Pages

Monday, 17 December 2012

கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?

கௌதம் மேனன்  இதுவரை என்ன கிழித்துவிட்டார்? 

கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை  சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.

கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.

இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.

1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு  6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம் 
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு  நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு 

ரீமேக் கழித்தால் 8 படம் .

1.மின்னலே :  முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை 

2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.

3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு  அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.

4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.

இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை 

5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.

6.விண்ணை தாண்டி வருவாயா :  இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .

7.நடுநிசி  நாய்கள் :  எப்பா படமா அது .உவ்வே .

எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .

6 comments:

 1. தல, ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல, ஹும்ம்ம்ம் :)

  முதலில் உங்கள் பதிவுப்படி பார்த்தால், கௌதம் 7 + 1 (நீதா.எ.பொ.வ) படங்கள் தான் எடுத்துள்ளார். அதில் 3 மிகப்பெரிய ஹிட், 2 ஹிட், 2 ப்ளாப். இது அருமையான கிராப் தல. நீங்க அப்படி என்ன எடுத்துட்டார்னு கேக்குறீங்க?!

  மொத்த படமும் நன்றாக இல்லையென்றாலும் கௌதமின் ஒவ்வொரு படத்திலும் மேக்கிங் + ஏதாவது ஒரு அட்ராக்ஷன் இருக்கும், நடுநிசி யையும் சேர்த்து...

  வி.டி.வி உங்களுக்கு பிடிக்கலை (எனக்கும் பிடிக்கலை) அவ்ளோதான். அந்தப் படத்துக்கு "கல்ட்" ஸ்டேடஸ் கொடுத்து தலைல தொக்கி வச்சு எத்தன பேர் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க, தெரியுமா...

  எனக்கென்னவோ கௌதம் தளபதிய வச்சு படமெடுக்காதது தான் உங்களுக்கு கோவம்னு நினையக்கிறேன் ;-)

  ReplyDelete
  Replies
  1. அப்படி இல்லை ஆனந்த்,காக்க காக்க ,வேட்டையாடு ,பச்சைக்கிளி மூன்று பிடித்தது.அதன் பின் அவர் படங்கள் போர் தான்.படம் ஹிட் என்ற கிராப் எல்லாம் கௌதமுக்கு தானா? இதே மற்றவர்கள் கிராப் கொடுத்தால் ஹிட் படமா இருந்தாலும் அதெல்லாம் ஒரு படமா என்று கேட்பீர்கள்.அப்படிதானே.அவர் லவ் படம் என்றவுடன் அது எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ அப்படியே இருக்கு.கொஞ்சமும் மாறாமல்.
   மேகிங் நல்ல இருந்தாலும் போர் அடிக்கும் படத்தை என்னால் பார்க்க முடியாது நண்பா.

   இந்த பதிவிற்கும் தளபதிக்கும் என்ன சம்பந்தம்.எதற்கு இங்கே விஜய்.இருந்தாலும் உங்களாக ஒரு விஷயம். கௌதம் ஒன்றும் விஜயை கழட்டிவிடவில்லை.விஜய் தான் அவர் சொன்ன மேட்டர் பிடிக்காமல் டிராப் பண்ணிவிட்டார்.என்ன நண்பா பல விஷயம் விஜய் பற்றி தெரிந்து அவரை கலாய்த்து பார்ட் பார்ட் ஆக போஸ்ட் மார்டம் பண்ணி பதிவு போடுகிறீர்கள். pfools இலும் விஜய் ஒரு படமாவது பார்க்கும்படி நடிக்க மாட்டாரா என்று கேட்டு விஜய் பற்றி முழுசும் தெரிந்தே கௌதம் விஜய் வைச்சு படம் எடுக்காததால் நான் கௌதமை பற்றி எழுதினேன் என்று எப்படி சொல்கிறீர்கள்.கடைசியில் கௌதம் அடுத்த படம் ஹீரோ சூர்யா என்று சொல்லி செம ஜாலி என்று முடித்துள்ளேன் பார்க்கவில்லையா ?

   Delete
  2. விஜய் மேட்டர் சும்மா ஜாலிக்கு... கௌதம் எனக்கு பிடித்த இயக்குனர்களுள் ஒருவர். ஆனால் அவருக்கு இது நிச்சயம் கஷ்டகாலம் தான். ஆணாளப்பட்ட தரணியையே இரண்டு ப்ளாப்பில் தூக்கியறிந்து விட்ட தமிழ் சினிமாவில், கௌதம் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்று தெரியவில்லை :-(

   விஜய் வச்சு எடுக்குறாரோ இல்ல சூர்யாவ வச்சு எடுக்குறாரோ, படம் நல்லா இல்லன்னா இவங்க ரெண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனா கௌதம் காணாமப் போகப் போவது மட்டும் உறுதி... பார்ப்போம்.

   பி.கு: கௌதம் பற்றிய தொடர் தான் எழுதிக்கிட்டு இருக்கேன். கூடிய விரைவில் போஸ்ட் செய்து விடுகிறேன் :-)

   Delete
  3. @Baby ஆனந்தன் >> யோவ் பூனை மீசை மாமா , உங்களுக்கு வேற ஹீரோவே நாபகம் வரதா? எப்ப பாத்தாலும் விஜய் விஜய். அவருக்கும் இந்த "article " என்ன சமந்தம் ?

   எங்க தளபதிய இழுகாம உங்களுக்கு தூக்கம் வராதா ?

   Delete
 2. 2, 3, 5, 6 இவை அனைத்தும் எனக்கு மிக பிடித்தது.. அதிலும் வாரணம ஆயிரம் ஒரு படி ஜாஸ்தி.. மற்ற படங்களும் ரொம்ப பிடிக்கும் தான்.. இயக்குனர் சினிமா என்ற ரீதியில் அரைச்ச மாவை அரைப்பது போல நீ.பொ.வ. இல் பட்டதே ஒழிய வேற எனக்கு தெரியல..

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்

  ReplyDelete
 3. நான் ஒரு ஆங்கில படம் பார்கிறேன் . பிறகு அதை தமிழில் கொண்டுவர யோசிக்கிறேன் . அனால் படம் 1.30 நேரம் தான். என்ன செய்வது? சரி காமெடி சேர்க்கலாமா ? பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகா இருக்கவேண்டும். அட முன்ன பின்ன பூசினா 2.30 மணி நேரம் வருதே? அது மட்டும் இல்ல A . L விஜய்கு அண்ணன் டா .--- கௌதம் மேனன்.

  ReplyDelete