Pages

Friday 15 June 2012

INSIDOUS --ஆங்கில திகில் பட விமர்சனம்


INSIDOUS --ஆங்கில திகில் பட விமர்சனம் 



நீங்கள் உறக்கத்தில் கனவு காண்கிறீர்கள்.கனவில் எங்கோ தெரியாத இடத்தில மாட்டிகொண்டீர்கள்.மீண்டு வரமுடியவில்லை.கனவு தான் என்பதை உங்கள் மனம் ஏற்க மறுத்து நீங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கா விட்டால்.அந்த கனவில் இருந்து மீண்டால் தான் நீங்கள் மீண்டும் நம் உலகிற்கு வரமுடியும் என்றால் எப்படி இருக்கும்.

horror -thriller வகை படங்கள் தேடி தேடி பார்ப்பவன் நான்.எக்கச்சக்கமான படங்கள் பார்த்தாகிவிட்டது.அதில் ஓரளவாவது எனக்கு திருப்தி அளித்த படங்களை மட்டுமே உங்களுடன் நான் பகிர்கிறேன்.இந்த படம் "INSIDOUS".என்ன சிறப்பு. இதன் இயக்குனர் தான் "SAW "படத்தின் முதல் பாகத்தை இயக்கி ஒரு பெரிய படத்தின் தொடருக்கு வித்திட்டவர்.இந்த "INSIDOUS" படம் விமர்சகர்களிடம் பெருவாரியாக பாராட்டையும் ,நல்ல வசூலையும்,பல விருதுகளையும் பெற்ற படம்.


ஒரு குடும்பம்.புதிதாக ஒரு வீட்டிற்க்கு குடி வருகிறார்கள்.வந்த சில நாட்களில் அவர்களின் சிறு வயது  மகன் கோமா நிலைக்கு தள்ள படுகிறான்.டாக்டர்கள் அதை கோமா என்று  சொல்லமுடியாது என்றும்,தங்களுக்கே அது புதிதாக இருப்பதாக சொல்கிறார்கள்.வீட்டில் வந்து மூன்று மாதங்களாக கோமாவிலேயே இருக்கிறான்.சில நாட்கள் கழித்து அவன் தாய் சில உருவங்கள் சுற்றி வருவதையும் அதன் குரல்களையும் கவனிக்கிறாள்.அவள் பயந்து தன் கணவனிடம் சொல்லி வேறு வீட்டிற்க்கு செல்கிறார்கள்.அங்கே அந்த உருவங்களின் அட்டகாசங்கள் அதிகரிகின்றன.இந்த அமனுஷிய விசயங்களில் கை தேர்ந்த ஒரு பெண்ணை அழைக்கிறார்கள்.அவர் சிறுவனை பரிசோதித்து,அவன் தூக்கத்தில் கனவு காண்பவன் ,கனவின் போது அவன் மனம் உடலை விட்டு கனவின் போக்கில் நீண்ட தூரம் சென்று சென்றுவிட்டது ,அதனால் தான் அவன் கோமாவில் இருந்து விடுபட முடியாமல் இருக்கிறான்.அவன் உடலில் வேறு சில உயிரற்ற சக்திகள் இறங்க முயற்சிக்கின்றன என்றும் சொல்கிறாள்.
இதிலிருந்து சிறுவனை எப்படி மீது வருகிறார்கள்.அந்த குடும்பம் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள  விரும்புகிறவர்கள் படம் பார்க்கவும்.படத்தின் இறுதி சில காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை.படம் ஆரம்பத்திலிருந்தே நம்மை பயமுறுத்துகின்றது.சில காட்சிகள் நம்மை  தூக்கிவாரி போடுகின்றது.இரவில் பார்த்தல் நலம்.நான் இரவில் தான் பார்த்தேன்.அதுவும் இருட்டில்.படம் கொஞ்சம் மெதுவாக செல்லும்.இந்த வகை படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான்.

IMDB RATING- 6.8
ROTTEN TOMATOES--68% FRESH

2 comments:

  1. என்னமோ தெரியல ... போனவருஷம் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். சுத்தமா பிடிக்கவும் இல்ல. பயம் வரவும் இல்ல. ஏதோ astral walkingனு புதுசா ஒரு வசனம் மட்டும் படிச்சிக்கிட்டேன்.

    ReplyDelete
  2. அருமையான திகில் திரைப்படம். அதுவும் கிளைமாக்ஸ் ஒரு நிமிடத்திற்கு முன்னால் இருக்கும் திருப்புமுனை, அருமை . நான் இந்த படத்தை நடு இரவில் பார்த்தேன். அஸ்ட்ரோ travel என்பது உண்மை (கடவுளை உணரும் வழி என்பார்கள்), நீங்கள் 7 வருடம் தொடர்ந்து meditation சரியாக செய்தால், நீங்களும் அஸ்ட்ரோ travel பண்ணலாம். ஆனால், பேயை பார்பிர்கலா என்பது தெரியாது :-)

    ReplyDelete