Pages

Monday, 7 May 2012

90களில் தமிழ் சினிமா :2

 சென்ற பதிவில் 90 களின் முதல் ஐந்து வருடங்களில் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்று பார்த்தோம்.இனி 1996 - 2000 வரை தமிழ் சினிமா பற்றி பார்க்கலாம்.96 இல் ரஜினி படம் எதுவும் இல்லை.இந்த ஆண்டு கமலுக்கு செம வேட்டை.இந்தியன் ,அவ்வை ஷண்முகி என்ற இரு மெகா ஹிட்களோடு சென்ற ஆண்டு கண்ட தோல்விகளுக்கு  விடை கிடைத்தது.அதிலும் இந்தியன் தமிழகம் தாண்டி ஆந்திராவிலும்,கேரளாவிலும் ,ஏன் இந்தியில் டப் செய்யப்பட்டு பேய் ஓட்டம் ஓடியது.அப்பவே தமிழில் மட்டும் 28 கோடி வரை வசூல் செய்தது.இப்போதும் அந்த படங்களை கண்டால் அந்த கமல் இப்போ எங்கே என்று நினைக்க தோன்றும்.இந்த ஆண்டு தமிழ் சினிமா நல்ல ஆண்டு என்று சொல்லலாம்.ஹிட் வரிசை பெரியது.மேற்சொன்ன படங்கள் தவிர காதல் கோட்டை,காதல் தேசம்,கோகுலத்தில் சீதை,கோபால கோபால,பூவே உனக்காக,உள்ளதை அள்ளித்தா போன்ற மெகா ஹிட் படங்களும் மேட்டுக்குடி,வான்மதி போன்ற சுமார் ஹிட் படங்களும் வந்தது.அதுவரை தன் தந்தையின் இயக்கத்தில் மட்டுமே பாட்டு,சண்டை ,டான்ஸ் என முன்வரிசை ரசிகர்களை மட்டுமே குறிவைத்து வந்த விஜய் இந்த ஆண்டு பூவே உனக்காக மூலம் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆனார்.அஜித் ஆசை வெற்றியை இந்த ஆண்டும் காதல் கோட்டை மூலம் தொடர்ந்தார்.வெற்றி என்பதே மறந்து இருந்த கார்த்திக் உள்ளதை அள்ளித்தாவிற்கு பிறகு பிஸி ஆகிவிட்டார்.ரகுமான் கிடைக்காதவர்களின் ஒரே தேர்வாக இருந்தவர் தேவா.பிரபு தேவாவின் மிகவும் எதிர்பார்க்க பட்ட mr .romeo ,லவ் பேர்ட்ஸ் இரண்டும் மரண அடி வாங்கியது.96 முக்கியமான ஆண்டாக இருந்ததால் ரொம்ப பெரிதாக போய் விட்டது.


அடுத்த ஆண்டு 97 இல், ரஜினி வழக்கம் போல் சென்ற ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா  ஹிட் கொடுத்த சுந்தர்.சி ஐயும் தேவாவையும் வைத்துக்கொண்டு ,அப்போது மக்கள் மத்தியில் தனக்கிருந்த அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பதை படத்தில் புத்திசாலிதனமாக புகுத்தி " அருணாசலம்" என்ற படத்தை ஹிட்டகினார்.இந்த ஆண்டு கமல் படமெதுவும் இல்லை.பூவே உனக்காகவில் நல்ல பேர் எடுத்த விஜய்,இந்த ஆண்டும் அதை காதலுக்கு மரியாதையை,லவ் டுடே,நேருக்கு நேர்,போன்ற படங்களில் தொடர்ந்தார்.மாறாக அஜித் இந்த ஆண்டு தொடர்ந்து 5 தோல்வி படங்களில் (நேசம்,பகைவன்,ராசி,ரெட்டை ஜடை வயசு,உல்லாசம் ) நடித்தார்.பெரிதும் எதிர்பார்க்க பட்ட மணிரத்னத்தின் 'இருவர்' படுதோல்வி அடைந்தது.எதிர் பாராமல் ஹிட்டடித்த படங்கள் என்றால் ஆஹா,பாரதி கண்ணம்மா,பொற் காலம்,சூர்யா வம்சம்.இந்த ஆண்டு தான் நடிகர் சூர்யா மற்றும் யுவன் சங்கர் ராஜ இருவரும் அறிமுகம்.
1998க்கு வருவோம்.சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் நிறைய காமெடி படங்கள் வந்தன.காரணம் 96இல் ஹிட்டடித்த உள்ளதை அள்ளித்தா.இந்த வருடம் ரஜினி படம் இல்லை.கமல் காதலா காதலா மூலம் கிச்சு கிச்சு மூட்டினார்.என்ன சிரிப்பு தான் வரவில்லை.மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த ஜீன்ஸ் படம் வந்தது.பிரசாந்துக்கு மறுபிறவிதான்.விஜய் நினைத்தேன் வந்தாயில் பெண்களை கவர்ந்தார்.ப்ரியமுடனில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்தார்.அஜித் அடுத்த வருட ஹிட்டுக்கு காதல் மன்னன்,அவள் வருவாளா ,போன்ற சுமார் படங்களில் வந்தார்.சூப்பர் ஹிட்டேன்றால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தான்.விக்ரமனின் எளிமையான படம் .பெரிய ஹிட்.


99-படையப்பா வருடம்.அதுவரை இருந்த அத்தனை ரெகார்ட் களையும் உடைத்து ஓடியது.கமல் ஹே ராமில் பிஸி என்பதால் படம் எதுவும் வரவில்லை.விஜய்க்கு இந்த ஆண்டு சரியில்லை .தொடக்கத்தில் வந்த 'துள்ளாத மனமும் துள்ளம்' தவிர எதுவும் எடுபடவில்லை.அஜித்துக்கு முக்கியமான வருடம் .வாலி ,அமர்க்களம்,என ஹிட்டுகள் தான்.இன்று அவருக்கு வந்த மாஸ் அப்போது தொடங்கியதுதான்.சேது படம் எல்லோரையும் கலங்க வைத்து ,ஏற்கனவே ஹீரோவாகவும் ,சிறு வேடங்களிலும் நடித்து வந்த விக்ரமை உலகிற்கு தெரிய படுத்தியது.வழக்கத்திற்கு   மாறாக எ,ஆர்,ரகுமான் 7 தமிழ் படங்களுக்கு இந்த ஆண்டு இசையமைத்தார்.ரஜினிக்காக எழுதி பின் விஜய் நடிக்க மறுத்து பின் அர்ஜுன் நடித்து பெரும் ஹிட்ஆகிய  முதல்வன் இந்த ஆண்டுதான் வந்தது.


2000: முதல் ஹிட் வானத்தை போல.1995க்கு(என் ஆசை மச்சான்) பிறகு எந்த ஹிட்டும் குடுக்காத விஜயகாந்த் மெல்ல எழுந்தார்.அதை வல்லரசு மூலம் தக்கவைதார்.அந்த ஆண்டே சிம்மாசனம் படம் மார்க்கெட் இழந்தார்.மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த கமல் இயக்கிய ஹே ராம் படுதோல்வி அடைந்தது,உடனடியாக தெனாலி நடித்து தப்பித்தார்..தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு குஷி ஆக்சிஜன் கொடுத்தது,பிரியமானவளே என்ற லேடீஸ் படத்தில் நடித்தார்..ஏற்கனவே ஹிட் கொடுத்து கொண்டிருத்த அஜித் முகவரி தப்பினாலும் கண்டுகொண்டேன்,உன்னை கொடு என்னை தருவேன் மூலம் மீண்டும் வீழ்ந்தார்.கதை பெரிதாய் இல்லாவிட்டாலும் எ.ஆர்.ரகுமான் இசை துள்ளலான காட்சிகள் மூலம் அலைபாயுதே வில் மணிரத்னம் தெரிந்தார்.


ஆக,மொத்தமாக பார்க்கும் போது 1996-2000இல் ரஜினி எங்கோ போய் விட்டார்.கமல் பல விஷயங்களில் முயன்று பார்த்தாலும் 96-2000 தோல்வியே .96-2000இல் முதல்  2 வருடங்கள் விஜயும்,அடுத்த 2 வருடங்கள் அஜித்தும் முன்னிலை பெற்றனர்.நாயகிகளில் சிம்ரன்.எ.ஆர்.ரகுமான் கொடி  கட்டி பறந்தார்.சின்ன படங்களுக்கு தேவா. மொத்தத்தில் பல ஏற்ற இறக்கங்கள்  கொண்டது.


இதன் முதல் பகுதி 90களில் தமிழ் சினிமா :  படிக்க  கீழே லிங்க் 


                          http://scenecreator.blogspot.in/2012/04/90.html
6 comments:

 1. ரொம்பவும் விறுவிறுப்பான அலசல்..எந்த இடத்திலும் ஸ்டாப் பண்ணாமல் ஒரே மூச்சில் படித்தேன்..பல தகவல்கள்..நீங்க சொன்ன எல்லா படங்களையும் பார்த்துட்டேன்.இந்தியன் படத்தை யாரால் மறக்க முடியும் ?

  @@ படித்தவர்கள் கமெண்ட் போட்டால், நான் நல்லது தவறானது தெரிந்து கொள்ளலாம் @@
  புரிது சார்..நல்லது..பட் என்னோட இந்த கமெண்ட் ஓகே இல்ல..

  மிக்க நன்றிங்க சார்.

  ReplyDelete
 2. விஜய்.. மிகவும் அருமையான பதிவு. தமிழ் சினிமாவை காரைத்து குடித்து இருகிரிங்க போல.

  ReplyDelete
 3. superb.....but,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் hit movie...

  ReplyDelete
 4. மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 5. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 6. சார் 80களில் தமிழ் சினிமா பண்ணுங்க சார். உங்களோடைய தகவல்கள் மிகவும் நன்றாக உள்ளது

  ReplyDelete