Pages

Thursday, 21 June 2012

The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம்


The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம் 


பிரபலமானவர்கள் குறிப்பாக உயிருக்கு ஆபத்து இருப்பவர்கள் ,தன்னை போலவே இருப்பவரை தன் "டூப்பாக" அதாவது போலியாக பொது இடங்களுக்கு அனுப்புவார்கள்.சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போலிகள்  கூட உண்டு. சதாம் உசேன்,ஒசாமா பின் லேடன் போன்றவர்கள் ஏழு எட்டு போலிகளை தன்னை போலவே தயார் படுத்தி வைத்திருந்ததாக கேள்விபட்டிருக்கிறோம்.அப்படி ஒரு போலியின் கதை தான் இந்த படம்.இது உண்மை கதை என்று சொல்ல படுகிறது.சதாம் உசேனின் மகன் உதய் தன் தந்தைக்கு கொஞ்சமும் சளைக்காமல் கொடூர குணங்கள் கொண்டவன்.அவன் தன் உயிருக்கு தன்னால் பாதிக்க பட்டவர்களால் ஆபத்து என்று தெரிந்ததும் தனக்கு போலி ஒருவனை தேர்ந்தெடுக்கிறான்.அதன் பின் என்ன என்பதே படம்.


ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது மிகவும் கவனம் தேவை.எவற்றை சொல்ல வேண்டும் .எதை தவிர்க்க வேண்டும்.இந்த அளவுகோல் சரியில்லை என்றால் படம் இழுவை ஆகிவிடும்.இந்த படம் அந்த குறைகள் இல்லாமல் மிகுந்த நேர்த்தியோடு எடுக்க பட்டிருகிறது.படம் 1987 வருடம் இராக்கில் தொடங்குகிறது.ஈராக் படையில் இருக்கும் லதிப் என்பவன் ஈராக் இளவரசனும் சதாம் உசேனின் மகனும் ஆன உதயின் போலியாக நடிக்க அழைக்க படுகிறான்.காரணம் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.அப்போது எல்லோரும் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக வகுப்பில் பேசப்பட்டதால் ,இவனை தேர்ந்தெடுக்கிறான் .முதலில்  மறுக்கும் லதிப் ,குடும்பத்தை காட்டி மிரட்டப்பட்டதும் ஒப்புகொள்கிறான்.இருவருக்கும் உள்ள மிக சில வேறுபாடுகளையும் டாக்டர்களை வைத்து சரி செய்கிறான்.உதய் தான் பயன் படுத்தும் எல்லாவற்றையும் லதிப் பயன் படுத்த அனுமதிக்கிறான்.மேலும் லதிப் போரில் இறந்துவிட்டதாக அவன் குடும்பத்தை நம்ப வைக்கிறான்.


உதயின் கொடூர குணங்களை வெறுக்கும் லதிப் வேறு வழியில்லாமல் தொடர்கிறான்.இதற்கிடையில் உதையின் காதலி லதிப் காதலி ஆகிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு 14 வயது பள்ளி சிறுமியை ஒரு பார்ட்டியில் பல பேர் முன்னிலையில் அவளை மானபங்க படுத்த முயற்சிக்கிறான்.தன் தந்தையின் நண்பர் வற்புறுத்தலால் அதை நிறுத்துகிறான்.இருந்தாலும் மறுநாள் அவன் ஆட்கள் அந்த பெண்ணின் இறந்த உடலை வீசிவிட்டு போகிறார்கள்.உதயாக நடிக்கும் லதிப் தன் படை வீரர்களை உற்சாக படுத்த அனுப்பபடுகிறான்.அங்கேயும் அவனை கொள்ள முயற்சி நடிக்கிறது.அதில் தனது விரலை இழக்கிறான் லதிப் .இதனால் கோபப்படுகிறான் உதய்.காரணம் லதிப் விரலை இழந்தால் இவனும் இழக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவன் வேறு அவன் வேறு என்று தெரிந்து விடும்.அவன் பிறந்த நாள் விழாவின் போது காதலியோடு தப்பிக்கிறான் லதிப் .காதலி தந்திரமாய் இவனை சிக்கவைக்க பார்க்கிறாள்.தப்பிக்கிறான்.


ஈராக் திரும்பும் லதிப் உதயை கொள்ள நேரம் பார்கிறான்.அவனால் பாதிக்க பட்ட சிலர் அவனுக்கு உதவுகிறார்கள்.வழக்கமாய் வீதிகளில் வந்து தனக்கு பிடித்த பெண்களை தூக்கி கொண்டு போய் கற்பழிக்கும் உதய் அன்று 1996 இல் லதீப்பால் ஆணுறுப்பில் சுடப்படுகிறான்.லதீப் தப்பிக்கிறான்.சுடப்படவன் இறக்கவில்லை.லதீபும் அகப்படவில்லை.


உண்மை சம்பவங்கள் என்று சொல்லப்படும் படத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் அதிகம்.பிறந்த நாள் விழாவில் வந்த விருந்தினர்கள் அனைவரையும் நிர்வாணம் ஆக்குதல்,திருமணதிற்கு போய் அந்த மணபெண்ணையே கற்பழிப்பது இப்படி படம் முழுவதும்.அந்த நாடு மக்கள் இவனிடம் என்ன பாடு பட்டிருப்பார்கள் பாருங்கள்.நடுநடுவே சதாம் உசேன் வேறு வருகிறார்.

டிஸ்கி : தன்னை போலவே லதீபையும் மாற சொல்லும் உதய் முகம் ,தாடை மற்றும் பிற விஷயங்களில் என்ன மாற்றங்கள் என்று சொல்லிக்கொண்டே இருவரும் அருகருகே குளிக்கிறார்கள் .அப்போது எட்டி பார்க்கும் உதய் லதிபிடம் அவனின் ஆணுறுப்பை சில இன்ச் வெட்டிக்கொள்ள சொல்கிறான்.அதிர்ச்சியுற்று இதை யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று இவன் கேட்க ,அதற்க்கு பாக்தாத் பெண்கள் என் ஆணுறுப்பை பற்றி அறிவார்கள்.அதனால் அதன் அளவை தனது போல் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வான்.இந்த ஒரு சீன் படத்தை பற்றி சொல்லிவிடும்.

3 comments:

 1. பார்க்கணும்..நல்ல விமர்சனம்....

  ReplyDelete
 2. நானும் படத்தை பத்தி கேள்விபட்டு உள்ளேன்.. வன்முறை ஜாஸ்தி என்பதால் படத்தை பார்க்கும் எண்ணம் வர வில்லை..
  என்னை கேட்டல் உதய் சாவது போல் படம் முடிக்க பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

  ReplyDelete
 3. ஜேக்கி சார்..இந்த படத்தை பற்றி எழுதி இருக்காருனு நினைக்கிறேன்..அப்பவே டவுன்லோடு போடவேண்டுமென நினைத்தேன்..கையோடு லிங்க் எடுத்தும்..பண்ண மறந்து இப்ப உங்க விமர்சனம்..
  தொடர்ந்து சிறப்பான பணியை செய்றீங்க..பல பேரோட ஆதரவே அதை சொல்லுது..கலக்குங்க விஜய் சார்..பார்க்கலாம்.

  ReplyDelete