Pages

Wednesday, 6 June 2012

கமலின் காமெடி படங்கள் :


கமலின் காமெடி படங்கள் :

கமலையும் காமெடியையும் பிரிக்க முடியாது.அவருக்கு காமெடி வரும் என்பது கல்யாணராமன் காலம் தொட்டு தெரியும் .இருந்தாலும் முழுநீள காமெடி படம் இல்லாமல் இருந்தது.அபூர்வ சகோதரர்கள் படத்தில் உயரமான கமல் காமெடி செய்திருப்பார்.கடைசி காட்சி வரை குள்ள கமல் செய்யும் கொலைகளின் சீரியஸ் தெரியாமல் அவர் பாட்டுக்கு ஜனகராஜ்,புலி வேஷம் என்று கலக்கி  இருப்பார்.அவரின் முதல் முழுநீள காமெடி என்றால் மைக்கேல்,மதன,காமராஜன் .அது முதல் அவ்வபோது சில காமெடி படங்களில் நடித்து வந்தார்.ஒரு நேரம் கடுமையான ஒப்பனைகளோடு மிகுந்த சிரத்தையோடு ஒரு படம் நடித்தால் அடுத்து ரிலாக்ஸ் ஆக ஒரு காமெடி படம் என்று நடித்து வந்தார்.

மைக்கேல்,மதன,காமராஜன்:
                                                 தமிழில் சிறந்த காமெடி படங்களில் இந்த படத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.நான்கு கமலுக்கும் வித்யாசம் காட்டியிருப்பார்.ஏன் குரலில் கூட மைகேல் கர கர குரலிலும்,மதன் ஆங்கில உச்சரிப்பிலும்,காமேஸ்வரன் மலையாள தமிழிலும் ,ராஜு சென்னை தமிழிலும் கலக்கி இருப்பார்.இந்த படத்தை சில நாட்கள் எடுத்து பார்த்ததில் கமலுக்கு திருப்தி இல்லை.பின் பஞ்சு அருணாசலம் வந்து மொத்தமாக மாற்றினார்.கமலே இந்த பட தயாரிப்பு.இந்த படத்தில் எல்லாமே லைட் ஆக தான் இருக்கும். வில்லன் கூட ரொம்ப கொடூரம் எல்லாம் இல்லை.கிளைமாக்ஸ் மலை வீடு அந்த நேரத்தில் (1990) ஆச்சர்யம்.சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி படம் "welcome".அதில் இந்த கிளைமாக்ஸ் மட்டும் அப்படியே தமிழில் இருந்து  உருவி இருப்பார்கள்.


சிங்காரவேலன்:

                           இளையராஜாவுக்கும் கமலுக்கும் நல்ல புரிதல்.இன்றைக்கும் இசை என்றால் கமலுக்கு  முதலில் ராஜாதான்.இளையராஜா சில சொந்த படங்கள் தயாரித்தார்.ரஜினி தன் பங்கிற்கு அவருக்கு ராஜாதி ராஜா நடித்து கொடுத்தார்.கமல் சிங்காரவேலன் நடித்தார்.கிராமத்தில் தொடங்கும் படம்,அதில் அம்மா கண்ணீருடன்  பிளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்தவுடன் இவராக தன் அப்பாவை நாலு பேர் கொன்று விட்ட தாக நினைத்து கமல் பொங்குவார்.இன்று "spoof" என்று சொல்லும் விஷயத்தை அன்றே முயன்று இருப்பார்கள். படம் பெரிய ஹிட் எல்லாம் இல்லை. காரணம் காமெடி என்ற பேரில் சில நேரத்தில் மொக்கை.கமலே இந்த படத்தை குப்பை என்று ஒரு தடவை சொன்னார்.சதிலீலாவதி :

                     பாலு மகேந்திரா அவருடைய விருப்பமான ரெண்டு பொண்டாட்டி படம்.தமிழில் அதிகம் ரெண்டு பொண்டாட்டி படத்தை எடுத்தவர் என்ற பெருமை பெற்றவர்.அதே போல் ரெண்டு பொண்டாட்டி காரனாக அதிகம் நடித்தவர் சிவகுமார்.கமலுக்கு இந்த படத்தில் நீட்டிக்கபட்ட கௌரவ வேடம்.அவரே தயாரிப்பு.கோவை சரளாவை தனக்கு ஜோடியாக்கி திரையுலகை அதிரவைத்தார்.வசூல் குறையில்லை.படம் ஹிந்தி,கன்னடம் ரீமேக் என்று ரவுண்டு வந்தது.

அவ்வை ஷண்முகி :

                               கமலுக்கு ஆங்கில படங்களை அப்படியே தமிழில்  நடிக்கும் ஆர்வம் ,ரீமேக் படங்களில் இல்லை. ரொம்பவும் கவர்ந்தால் தவிர ரீமேக் நடிக்க மாட்டார்.இந்த படம் "mrs.doubtfire" என்ற ஆங்கில படத்தின் நீட்சி.அதற்கு முன் தமிழ் கதா நாயகர்கள் சில காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்ததுண்டு.ஆனால் ஏறக்குறைய படம் முழுவதும் பெண்ணாக வருவார்.அதற்க்கு மேக்கப் போடா நாலு மணி நேரம் ஆகும்.ஜெமினி கணேசன் வேடத்திற்கு சிவாஜியை கேட்டார்கள்.அவர் கமலிடம் "என்னடா கதை விடுகிறீர்கள ? ஒரு ஆணுக்கு எதிரில் ஒருவன் பெண் வேடத்தில் இருந்தால் கண்டு பிடிக்க முடியாதா? நான் நடித்தால் சரி வராது என்று மறுத்து விட்டார்.பிறகு ஜெமினி வந்தார்.படம் வந்த பின் ஆன்மீக அமைப்புக்கள் படத்தை கண்டித்தன.உண்மையில் பிராமணர்கள் அதிகம் உள்ள இடங்களில் படம் சக்கை போடு போட்டது.


காதலா காதலா:

          கே.எஸ்.ரவிகுமார் இயக்க வேண்டிய படம்.அந்த நேர பெப்சி சண்டையால் விலகினார்.அதே ஆள் மாறாட்ட கதை தான்.கூட பிரபுதேவா ,திக்குவாய் என்று படம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிவிடும்.ஒரு காமெடி படம் மெதுவாக சென்றால் என்ன ஆகும்.அதே தான்.தெனாலி:
          ஹேராம் தோல்விக்கு பின் கமல் கே.எஸ் .ரவிகுமரையே தயாரிப்பாளராக ஆக்கினார்.படையப்பா ஹிட் தெம்பில் இருந்த  ரவிகுமார்    எ.ஆர்.ரகுமான்,கிரேசி மோகன்  என்று கூட்டணி.முதலில் மோகன்லால்,சிம்ரன் என்ற இடத்திற்கு ஜெயராம்,ஜோதிகா வந்தனர்.இலங்கை தமிழ் பேசி நடித்த இந்த படம் கமலின் மார்கெட்டை தூக்கி நிறுத்தியது.


பம்மல் கே.சம்மந்தம் :

               அதே போல் ஆளவந்தான் தோல்விக்கு பிறகு பம்மல் சம்மந்தம்.மௌலியும் கமலும் பால்ய நண்பர்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படம் என்று பல வருட ஒப்பந்தம்.இதிலும் சென்னை தமிழ்.ஸ்டான்ட் பார்ட்டி ,பிரம்மச்சாரி என்று சில விஷயங்கள்.படம் ஓரளவு ஓடியது.டிவி யில் மாதம் ஒரு முறையாவது ஓடுகிறது.சிம்ரனுடன் பழக ஆரம்பம்.பஞ்சதந்திரம்:

            இதிலும் ரவிகுமார்.உடன் ஜெயராம்,யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன்.கதை ? அடபோங்க ! இந்த பட நேரத்தில் கமல் சிம்ரனோடு நெருக்கம்.கமல் வீட்டில் பிரச்சனை.வீட்டில் பிரச்சனை வைத்துகொண்டு காமெடி படத்தில் நடிக்க நேர்ந்தால்? படம் வந்த போது ரசிக்கபட்டதை விட இன்றும் டிவியில் ரசிக்க படகிறது. இந்த படம் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.உண்மையா?

வசூல் ராஜா:

     ஹிந்தி முன்னா பாய் .ரொம்ப நாள் கமலிடம் நடிக்க கேட்டு அவர் மறுத்து வந்த படம்.காரணம் ஹீரோ கல்லூரி படிப்பவன்.நாற்பது வயதிற்கு மேல்  அப்படி நடித்து சிவாஜி பேர் ரிப்பேர் ஆனதை கமல் அறிந்திருந்தார்.ஒரு வழியாக சரண் அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களை சொல்லி கமலை ஒப்புகொள்ள செய்தார்.படத்தில் ஒரு நோயாளி வருவார்,கடைசியில் இறந்து விடுவார்.அந்த வேடத்திற்கு தனுஷ் நடிக்க சொல்லி கேட்க பட அவர் ஓட்டமெடுத்தார்.அந்த நேரத்தில் படம் ஹிட் தான்.ஆனால் டிவியில் மெகா ஹிட்.

         இறுதியாக மும்பை எக்ஸ்பிரஸ் .அதை பற்றி சொல்ல வேண்டாம்.அதற்க்கு பின் அவர் காமெடி படம் எதுவும் நடிக்கவில்லை.தசாவதார "பல்ராம் நாய்டு " இருந்தாலும் பத்தவில்லை.நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கமல் மீண்டும் காமெடிக்கு திரும்பி திரை அதிர செய்ய வேண்டும்.

பதிவை படிபவர்கள் அநேகம் பேர் கமெண்ட் போடுவதிலை .
கமெண்ட் போட்டால் எனக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.


19 comments:

 1. எப்படிங்க இவ்வளவு தகவல் சேகரிக்கிறேங்க ??? கமல் மாதிரி யாரும் ஹிட் & ப்ளாப் குடுத்து இல்லை..
  இதுல மன்மத அம்பு படத்தை விட்டுட்டேங்களே...
  அப்புறம் நண்பரே,
  புது Templet நல்லா இருக்கு... ஆனா brown background ஒரு மாதிரியா இருக்கு...white backgroud இருந்தா நல்லா இருக்கும் (தப்பா நினைக்க வேண்டாம்)...
  தமிழ்மணத்தில் உங்க பதிவை இன்னும் இணைச்ச மாதிரி தெரியவில்லை.. சீக்கிரம் இணைத்து விடுங்கள் :) ..உங்களுக்கு தமிழ்மணம் ஒட்டு பாக்ஸ் பிரச்சனைக்கு நிறைய மெயில் வேறு அனுப்பி உள்ளேன்..

  ReplyDelete
 2. வர வர பதிவுகள் தூக்கலாகி கொண்டே போகுது..டெம்பிளட் கூட அழகாக உள்ளது..
  கமலின் காமெடி படங்கள் என்றால் என்றும் ஸ்பெஷல்தான்..பார்க்க சலிக்காத தமிழ் காமெடி படங்களில் அவரது படங்களும் இருக்கும்..எனக்கு தெரிந்த வரை கமலை பிடிக்காதவர்கள் கூட கமலை ரசிப்பது காமெடி மசாலாக்களில்தான்..
  ஒரு சிறப்பான தொகுப்பு..பலரும் கண்டிப்பாக விரும்புவார்கள்..

  ReplyDelete
 3. இன்னும் இது போன்ற கட்டுரையை எதிர்பார்க்கிறோம்.... Super Kamal

  ReplyDelete
 4. ஒரு சிறப்பான தொகுப்பு..பலரும் கண்டிப்பாக விரும்புவார்கள்..எனக்கு இதில் ஆல் டைம் ஃபேவரட்ஸ் பஞ்ச தந்திரம், வசூல் ராஜா-தான்..கமல் பல வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கிறார் என்பது நிஜம்தான்..பட் அவர் செய்யாமல் இருந்திருந்தால் தமிழில் கொஞ்சம் கூட தரமான படங்கள் அன்றும் இன்றும் வராமல் போயிருக்க கூடுமென்பது என் தனிக் கருத்து.

  இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கலயா சார்..மற்ற வலைத்திரட்டிகளில் நீங்கள் இணையலாமே..உங்க மெயிலுக்கு விரைவில் ஒரு வெப்சைட் அனுப்புகிறேன்..டிரை பண்ணுங்க..இன்னும் நிறைய பேர் பிளாக் வருவாங்க..உங்க எல்லா பதிவும் பலரும் படிக்க வேண்டியவை..அந்த விருப்பத்தில் இதை சொல்கிறேன்..தவறாக நினைக்க வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. குமரன்.brown background நல்ல இல்லையா? நிறைய பேர் மாற்ற சொல்லி விட்டார்கள்.உங்கள் கருத்தை சொல்லவும்.
   கமல் பல வெளிநாட்டு படங்களை பிற இயக்குனர் படங்களில் நடித்திருப்பார்.ஆனால் அவர் இயக்கும் படங்கள் ஹேராம்,மும்பை எக்ஸ்பிரஸ்,விருமாண்டி போன்ற படங்கள் அவரது நிஜ படைப்புகளே.விருமாண்டி ஐடியா ரோஷோமோனில் இருந்திருக்கலாம்.
   நிச்சயம் அவர் துணிந்து சில படங்களை எடுத்தார்,இல்லாவிட்டால் இன்னும் தமிழ் சினிமா பின் தங்கி இருக்கும்.இதை புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் கமலை விமர்சிக்கிறார்கள்.அதில் கருந்தேள் முக்கியமானவர்.தமிழ்மணம் என்னக்கு பிரச்சனையாக இருக்கு. udaanz ,தமிழ் 10 ,இன்ட்லஈ இதுவரை இணைத்துள்ளேன்.

   Delete
 5. எப்படியோ ஒரு வழியாக தங்களது பரிந்துரையில் Breakdown படம் நேற்று பார்த்தேன்..அசத்தலான திரில்லர்..பதிவின் மூலம் அப்படத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கும் எல்லாவற்றுக்கும் என் நன்றிகள் சார்.

  ReplyDelete
  Replies
  1. அதே போல் old boy பாருங்கள்..

   Delete
 6. நிறைய விஷயம் அழகா சொல்லியிருகிங்க நல்லாருக்கு ...
  brown backgorund தன ஒரு மாதிரி இருக்கு.....

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களுக்கு முன் தான் blog background brown colour மாற்றினேன்.சில நாட்களில் மாற்றி விடுகிறேன்

   Delete
 7. மைக்கேல்,மதன,காமராஜன் , தெனாலி, பஞ்சதந்திரம் - இவை மூன்றும் தான் என் சாய்ஸ். காமெடி வரிசையில் அன்பே சிவம் வருமோ தெரியாது. ஆனாலும் அதிலும் மாதவன்-கமலுக்கு இடையிலான சிறு சிறு காமெடிக்கள் ரசிக்க வைக்கும். எனக்கு கமலின் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அதைக் கூறுவேன். (மஹாநதி நல்லாயிருக்கும்ங்கறாங்க. இன்னும் பார்க்கல)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் சாய்ஸ் அருமை.அன்பே சிவம் காமெடி யில் வராது நண்பரே.நான் சொல்லிருப்பது முழுநீள காமெடி படங்கள்.என்னது மகாநதி இன்னும் பார்க்கலியா.மகாநதி பார்த்தால் அன்பே சிவம் இரண்டாவது ஆகிவிடும் நண்பரே.உடனே பாருங்கள்.எனக்கு கமல் படங்களில் பெஸ்ட் மகாநதி தான்.கமல் தான் கதை ,வசனம் எல்லாமே.

   Delete
 8. ஆமா மக்களுக்கு இப்ப கமல் படம் பார்க்கறது தான் ரொம்ப முக்கியம். அதா பாக்கறதே வேஸ்ட். அதுல அந்த படங்களை பற்றி கட்டுரைகள் வேற. டைம் வேஸ்ட்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி பொதுவாக எல்லாமே வேஸ்ட் என்று சொல்லிவிட்டால் ,எதையுமே ஏற்க முடியாது நண்பா.

   Delete
 9. நாம் சிரித்து சிரித்து பார்க்கும் கமலின் இந்த படங்கள் இந்திரன் சந்திரன் உட்பட அனைத்தும் காப்பி அடித்தது என்று ஒருவர் எழுதிய இடுகையினை வாசித்த போது என்ன தான் இருந்தாலும் நம்மை தமிழில் சிரிக்க வைத்தார் கமல் அதில் என்ன தப்பு என்றே தோன்றியது.

  ReplyDelete
 10. அட நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களையும்
  பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்
  இப்படி வரிசைப்படுத்திப் பார்க்கையில்தான்
  அதுவே தெரிகிறது
  கமலின் நகைச்சுவைத் திறனும் புரிகிறது
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. Good reviews.

  ReplyDelete
 12. today ly reading yur blog.... nice....

  ReplyDelete