Pages

Saturday, 29 December 2012

FLOP 10 தமிழ் படங்கள் 2012

FLOP 10 தமிழ் படங்கள் 20122012 முடிய போகிறது .எல்லோரும் இந்த ஆண்டின் TOP 10 படங்களை பேசிவருகிறார்கள்.நாம் ஒரு மாறுதலுக்காக FLOP 10 படங்களை பார்க்கலாம்.சொல்லி வைத்தாற்போல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படம் எப்படா வரும் என்று ஏங்கவைத்து அந்த படம் பார்த்த பின் ஏன்டா இந்த படத்தையா இப்படி எதிர்பார்த்தோம் ? ச்சே என்று ஆனது ஒரு வாடிக்கையானது .


இந்த படங்களை FLOP 10 சுமாருக்கும் கீழே ---- மிகவும் மோசம் .
                                                                    10---1

இப்படி எடுத்து கொள்ளவும்.

10.மாற்றான் : படத்தில் விஷயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது .அதை நீட்டி முழக்கி ,நீளமான சண்டைகள்,இறுதியில் வெளிநாடு ,பின் வடநாடு என்று சுற்றி வந்து ஒரு அயர்ச்சி வந்துவிட்டது.கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இந்த கதைக்கு ரெட்டை விஷயம் தேவையா என்று தோன்றியது.மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு படம் பார்க்கும்படி தான் இருந்தது.

9.அரவான்: படம் கொஞ்சம் ராவாக இருந்தது.அங்காடி தெருவுக்கு பின் வசந்த பாலன் இப்படி சறுக்குவார்  என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.படத்தை எதிர்பார்த்தேன்.எதோ குறைந்தது.பசுபதி நல்ல நடிகர் ,ஆனால் அவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் தேறவே இல்லை.எங்கே மீண்டும் வில்லனாக ஆகி விடுவாரோ என்று பயம் வருகிறது.

8.முகமூடி : எனக்கு மிஷ்கின் விஷயங்கள் பிடிக்கும் .ஆனால் படத்தில் விஷயம் இல்லை.இவர்களே படத்தை பற்றி ஓவராக பேசி கெடுத்து விட்டனர்.படத்தில் குறிப்பிடும்படி சம்பவங்களோ காட்சிகளோ இல்லை. ஒரே ஆறுதல் நல்ல இசை .குறிப்பாக பின்னணி இசை.

7.வேட்டை: மாதவன் ,ஆர்யா ,யுவன்,லிங்குசாமி .கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும் என்று நினைத்தேன்.அதே அண்ணன் தம்பி.வீரன்,கோழை .அக்கா  தங்கை ,ஒரு வில்லன்,அண்ணன் அடிபட்டு விட தம்பி அண்ணனுக்கு தைரியம் வரவைத்து வில்லனை காலி செய்கிறான் .எப்பா சாமி .இதை போய் ஹிந்தியில் வேறு ரீமேக் ஆகபோகுதாம்.

6.மெரினா: பசங்க படம் நல்ல படம்.அதே போல் சிறுவர்களை வைத்து படம் என்றதும் எதோ ஒரு இன்னொரு விஷயம் சொல்லப்போறாரு அப்படின்னு நினைத்தால் சும்மா பசங்க விளையாடுவதும் ,பீச்சில் சுண்டல் விற்பதும் என்று படுத்தி எடுத்து விட்டார்.ஒரே ஆறுதல் சிவகார்த்திகேயன்..அனால் படம் செலவு பண்ணுனதை விட 5 மடங்கு சம்பாதிதுவிட்டது என்று கேள்வி.

5. 3. ரஜினி மகள் டைரக்டர் ,ஒரு நல்ல கம்மேர்சியல் படமாக இருக்கும் என்று நினைத்தேன்.கொலைவெறி வேறு கிளப்பிவிட்டது.படம் பார்த்தவர்களுக்கு கொலைவெறி வந்தது தான் மிச்சம்.இதிலும் ஆறுதல் சிவகார்த்திகேயன் .

4.நீதானே என் பொன்வசந்தம்: கௌதம் எப்பவும் எடுக்கும் லவ் படம்.படு மெதுவாக போனது .இளையராஜா பாட்டு இல்லாவிட்டால்,நினைக்கவே முடியல.ஜீவா பாவம்.பெரிய இயக்குனர் படங்களில் அவர் நடிக்கும் படங்களும் ஊத்தி கொள்கின்றன.

3.தாண்டவம்: எனக்கு தெரிந்த முதல் குறை ஏற்கனவே மெதுவாக போகும் படத்தில் ஏன் எல்லோரும் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்? பாடல்கள் கேட்க்கும்படி இருந்தாலும் படம் உட்கார முடியல.இதை விட 20 வருஷத்திற்கு முன் இதே கண்தெரியாத ஹீரோ பழிவாங்கும் படமான இரவு சூரியன் நன்றாக இருக்கும். விக்ரம் மார்க்கெட்டை அடுத்த ஷங்கர் படமாவது தூக்குமா ?

2.பில்லா 2:  அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா)1.சகுனி : நல்ல வளர்ந்து வர்ற ஹீரோ கார்த்தி.கதையில் ஒன்னும் இல்லாமல்,ஒரு லாஜிக் இல்லாமல் இவர் சொல்வதை எல்லா அரசியல்வாதிகளும்,சாமியாரும் அப்படியே நம்புகிறார்.ட்ரைலர் பார்த்து செம படமா இருக்குமோ ? அரசியலை ஒரு வாங்கு வாங்குமோ என்று எதிர்பார்தேன்.சந்தனமும் ஆரம்ப ரஜினி-கமல் மேட்டர் தவிர சிரிப்பும் ஒன்றும் இல்லை.இந்த ஆண்டு நான் பார்த்த மிக மோசமான படம் இதுதான்.எனக்கு என்னவோ அலெக்ஸ் பாண்டியனும் சந்தேகமாக தான் இருக்கு .


சரி எனக்கு எதிர்பாராமல் 100% திருப்தி தந்த படங்கள் என்றால் தடையற தாக்க ,பிட்சா இரண்டும் தான்.எதிர்பார்த்து திருப்தி தந்தது துப்பாக்கி .

ஒரு படம் ஹிட் ஆகி எனக்கு பிடிக்காதது ஒரு கல் ஒரு கண்ணாடி .இன்னும் கொஞ்சம் ஓடி இருக்கலாம் என்று நினைத்தது நண்பன் ,சாட்டை

நன்றாக சிரிக்க வைத்த படம் கலகலப்பு.

இது போய் ஹிட்டா என்று நினைத்தது சுந்தரபாண்டியன் .7 comments:

 1. நான் எழுத நினைத்ததை நீங்கள் அப்படியே எழுதியிருக்கிறீர்கள்... 100% உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. ஆனந்தா ,இப்பவாவது ரெண்டு பேர் கருத்தும் சேருதே .நன்றி

   Delete
 2. //பில்லா 2: அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா)/

  Scene creator Rocks..

  ReplyDelete
 3. @@ பில்லா 2: அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா)/
  எனக்கு ஓரளவு கெஸ் பண்ற அளவுக்கு புரிஞ்சதுங்க..
  உங்களோட கருத்துக்கு நானும் ஒத்துப்போறேன்..இந்த லிஸ்ட்டுல இருக்குற நிறைய படங்கள் பல ஏமாற்றங்களை தந்துவிட்டுதான் சென்றது.அதிலும் விக்ரம்..தொடர்ந்து ராஜபாட்டை, தாண்டவமுனு நடிச்சு வருறது கவலையான விஷயம்தான்.

  ReplyDelete
 4. // பில்லா 2: அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா) // >>> கமெண்ட் நச்சுனு இருக்கு ... புரிந்தது நண்பா புரிந்தது

  ReplyDelete
 5. Replies
  1. நன்றி விலை மகள் மகன் ராகுல் நம்பியார் அவர்களே .

   Delete