Pages

Tuesday 19 June 2012

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

ஒரு நடிகர் எந்த நிலையில் உள்ள இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புவார்.நடிக்க வரும் புதிதில்,யார் வாய்ப்பு குடுத்தாலும் நடிப்பார்.இது ஒரு ஹிட் படம் கொடுக்கும் வரை தான்.அதற்க்கு பின் படங்களை அவரது விருப்பம்.இந்த படத்தில் நடித்தவரின் அடுத்த படம் என்று மக்கள் ஒரு படத்தை பற்றி பேசும் வரை தான் இந்த நிலைமை .புதிய இயக்குனர் படங்களில் நடிப்பவர் யார்?.ஒரு நடிகர் கொஞ்சம் வளர்ந்த பின் பிரபலமான இயக்குனர்கள் படங்களில் மட்டுமே என்று முடிவெடுப்பதும் உண்டு.ரஜினிகாந்த் எந்த புதிய இயக்குனர் படத்தில் கடைசியாக நடித்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஒரு நிலைமை அடைந்ததும்  இனி புது இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்றும்,அந்த நேரத்து ஹிட் கூட்டணி அமைத்து படம் வெற்றி பெற்றால் போதும்.புதியவர்களுக்கு வாய்ப்பு  கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.இதில் அவர் ரசிகர்கள் வேறு ரஜினி படம் எப்படி இருந்தாலும் பாப்போம் என்று.அப்ப ஒரு புதிவருக்கு வாய்ப்பு தரலாமே.இதை அப்படியே கொஞ்சமும் மாறாமல் இப்போது சூர்யா தொடர்ந்து வருகிறார்.வரிசையாக ஹிட் கொடுப்பது இருந்தாலும்,ஒரு புதியவரை கதை பிடித்திருந்தால் கூடவாய்ப்பு தர  தயங்குகிறார்.அவர் கடைசியாக சிலுன்னு ஒரு காதல் படத்தில் கிருஷ்ணா என்பவருக்கு வாய்ப்பு தந்தார்.அதற்க்கு பின் யாருக்கும் இல்லை.விக்ரமும் அப்படியே.


இந்த விஷயத்தில் விஜய் ,அஜித் இருவரும் பரவாயில்லை.விஜய் ஆரம்பத்திலிருந்தே புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார்.ஆரம்பத்தில் அதாவது அவரது ஹிட் படங்களான லவ் டுடே ,துள்ளாத மனமும் துள்ளும்,திருமலை ,திருப்பாச்சி போன்ற படங்கள் புதிய இயக்குனர்கள்  படங்களே.தான் சொல்வதை கேட்பார்கள் என்பதற்காக பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்பு தருவார். ஆனால் அவரது மார்கெட் சரிய காரணமும் அவர்களே .வேட்டைக்காரன்,அழகியதமிழ் மகன்,சச்சின்,கீதை,தமிழன்,ஷாஜகான்,பத்ரி,நிலாவே வா என்று இவர் வாய்ப்பு கொடுத்து ஊத்தி கொண்ட படங்களை சொல்லி கொண்டே போகலாம்.அவர் மட்டும் சூர்யா போல் பிரபல இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்து இருந்தால் நிச்சயமாக அவருக்கு சரிவு இருந்திருக்காது.இப்போது அதை உணர்ந்து முருகதாஸ்,கௌதம் மேனன்,ராஜேஷ் என்று வரிசையாய் பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க உள்ளார்.

அஜித் படங்களில் வாலி,தீனா என்று கொஞ்சமே புதிய இயக்குனர்கள் படங்களில் வெற்றியை கண்டாலும்,முகவரி,சிடிசன் போன்ற படங்கள் எதிர்பார்த்தது போல் ஓடாததால் ,அவர் புதிவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை குறைத்து கொண்டார்.கொஞ்சம் இடைவேளைக்கு பின் கிரீடம்,ஆழ்வார் என்று முயற்சித்து பார்த்தார்.அவை கைவிட்டு விடவே ,பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.குறைந்த பட்சம் ஓரிரு படங்களாவது இயக்கி இருக்கிறார்களா என்று பார்த்தே வாய்ப்பு அளிக்கிறார்.



ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி பெற்று பின் கொஞ்சம் வளர்ந்த பின் புதியவர்கள் குறிப்பாக திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்பளித்து பார்த்தார்.சில படங்கள் வெற்றி அடையவே ,பின் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு அவர்கள் படங்களில் மட்டுமே நடித்து பெரும்பாலும் தோல்வி கண்டு தன் மார்கெட்டை இழந்தார்.அவர் வேறு யாரும் இல்லை .நம் கேப்டன் விஜயகாந்த் தான்.கமல் வேறு பாதையில்  சென்று விட்ட பின் ரஜினிக்கு போட்டியாக அதிரடி மசாலா படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்றுகொண்டிருந்த விஜயகாந்த்  புதிவர்களாலேயே தன் இடத்தை இழந்தார்.அவர் மட்டும் ரஜினி போல் பிரபலங்களுடன் மட்டுமே கூட்டணி என்று சென்றிருந்தால் ,ரஜினிக்கு கடும் போட்டியாக இருந்திருப்பார்.
படம் ஓட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிய ரஜினி,சூர்யா படங்கள் நன்றாக ஓடியது -ஓடுகின்றது.தன் இஷ்டம் போல் படம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் ,விஜய் படங்கள் ஓடவில்லை.இதுதான் முரண்.

4 comments:

  1. ஒரு காலத்தில் மூன்று நடிகர்களை கம்பர் பண்ணுவார்கள். அதில் இருவர் மட்டும் ஸ்டாராக ஜொலிப்பார்கள். உதாரணத்துக்கு . MGR - சிவாஜி - ஜெமினி, பின் MGR - சிவாஜி - முத்துராமன் . அதை போல் பல நடிகர்கள் போட்டியாக வந்தார்கள், ஆனால் MGR - சிவாஜி மட்டும் ஸ்டார்ஸ். அடுத்த தலைமுறை ரஜினி - கமல் - விஜயகாந்த் , கடைசியில் ரஜினி - கமல் ஜொலித்தார்கள். அப்புறம் விஜய் - அஜித் - பிரசாந்த் , பின் விஜய் - அஜித் - விகாரம் , இப்போது விஜய் - அஜித் - சூர்யா. ஆனால் விஜய் - அஜித் எப்போதும் stable , மூன்றாம் இடம் பலர் வந்து போவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான். ஆனால் மூன்றாவது நடிகருக்கு தான் போட்டியில்லை.இது ஒரு வசதி.

      Delete
  2. அலசல் அருமை..உள்ளதை உள்ளப்படியே எழுதி வரீங்க..இது பாராட்டத்தக்க ஒன்று..நன்றி.

    ReplyDelete