Pages

Monday 1 October 2012

விக்ரம் -சூர்யா ---குறிக்கோள் கமல் நாற்காலி

விக்ரம் -சூர்யா ---குறி  கமல் நாற்காலி 



விக்ரம் -வயது 46 
சூர்யா- வயது 37 
விக்ரம் ,சூர்யா இருவரும் இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர்கள்.எடுத்துக்கொண்ட கதையின் கதாபாத்திரங்களுக்காக உடலை எப்படியும் மாற்ற முயற்சித்து வருபவர்கள்.ரஜினின் இடத்திற்கு ஆசைப்படாமல் கமலின் நாற்காலி மேல் ஆசை கொண்டு உழைத்து வருபவர்கள்.இருவருமே ஒரே இடத்திற்கு முயல்பவர்கள்.இருவரின் முயற்சிகள் ,வெற்றிகள் ,எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

விக்ரம் .முதல் படம் வெளிவந்தது 1990.முதல் வெற்றியை பார்த்தது 1999.ஸ்ரீதர்,பி.சி.ஸ்ரீராம்,விக்ரமன் போன்றவர்களின் படங்களில் நடித்தபோதும் தோல்வியே கண்டார்.பட வாய்ப்பு இல்லாமல் மலையாளம்,தெலுங்கு படங்களில் துணை நடிகர் லெவலுக்கு போனவர்.தமிழில் ,பிரபுதேவா, அப்பாஸ் ,அஜீத் (அமராவதி ) போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.பம்பாய் படத்தில் நடிக்க தேர்வு செய்யபட்டு பின் வாய்ப்பை இழந்தார்.ஒரே எதிர்பார்பான உல்லாசம் தோல்வி அடைந்தது.விக்ரமின்  தந்தை நடிகர் என்றாலும் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை.விக்ரமின் அம்மாவின் அண்ணன் நடிகர் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் அப்பா) என்ற போதும் பெரிதாக இவருக்கு உதவவில்லை.

ராதிகாவுடன் லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி படத்தில் நடிக்கும் நேரம் .சேது படம் பாதி முடித்த நிலையில் உள்ளது.ராதிகா அடுத்த தொடரில் முக்கிய வேடம் தருவதாக அழைக்கிறார்.விக்ரம்"ஒரு நல்ல படம் (சேது) நடித்துகொண்டிருக்கிறேன்.அது கை கொடுக்கும் என்று நினைக்கிறன்".ஒரு வழியா சேது ஹிட்.அதன் பின் கவனமாக படம் தேர்வு.தில்,ஜெமினி,தூள்,சாமி,பிதாமகன்,அந்நியன் இவை அதன் பின் இவர் கொடுத்த ஹிட் படங்கள்.ஆனாலும் போலீஸ் வேடமா முடியை ஓட்ட வெட்டி ,உடம்பை முறுக்கேற்றி காட்டுதல்.காசியில் பார்வையற்ற பாடகன்.அதிலும் இவரது அற்பணிப்பை பார்க்கலாம்.சமுராய்,கிங்,அருள்,மஜா,பீமா,கந்தசாமி,ராவணன்,ராஜபாட்டை இவை (இன்னும் சில)சறுக்கிய படங்கள்.

சூர்யா -தந்தை 70-80 களின் நாயகன்.முக்கியமாக நல்லபேர் பெற்றவர்.சூர்யாவின் அறிமுகம் எளிதாகவே இருந்தது.அஜீத் வெளியேறிய நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில் ஒழுங்காக நடிப்பு  வராமல் கஷ்டப்பட்டவர்.பாடல் எடுக்க கல்கத்தா போனபோது இங்கே பிரியாணி நல்லயிருன்னு கேள்விபட்டேனே என்று சொல்லி டைரக்டர் வசந்திடம் வாங்கி கட்டிகொண்டார்.அத பட விமர்சனத்தில் (குமுதமோ ,விகடனோ ) சூர்யா நடனம் ஆடுவது அவருக்கும் கஷ்டம் ,அதை பார்க்கும் நமக்கு கஷ்டம் என்று எழுதினார்கள்.எதோ ஒரு விழாவுக்கு எல்லா நடிகர்களோடும் ரயிலில் சென்றபோது தூங்கிகொண்டிருந்த இவரையும் அப்பாஸையும் அதட்டி எழுப்பிய நடிகர்  ரகுவரன் "எப்படிடா உங்களுக்கு தூக்கம் வருது ? சினிமாவில் என்ன சாதிச்சுட்டு தூங்கறீங்க ? என்று திட்டி இவரை உசுப்பி விட்டார்.போய் சேரும்வரை கடும் வார்த்தைகளால் திட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் பின் மனதில் உறுதி எடுத்த சூர்யா தன் தனி வெற்றிக்காக(விஜய் இல்லாமல் ) ஆறு ஆண்டுகள் நந்தா வரும்வரை காத்திருந்தார்.அதன்பின் அஜீத் விலகியதால் ஜோதிகா சிபாரிசில் காக்க காக்க நடிக்கிறார்.தொடர்ந்து பிதாமகன்,கஜினி,வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.நந்தாவுக்கு பின் என்றால் உன்னை நினைத்து,ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,போன்ற படங்கள் சரிக்கி விட்டது.சில சுமாரான படங்களும் ( ஆறு,வேல்,ஆதவன் )உள்ளன.

இருவருமே படத்திற்கு படம் கடும் உழைப்புடன் செயல்படுகிறார்கள். இருவருமே நடுநடுவே கமல் எண்பதுகளில் முயற்சித்து போல் வணிக மசாலா படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார்கள்.இருந்தாலும் இருவரின் குறியும் ஒன்றுதான்.அது கமல் நாற்காலி.இதில் வயது சூர்யாவிற்கு கை கொடுக்கிறது.அவர் இன்னும் நாற்பதை தொடவில்லை.அதனால் உடல்,மனம் இரண்டும் பல பரீட்சைகளுக்கு ரெடி.ஐம்பது வயதை நெருங்கும் விக்ரம் உடல் அளவில் தயார் என்றாலும் இயற்க்கை வயதை முகத்தில் காட்டிவிடுகிறது.இன்றைய தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்வதில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.அவசரப்படாமல் நாள் எடுத்துக்கொண்டு யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.அந்த விஷயத்தில் விக்ரம் இன்னும் பொறுமையுடன் செயல் பட வேண்டும்.ராஜபாட்டை எல்லாம் தேவையே இல்லை.ஆனாலும் சூர்யா ஒப்பனையில் ,உடல் தோற்றத்தில் காட்டும் அக்கறை நடிப்பில் விக்ரமை ஒப்பிட்டால் குறைவு என்றே சொல்ல வேண்டும்.உடல் மொழி ,குரல், நடிக்கும் போது  சில PAUSE என்று சொல்லப்படும் அமைதி போன்றவற்றை விக்ரம் சூர்யாவை விட நன்றாக வெளிபடுத்துகிறார்.

என்ன இருந்தாலும் இருவருமே தன் நேரத்திற்காக காத்திருந்து ,கிடைத்ததும் அதில் முழுமையாக வெளிப்படுத்தி,அதில் வெற்றி கண்டதும் அதன் பின்னும் பொறுமையாக படங்களை தேர்வு செய்து வெற்றி பெறுவது என்று ஒரு "வெற்றி கதையை " நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.எந்த துறைக்கும் அந்த வெற்றி கதைகள் ஒரு பாடம் தான்.

8 comments:

  1. Good analysis. Films with 5 letter words are not clicking for Vikram :))

    ReplyDelete
  2. நல்ல அலசல் விஜய்..எனக்கு இருவருமே பிடிக்கும்..

    ReplyDelete
  3. நல்ல அலசல்... இருவருமே சளைத்தவர்கள் இல்லை...

    இருந்தாலும் கமல் பக்கத்தில் வருபவர் விகரம் மட்டுமே...

    ReplyDelete
  4. இருவரும் நல்ல நடிகர்கள்...திரைப்படத்தை செலக்ட் பண்ணுவதில் தான் சிலநேரங்களில் சொதப்பி வெறுப்பேற்றுகிறார்கள். ஆனாலும் கமலின் இடத்தோடு ஒப்பிடுவது ??? ...

    ReplyDelete
  5. கண்டிப்பாக சூர்யா பொறுத்த மட்டில் தனக்கொரு தனி அடையாளத்தை ஏற்படுத்த வாய்பிருக்கும்.. விக்ரம் பற்றி கூற போனால் அந்நியன் பிறகு ஒரு வெற்றியை அவர் இன்னும் தரவே இல்லை (7 வருடங்கள் ஆகியும் விட்டது).. இருந்தாலும் தன்னுடைய இடத்தை இன்னும் பறி கொடுக்கவும் இல்லை.. பார்க்கலாம்.. அலசல் கலக்கல்..

    ReplyDelete
  6. விக்ரம் வயது முதிர்ந்து விட்டது ,. சூர்யா வுக்கு வயது ஒரு பலம் . இருந்தும் விக்ரமின் நடிப்பு திறமையை கூட சூர்யா இன்னும் நெருங்கவில்லை . உடல் மொழியை பாஷையாக பேச வைப்பதில் விக்ரம் கை தேர்ந்த கலைஞன் . எழு வருடங்கள் தொடர் தோல்வியை குடுத்தாலும் நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டி கொண்டு தான் இருக்குறார் .

    ReplyDelete
  7. vikram idathai yaralum pidika mudiyathu he is an one and only hero

    ReplyDelete
  8. விக்ரமின் நடிப்பு திறமையை இடத்தோடு ஒப்பிடுவது?

    Ai Latest update news : http://youtu.be/Rny1-0eRuT0

    ReplyDelete