Pages

Wednesday 4 July 2012

சமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்

சமீபத்தில்  பார்த்த சில ஆங்கில படங்கள் :

SHALLOW GRAVE (1994):
                  ஒரு அபார்ட்மெண்டில்   குடியிருக்கும் மூவர் தங்களுடன் இன்னும் ஒருவரை சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து பலகட்ட நேர்முகங்களுக்கு பின் ஒருவனை சேர்த்துக்கொள்கின்றனர்.மறுநாள் அவன் தன் அறையில் இறந்து கிடக்கிறான்.ஒரு பெட்டி நிறைய பணம்.இனி என்ன? ரொம்ப ஆவலாக பார்த்த படம்,காரணம் நம் slumdog millionare ஆஸ்கார் பட டைரக்டர் டானி பாயல் இயக்கிய முதல் படம்.படம் செம மொக்கை .பார்த்து விடாதீர்கள்.

TRESPASS (2011)  :   சில நடிகர்கள் காலம் போக போக மொக்கை படங்களாக நடிப்பர்.நம்ம நிக்கோலஸ் கேஜ் அப்படிதான்.90 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.இந்த படத்தில் வைர வியாபாரியான இவர் வீடு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது.மனைவி மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார்.அந்த வீட்டுக்கு cctv கேமரா செட் செய்ய வருபவன் ,இவன் மனைவியோடு  கள்ள தொடர்பு  கொண்டு வீட்டை கொள்ளை அடிக்க தன் கும்பலுடன் வந்து இவர்களை மிரட்டுகிறான். ரொம்ப சுமார்.வெட்டியாக இருந்தால் மட்டும் பாருங்கள்.

THE EXPENDABLES (2010):
                சில விமர்சங்களை படித்து இத்தனை நாள் பார்க்காமல் இருந்தேன்.சரி பார்த்து தொலைத்தால் டெலிட் செய்யலாம் என்று பார்த்தேன்.படம்  ஏகப்பட்ட எதிர்பார்போடு ஒரு பட்டாளத்தோடு  வந்தது.படத்தில் ஒன்றுமே இல்லை.80 களில் வந்த படங்கள் போன்ற கதை.இதே போல் நம்மூரில் 90 கதைகளில் விஜய் நடித்தால் தோல்வி அடைகின்றது .எப்படி அங்கே ஹிட் என்பது தெரியவில்லை.இதில் இரண்டாம் பாகம் வேறு வர உள்ளது. 
         
DONNER PASS (2012)
          நான்கு நண்பர்கள் ,வார இறுதி .ஒரு பயணம் .அங்கே ஆபத்து. திகில் படம் எடுக்க ஈசி ஆன பார்முலா. இந்த வகையில் நானே ஏராளமான படங்கள் பார்த்துள்ளேன்.இந்த படம் சில குட்டி குட்டி கதை திருப்பத்தின் மூலம் வித்தியாச படுகிறது.ஒரு முறை பார்க்கலாம்.



2 comments:

  1. படத்தை பத்தி ரெண்டு-முனு வரி அறிமுகம் நச்ன்னு இருக்கு....
    இதுல "THE EXPENDABLES" மற்றும் "TRESPASS" படம் தான் பார்த்து இருக்கேன்...மிச்ச ரெண்டும் பார்க்கிற ஐடியா இல்ல பாஸ்...

    ReplyDelete
  2. Expendables படம் மட்டும் தான் பார்த்து இருக்கேன். கதை எல்லாம் பார்க்காமல் ரெண்டு மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சத்தமும், குண்டு வெடிப்பும் கேட்கலாம்னா ரசிச்சுப் பார்க்கலாம். Trespass கொஞ்ச நேரம் பார்த்தேன். ரொம்ப போரடிச்சுது. மூடி வச்சுட்டேன்.

    ReplyDelete