்கவில்லை .எங்கள் சிரிப்பை வேறு அடிக்கடி மேலும் கீழும் திரும்பி பார்த்து கொண்டிருந்தார்.இப்படி நிறைய பேர் சிரிக்கவில்லை.ஆனால் சந்தானம் காமெடிக்கு அரங்கமே அதிர்கிறது.வெறும் சந்தானம் காமெடி என்று பார்த்தாலே இந்த படம் அவரின் உச்சம்.பவர் காமெடி புரிந்தவர்களுக்கு டபுள் டிலைட் தான்.

MUST WATCH COMEDY FILM.MAY BE BEST COMEDY FILM OF THE DECADE.

2 comments:

  1. நானும் விழுந்து புரண்டு சிரிச்சேன் பாஸ். நல்ல காமெடி படம் தோத்து போனதே இல்ல

    ReplyDelete
  2. இன்னும் ரெண்டு நாளுல படம் பார்த்துருவேன்..படத்தை பார்த்து நீங்க எப்படி சிரித்து இருப்பீங்கனு உங்க விமர்சனமே சொல்லுது...நன்றி.

    ReplyDelete