Pages

Tuesday 24 July 2012

தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை


தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை 

இன்று ஒரு படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் படத்தின் வெற்றியை ஒப்பனிங் தான் தீர்மானிக்கிறது.ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் பின் வரும் ஞாயிற்று கிழமை வரை வசூல் தான் ஒப்பனிங் வசூல் என்பது.பெரும்பாலும் படங்கள் வெள்ளிகிழமைகளில் தான் வெளியிடப்படும்.பண்டிகை நாட்களில் இது மாறலாம்.ஒரு படத்தின் வெற்றியை ஓபனிங் தீர்மானிக்க தொடங்கியது ரஜினி நடித்த "சிவாஜி " படத்தில் இருந்துதான்.அதற்கு முன் ஒரு படத்தின் வெற்றி அந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கபட்டு வந்தது.ஆனால் சிவாஜி படத்தின் வெற்றியை தீர்மானிக்க நாட்கள் தேவை படவில்லை.எத்தனை காட்சிகள் ,தியேட்டர்களில் ஓடியது என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் வெளிவந்த சில நாட்கள் கூட்டமில்லாமல்,பின் மெல்ல கூட்டம் வரத்தொடங்கி ஹிட் ஆன படங்களும் உண்டு.சேது,சித்திரம் பேசுதடி,உள்ளத்தை அள்ளித்தா,பூவே உனக்காக என் பட்டியல் நீளும்.மக்களுக்கு பிடித்திருந்து வாய்வழியாக சொல்லப்பட்டு சில நாட்களில் கூட்டம் வரத்தொடங்கி பின் நூறுநாள்,இருநூறு நாள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படத்தை போட்டு ,சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் நிலைக்கு ஆளாக்கி தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு ஓபனிங் முறை வழி வகுக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் டி வி டி .படம் வந்த அடுத்த நாளே அற்புதமான பிரிண்ட் வரத்தொடங்கியதும்,ஒரு டிக்கெட் விலை நூறை தொட்டுவிட்டதாலும் ,முப்பது ரூபாயில் குடும்பமாக பார்கிறார்கள்.படித்தவர்கள் கூட இவர்களே வெளிநாட்டு படத்தை காப்பி அடித்துதான் படம் எடுக்கிறார்கள் .இவர்கள் படத்தை இப்படி பார்த்தால் என்ன என என்ன தொடங்கிவிட்டார்கள்.

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தின் சென்னை உரிமையை 6.2 கோடிக்கு அபிராமி தியேட்டர் வாங்கியது.அதற்க்கு முன் வந்த சந்திரமுகி கூட நெருங்க முடியாத தொகை அது.போட்ட காசை எடுப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டது.அதுதான் அதிக அரங்குகளில் வெளியிடும் திட்டம்.அதற்க்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் 10 அல்லது 15 அரங்குகளில் தான் வரும்.ஆனால் சிவாஜி 30 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.அப்படம் முதல் நான்கு நாட்களில் 1.34 கோடிகள் வசூலித்து,மூன்றாம் வாரத்திலேயே போட்ட 6.2 கோடியை வசூலித்து கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 12 கோடி கிடைத்தது.அதுபோல் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியிட்டு நல்ல பணம் கண்டது .அதன் மூலம் தமிழ் படங்களுக்கு புதிய வெளியீட்டு முறை களமிறக்க பட்டது.சிவாஜிக்கு பின் பில்லா சென்னையில் மூன்று நாட்களில் 59 லட்சங்கள் ,மொத்தமாக சென்னையில் 4.5 கோடி வசூல் பெற்றது.அன்றைய தேதியில் அது பெரிய விஷயம் தான்.அதன் பின்
தசாவதாரம் சென்னையில் மூன்று நாட்களில் 95 லட்சம் மொத்தமாக சென்னையில் மட்டுமே 11 கோடி பெற்றது.
மங்காத்தா 5 நாட்களில் 1.8 கோடியும் மொத்தமாக சென்னையில் எட்டு கோடியும் பெற்றது.ரஜினி ,கமலுக்கு பின் சென்னையில் எட்டு கோடி தொட்ட நடிகர் என்ற பெருமையை அஜீத் பெற்றார்,
7 ஆம் அறிவு 5 நாட்களில் 2.2 கோடியும் மொத்தமாக 9 கோடியும் தொட்டது.ரஜினி கமலுக்கு பின் சென்னையில் 9 கோடி தொட்ட நடிகராக சூர்யா பெயர் பெற்றார்.
விஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில்  1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.

இப்போது படம் நன்றாக இருந்தால் மூன்று வாரத்தில் லாபம் பார்த்துவிடுகிறார்கள்.ஐந்து வாரம் ஓடினால் அப்படம் மிகபெரிய வெற்றி.ஒரு படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை தவிர்த்து படம் வெளியாகும் காலம்,அரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் இப்போது ரொம்ப முக்கியம்.பண்டிகை காலங்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வருவதால் வெளியிடும் அரங்குகள் குறையும் அதனால் வசூலும் குறையும்.உதாரணமாக மங்காத்தா ,பில்லா 2 ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள்  தனியாக வேறு படங்கள் போட்டியில்லாமல் வந்து வசூல் அடைந்தன.ஆனால் 7 ஆம் அறிவு வேலாயுதம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் இரண்டு படங்களுமே பாதிக்கபட்டிருக்கும்.தனித்தனியாக வந்திருந்தால்  இரண்டுமே இன்னும் அதிகம் வசூல் அடைத்திருக்கும்.தற்போதைய நிலவரப்படி ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும்  .சில படங்கள் நடிகர்களை தாண்டியும் ஓபனிங் பெரும்.வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்ய படவைக்கும் ஓபனிங் பெற்றது..அதற்க்கு காரணம் வடிவேலுவின் முந்தய படமான புலிகேசி மற்றும் ராஜேஷ் -சந்தானம் கூட்டணியில் வந்த முந்தய படமான பாஸ் எ பாஸ்கரன்.அது மட்டமல்ல அந்த நேரத்தில் வேறு புதிய படங்களை வர விடாமல் தடுக்கும் அந்த பட குழு.

டிஸ்கி :இந்த ஓபனிங் வரவும் அதிக விளம்பரம் தேவை.நல்ல சில படங்கள் விளம்பரம் இல்லாமல் போய் விடுவதும் உண்டு.மேலே சொன்ன வசூல் சில புத்தகங்களிலும் ,நெட்டிலும் கண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது.

18 comments:

  1. Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  2. நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கேங்க..... :)

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ஆராய்ச்சி தான். நன்றி ராஜ்.

      Delete
  3. அருமையான அலசல்.

    ReplyDelete
  4. நல்ல அலசல். பதிவில் பான்ட் சில பாராக்களில் மாறுது. பார்த்து சரி பண்ணுங்கள். பதிவு முழுதும் ஒரே பான்ட் இருந்தால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. சரி செய்துவிட்டேன் சார். நன்றி.

      Delete
  5. சிறப்பான முயற்சி..இது போன்ற வசூல் விஷயங்களை பற்றி ஒரு பதிவர் எழுதுவது ரொம்ப நல்லாருக்கு..என்னை போன்ற வெளி நாட்டவர்கள் அறிந்துக்கொள்ளவும் உதவும்..முடிந்தா படங்களின் ஓப்பெனிங்க் பற்றி கூடுதலா எழுதுங்க..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் குமரன்.

      Delete
  6. நண்பா நல்ல பதிவு.. ஆனால் இந்த தமிழ் சினிமாவில் ஏன் தானோ உண்மையான பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வெளியிட தயங்குகிறார்களோ.. கிடைத்தவரை உன் பதிவு முழுமை.. வாழ்த்துக்கள் நண்பா.. ரொம்ப நல்ல அலசல்..

    ReplyDelete
    Replies
    1. நான் கூட ஆங்கில படங்கள் போல் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை தமிழ் படங்கள் தருவதில்லை என்று நினைபதுண்டு.ஏதாவது வரி பிரச்சனை வரும் என்று பயபடுகிறார்களோ என்னவோ?

      Delete
  7. அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் "வேட்டையாடு விளையாடு" தான்... சென்னையில் மட்டும் 14 திரையரங்குகள்... இப்படத்திற்கு முன் வந்த மும்பை எக்ஸ்பிரஸ் & சந்திரமுகி திரையிடப்பட்டது 6 திரையரங்குகளில் மட்டுமே...

    ReplyDelete
  8. http://eppoodi.blogspot.com/2012/04/blog-post_23.html

    இப்பிடி பார்த்து பதிவு எழுதுறதுக்கு சும்மா போகலாம்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவிற்கு இப்போதுதான் முதலில் போகிறேன்.அதனால் அதை பார்த்து எழுதவில்லை.இதை நீங்கள் நம்பாவிட்டாலும் கவலையில்லை.எனக்கு தெரியும் உண்மை.
      என் பதிவை அனுமதி இல்லாமல் ஒருவர் போட்டதை கண்டித்தவன் நான்,பார்த்து போட்டால் சொல்லிவிட்டு போகிறேன் இதில் என்ன இருக்கு.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. //விஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில் 1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.

    ஹிஹி ஹோ ஹோ ஹேஹே ஹை

    ReplyDelete
  11. //ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும்

    விஜய் இந்த வரிசையில் !!! ஹிஹி ஹோ ஹோ ஹேஹே ஹை

    ReplyDelete