Pages

Thursday 5 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1


HORROR  படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1

பார்வையாளர்களின் மனதில் ஒரு வித பயத்தையும் ,அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பரபரப்பையும் எற்படுதுபவையே HORROR படங்களின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.அதற்காக படத்திற்கு தேவை இல்லாத ,திணிக்கப்பட்ட கட்சிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதில் பல தீம்கள் உண்டு. பேய் ,ரத்தக்காட்டேரிகள் ,தெரியாத இடத்தில மாட்டிகொள்ளுதல்,அமானுஷ்ய வீடு,அதீத வன்முறையுடன் கொடுமை படுத்துதல்,ஆளை கொள்ளும் வைரஸ்,மனநலம் பாதிக்க பட்ட கொலைகாரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழில் இதுவரை என்ன மொத்தம் இதுவரை ஒரு முப்பது திகில் படம் வந்திருக்குமா ?அதில்  அதே கண்கள், யார் நீ (ஜெய்சங்கர் நடித்தது),உருவம் (மோகன்),யாவரும் நலம் என்று மிக சில படங்களே தேறும்.மற்றவை ஆங்கில பட தழுவல்களே.மலையாளத்தில் சில படங்கள் உண்டு.தெலுங்கில் சமீப காலங்களில்  A FILM BY ARAVIND என்ற படம் நல்ல முயற்சி.ஹிந்தியில் எனக்குதெரிந்து பெரும்பாலும் ஆங்கில ,உலக படங்களில் இருந்தே உருவபடுகின்றது.
இனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள்  பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.

1970 கள் :
எழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான திகில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

1980, 1990 அடுத்த பகுதிகளில் 


1 comment:

  1. பொதுவா ஹாரர் ஜென்டரில் உள்ளப் படங்கள் பிடிக்கவே பிடிக்காது. குடலைப் பிரட்டும் அளவிற்கு ரத்தம் காட்டினாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வரும் முக்கால்வாசி படங்கள் கதையை கணக்கில் எடுக்காமல் வன்முறையை அதிகமாகக் காட்ட முயற்சிப்பது தான் பிடிக்காத விடயம்.

    Paranormal Activity, Saw போன்ற சில நல்ல படங்களும் Zombieland போன்ற சில காமெடி முயற்சிகளும் பிடித்தவை.

    பதிவு மிகவும் சிறியது போலிருக்கிறது. கொஞ்சம் விரிவாக சில படங்களை எடுத்து ஒரு விரிவான தொடராக எழுதலாமே?

    ReplyDelete